பொதுத் தீர்வை

“அப்பொழுது சூரியன், சந்திரன், நட்சத்திரங்களிலே பல அதிசயங்கள் தோன்றும். சமுத்திரமும் அலைகளும் இறைந்து கொந்தளிப்பதனால் பூமியில் ஜனங்களுக்கு உபத்திரவமுண்டாகும். உலகத்துக் கெல்லாம் இனி என்ன வரப்போகிறதோ என்று மனிதர்கள் பயந்து எதிர் பார்த்திருப்பதனால் விட விடத்துப் போவார்கள். ஏனெனில் வான மண்டலங்களின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும், மனுமகன் மேகத்தின் மேல் வருவதைக் காண்பார் கள். இவை சம்பவிக்கத் தொடங்கும் போது நீங்கள் அண்ணார்ந்து பார்த்து உங்கள் தலைகளை உயர்த்துங் கள். ஏனென்றால் உங்கள் இரட்சணியம் சமீபித்தி ருக்கிறது.'' (லூக். 21/25). இவையே உலகின் கடைசி நாளின் நிகழ்ச்சி என நம் இரட்சகர் கூறுகிறார்,

சாவுக்குப் பின் தனித்தீர்வை. ஆத்துமம் உடலை விட்டுப் பிரிந்ததும் நேரே கடவுளிடம் போகிறது. தீர்வைக்காகப் போகிறது. ஆத்துமம் மோட்சத் துக்கு அல்லது நரகத்துக்குத் தீர்ப்பிடப்படுகிறது. மோட்சத்துக்கெனக் குறிப்பிடப்பட்டவர்களிற் சிலர் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போய்த் தங்கள் உத்தரிப்புக் கடனைத் தீர்க்க வேண்டும். உத்தரிக்கிற ஸ்தலம் நித்தியமானதல்ல. முடிந்து போகும்.

கடைசி நாளில் பொதுத் தீர்வை ஒன்று நடை பெறும். சகல சம்மனசுக்களும், நல்லவர்களும், கெட்டவர்களுமான சகல மனிதர்களும் கிறிஸ்து நாதரது தீர்ப்பாசனத்தின் முன் நிற்பார்கள். 'உங்க ளினின்று பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட இந்த யேசுநாதர், எப்படிப் பரலோகத்துக்கு எழுந்தருளிப் போகக் கண்டீர்களோ அப்படியே திரும்பவும் வருவார்." (அப். நட. 1/11) இறந்ததும் ஒவ்வொரு மனிதனுக்கும் தீர்ப்புக் கூறப்படுகிறது. 

அப்படியிருக்க பொதுத்தீர்வை எதற்காக? 

1) மானிட சந்ததிக்கு பகிரங்கமாக முடிவு கட்டப்படுகிறது. 

2) தனித்தீர்வையில் ஒவ்வொரு மனிதனுக்கும் கூறப் பட்ட தீர்ப்பை சகல மானிடரும் அறியச் செய்யும் படி. 

3) நல்லவர்களும், கெட்டவர்களும் உலக முடிவு வரை இருப்பார்கள். அவர்கள் செய்த நன்மை அல் லது தீமை மானிட சமூகத்தின் உறுப்பினர்களாகிய சகல மானிடர் முன்னிலையிலும் தீர்ப்பிடப்படவேண் டும். 

4) கடவுளது ஞானம் நீதி இவற்றை எல்லா மானிடரும் பார்த்து ஒத்துக் கொள்ளவும் உலகத் தைப் பற்றி மானிடர் கொண்டிருந்த தப்பபிப்பிரா யங்கள் திருத்தப்படவும். 

5) அறிவுள்ள சகல சிருஷ் டிகளும் பகிரங்கமாக கடவுளுக்குப் பணிவு தெரிவிக் கும்படியாகவும்.

கடைசி நாளில் கர்த்தர் வருமுன் நடைபெறப் போகிறவைகளைப் பற்றி நான் சிந்திக்கப் போகிறேன். அந்த நாட்களில் யுத்தங்கள், உபத்திரவங்கள், பஞ்சம், பூமியதிர்ச்சிகள், கடல் கொந்தளிப்புகள், நட்சத்திரங்களின் வீழ்ச்சி, சூரிய சந்திரனின் அந்த காரம்.

“மரித்தோரே, எழுந்து தீர்வைக்கு வாருங்கள்'' என சம்மனசுக்கள் கூவி இறந்தோரை அழைப்பார் கள். ஜீவியரையும், மரித்தோரையும் அவர் நடுத்தீர்ப் பார். தரையிலும், கடலிலும் இறந்தோர் யாவரும் உயிர்த்தெழும்புவார்கள்.

