பாத்திமாவில் பாவிகள்

1916-ம் ஆண்டில் ஒருநாள் லூஸியா, பிரான் சிஸ்கோ , ஜஸிந்தா, ஆகிய மூவரும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். பதினான்கு பதினைந்து வயதுள்ள மிக்க அழகுள்ள வாலிபன் அவர்களுக்குத் தோன்றி, “பயப்படவேண்டாம். நான் சமாதானத்தின் தூதன். என்னுடன் சேர்ந்து ஜெபியுங்கள்' எனக்கூறி முழந்தாளிட்டு, நெற்றி தரையிற்பட வணங்கி “என் இறைவா, உம்மை விசுவசிக்கிறேன். ஆராதிக்கிறேன், நம்புகிறேன், நேசிக்கிறேன். உம்மை விசுவாசியாதவர்கள், ஆராதியாதவர்கள், நம்பா தோர், நேசியாதோர் ஆகியோருக்காக மன்னிப்பை இறைஞ்சிக் கேட்கிறேன்'' என்றதுடன் “இவ்விதம் ஜெபியுங்கள். உங்கள் ஜெபங்களைக் கேட்டு யேசுமரி இவர்களின் மிகப் பரிசுத்த இதயங்கள் இளகும்'' என்றார். “பரித்தியாக முயற்சிகள் செய்து, கடவுளை மனநோகச் செய்யும் சகல பாவங்களுக்கும் பரிகார மாக அவற்றை ஒப்புக்கொடுத்து, பாவிகள் மனந் திரும்ப கடவுளைக் கெஞ்சி மன்றாடுங்கள்!... யேசுவே, உம்முடைய திரு இதயத்தின் அளவற்ற பேறுபலன் களைக் குறித்தும், மரியாயின் மாசற்ற இருதயத்தின் மன்றாட்டுகளைக் கேட்டும், நிர்ப்பாக்கிய பாவிகளை மனந்திருப்பும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்... நன்றி கெட்ட மானிடரால் குரூரமாக நிந்திக்கப்படும் யேசுக்கிறிஸ்து நாதரின் சரீரத்தையும் இரத்தத்தை யும் உட்கொண்டு, அவர்களின் பாவங்களுக்குப் பரி காரம் செய்து, உங்கள் கடவுளுக்கு ஆறு தலளியுங் கள்'' என தூ தன் மொழிந்தார்.

பாத்திமா அன்னையின் முன்னோடியான தூதனின் மொழிகளிலிருந்து பாவிகளின் மனந்திரும்புதல் எவ்வளவு முக்கியம் என அறியலாம். "பாவிகளின் மனந்திரும்புதலுக்காக நீங்கள் வேதனைப்படுவீர்களா?' என தேவதாய் 13-5-1917-ல் சிறுவர்களிடம் கேட்டாள். "பாவிகளின் மனந்திரும்புதலுக்காக உங்களையே பரித்தியாகம் செய்யுங்கள்..... நீங்கள் நரகத்தையும் நிர்ப்பாக்கிய பாவிகளின் ஆத்துமங்களையும் பார்த்தீர்கள். ஆத்துமங்கள் அங்கு விழாது காப்பாற்றும்படி என் மாசற்ற இதயப் பத்தி உலகில் ஸ்தாபிக்கப்பட ஆண்டவர் விரும்புகிறார். நான் சொல்கிறபடி மக்கள் செய்வார்களானால் அநேக ஆத்துமங்கள் காப்பாற்றப்படும்” என ஜூலை 13-ம் நாளன்று அன்னை அறிவித்தாள்.

“பாவிகளுக்காக ஜெபியுங்கள், அதிகமாக ஜெபி யுங்கள், பரித்தியாகம் செய்யுங்கள், ஏனெனில் அவர் களுக்காக பரித்தியாகம் செய்வாரில்லை, ஜெபிப்பா ரில்லை" என 19-8-1917-ல் அன்னை அறிவித்தாள்.

