இரு குழந்தைகள்

இரு உயர்ந்த மலைகளுக்கு மத்தியிலிருந்த ஒரு பள்ளத்தாக்கில் வயோதிகரும் பக்திமானுமான ஒரு தபோதனர் வசித்து வந்தார். உலகத்தில் மக்களிடை அவர் வசிக்கையில் அவருக்கு அநேக துன்பங்கள் ஏற் பட்டன. அவற்றினின்று விலகி, தம் கடைசி நாட்களை ஜெபத்திலும் தவத்திலும் செலவழிக்கும்படி அவர் காட்டில் வசித்து வந்தார். அங்கும் மக்கள் அவரை விட்டார்களில்லை. அவரது புனித வாழ்க்கையைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் தொலைவிலிருந்தும் சமீபத்திலிருந்தும் அவரைத் தேடிச்சென்றார்கள். பரலோக ஞானமும் ஆறுதலும் தந்த அவரது வார்த் தைகளை யாவரும் கேட்க விரும்பினார்கள். அவரைப் பார்க்கப் போனவர்கள் மகிழ்ச்சி நிறைந்த மனதுடன் திரும்பினார்கள்.

இந்தத் தபோதனர் கடவுளை எல்லாவற்றிற்கும் மேலாக நேசித்தார், அவருடைய சிருஷ்டிகளை அடுத்தபடியாக அவர் நேசித்தார். “இங்கு இந்த ஏகாந்த வாசத்தில் எனக்கு இரு குழந்தைகள் இருக் கின்றனர். ஒன்று பேசும் குழந்தை. இன்னொன்று பேசாக் குழந்தை" என்பார் அவர்.

பேசும் குழந்தையின் பெயர் மரி. அது அடுத்த கிராமத்தில் வசித்த ஒரு குடியானவனுடைய மகள், அச்சிறுமிக்கு தபோதனர் மேல் அதிகப் பிரியம். காட்டு மிருகங்களுக்குப் பயப்படாமல் தனியே வழி நடந்து போய் தபோதனருடன் பேசுவாள்; அவர ருகே விளையாடிக் கொண்டிருப்பாள். பேசாக் குழந்தை ஒரு வளர்ந்த செந்தூர மரம். அது அவரது குடிசையினருகே நின்றது. அதன் நிழல் குடிசை மேல் விழும்.

மரி மேல் தபோதனருக்குப் பிரியம். அவள் மாசற்ற குழந்தை. அவளது குழந்தைப் பேச்சை அவர் கேட்டு ஆனந்திப்பார். கடவுளைப் பற்றியும் அவர் உண்டாக்கிய உலகத்தைப் பற்றியும் அநேக காரியங்களை அவர் அவளுக்குப் படிப்பித்தார். செந் தூர மரத்தையும் அவர் நேசத்துடன் பாதுகாப்பார். மழை பெய்யாக் கோடை காலங்களில் அவர் அதற்கு தண்ணீர் ஊற்றுவார். மரத்தில் வசித்த பறவைகளை யும் பாதுகாத்து வந்தார். மரத்தை வெட்ட வந்தவர் களைத் தடுத்தார்.

ஓராண்டு குளிர் மிகக் கொடியதாயிருந்தது மலைச்சரிவுகளில் ஏராளமான பனிக்கட்டி உறைந்தி ருந்தது. திடீரென்று பனிக்கட்டி இளக வெள்ளம் பெருக்கெடுத்தோடி தபோதனர் வசித்த பள்ளத்தாக் கில் கரை புரண்டோடியது.

“ஐயோ, ஐயோ, தபோதனருக்கு என்ன நேரிட் டதோ தெரியவில்லையே. அவர் வெள்ளத்தில் இறந் திருப்பார் என அஞ்சுகிறேன். உயர்ந்த மரங்கள் முதலாய் வெள்ளத்தில் அகப்பட்டனவே" என மரி யின் தகப்பனார் கூறினார்.

மரியும் வெகு விசனப்பட்டாள். தபோதனருக்கு உதவி செய்யப் போகும்படி தன் தந்தையை அவள் தூண்டினாள். என்றாலும் வெள்ளத்துடன் அவர் எதிர்த்துப் போராட முடியுமா? வெள்ளம் ஏற்க னவே குடிசையின் கூரைக்கு மேல் உயர்ந்து விட்டது.