அவர்கள் யாவரையும் நான் கவனிக்கப்போகி றேன். எவ்வளவு பெரிய கூட்டம். கோடானுகோடி ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், ஆதாம் - ஏவாள்; ஜலப்பிரளயத்துக்கு முன் இருந்த பிதாப்பிதாக்கள்; நோவே, அவருடைய மக்கள், பாபேல் கோபுரத்தைக் கட்டினவர்கள், பபிலோனியா, சீரியா, அர்மீனியா, எஜிப்து, பாரசீகம் முதலிய நாடுகளின் மக்கள்; எபி ரேயர்கள், கிரேக்கர், ரோமையர், செசார் அகுஸ் துஸ், கைப்பாஸ், அப்போஸ்தலர்கள், அரசர்கள், தனவந்தர்கள், ஏழைகள் மத்திய காலத்தின் மனிதர், பாப்புமார்கள். கர்தினால்மார், மேற்றிராணிமார், குருக்கள், லூஸிபசாசு, அவனுடன் சேர்ந்த பசாசுக்கள்.

நடுவர் தம் சம்மனசுகள் அனைவருடனும் வரு வார். உலகில் அநேக சுற்றுப்பிரகாரங்களைப் பார்த் திருக்கிறேன். ரோமாபுரியில் புனித இராயப்பர் தேவாலயத்தில் நடைபெறும் மகத்தான சுற்றுப் பிரகாரங்களை நான் பார்த்திருக்கிறேன். பாப்பானவர் வருவது இவ்வளவு சிறப்பாயிருந்தால், யேசுக் கிறிஸ்துநாதர் வருவது எவ்வளவோ அதிகச் சிறப்பா யிருக்கும். சிலுவையும், பரலோக கணங்களும் அவர் முன் செல்லும். அவர் பெத்லகேமில் சிறு குழந்தை யாய் வந்ததற்கும் இந்த வருகைக்கும் எவ்வளவு வித்தியாசம்!

சகல சம்மனசுக்களும், மனிதரும் எவ்விதம் தீர்ப் பிடப்படப் போகிறார்கள் என நான் சிந்திக்கப்போகி றேன், நானும் தீர்ப்பிடப்போகிறேன். பொதுத் நீர்வைக்குப்பின் நான் ஆத்தும் சரீரத்துடன் என் தந்தையின் இராச்சியத்தில் இருப்பேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். வாழ்க்கையில் பொருள் இருக்கிறது என உணர்கிறேன். வாழ்க்கையின் பொருளைப்பற்றி மக்கள் எவ்விதம் சந்தேகிக்க முடியு மென்று எனக்கு அதிசயமாயிருக்கிறது. வாழ்க்கை பொருள் நிறைந்தது. பொதுத் தீர்வையில் யேசுக் கிறிஸ்துவே நடுவராயிருப்பார். அவர் பிரசன்னரா யிருப்பார். தம்முன் இருக்கும் ஒவ்வொருவரையும் அவர் நன்றாக அறிவார். என் வாழ்க்கை முழுதும் அவர்முன் நிற்கும். நான் புத்தி விபரம் அறிந்த நாளிலிருந்து கடைசி மூச்சு விடும்வரை நினைத்த ஒவ் வொரு நினைவும், பேசிய ஒவ்வொரு வார்த்தையும், செய்த சகல செய்கைகளும், செய்யாமல்விட்ட சகல மும் அவர் முன் நிற்கும். என் ஆத்துமத்தை நான் நோக்குவேன். ஜீவிய புத்தகமானது எல்லாவற்றை யும் உள்ளதை உள்ளபடி குறித்து வைத்திருக்கும்.

வானமும் பூமியும் அகன்று போகும். நெருப்பி னால் உலகம் சுத்திகரிக்கப்படும். மனிதர் தம் ஆத்துமங்களை விற்று பெற முயற்சித்த பொருட்கள் எங்கே? இவ்வுலக வாழ்வின் அழிந்துபோகும் பொருட்களுக்காக வாழ்வதே பெரும் முட்டாள் தனம். நன்மைக்கும் தீமைக்கும் இடையே ஏற்பட்ட போர் நின்று போகும். நன்மையே யுத்தத்தில் வெற்றி பெற் றது. நான் கடவுள் முன் நிற்பேன். பாவம் செய்ததற் காக நான் சாக்கு போக்குச் சொல்லப்போவதில்லை. நான் அவநம்பிக்கைப்படப் போவதுமில்லை. கடவுள் நல்லவர். அவரது இரக்கம் அவரது சகல செய்கை களுக்கும் மேம்பட்டது. நம் இரட்சணியத்திற்குத் தேவையான சகல வரப்பிரசாதங்களையும் அவர் தருகிறார். இது விசுவாச சத்தியம். அவர் கொடுக்கும் உதவிகளை நன்கு பயன்படுத்துவதற்கான வரப்பிர சாதத்தைக் கேட்டு அவரை மன்றாடி வருவேன். அப் படியானால், “என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர் களே, வாருங்கள்; உலகமுண்டான து முதல் உங்களுக் காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கும் இராச்சியத் தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்'' என்னும் தீர்ப்பை நான் கேட்கும் பாக்கியம் பெறுவேன். அப் படியானால் நான் வெற்றி வீரனாய் கிறிஸ்து நாதருடன் கடவுளது நகரத்தில் வீற்றிருப்பேன்.