அக்டோபர் 13-ம் நாளன்று அன்னையின் கடைசிக் காட்சியின் இறுதிச்சொற்களும் பாவிகளைப்பற்றியே. “மானிடர் தங்கள் குற்றங்களைத் திருத்த வேண்டும்; தங்கள் பாவங்களுக்காக பொறுத்தலைக் கேட்கவேண் டும்....... மேலும் தொடர்ந்து அவர்கள் நம் ஆண்ட வரை மன நோகப் பண்ணலாகாது; ஏற்கனவே அவரை மிக மன நோகச் செய்திருக்கின்றனர்."

இச்சொற்கள் சிறுவர்களின் மனதில் அப்படியே பதிந்து விட்டன. இவற்றைச் சொல்கையில் தேவ தாயின் முகத்தில் காணப்பட்ட துயரப் பார்வையை அவர்கள் ஒருபோதும் மறக்கவில்லை. இவையே அன் னையின் கடைசி மொழிகள். இவை பாத்திமா காட்சி களின் முக்கிய நோக்கத்தைக் காட்டுகின்றன.

பாத்திமாவை அடுத்த கிராமத்தில் வசித்த ஒரு பாவி தன் குடும்பத்துக்கு பெருத்த அவமானமா யிருந்தான். நம் சிறுவர்கள் அவனுக்காக பிரார்த்திக் கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். “நாங்கள் அவனுக்காக ஜெபித்து, அவன் நரகத்துக்குப் போ காது மனந்திரும்ப பரித்தியாகங்கள் செய்வோம்'' என அவர்கள் பதிலளித்தார்கள்.

ஒரு பெண் நம் சிறுவர் மூவரையும் பார்க்கும் போதெல்லாம் நிந்திப்பாள். ஒரு நாள் அவள் மது பானம் அருந்திவிட்டு வருகையில் அவர்களை நிந்தித்து அடித்தாள். “அந்தப் பெண் மனந்திரும்பும்படி மாதாவை நோக்கி நாம் ஜெபித்து பரித்தியாகம் செய் வோம். அவள் கெட்ட வார்த்தைகள் சொல்கிறாள். பாவசங்கீர்த்தனம் செய்யாவிட்டால் அவள் நரகத் துக்குப் போவாளே'' என சிறுவர்கள் விசனித்தார் கள். ஒரு நாள் விளையாடிக்கொண்டிருக்கையில், பாவி கள் மனந்திரும்புதலுக்காக விளையாட்டை நிறுத்தி பரித்தியாகம் செய்தார்கள்.

ஜூலை 13-ம் நாளன்று, நரகத்தில் மக்கள் படும் வேதனைகளைப் பார்த்த பின் ஜஸிந்தா அந்தக் காட் சியை மறக்க முடியவில்லை. நரகத்தைப்பற்றி அன்று மாலையில் லூஸியாவிடம் பல கேள்விகளைக் கேட் டாள். "அநேக ஆண்டுகளுக்குப் பின்னும் நரகம் முடியாதோ? அங்கு வசிக்கிறவர்கள் ஒருபோதும் சாகமாட்டார்களோ? அவர்கள் சாம்பலாய்ப்போக மாட்டார்களோ? அந்த நிர்ப்பாக்கியர்களுக்காக கிறிஸ்தவர்கள் அதிகம் ஜெபித்தால் நல்ல கடவுள் அவர்களை அவ்விடத்திலிருந்து எடுக்கமாட்டாரோ? நிறைய பரித்தியாகங்கள் செய்தாலும் எடுக்கமாட் டாரோ?" என்று வினவினாள்.