எனினும் தபோதனர் காப்பாற்றப்பட்டார். அவ ருடைய இரு குழந்தைகளும், பேசாக் குழந்தையும், பேசும் குழந்தையுமே அவரைக் காப்பாற்றினர். வெள்ளம் அதிகரித்து வருவதைக் கண்ட தபோதனர் தம் இல்லத்தின் கூரைமீது ஏறினார். அங்கும் வெள் ளம் வந்ததும் அவர் இன்னும் தன் கிளைகளை வெள் ளத்துக்கு மேல் விரித்துக்கொண்டிருந்த செந்தூர மரத்தில் ஏறினார். அதைச் சுற்றிலும் நின்ற ஏனைய மரங்கள் வேரோடு விழுந்து வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. செந்தூர மரமோ உறுதியுடன் நின்றது.

நீர் குறைய மூன்று நாட்கள் ஆயின. அந்த மூன்று நாட்களாக தபோதனர் செந்தூர மரத்தின் கிளை களைப் பிடித்து நின்று கொண்டிருந்தார். சாப்பிட ஒன்றுமில்லை. குடிசையின் கூரையில் ஏறுகை யில் அவசரம் அவசரமாய்ப் பையிற் போட்டுச்சென்ற உலர்ந்த ரொட்டித் துண்டை மாத்திரம் சாப்பிட்டால் போதுமா? நான்காம் நாள் மாலையில் அந்த பிரமா ணிக்கமுள்ள செந்தூர மரத்தினின்று அவர் இறங் கினார். களைப்பினால் கீழே சாய்ந்தார். நனைந்திருந்த தரைமீது விழுந்து சாவுக்காகக் காத்திருந்தார்.

இந்தச் சமயத்தில் பேசும் குழந்தையான மரி வந்து அவரைக் காப்பாற்றினாள். அவளால் வீட்டில் தங்க முடியவில்லை. தண்ணீர் வற்றியதும், தன் நேச தபோதனரை அவள் தேடிச்சென்றாள். பசியினாலும், காற்று மழையினாலும் அலுப்பினாலும் அவர் விழுந்து கிடப்பதை அவள் கண்டாள். தன்னுடன் எடுத்துச் சென்றிருந்த இரசத்தையும் ரொட்டியையும் கொடுத்து அவரைத் தேற்றினாள்.

உயிர் பிழைத்த தபோதனர் கடவுளுக்கு நன்றி செலுத்தினார். தம்மைக் காப்பாற்றிய இரு குழந்தை களையும் அவர் கடவுள் பேரால் ஆசீர்வதித்தார். பூமியின் மற்ற சிருஷ்டிகளை விட அவர்கள் இருவரை யும் உயர்த்தி மகிமைப்படுத்தும்படி சர்வ வல்லப கடவுளை அவர் மன்றாடினார். பின் அவர் மரியுடன் சென்று, காட்டுக்குத் திரும்பக்கூடிய பலம் ஏற்படும் மட்டும் அவர்களுடன் வசித்தார். *

* ஆண்டுகள் பல கடந்தன. அழகிலும் பரிசுத்த தனத்திலும் மரி வளர்ந்தாள். தபோதனர் இறந்து கடவுளிடம் சென்றார். அவரது குடிசை தகர்ந்து விழுந்தது. அவரது செந்தூர மரத்தை வெட்டி, இரசம் வைக்கப் பீப்பாய்கள் செய்தனர். அந்தப் பீப்பாய்களை மரியின் தகப்பனார் விலைக்கு வாங்கினார்.

தம் இரு குழந்தைகளுக்கும் தபோதனர் கொடுத்த ஆசீர்வாதம் எங்கே? 

அறுவடை காலமாயிற்று. இராம் வைத்திருந்த பீப்பாய்களில் ஒன்று வெறுமனானதும் மரியின் தகப்பனார் அதை அறையிலிருந்து வெளியே எடுத்து வந்து முற்றத்தில் வைத்தார். கலியாணம் முடித்து இரு அழகிய சிறுவர்களின் தாயாயிருந்த மரி, அன்று காலையில் சூரியன் குன்றுகளுக்குமேலே எழும்பி வருகையில் சுத்தமான காற்றை சுவாசிக்கும்படி வீட்டைவிட்டு வெளியே வந்தாள். அங்கு முற்றத்தில் கிடந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கைக்குழந்தைக் குப் பாலூட்டிக் கொண்டிருந்தனள்; மூத்த சிறுவன் அவளருகில் நின்றான். அவன் மிகு குதூகுலத்துட னிருந்தான். ஒரு காலத்தில் தன் நேச தபோதனர் வசித்த பள்ளத்தை தூரத்தில் நோக்குகையில், குழந் தைகள் இருவரும் அவரது ஆசீர்வாதப் பலனே என அவள் சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