சபிக்கப்பட்டவர்களை நரகத்துக்கு அனுப்புமுன், ஆசீர்வதிக்கப்பட்டவர்களை கடவுள் மோட்சத்துக்கு அனுப்புகிறார். கடவுள் ஒரு முக்கிய நோக்கத்துடன் இவ்விதம் செய்கிறார் என புனித பெர்நார்து கூறுகி றார். நல்லவர்களுக்குக் கொடுக்கப்படும் சன்மானத்தை தீயோர் பார்த்து, தாங்கள் பாவத் தால் எவ்வளவு அரிய பெரிய காரியங்களை இழந்ததாக அவர்கள் அறிந்துகொள்ளட்டும் என்றே கடவுள் இவ்விதம் செய்கிறார்.

நல்லவர்கள் பரலோகத்துக்குப் போவதைப் பார்த்து, இடது பக்கத்திலிருக்கும் தீயோர் கோபத் தினாலும், பொறாமையினாலும் எரிந்து கொண்டிருப் பார்கள். அப்பொழுது நடுவராகிய தேவ இரட்சகர் கோபத்துடன் அவர்களை நோக்கி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பைச் சொல்லி முடியாத தண்ட னையை அவர்களுக்கு அளிப்பார். "சபிக்கப்பட்டவர் களே, என்னைவிட்டகன்று, பசாசுக்கும் அதன் தூதர் களுக்கும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியில் போங்கள்'' என்பார். பிரிந்துபோவது பயங்கரமானது. யாரிடமிருந்து பிரிந்து போகவேண் டும்? நீதிமான்கனையும், சம்மனசுக்களையும், தேவ தாயையும், எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளையும் விட்டுப்பிரிந்து போகவேண்டும். என்ன துயரம்!

சர்வான்மைத்தனம் நிறைந்த கடவுளை விட்டு அவர் கள் அகன்று போகவேண்டும். மிகப் பயங்கரமான இந்தத் தீர்ப்பை உச்சரித்ததும், அது மிக நியாயமான தீர்ப்பு என சகல சம்மனசுக்களும், அர்ச்சியசிஷ்டர் களும், நீதிமான்களும் ஒத்துக்கொள்வார்கள். அந்தத் தீர்ப்பு எவ்வளவு பயங்கரமானதாயிருக்குமென்றால், சர்வ வல்லபரது முார்தின் முன் நிற்பதைவிட நரகத் தில் கிடப்பது எளிதாகும் என தீயோர் கருதுவார் கள். பசாசுக்களால் நரகத்துக்கு இழுக்கப்படும்வரை அவர்கள் காத்திருக்கமாட்டார்கள். தாங்களே அந்த இடத்துக்குச் செல்வார்கள். நித்திய தண்டனைக்குள் பிரவேசிப்பார்கள். காலம் முடிந்து விட்டது. நித்தி யம் தொடங்குகிறது.

சத்திய திருச்சபை தவற முடியாதது. கடவுளின் பெரும் வரத்தால் நான் அந்தத் திருச்சபையைச் சேர்ந்தவன். கடவுளது நீதியாசனத்தின் முன் ஒரு நாள் நான் போய் நிற்க வேண்டும் என திருச்சபை போதிக்கிறது. கண்டிப்பான பரிசோதனை. மாற்ற முடியாத தீர்ப்பு. நான் எவ்விதம் தீர்ப்பிடப்படு வேனோ தெரியாது. ஜீவியத்துக்கா? அல்லது சாவுக் கா? இதைப் பற்றி நினைத்து நினைத்து முன் காலத் தில் வசித்த பரிசுத்தவான்கள் நடுங்குவார்கள். புனித பெர்நார்தும் அவர்களில் ஒருவர். பெரிய அர்ச்சிய சிஷ்டரும் திருச்சபையின் வேதபாரகருமான புனித ஜெரோம் தம் ஆசாபாசங்களை அடக்கியாளும்படி பொதுத் தீர்வையின் அழைப்புக் குரலை எப்பொழு தும் செவிகொடுத்துக் கேட்பதாக உரூபிகரித்துக் கொள்வார்.

