இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தங்க இருதயம்

''அப்பா வந்து விட்டார்களா?' எனக் கேட்டுக் கொண்டே பதினொரு வயதினனான ஆல்பெர்ட் வாசின் சமையற் கட்டினுள் நுழைந்தான். "இல்லை, நீயும் பெர்னாந்தும் போய் கில்பெர்த்தை அழைத்து வாருங்கள்'' என தாய் மொழிந்தாள்.

பெர்னாந்து சிறுவனுடைய அக்கா. வயது பதினைந்து. இவர்களுடைய தகப்பனாருக்கு ரெயிலில் வேலை. மாலையில் வேலை முடிந்து வீடு திரும்புகை யில் இவர் கன்னியர் மடத்தில் கற்றுக்கொண்டிருந்த மகள் கில்பெர்த்தை அழைத்து வருவார். அவர் வரப்பிந்தினால் பெர்னாந்து, ஆல்பெர்ட் இருவரும் போய்த் தங்கள் சகோதரியை அழைத்து வருவார் கள். அவளுக்கு வயது பதின்மூன்று.

1932-ம் ஆண்டு நவம்பர் 29ம் நாள். அன்று குளி ராயிருந்தது. சிறுவர் இருவரும் புறப்பட்டுச்செல் கையில், பதினான்கு வயதினளான அந்திரேயா தெகெம்பர், அவளுடைய தங்கை ஒன்பது வயது கில்பெர்த் தெகெம்பர் ஆகிய இருவரையும் சந்தித்த னர். நால்வரும் மடத்தின் வாசலை அடைந்ததும் மணியை அடித்தார்கள். மடத்துக்கு வெளியே இருந்த ரெயில் பாலத்தை நோக்கிக் கொண்டிருந்த ஆல்பெர்ட், “இங்கே பாருங்கள்'' என்றான். “என்ன?'' என்றாள் அந்திரேயா. "அங்கு நிற்பது யார்?'' என்றாள் பெர்னாந்து, வெள்ளை உடை அணிந்து உலா விக்கொண்டிருந்த உருவத்தைக் கண்ட கில்பெர்த் தெகெம்பர் பயந்து அக்காளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

அதற்குள் கில்பெர்த் வாசின் வந்து விட்டாள். அவளும் அந்த உருவத்தைப் பார்த்தாள். “அது நமக்குப் பக்கத்தில் வருமுன் வீட்டுக்குப் போய் விடு வோம்'' என்று கூறி யாவரும் வீட்டை நோக்கி விரைந்தார்கள். அச்சத்தினால் அவர்கள் வழியில் பேசவில்லை.

வீடு போய்ச் சேர்ந்ததும் ஆல்பெர்ட் “ரெயில் பாலத்தருகில் ஏதோ வெள்ளையாய் நிற்கிறது'' என் றான். 'வெள்ளை உடையணிந்த ஓர் ஆள் போலிருக் கிறது'' என்றாள் கில்பெர்த். “ரெயில் பாலத்தின் கீழே இருக்கும் வளைவினருகில் அது அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது. அது யாரோ தெரிய வில்லை'' என்றனள் பெர்னாந்து. -

"அது நிலா வெளிச்சத்தில் அசையும் மரக்கிளை யின் நிழலாயிருக்கும் அதை மறந்து விடுங்கள். இனி அதைப்பற்றி ஒன்றுமே பேசக் கூடாது. இராச் செபத்தை முடித்து விட்டு படுக்கைக்குச் செல்லுங் கள். அந்த இடத்தில் ஒருவரும் இல்லையெனக் காலை யில் அறிவீர்கள்'' எனத் தாய் மொழிந்தனள்.

சிறுவர்களால் அந்த உருவத்தை மறக்க முடியவில்லை. அன்றிரவு பல முறை தங்களுக்குள் அதைப் பற்றிப் பேசிக்கொண்டனர். தெகெம்பர் இல்லத்திலும் அன்று இதே மாதிரி பேச்சு நடந்தது. சிறுவர் சொன்னதைப் பெற்றோர் நம்பவில்லை.

