ஊண், உடை, உறக்கம்

பிள்ளைகளின் தேக சுகத்தைக் காப்பாற்றுவதற் காகச் சிறுப்பந் துவக்கி அவர்களை ஊணிலும், உடையிலும், உறக்கத்திலும் கிரமம் அனுசரிக்கப் பண்ணுவது அகத்தியம். வேளை தப்பி நினைத்த நேரமெல்லாம் விருப்பப்படி சாப்படுவதினாலும், குடிப்பதினாலும், நித்திரை செய்வதினாலும் சரீரத்தின் ஆசாபாச இச்சைகள் வீறு கொண்டு புத்தியையுஞ் சித்தத்தையுஞ் சிறைப்படுத்திக் கொள்ளுகின்றன. இளைஞர் இப்படி விடப்பட்டால் சுறுசுறுப்பற்று சோம்பேறிகளாகி சிலுவையின் மார்க்கமாகிய கிறிஸ்துவேதத்தையும் அதில் அகத்தியம் அனுசரிக்கவேண்டிய தன்னடக்கம், ஒறுத்தல், உப வாசங்களையும் இயற்கையாய் வெறுப்பார்கள். திருச்சபையில் ஒரு பெரிய வேதபாரகராய் விளங்கும் அர்ச். பெர்நந்துவின் மாதா மிகச் செல்வமுடையவளாயிருந் தாலும் தன் பிள்ளைகள் சரீர ஆசாபாசங்களுக்கு அடிமை களாய்ப் போகாதபடி அவர்கள் சிறுப்பந்தொட்டுத் தங்களை ஒறுத்து நடக்கப் பழக்குகிறதற்காக அவர்களை ஊண், உடை, உறக்கம் முதலியவைகளிலும் மிகக் கட்டுமட்டாய் நடத்திவருவாள். அயலார் இதைக் கண்டு பிள்ளைகளுக்காக மனுப்பேசி முறையிட்டாலும் கேளாமல், தன் பிள்ளைகள் சுகபோகிகளாகாமல் சருவே சுரனுக்கு உகந்தவர்களாகவும் உலகத்துக்கு உபயோக முள்ளவர்களாகவும் வளரவேண்டுமாகில் அவர்கள் ஊண் உடை முதலிய லெளகீக காரியங்களிலும் ஒறுப்பன வாய் நடப்பது அவசியமென்பாள். அவ்வித வளர்ப் பின் பயனாக அவர்கள் எல்லாரும் உலக சுகபோகங் களை நீக்கித் துறவிகளாகி உலகத்துக்குப் பெரும் நன்மை களைச் செய்துவந்தார்கள்.