லூஸியா கொடுத்த பதில் ஜஸிந்தாவைத் தேற்ற வில்லை. " அவர்கள் சாவான பாவத்துடன் செத் தால், அது முடியாத காரியம். ஆனால், மாதா நம்மி டம் சொன்னதுபோல், பாவிகள் மனந்திரும்பும்படி நாம் ஜெபித்து பரித்தியாகங்கள் செய்யலாம்'' என லூஸி கூறியதும், ஜஸிந்தா 'பாவம், நிர்ப்பாக்கிய மக்கள் ! பாவிகள் மனந்திரும்பும்படி நாம் அதிகமாக ஜெபிப்போமாக, தவம் செய்வோமாக" என்றாள்.

சில சமயங்களில் ஜஸிந்தா சிந்தனையிலாழ்ந்தவ ளாய் உட்கார்ந்திருக்கையில், "நரகம்!..... நரகம்....... மக்கள் அங்கு விழாதபடி தடுக்க நாம் மிக அதிக மாய் ஜெபிக்க வேண்டும்'' எனத் திரும்பத் திரும்ப கூவுவாள். பின் பயத்தினாலும் துயரத்தினாலும் நடுங்கி முழந்தாளிட்டு கைகுவித்து, "ஓ என் யேசுவே, எங்கள் பாவங்களை மன்னியும்; நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும்; எல்லா ஆத்துமங்களையும், முக்கியமாக உமது இரக்கம் யாருக்கு மிகத் தேவை யாயிருக்கிறதோ அவர்களையும் மோட்சத்துக்கு இட் டுச் செல்லும்'' என்ற, மாதா கற்பித்த ஜெபத்தைச் சொல்வாள்.

மாதா காட்சியளித்த இடத்தில் மக்கள் கூட்டமாக நிற்கக் கண்டால், ஜஸிந்தா லூஸியாவை நோக்கி, ''இவர்கள் அனைவருக்கும் நரகத்தைக் காட்டும்படி மாதாவிடம் நீ கேட்க வேண்டும். அப்படியானால் எல்லோரும் மனந்திரும்பிவிடுவார்கள் ...... ஐயோ அநேகர் நரகத்தில் விழுகிறார்களே. எத்தனையோ பேர்!" என்பாள். "பயப்படாதே, நீ எப்படியாவது மோட்சத்துக்கு போவாயே'' என லூஸி அவளைத் தேற்றினால், ஜஸிந்தா, “அது எனக்குத் தெரியும். எல்லோரும் மோட்சத்துக்குப் போக நான் விரும்புகி றேன்'' என்பாள்.

1917-ம் ஆண்டில் பிரான்சிஸ்கோவைப் பார்த்து, “உனக்கு எது அதிக பிரியம்? உன் பரித்தியாகங்கள் ஆண்டவரைத் தேற்ற வேண்டுமென அதிகம் விரும் புவாயா? அல்லது அவை ஆத்துமங்கள் நரகத்தில் விழாதபடி காப்பாற்ற விரும்புவாயா?'' என லூஸி கேட்டாள். ''ஆண்டவரைத் தேற்றவே நான் அதிகம் விரும்புவேன். மனிதர் ஆண்டவரை இனியும் மனநோகச் செய்யக்கூடாது என மாதா கடந்த மாதத்தில் தெரிவிக்கையில் அவர்களது முகத்தில் எவ்வளவு துயரம் காணப்பட்டது. நீ அதைக் கவ னித்தாயல்லவா? ஆண்டவரைத் தேற்றவும் நான் விரும்புவேன்; பாவிகள், மேலும் ஆண்டவரை மன நோகச் செய்யாதபடி அவர்களை மனந்திருப்பவும் விரும்புவேன்'' என பிரான்சிஸ்கோ பதிலளித்தான்.

ஒருமுறை தேவதாய் ஜஸிந்தாவுக்குத் தோன்றி, “இன்னும் அநேக பாவிகளை மனந்திருப்ப மனதாயி ருக்கிறாயா?" என்றபோது, மனதாயிருப்பதாக அவள் தெரிவித்தாள். மருத்துவமனையில் அவள் கொடிய வேதனைப்படப் போவதாகவும் அதைப் பாவிகளின் மனந் திரும்புதலுக்காக ஒப்புக் கொடுக்கும்படியும் அன்னை அறிவித்தாள்.