மறுநாள் மாலையில் கில்பெர்த் வாசினை அழைக் கும்படி சிறுவர் நால்வரும் புறப்பட்டார்கள். கில்பெர்த் வந்தவுடன் ஐவரும் மடத்தின் வாசலி லிருந்து இரண்டு அடி எடுத்து வைத்திருப்பார்கள்; அதற்குள் அந்த உருவம் தோன்றியது. முந்திய தினத்தில் செய்தது போலவே அது அங்குமிங்கும் உலா விக்கொண்டிருந்தது. சிறுவர்கள் பயந்து வீட்டுக்கு விரைந்து சென்றார்கள். அன்று அதைப் பற்றி ஒருவரிடமும் பேசவில்லை.

மறுநாள் மாலையில் ஐவரும் ஒன்று கூடியதும், பாலத்தின் பக்கமாய் நோக்கினர். அந்த உருவம் மடத்தின் தோட்டத்தில் காணப்பட்டது. லூர்து மாதாவின் கெபியோரத்தில் அது நின்றது. அது ஒரு பெண், மிக அழகான பெண் என சிறுவர் கண் டனர். பிரகாசம் பொருந்திய அவளது வெண்ணாடை பாதங்களையும் மறைத்தது. தலையில் வெண் முக்கா டும், தங்கக் கதிர்களைக் கொண்ட பெரிய கிரீடமும். ஜெபிப்பது போல் கரங்கள் குவிந்திருந்தன. அவள் ஒன்றும் பேசவில்லை.

சிறுவர்கள் அந்த அழகிய பெண்ணை நன்கு நோக்கினர். பயப்படவில்லை. சிறுமி கில்பெர்த் தெகெம்பெர் மயங்கி விழ இருந்தமையால் நால்வரும் அவளை வீட்டுக்குத் தூக்கிச் சென்றார்கள். கில்பெர்த் வாசின் அவளைக் கவனித்துக் கொண்டிருக்க, ஏனைய மூவரும் அந்தப் பெண் இன்னும் அங்கு இருக்கிறாளா எனப் பார்க்கும் படி, மடத்துத் தோட்டத்துக்குச் சென்றனர்.

அந்த அழகிய பெண் திரும்பவும் தோன்றினாள். இம்முறை மரத்தின் தாழ்ந்த கிளை மீது நின்றாள். பாதங்கள் காணப்படவில்லை. மேகத்தில் நின்றாப் போலிருந்தது. அந்தப் பெண் இன்னும் முப்பது முறை காட்சியளித்தாள். எப்போதும் அதே இடத் திலேயே. முதற் காட்சியில் அவள் பேசவில்லை, சிறு வரின் பயத்தை அகற்றுவது முதல் வேலை என்றிருந் தாள் போலும். முதன் முறை அவள் வந்தது நவம்பர் 29-ம் நாளன்று. ஐந்தாவது நாள்வரை அவள் பேச வில்லை .

டிசம்பர் 3-ம் நாளன்று மாலையில் ஐவரும் அந்த மரத்தினருகே முழந்தாளிட்டிருக்கையில் அவள் தோன்றினாள். “நீங்கள் மாசற்ற கன்னியா?" என ஆல்பெர்ட் துணிவுடன் கேட்டான். 'ஆம்' என்று காட்ட அவள் தலையை அசைத்து, புன்முறுவல் காண்பித்தாள்.

“உங்களுக்கு என்ன வேண்டும்?” என ஆல்பெர்ட் வினவியதும், அவள், “நீங்கள் எப்பொழுதும் நல்ல வர்களாய் இருக்க வேண்டும்'' என்றனள்.

அன்றிலிருந்து சிறுவர் ஐவரும் பரலோக அன்னை யின் விருப்பப்படி நடக்க மிக முயன்றனர். அவர்களி டம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை எல்லோரும் கவனித் தார்கள்.

