இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

காலம் முடிவடையும் போது இப்புனித அடிமைத்தனத்தின் பாகம் என்ன?

காலம் முடிவடையும்போது மரியாயின் வழியாகவே சேசுவின் இராச்சியம் வரும் 

58. கடவுள் மரியாயின் வழியாகவே முதல் தடவை உலகத்தில் வந்தார். தாழ்வுற்ற நிலைமையிலும், தன்னையே அழித்துக் கொண்ட நிலையிலும் வந்தார். அதுபோலவே, அவர் எல்லா இடங்களிலும் அரசாட்சி, செய்வார், ஜீவியர்களையும் மரித்தவர்களையும் நடுத்தீர்ப் பார் என்று அகில திருச்சபையும் எதிர்பார்ப்பது போல் அவர் மரியாயின் வழியாகவே இரண்டாம் தடவையும் வருவார் என்று நாம் சொல்லலாம் அல்லவா? அது எப்படி எப்போது நிறைவேற்றப்படும் என்று யார் அறிவார்? ஆனால் இது எனக்குத் தெரியும் : பூலோகத்திலிருந்து பரலோகம் எவ்வளவு தொலைவில் இருக்கிறதோ அவ்வள வுக்கு நம்முடைய நினைவுகளிலிருந்து தம்முடைய நினை வுகள் தொலைவில் இருக்கின்றவராகிய கடவுள், மனிதர் கள் எதிர்பாராத நேரத்திலும், எதிர்பாராத முறையிலும் -- வேதாகமங்களில் மிகத் தேர்ச்சி பெற்று அறிந்துள்ளவர்கள் கூட அதை எதிர்பார்க்காமலிருக்கும் போது அவர் வருவார். வேதாகமங்கள் இது விஷயத்தில் மங்கலாக இருக்கின்றன.


தன்னுடைய பெரிய அர்ச்சிஷ்டவர்களால் பயிற்சி செய்யப்படுகிற புனித அடிமைத்தனத்தினாலேயே மாமரி சேசுவின் இறுதி ஆட்சியை வரச் செய்வார்கள்.

59. காலம் முடிவடையும் போது, ஒருவேளை நாம் நினைக்கிற நேரத்திற்கு முன்னாலேயே, பரிசுத்த ஆவியி னால் நிரம்பியவர்களும், மரியாயின் உணர்வு ஊட்டப் பட்டவர்களுமான பெரிய மனிதர்களைக் கடவுள் எழுப்பு வார் என்றும் நாம் விசுவசிக்க வேண்டியதாக இருக்கிறது. அவர்கள் வழியாக இந்த வல்லமையுள்ள அரசி பாவத்தை அழிக்கவும் கெட்டுப்போன இவ்வுலகத்தின் இடிபாடு களின் மேல் தன் குமாரன் சேசுகிறீஸ்துவின் இராச்சியத்தை ஏற்படுத்தவும் உலகத்தில் பெரிய அதிசயங்களை ஆற்று வார்கள். இதை நிறைவேற்றுவதில் அந்த புனித மனிதர்கள் இப்பக்தி முயற்சியின் துணையினால் வெற்றியடை வார்கள். இந்த பக்தி முயற்சியின் வெளிக் கோடுகளைத் தான் நான் இங்கு வரைந்து காட்டியுள்ளேன். என் தகுதியின்மை அதைக் கெடுக்கத்தான் செய்கிறது.