பிரான்சிஸ்கோ சாக இருக்கையில் ஜஸிந்தா அவனை அணுகி, "பாவிகளுக்காகவும், மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு வருவிக்கப்படும் நிந்தைக்கு பரிகாரமாகவும், யேசுவும் தேவதாயும் விரும்பும் வேதனைகளை யெல்லாம் நான் பட தயாராயிருப்பதாக அவர்களிடம் சொல்" என செய்தி அனுப்பினாள்.

“நீ வெகு வேதனைப்பட்ட பின் தனியே இறக்க வேண்டும்'' என தேவதாய் ஜஸிந்தாவுக்கு அறிவித் திருந்தாள். தனியே சாவதை நினைத்து அவள் பயந் தாள். எனினும் "ஓ யேசுவே, இந்த பரித்தியாகம் எவ்வளவோ கடினமானது: இதைக் கொண்டு அநேக பாவிகளை நீர் மனந்திருப்புவீர் என நினைக்கிறேன்” எனக் கூறித் தேறு தலடைவாள்.

லூஸியாவுக்கு ஜஸிந்தா சொன்ன கடைசிச் செய்திகளில் ஒன்று, ''பாவிகள் மனந்திரும்பும்படி பரித்தியாகங்கள் செய்" என்பதே.

ஜஸிந்தாவை டாக்டர் பரிசோதித்து அறுவை சிகிச்சை செய்தார். நோயாளி மிகப் பலவீனமாயிருந்தமையால் மயக்க மருந்து கொடுக்கவில்லை. இரு விலா எலும்புகளை வெட்டி எடுத்தார்கள். ஒரு கையளவு பெரிய காயம். காயத்தைக்கட்டும் போதும் சொல்ல முடியாத வேதனை. அதைப் பொறுமை யாய்ச் சகித்து ''ஓ யேசுவே, நான் உம்மை நேசிப்ப தாலும், பாவிகள் மனந்திரும்பும்படியும் எல்லா வற்றையும் ஒப்புக் கொடுக்கிறேன். இந்த பரித்தி யாகம் மிகமிகக் கடினமாயிருப்பதால் நீர் அநேக பாவிகளை மனந்திருப்பு வீராக'' என திரும்பத் திரும்பச் சொன்னாள். 

“இம்முறை தேவதாய் மிக துயரத்துடனிருந்தாள். தன் துயரத்தின் காரணத்தையும் தெரிவித்தாள் : 'பெருந்தொகையான ஆத்துமங்களை நரகத் தில் விழத்தாட்டுவது சரீரத்தால் செய்யப்படும் பாவங்களே. சுகபோகங்களை மனிதர் விட்டொழிக்க வேண்டும். இதுவரை பாவ சகதியில் இருந்தது போல் இன்னும் பிடிவாதமாயிருக்கக்கூடாது. யாவரும் அதிகத் தபசு செய்ய வேண்டும்'' என தேவ தாய் தெரிவித்தாள். “ஓ தேவதாயைப் பார்க்க பரி தாபமாயிருக்கிறது!" என கடைசிக் காட்சியைப் பற்றி ஜஸிந்தா கூறி நான்கு நாட்களுக்குப் பின் உயிர் விட்டாள். பாவிகளுக்கென அவள் அளித்த கடைசிப் புத்திமதி, "நித்தியம் என்றால் என்ன என்பதை மனிதர் அறிவார்களானால், தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க முயல்வர். மனிதர் துக்கித்து தபசு செய்வார்களானால் ஆண்டவர் அவர்களை மன்னிக்க இன்னும் தயாராயிருக்கிறார். ஆதலின் எல்லாம் நம் கையில் இருக்கிறது என் இறைவா, இரக்கமாயிரும்'' என்பதே.