மேன்மை தங்கிய கோட்டார் மேற்றிராணி ஆண்டவரின் மதிப்புரை

காலஞ்சென்ற சேசுசபை சந்தியாகப்பர் சுவாமியவர்கள் இயற்றிய மன்ரேசா என்னும் பக்தி ரசம் பொழியும் உன்னத நூலின் அடுத்த பதிப்பு வெளிவந்திருப்பதைக் கண்டு மகிழ்கிறோம்.

சிறந்த ஞான நூலாகிற 'மன்ரேசா' அச்சிடப்பட்ட நாள் முதல் இதுவரை நமது தமிழ் மக்களுக்கு ஏராளமான ஆத்தும் நன்மைகளை விளைவித்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. தியான காலத்தில் மாத்திரமல்ல, மற்ற நாட்களிலேயும் உத்தம் போதனைகள் அடங்கிய 'மன்ரோ ' புத்தகத்தை கவனத்துடன் வாசித்தல் ஞான இன்பத்தை மூட்டி பாவ சோதனைகளை ஜெயித்து உத்தம் கிறிஸ்துவ வாழ்வை அநுசரிக்க உதவியாயிருக்கிறதென்பது அநுபவத்தால் கண்ட விஷயம்.

தற்போது வெளிவந்திருக்கும் புதிய பதிப்பில் சேசு சபை சங். மரிய இஞ்ஞாசியார் சுவாமியவர்கள் சொல்லிலும் பொருளிலும் தகுந்த திருத்தங்கள் செய்து, நுட்பமான சில விஷயங்கள் தெளிவாய் விளங்கும்படி பல குறிப்புகளையும் சேர்த்திருப்பதால் இப்புத்தகத்தின் மதிப்பு அதிகரித்துத் தோன்றுகிறது.

ஞானப் பொக்கிஷம் போன்ற மன்ரேசா' என்னும் அருமையான ஞான நூலை நம் தமிழ் கத்தோலிக்கர் ஒவ்வொருவரும் வாங்கி வைத்து இன்பமுடன் வாசித்து ஞானப் பயனடையுமாறு வெகுவாய் ஆசிக்கிறோம்.

நாகர்கோயில்,

T.R. AGNISWAMY, S.J.,
15-7-1939.
கோட்டார் மேற்றிராணியார்.