ஊண்

சிறுபிள்ளைகள் நாளொன்றுக்கு நாலு ஐந்து தரம் மட்டாய் அன்னபானம் அருந்துவது நல்வழக்க மாயினும், நாள் முழுவதும் வாயாட்டிக்கொண்டு திரிவது தகாது. சில பிள்ளைகளைப்பார்த்தால் அவர்கள் சாப்படுகிறதற்காகவே சீவிக்கிறார்களென்று சொல்லக்கூடியதாய் நாள்முழுதும் ஏதாவது காய், கனி, பலகாரம், இனிப்பு முதலியவைகளை நன்னிக்கொண்டிருப்பார்கள். நேர ஒழுங்கும் மட்டுத்திட்டமுமின்றி தகுந்ததையும் தகாததையும் கெலிதீர அடிக்கடி சாப்படுவதினால் இரைப்பையின் சீரணிக்கும் சக்தி கேவலப்பட்டுப்போக பற்பல நோய்கள் உண்டுபடுவதுமன்றிப் புத்தியும் மங்கிப்போகும். போசனத்தைச் சீரணிப்பித்தல் இரைப் பைக்குப் பொறுப்பான வேலை. பகல் முழுவதும் சரீரப் பிரயாசமான வேலை செய்கிறவர்கள் இடையிடையே ஓய்ந்து சரீரத்துக்கு ஆற்றியைக் கொடுப்பார்கள். கல்வி முதலிய கருமங்களில் மனதை அப்பியாசப்படுத்துகிற வர்களும் அப்படி அடிக்கடி மனதுக்கு இளைப்பாற்றி யைக் கொடுப்பார்கள். அப்படியே போசனபானம் பண் ணுகிறவர்களும் சீரணிப்புக்குரிய வேலை செய்யும் இரைக்குடலையும் ஓயவிடுவது அவசியம். ஆகையால், தின்பண்டங்களில் அவாக் கொண்ட பிள்ளைகள் தங்கள் இரைப்பைமேல் இரக்கம் வைத்து அதற்குத் தாராள மான ஆற்றிகொடுக்கப் பெற்றோர் அவர்களைப் பழக்கு வார்களாக. உணவில் விருப்பமில்லாத பிள்ளைகளை வில்லங்கமாய்ச் சாப்படப்பண் ணுவதினால் தின்மையே அல்லாமல் நன்மையில்லையாம். அவர்களை நேரத்துக்கு நேரம் நன்றாய் வியர்க்க ஓடியாடி விளையாடப்பண்ணி னால் இலகுவாய்த் தீனில் விருப்பங்கொள்வார்களே. அவர்களுடைய விருப்பத்துக்கு மேற்படச் சாப்படப் பண்ணுவது பெருந்தவறு. பழவகைகளும் இனிப்புப் பண்டங்களும் சிறுவரின் உடலில் கிருமியையும் பிணி யையும் பிறப்பிக்கின்றனவென்பதை வைத்தியரன்றிப் பெற்றோரும் நன்றாயறிவார்கள். இயன்றளவு குழந்தை களுக்குப் பழந்தீனையும் அசீரணமான பதார்த்தங்களை யுங் கொடாமல் விலக்குவதும் இரவில் உணவைக் குறைப்பதும் உத்தமமாம். சிறுவர் மிதமிஞ்சிச் சாப் படாதிருப்பார்களானால் இக்காலம் வைத்தியருக்குள்ள வேலையில் அரைவாசி குறைந்துபோகுமென் று மிக்க அனுபவ அறிவுள்ள அநேக வைத்தியர் கூறுகின்றார் கள். ஆகையால், தாய் தந்தையர் தம்மக்களைக் குறித்த நேரங்களில் மாத்திரம் மட்டாய்ப் புசிக்கவுங் குடிக்கவும் பழக்குவார்களேயாகில், அவர்கள் எவ்வளவோ நற்சுகமும் தேகபெலனும் புத்தித்தெளிவுமுள்ளவர்களாக வளர்ந்து வருவார்களென்பதற்கு ஐயமில்லை. - சில விடங்களிற் பெற்றோர் வறுமையைச்சாட்டி பிள்ளைகளுக்குக் கள்ளைக் காலைப்போசனமாகக் கொடுக்கிறார்கள். அதனால் சிறுவர் சற்றுநேரம் பசி தீர்ந்து அக்களிப்புக் கொண்டாலும் பின்பு பள்ளிக்கூட நேரத்திற் சோர்ந்து மயங்கிப் படிக்க முடியாமற் கிடக்கிறதைப்பற்றிப் பலமுறையும் உபாத்தி மார் முறையிட்டதைக் கேட்டிருக்கிறோம். இயல்புள்ள சில குடும்பங்களில் தாய் தந்தையர் மதுபானத்தினாற் பிற்காலம் பிள்ளைகளுக்கும் குடும்பம் முழுவதுக்கும் எய்தக்கூடிய கணக்கற்ற கேடுகளை யோசியாமலோ அல்லது அதினாற் சிறுவருக்குச் சுகமும் பெலனும் வருமென்ற தவறான எண்ணத்தினாலேயோ விலையுயர்ந்த குடிவகைகளை அவர்களுக்குக் கொஞ்சங் கொஞ்சமாகக் குடிக்கக் கொடுத்தும் அல்லது பலவந்தமாய்ப் பருக்கி யும் வருகிறார்கள். இப்பிள்ளைகள் பிற்காலம் இக்கெட்ட பழக்கத்தைவிட முடியாமல் தீர்ந்த குடிகாரராகிக் கெட் டழிந்துபோவதும், வின்னாரியி லவிந்த வெண்காயம் போலச் சுகம், பலம், ஆண்மை , புத்தி, நினைவு சகலது மற்று சா தாழைகளாய்ப் போவதுஞ் சன்மார்க்கமற்றுத் தூர்த்தராய்ப் போவதும் அதிசயமல்ல. உலகத்தில் மிக்க " அனுபவமுங் கீர்த்தியும் பெற்ற வைத்தியர்கள் மதுபானங்களால் - எண்ணிறந்த தீமைகளேயன்றி யாதோர் நன்மையுமில்லையென்று ஒரே வாய்மொழி யாய்க் கூறிய நிர்ணயங்களைப் பலமுறை பத்திரிகை களில் வாசித்திருக்கிறோம்.