அச்சமயம் சிந்தனையிலாழ்ந்திருந்த ஒருவர் அந்தப் பக்கமாய் நடந்து சென்றார். அவரது பெயர் ரபேல் சான்ஸியோ. உலகிலேயே மிகப் புகழ்பெற்ற சித்திரக்காரர் அவர். தேவதாயைக் குழந்தை யேசு வுடன் சித்தரிக்க வேண்டும் என அவர் நெடுநாளாய் ஆசையுடனிருந்தார். ஆனால் அவருக்குத் திருப்திகர மான “மாதிரி'' கிடைக்கவில்லை. இதுவரை அவர் பார்த்த தாய்மாரும் குழந்தைகளும் அவருக்குத் திருப்தியளிக்கவில்லை. தாம் வரைய இருந்த அந்தப் படத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே அவர் வழி நடந்தார். அவர் மரியின் பக்கமாய்ச் செல்கையில் மரி அவருக்கு காலை வந்தனம் கூறினாள். அவர் ஏறிட்டுப் பார்த்தார். தாயும் பிள்ளைகளும் அளித்த தோற்றம் அவரது கவனத்தைக் கவர்ந்தது. அவர் தேடியலைந்த “மாதிரி'' அகப்பட்டது. தாயின் முகத் தில் பரலோக இன்பமும் தூய்மையும் காணப்பட் டன. அவள் கரங்களிலிருந்த சம்மனசு போன்ற குழந்தை தன் பெரிய, அன்பு நிறை, கண்களை உருட்டி  தன்னைச் சுற்றிலும் இருந்த உலகத்தை அதிசயத்து டன் நோக்கியது. மூத்த சிறுவனின் கரத்தில் ஒரு சிறு கோல் இருந்தது. கோலின் உச்சியில் ஒரு சிலுவை இருந்தது. என்ன அழகு? இது பரலோக அழகே என அவர் பிரமிப்புடன் நின்று நோக்கினார். அவர்களை அப்படியே சித்தரிக்கும்படி ரபேல் அனுமதி கேட்டார். அந்தச் சித்திரத்தை என்றென் றும் அழியாது வைத்திருக்க அவர் விரும்பினார். ஆனால் அச்சமயம் அவரிடம் வரையும் எழுதுகோல் மாத்திரமே இருந்தது, வேறொன்றும் இல்லை. சுற்றி லும் நோக்கினார். செந்தூர மரத்தால் செய்யப்பட்ட அந்தப் பீப்பாய் அங்கு இருந்தது. பீப்பாயின் மேல் சதுப்பில் -மரியையும், அவளுடைய குழந்தைகளையும் ரபேல் சித்தரித்தார். பின் அனுமதியுடன் சதுப்பை அகற்றி வீட்டுக்குக் கொண்டு போனார். படத்தின் வேலை முடியும் வரை இராப்பகலாய் வேலை செய்தார். அந்தப் படம் அபூர்வ அழகுடனும் திறனுடனும் வெளிவந்தது. தேவதாய் நாற்காலியில் அமர்ந்திருந் தாள். அவள் மடியில் யேசு குழந்தை . சிறுவனான ஸ்நாபக அருளப்பர் ஒரு சிலுவையை அவரிடம் கொண்டு வந்தார். நம் இரட்சணியத்தின் அடை யாளமான சிலுவையைப் பயன்படுத்தி சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே விளையாடப் பழகியவர்கள் போலிருந்தது.

உர்பீனோ நகரத்தவரான ரபேல் சான்ஸியோ 1520-ம் ஆண்டில் உயிர் துறந்தார். ஆனால் அவர் வரைந்த படம் (அதன் பெயர் மதோன்னா தெல்லா சேதியா - “நாற்காலியில் தாயும் குழந்தையும்'') பெரும் திரவியமாக உலகின் எத்திசையிலும் கருதப் படுகிறது.

தபோதனரது மன்றாட்டு இவ்விதம் நிறைவேறி யது. அவருடைய இரு குழந்தைகளையும் கலை மகிமைப்படுத்திற்று. அவர் நேசித்த செந்தூர மரத்தின் பலகையானது மரியுடையவும் அவளுடைய இரு குழந்தைகளுடையவும் உருவத்தைக் கொண்டி ருக்கிறது. உலகம் முடியும் வரை அவர்களது அழகிய உருவங்கள் பார்ப்போர் மனதுக்கு இன்பமளித்து, அவர்கள் பரலோகத்தை நினைக்கச் செய்யும். ஏனெ னில் அந்த உருவங்கள் யேசு, மரி, புனித ஸ்நாபக அருளப்பர் இவர்களது அழகை வருணிக்க முயல்கின் றன.