அந்த அர்ச்சிக்கப்பட்ட இடத்துக்கு ஒவ்வொரு நாளும் மாலையில் சிறுவர் போய் ஜெபமாலை ஜெபித் தனர். பலர் அவர்களைத் தடுத்தும் பயனில்லை. கன்னியர் மடத்தின் தலைவிக்கும் இது பிடிக்கவில்லை. எதிர்ப்புக்களைப் பொருட்படுத்தாமல் அவர்கள் நாள் தோறும் அங்கு போய் வந்தனர். சில நாட்களில் அன்னை தோன்றவில்லை. சில சமயங்களில் சிறுவர் களில் சிலருக்கு மாத்திரமே காணப்பட்டாள்.

அந்தச் சிறு பட்டணத்தின் பெயர் பொராங். அங்கு ஏறக்குறைய இரண்டாயிரம் மக்கள். பெல்ஜிய நாட்டின் தென்பகுதியில் பிரான்சின் எல்லைக்கு ஐந்து மைல் தூரத்தில் இருக்கிறது. தேவ தாய் காட்சியளிக்கிறாள் என்னும் செய்தி பரவியதும் மக்கள் கூட்டமாய் வந்தனர். தேவதாயைப் பார்க்க லாமென எதிர் பார்த்தவர்கள் சிலர். வேடிக்கை பார்க்க வந்தோர் பலர். ஏனையோர் கேலி பண்னுவ தற்காக வந்தார்கள்.

தேவதாய் ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த திருநாளன்று மாலையில் சிறுவர்களைக் கவனிக்கும்படி 15000 பேர் கூடியிருந்தனர். தேவதாய் தோன்றினாள். சற்றுபின் சிறுவர் ஐவரும் பரவசமாயினர். அன்னை யின் அழகைப் பார்த்ததும் தங்களைச்சுற்றி நடப் பவை யாவற்றையும் மறந்தார்கள்.

சிறுவர்களின் செய்கைகளைக் கவனிக்கும்படி பல வைத்திய நிபுணர்கள் வந்திருந்தார்கள். சிறுவர்களை தம் நிலைக்குக் கொண்டுவர அவர்கள் பல வழிகளைக் கையாண்டனர். உடலில் குண்டூசியை இறக்கினார் கள். குவித்திருந்த கரங்களை நெருப்பாற் சுட்டார்கள். கண்களில் பிரகாசம் பொருந்திய மின்சார வெளிச்சத் தைக் காட்டினார்கள். இவற்றையெல்லாம் சிறுவர்கள் பொருட்படுத்தவில்லை. காட்சி முடிந்தபின், சிறுவர் களிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள். தங்களைச் சுற்றிலும் நடந்த ஒன்றையுமே அவர்கள் அறிய வில்லை. நெருப்பு, குண்டூசி இவற்றின் அடையாளம் உடலில் காணப்படவில்லை. அன்னையின் அதிசய அழகைப் பற்றியே அவர்கள் பேசலானார்கள்.

தேவதாய் வந்தபொழுதெல்லாம் சிறுவர்கள் அநேகமாய் ஜெபித்து, அன்னையின் பரலோக அழ கைப் பார்த்து அகமகிழ்ந்து பரவசமானார்கள். சில சமயங்களில் அன்னை சிறுவரில் ஒருவருடன் அல்லது பலருடன் பேசுவாள். ஒரு கோவில் கட்டப்படவேண்டு மென்று டிசம்பர் 17-ம் நாளன்று தேவதாய் கேட்டுக் கொண்டாள்.

"ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள்?" என டிசம்பர் 23-ம் நாளன்று பெர்னாந்து கேட்டாள். "மக்கள் இங்கு திருயாத்திரையாய்க் கூடும்படி'' என்ற பதில் கிடைத் தது. தன் தோத்திரத்துக்காகக் கட்டப்பட்டுள்ள பீடங்கள் க்ஷேத்திரங்கள் இவற்றினருகில் மக்கள் கூடி ஜெபிக்கவேண்டும், அதிகமாய் ஜெபிக்க வேண் டும் என்பது தேவதாயின் விருப்பம். இதை லூர்து, பாத்திமா தரிசனங்களிலிருந்தும் அறிகிறோம்.

