இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பாவி கடவுளை நிந்திக்கிறான்!

 சர்வேசுரனுடைய மகா மேன்மையையும், மகத்துவத்தையும் தியானித்து, தாவீதரசர்: "ஆண்டவரே, உமக்கு நிகரானவர் யார்?'' என்று கூக்குரலிட்டார்! ஆனால் சர்வேசுரனோ, பாவிகள் தமது நட்பை வெறுத்துத் தள்ளி, அதற்குப் பதிலாக ஒரு பரிதாபமான, அற்ப உலக சுகத்தைத் தேர்ந்து கொள்வதைக் கண்டு, ""என்னை யாருக்கு ஒப்பாக்கினீர்கள், அல்லது என்னை யாருக்கு சமமாக்கினீர்கள்!'' என்று கேட்கிறார். பாவியானவன் கடவுளின் நட்பை விடத் தன் ஆசாபாசமும், தனது வீண்பெருமையும், தனது உலக இன்பமும் தனக்கு அதிக மதிப்புள்ளவை என்று அறிக்கை யிடுகிறான். ""அவர்கள் ஒரு கைப்பிடி வாற்கோதுமைக்காகவும், ஒரு துண்டு உரொட்டிக்காகவுமே, நம் மக்களினத்தின் நடுவே, நமக்கெதிராகப் பாவம் செய்தார்கள்'' (எசேக்.13:19),

பாவி கடவுளை நிந்தித்து வெறுக்கிறான். "திருச்சட்டத்தை மீறியதால் கடவுளுக்கு அவசங்கை செய்தாய்'' (உரோ.2:23). ஆம்; ஏனெனில் பாவி கடவுளின் வரப்பிரசாதத்தைப் புறக்கணிக்கிறான், ஓர் அவலமான இன்பத்திற்காக, அவரது நட்பைக் காலில் போட்டு மிதிக்கிறான். ஒரு மனிதன் ஒரு இராச்சியத்தை, அல்லது உலகம் முழுவதையுமே தனதாக்கிக் கொள்ளும்படி கடவுளின் நட்பை இழப்பான் என்றால், அவரது நட்பு உலகத்தை விட - ஓராயிரம் உலகங்களை விட - அதிக மதிப்புள்ளது என்பதால், அப்போதும் கூட அவன் ஒரு மிகப் பெரிய தவறு செய்பவனாகவே இருப்பான். ஆனால் நாம் எதன் நிமித்தமாகக் கடவுளை நோகச் செய்கிறோம்? ""தீயவர்கள் எதற்காகக் கடவுளை நோகச் செய்தார்கள்?'' (சங்.9:13). கொஞ்சம் மண்ணுக்காக, ஒரு கோபவெறிக்காக, ஓர் அசுத்த இன்பத்திற்காக, கொதித்து, ஆவியாகி மறைகிற ஒன்றுக்காக, ஓர் அற்பப் பிரியத்துக்காக:""அவர்கள் ஒரு கைப்பிடி வாற்கோதுமைக் காகவும், ஒரு உரொட்டித் துண்டுக்காகவும் என்னை மீறினார்கள்.'' பாவத்திற்கு சம்மதிப்பதா, வேண்டாமா என்னும் குழப்பத்தில் பாவி தன் கரங்களில் தராசை எடுத்து, எது அதிக எடையுள்ளது - கடவுளின் வரப்பிரசாதமா, அல்லது அந்தக் கோபவெறியா, அல்லது அந்தத் திரவ ஆவியா, அந்த இன்பமா என்று எடைபோட்டுப் பார்க்கிறான். பிறகு, பாவத்திற்குச் சம்மதிக்கும்போது, தன்னைப் பொறுத்த வரை, தன் ஆசாபாசமும், தன் இன்பமும் கடவுளின் நட்பை விடத் தனக்கு அதிக மதிப்புள்ளது என்று அவன் அறிக்கையிடுகிறான். இதோ கடவுள் பாவியால் அவசங்கை செய்யப்படுகிறார்! சர்வேசுரனுடைய மகா மேன்மையையும், மகத்துவத்தையும் தியானித்து, தாவீதரசர்: ""ஆண்டவரே, உமக்கு நிகரானவர் யார்?'' என்று கூக்குரலிட்டார்! ஆனால் சர்வேசுரனோ, பாவிகள் தமது நட்பை வெறுத்துத் தள்ளி, அதற்குப் பதிலாக ஒரு பரிதாபமான, அற்ப உலக சுகத்தைத் தேர்ந்து கொள்வதைக் கண்டு, ""என்னை யாருக்கு ஒப்பாக்கினீர்கள், அல்லது என்னை யாருக்கு சமமாக்கினீர்கள்!'' (இசை.40:25) என்று கேட்கிறார். ஆகவே, உனக்கு என் வரப்பிரசாதத்தை விட, அந்த அசுத்த இன்பம் அதிக மதிப்புள்ளதாக இருந்திருக்கிறது என்கிறார் ஆண்டவர்: ""நீ உன் முதுகுக்குப் பின்னால் என்னைத் தள்ளி விட்டாய்'' (எசேக்.23:35). அந்தப் பாவத்தால் நீ ஒரு கையையோ, அல்லது கத்து இலட்சம் ரூபாயையோ, அல்லது அதற்கும் மிகக் குறைவான ஒரு தொகையையோ இழக்க வேண்டி வரும் என்றால், அந்தப் பாவத்தை நீ செய்யாமல் இருந்திருப்பாய். ஆகவே கடவுள் உன் கண்களில் எவ்வளவு இழிந்தவராகத் தோன்றுகிறார் என்றால், ஒரு கண நேர ஆசாபாசத்திற்காக, அல்லது ஒரு பரிதாபமான, மிக அற்பமான இன்பத்திற்காக உன்னால் நிந்தித்துத் தள்ளப்பட வேண்டியவராக அவர் கருதப்படுகிறார் என்று ஸால்வியன் என்பவர் கூறுகிறார்: ""மற்ற எல்லாக் காரியங்களோடும் ஒப்பிடும்போது, கடவுள் மட்டுமே உன்னால் வெறுக்கத் தக்கவராக மதிக்கப் படுகிறார்.''அந்தப் பாவத்தை நீ செய்யாமல் இருந்திருப்பாய். ஆகவே கடவுள் உன் கண்களில் எவ்வளவு இழிந்தவராகத் தோன்றுகிறார் என்றால், ஒரு கண நேர ஆசாபாசத்திற்காக, அல்லது ஒரு பரிதாபமான, மிக அற்பமான இன்பத்திற்காக உன்னால் நிந்தித்துத் தள்ளப்பட வேண்டியவராக அவர் கருதப்படுகிறார் என்று ஸால்வியன் என்பவர் கூறுகிறார்: ""மற்ற எல்லாக் காரியங்களோடும் ஒப்பிடும்போது, கடவுள் மட்டுமே உன்னால் வெறுக்கத் தக்கவராக மதிக்கப் படுகிறார்.''