உடை

நகையைப்பார்க்கிலும் உடை மனுமக்க ளுக்கு அதிகந்தேவை. என்றாலும், நம் தேசத்தில் கை காதில் நகையில்லாத குளந்தைகளைக் காணலரிது. ஆனால் சிற்சிலவிடங்களில் எத்தனையோ பிள்ளைகள் நாலு, ஐந்து வயது நடக்கும்போது முதலாய் அரையில் ஒரு துண்டுத் துணியுமின்றித் தாய் பெற்ற மேனியாய்த் திரிவதைக் காணலாம். இது தாய் தந்தையருக்கு பெரும் வெட்கக் கேடான காரியம். இப்படிப் பிள்ளைகள் வெற்றுடம் பாய்த் திரிவதைக் காணுதல் சீர்திருத்தமுள்ளவர் களுக்கு எவ்வளவு அருவருப்பாயிருக்கிறதென்பதை இப்பெற்றோர் உணராதிருப்பது பெரும் ஆச்சரியம். சிறுவர் நிர்வாணராய்த் திரிவதினால் நாணமற்றுப்போ வதுமன்றி பல துர்ப்பழக்கங்களையும் கற்றுக்கொள்ள வழியாகின்றது. வழக்கமாய் வஸ்திரமணிந்திருக்குங் குழந்தைகள் சேற்றில், அல்லது புழுதியில் புரண்டு ருண்டு உடுப்பை ஊத்தையாக்கா தபடி. பெற்றோர் மெத்தக் கவனிப்பார்கள். ஆனால், வாடிக்கையாய் வஸ் திரமின்றித் திரியுங் குழந்தைகள் எப்படித் தரையிற் புரண்டுருண்டாலுங் கவனிக்கமாட்டார்கள். இதனால் தேகம் ஊத்தைக்கு உறைவிடமாகி நோயுறுவது நூதன மல்ல. பிள்ளைகளை நிருவாணமாய்த் திரியவிடுவது எப்படியோ அப்படியே அவர்களுடைய வயதுக்கும் நிலைபரத்துக்கும், சவுக்கியத்துக்கு மேற்க அவர்களுக்கு உடை தரிக்காமல் காலத்துக்கேற்ற கோலமென்னும் வியர்த்தமான கோட்பாட்டை அனுசரித்து இறுக்க மான அல்லது மரியாதைக்குறைவான உடைதரித்தல் நன்மையுமன்று தகுதியுமன் று.

உறக்கம்

சிறுவரின் சுகத்துக்கும் வளர்ச்சிக்கும் நித்திரை அதிகம் தேவையாயினும் அவர்கள் வளர வளர அதையும் வயதுக்கேற்றபடி கொஞ்சங் கொஞ்ச மாய் மட்டுப் படுத்தவேண்டும். ஏனெனில், மிதமிஞ் சிய நித்திரையினால் சோம்பல் மிகுந்து ஆண்மை குறைந்து தேகம் ஊ தி வெளிறி நீர்ச்சடலமாகின்ற தென்று இரவிலும் பகலிலும் அதிகமாய் நித்திரை "செய்யும் அநேகர் அனுபவத்தால் அறிவார்கள். வெள் ளெனப் படுத்து வெள்ளென விழித்தலானது மனுஷ னுக்குச் சவுக்கியத்தையுஞ் சம்பத்தையும் ஞானத்தை யும் அருளுமென்ற கருத்தமைந்த ஆங்கிலேய பழமொழியொன்றுண்டு. கல்வியிற் சிறந்த பல பிரபுக் களும் துறவிகளும் வாலிபந்தொட்டு வயோதிபமீறாக இரவில் ஐந்து ஆறு மணித்தியாலம் மாத்திரம் உறங்கி வந்தார்களென்றும் அதனால் அவர்கள் சுகத்தாழ்வடை யாமல் நெடுங்காலஞ்சீவித்து உலகத்துக்கு பெரும் நன் மைகளைச் செய்துவந்தார்களென்றும் சரித்திரங்களில் வாசிக்கிறோம். பள்ளிப்பருவத்தில் மாணாக்கருக்கு எட்டு மணித்தியால் நித்திரை தாராளமாய்ப் போதுமென் பதே கல்விபயிற்றும் பண்டிதர்களின் கொள்கை. ஆ கையால், பிள்ளைகள் ஒன்பது மணியளவிற் படுத்து ஐந்துமணியளவில் எழும்பப் பழகுவதே உத்தமம். ஆனால், பெற்றோரின் அசட்டையால் அநேக பிள்ளைகள் - வைகறைத் துயிலெழு '' என்பதற்கு மாறாகப் பொழு தேறுமட்டும் அப்பக்கமும் இப்பக்கமும் புரண்டுருண்டு நித்திரைசெய்வார்கள். இவ்வித பிள்ளைகள் புத்திக் கூர்மையுஞ் சுறுசுறுப்புமற்ற மந்தராய்ப் போவது ஆச் சரியமல்ல. முகத்தை மூடிக்கொண்டு அல்லது வாய் திறந்தபடி அல்லது இருதயமிருக்கிற இடதுபக்கமாய்ச் சாய்ந்து படுப்பது சுகத்துக்குக் கேடாம். ஆகையால், ஒன்றில் வலதுபக்கமாய் அல்ல்து நிமிர்ந்து படுப்பதே -உத்தமம்.