டிசம்பர் 29-ம் நாள் மாலையில் தேவதாய் வழக்கம் போல் தோன்றினாள். பிரியுமுன் விடை பெறுவது போல் கரங்களை விரித்தாள். அவள் கரங்களை விரிக் கையில் சிறுவர்கள் அன்னையின் மாசற்ற இருதயத் தைப் பார்த்தனர். மார்பில் அது காணப்பட்டது. ஒளி வீசும் தங்க இருதயம். மாசற்ற கன்னி பின் தங்க இருதயத் தோற்றம் சிறுவர்களின் உள்ளத்தில் பதிந் தது. மறுநாளும் தேவதாய் தன் தங்க இருதயத்தைக் காண்பித்து, “ஜெபியுங்கள், அதிகமாய் ஜெபியுங் கள்'' என்றாள். அடுத்தநாளும், அதாவது 1932-ம் ஆண்டின் இறுதி நாளிலும் அவ்விதமே நடந்தது. புதுவருட தினத்தில் சிறுவர்கள் ஜெபமாலையைத் தொடங்கியதும் தேவதாய் வந்து, “ஜெபியுங்கள், எப் பொழுதும் ஜெபியுங்கள்'' என்ற துடன், இன்னும் ஒருமுறை மாத்திரம் தான் வருவதாகவும், அது ஜனவரி 3ம் நாளில் என்றும் தெரிவித்தாள்.

மாமரி கடைசி முறையாக வரப்போகிறாள் என்னும் செய்தி எங்கும் பரவியது. மக்கள் திரண்டுவந்து சிறுவர்களை ஊன்றிக் கவனித்தார்கள். சிறுவர்களது முகங்களில் காணப்பட்ட மகிழ்ச்சியைப் பார்த்தனர் அவர்கள் போட்ட சத்தம் கேட்டது. அதிலிருந்து தேவதாய் வந்து விட்டாள் என அறிந்துகொண்டனர்.

இம்முறை நால்வர் மாத்திரமே பரிசுத்த கன்னியைப் பார்த்தார்கள். வயதில் மூத்தவளான பெர்னாந்து தேவதாயைப் பார்க்கவில்லை. அவளது அழுகை எங்கும் கேட்டது. நால்வரும் வழக்கம் போல் ஜெபமாலை ஜெபித்தனர். பெர்னாந்து அவர்களுடன் ஜெபிக்க முடியவில்லை. ஜெபமாலை நேரத்தில் நால்வரில் ஒவ்வொருவருக்கும் அன்னை ஒரு செய்தி சொன்னாள். அது ஏனைய மூவருக்கும் கேட்க வில்லை. சிறுவரில் ஒருவர் சில வினாடிகளாக மௌனமாய் இருப்பதையும், யாருக்கோ செவி கொடுக்கிறாப் போல் தோன்றுவதையும், பின் பிறருடன் சேர்ந்து செபிப்பதையும் மக்கள் கவனித்தனர்.

''நான் கடவுளுடைய மாதா, பரலோக அரசி, எப்பொழுதும் ஜெபி, போய்வருகிறேன்'' என அன்னை அந்திரேயாவிடம் கூறினாள். பின் கில்பெர்த் வாசின் பக்கமாய்த் திரும்பி, “நான் பாவிகளை மனந் திருப்புவேன்" என்ற துடன் தொடர்ந்து பேசினாள். அவளது உதடுகள் அசைவதை ஏனைய மூவரும் பார்த்தனர். வார்த்தையொன்றும் கேட்கவில்லை. தேவதாய் தன்னிடம் ஓர் இரகசியத்தை வெளியிட்டு, அதை யாரிடமும் அறிவிக்கலாகாது, சிறுவர்களிட மும் தெரிவிக்கலாகாது என்றதாக கில்பெர்த் கூறி னாள். போய்வருகிறேன் என்ற பின் தேவதாய் ஆல்பெர்ட் பக்கமாய்த் திரும்பி இரகசியம் ஒன்றை அறிவித்து, போய்வருகிறேன் என்றனள். கில் பெர்த் தெகெம் பெருக்கும் ஓர் இரகசியத்தைக் கூறி விடை பெற்று மறைந்தாள்.