ஆகவே, என் தேவனை, நீர் அளவற்ற நன்மைத்தனமாக இருக்கிறீர்; ஆனால் நான் அனுபவித்த அடுத்த கணம் மறைந்து போய்விட்ட ஓர் அற்ப சுகத்துக்காக நான் உம்மைக் கைநெகிழ்ந்தேன். ஆனால் இப்படி என்னால் புறக்கணிக்கப்பட்ட போதிலும், நான் மன்னிப்பை ஆசிக்கிறேன் என்றால், என்னை மன்னிக்க இப்போது நீர் தயாராயிருக்கிறீர், நான் உம்மை நோகச் செய்ததற்காக மனஸ்தாபப்பட்டால், உமது வரப்பிரசாதத்தை மீண்டும் என்னில் ஸ்தாபிப்பதாக நீர் வாக்களிக்கிறீர். ஆம், என் ஆண்டவரே, இவ்வாறு உம்மை அவமானப்படுத்தியதற்காக, என் முழு இருதயத்தோடு நான் மனஸ்தாபப்படுகிறேன். எல்லாத் தீமைகளுக்கும் மேலாக என் பாவத்தை நான் அருவருத்துத் தள்ளுகிறேன்.

மேலும்,ஏதாவது ஓர் இன்பத்தின் நிமித்தம் பாவியானவன் கடவுளை நோகச் செய்யும்போது, அந்த இன்பமே அவனது தெய்வ மாகிவிடுகிறது. ஏனெனில் அதையே அவன் தனது இறுதி நோக்க மாக்கிக் கொள்கிறான். ""ஒவ்வொருவனும் ஆசிக்கும் காரியத்தையே அவன் வழிபடுவான் என்றால், அது அவனுக்கு ஒரு தெய்வமாக இருக்கிறது. இருதயத்திலுள்ள ஒரு துர்க்குணம் பீடத்தின் மீதுள்ள விக்கிரகமாக இருக்கிறது'' என்று அர்ச். ஜெரோம் கூறுகிறார். ""இன்பங்களை நீ நேசிக்கிறாய் என்றால், அந்த இன்பங்கள் உன் தெய்வமாக இருக்கின்றன'' என்று அர்ச். தாமஸ் அக்குயினாஸ் கூறுகிறார். அர்ச். சிப்ரியன் தம் பங்கிற்கு, ""கடவுளுக்குப் பதிலாக மனிதன் வேறு எதைத் தேர்ந்து கொண்டாலும், அவன் அதைத் தனது தெய்வமாக்குகிறான்'' என்கிறார். ஜெரோபோவாம் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தபோது, மக்களைத் தன்னோடு விக்கிரக வழிபாட்டிற்குள் இழுத்துக் கொள்ள அவன் முயன்றான். எ னவே அவன் தன் விக்கிரகங்களை அவர்களுக்குக் காட்டி, ""ஓ இஸ்ராயேலே, இவர்களே உன் தேவர்கள்'' என்றான் (3 அரசர்.12:28). இவ்வாறே பசாசும் பாவிக்கு ஏதாவது ஓர் உலக இன்பத்தைக் காட்டி, ""உனக்கும் கடவுளுக்கும் என்ன இருக்கிறது? இந்த இன்பத்தில், இந்த ஆசாபாசத்தில் உன் தெய்வத்தைப் பார்; இதை எடுத்துக் கொள், கடவுளை விட்டுவிடு'' என்கிறது. பாவி இதற்கு சம்மதிக்கும்போது, அந்த இன்பத்தை அவன் தன் இருதயத்தில் தெய்வமாக வைத்து ஆராதிக்கிறான்: ""இருதயத்தில் உள்ள ஒரு துர்க்குணம், பீடத்தின் மீதுள்ள ஒரு விக்கிரகமாக இருக்கிறது.''