தேவதாயைப் பார்க்க முடியாது போனது பற்றி பெர்னாந்து துயருற்று அந்த இடத்தை விட்டு அகல மறுத்து முழந்தாளிட்டு ஜெபித்துக் கொண்டிருந் தாள். சில நிமிடங்களுக்குப் பின் மரத்தின் மீது நெருப்புப் பந்து ஒன்று தோன்றியது. உடனே பெரும் சத்தம். தேவதாய் பெர்னாந்தின் முன் நின்றாள். "நீ என் மகனை நேசிக்கிறாயா?" என தேவதாய் கேட்க, பெர்னாந்து அழுது கொண்டே ஆம் என்றாள்.

“என்னையும் நேசிக்கிறாயா?" என அன்னை வினவ, நீர் நிரம்பிய கண்களுடன் அவள் அன்னையை நோக்கி, “ஆம், நேச ஆண்டவளே" என நேசத்துடன் மொழிந் தாள். உடளே தேவதாய் “அப்படியானால் உன்னை எனக்காகப் பரித்தியாகம் செய், போய்வருகிறேன்'' என்று சொல்லி மறைந்தாள்.

“ஜெபியுங்கள், எப்பொழுதும் ஜெபியுங்கள்'' என அன்னை கூறியதை சிறுவர் மறக்கவில்லை. காற்றையும் மழையையும் கவனியாமல் அங்கு போய் ஒவ்வொரு நாளும் இரவில் ஜெபித்து வந்தார்கள்.

அங்கு ஜெபிக்கச் சென்றவர்களின் தொகை அதிகரித்து வந்த போதிலும் சிறுவர்களைப் பலர் வன்மையாகக் கண்டித்தனர். அங்கு ஜெபிக்க வந்த வர்களின் மன்றாட்டுக்குத் தேவதாய் செவி கொடுத் தாள். ஆத்தும சரீர சுகம் பெற்றவர்கள் அநேகர். மந்தையை விட்டுத் தவறிய அநேகர் வேதக்கடமை களை அனுசரிக்கத் தொடங்கினார்கள். எண்ணமுடி யாத பாவிகள் மனந்திரும்பினார்கள். நோயாளிகள் சுகம் பெற்றனர்.

காட்சிகள் உண்மையா என ஆராயும்படி நாமூர் நகர் மேற்றிராணியார் ஒரு குழு 1934-ல் ஏற்படுத்தி னார். 1943 பெப்ருவரி 2-ம் நாளன்று மேற்றிராணி யார் பொராங் நகர் பங்குக் கோவிலுக்குப் போய், காட்சிகள் உண்மை என பாப்பரசர் அங்கீகரித்த தாகத் தெரிவித்தார்.

ஆல்பெர்ட் இரண்டாவது உலக யுத்தத்தில் போர் செய்யும்படி உத்தரவிடப்பட்டான். யுத்தம் முடிந்தபின் குருவாகி, நல்ல கடவுளையும் அவருடைய திருத்தாயாரையும் பற்றி போதிக்கும்படி ஆப்பிரிக்கா விலுள்ள காங்கோ நாடு சென்றார். பெண்கள் நால் வரும் மணமுடித்து, "ஜெபியுங்கள், எப்பொழுதும் ஜெபியுங்கள்'' என்னும் தேவதாயின் செய்தியை தங்கள் மக்களுக்கு அறிவித்து வருகிறார்கள்.