பாவியானவன் கடவுளை அவசங்கை செய்கிறான் என்றாலும், குறைந்தபட்சம் அவரது சமூகத்தில் அவன் அப்படிச் செய்யாமல் இருப்பானா? ஆ, அவன் அவரது திருமுகத்திற்கு முன்பாகவே அவரை அவமானப்படுத்துகிறான், ஏனெனில் கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார். ""நாம் பரலோகத்தையும், பூலோகத்தையும் நிரப்புகிறோம்'' (எரே.23:24). இதைப் பாவியும் அறிந்திருக்கிறான். இருந்தாலும் கடவுளின் கண்களுக்கு முன்பாகவே அவருக்குக் கோபமூட்ட அவன் தயங்குவதில்லை. ""அவர்கள் நமக்குக் கோபமூட்டும் காரியத்தை அவர்கள் நம் கண்களுக்கு முன்பாகவே செய்கிறார்கள்'' (இசை.65:3).

இதோ, என் தேவனே, நான் நம்பியுள்ளது போல, நான் இப்போது உம்மிடம் திரும்பி வருகிறேன்; நீர் ஏற்கெனவே என்னை உம் குழந்தையாக ஏற்று என்னை அரவணைக்கிறீர். ஓ அளவற்ற நன்மைத்தனமே, நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால் இப்போது எனக்கு உதவி புரியும், என்னிடமிருந்து உம்மை மீண்டும் தள்ளிவிட ஒருபோதும் அனுமதியாதேயும். நரகம் என்னைச் சோதிப்பதை நிறுத்தாது; ஆனால் நீர் நரகத்தை விட அதிக வல்லமை யுள்ளவராக இருக்கிறீர். நான் எப்போதும் உமக்கு என்னை ஒப்புக் கொடுத்து வருவேன் என்றால், இனி ஒருபோதும் என்னை நான் உம்மிடமிருந்து விலக்கிக் கொள்ள மாட்டேன் என்பதை நான் அறிந்திருக்கிறேன். எனவே, நான் என்னை எப்போதும் உமது பாதுகாவலில் வைக்கும்படியாகவும், இப்போது நான் செய்வது போல, ""ஆண்டவரே, எனக்கு ஒத்தாசை செய்யும்; எனக்கு ஒளி தாரும், எனக்கு பலம் தாரும், எனக்கு நிலைமை வரம் தாரும், எனக்குப் பரலோகத்தைத் தாரும். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, ஆன்மாக்கனின் உண்மையான பரலோகமாக இருக்கிற உமது தேவசிநேகத்தை எனக்குத் தந்தருளும்'' என்று எப்போதும் உம்மிடம் நான் ஜெபிக்கும்படியாகவும், நீர் எனக்குத் தந்தருள வேண்டிய வரம் இதுவே. ஓ அளவற்ற நன்மைத்தனமே, நான் உம்மை நேசிக்கிறேன், எப்போதும் உம்மை நேசிக்க ஆசையாயிருக்கிறேன். சேசுக்கிறீஸ்துநாதரின் அன்பிற்காக, என் மன்றாட்டைக் கேட்டருளும். மரியாயே, நீர் பாவிகளின் அடைக்கலமாக இருக்கிறீர்; உம் சர்வேசுரனை நேசிக்க ஆசிக்கும் பாவியாகிய எனக்கு உதவி செய்தருளும்.