கடைசித் தீர்வை அதிமுக்கியமானது. அதைப் பற்றி நான் விளையாட்டாகப் பேசமாட்டேன். விளை யாட்டாகப் பேச நினைவு வந்தால் ரூப்பெர்ட் ஹோல்க் கோட் என்பவர் சொல்லியிருப்பதை நான் நினைத்துக் கொள்வேன். ஜோசபாத் என்னும் கணவாய் வழியாக மூன்று பிரயாணிகள் ஒருநாள் நடந்து சென்று கொண்டிருந்தனர். பொதுத் தீர்வை அந்த இடத் தில் தான் நடக்கும் என சிலர் கருதுகின்றனர். பலஸ் தீனா நாட்டிலுள்ள ஜெருசலேமுக்கருகில் அந் தக் கணவாய் இருக்கிறது. அந்தக் கணவாயருகே நம் பிரயாணிகள் செல்கையில் மூவரில் ஒருவன் ஒரு பாறைமீது உட்கார்ந்து சிரித்துக்கொண்டு, “இது பொதுத் தீர்வை நடக்கும் இடம், எப்படியாவது ஒரு நாள் நான் இங்கு வரவேண்டும். இப்பொழுதே நான் ஒரு சௌகரியமான இடத்தை தெரிந்து கொண்டு, உட்கார்ந்து அங்கு நடக்கப் போகிறதைப் பார்க்கப் போகிறேன், எல்லாவற்றிற்கும் செவிகொடுக்கப் போகிறேன்'' என்றான். பின் அவன் தன் கண்களை பரலோகத்துக்கு உயர்த்தி ஆகாயத்தில் தேவகுமா ரன் கோபத்துடன் நடுத்தீர்க்க வருவது போல் நிற் பதைக் கண்டான். அவனுக்கு எவ்வளவு பயம் உண்டாயிற்றென்றால் அப்படியே மயங்கிக் கீழே விழுந்து விட்டான். அவன் தன்னறிவு பெற்றதும் பயம் இன்னும் அவனை விட்டகலவில்லை. அவன் ஒரு போதுமே அதன் பின் சிரித்ததில்லை. தீர்வை என் னும் வார்த்தை எப்போதாவது அவன் செவியில் விழுந்தால் உடனே கண்ணீர் வரும், முகம் வெளுக் கும், தலை சுழலும், செத்தவனைப் போல் இருப்பான். தீர்வையின் வெறும் நிழல் ஒருவனை இவ்வளவு அச்சத்துக்குள்ளாக்குமானால், பொதுத் தீர்வை உண்டு என்றறியும் ஒருவன், அதைப் பற்றிச் சிந்திக் கும் ஒருவன், பாவ இன்பம் சகலத்தினின்றும் அவன் அகலா திருப்பது எங்ஙனம்? அவன் நல்வாழ்க்கை நடத்தாதிருக்க முடியுமா?

பொதுத்தீர்வை உண்மையே. ஏற்கனவே இசையாஸ் தீர்க்கதரிசி மூலமாய் “நான் எப்பொழு தும் மௌனமாயிருந்திருக்கிறேன். என் பொறுமை அளவு கடந்தாப்போல் தோன்றுகிறது. இப்பொழுது நான் பேசி, உலகத்தை வெறுமனாக்கப் போகிறேன்''

எனக் கடவுள் சொல்லியிருக்கிறார். இதைப்பற்றி புனித அகுஸ்தீன் பேசுகையில் “ஆண்டவரே, இவ் விதம் நீர் சொல்லக் காரணம் என்ன? பயமுறுத்தி யும், தண்டிப்பதாகக் கூறியும் அநேக தீர்க்கதரிசிகள் வழியாக நீர் ஏற்கனவே இதைச் சொல்லவில்லையா?'' என்கிறார். இந்த கேள்விக்குப் பதிலாக கிறிஸ்துநாதர் புனித அகுஸ்தீனை நோக்கி, “இதற்கு முன் பல வற்றை நான் சொல்லியிருக்கிறேன். ஆனால் ஒவ் வொருவரது நித்தியத்தையும் பற்றி நான் பொதுத் தீர்வை நாளில் கூறும் தீர்ப்புடன் ஒப்பிட்டுப் பார்த் தால், இதற்கு முன் நான் ஊமைபோல் இருந்ததற் குச் சமமாகும் " என்று கூறுவதாக அகுஸ்தீன் உரூபி கரித்துக் கொள்கிறார். ஒவ்வொரு வார்த்தையும் துஷ்டர்களுக்கு இடிக்குச் சமானமாகும். ஒவ்வொரு வார்த்தையும் அவர்கள் உள்ளங்களில் அச்சத்தை உண்டாக்கும்.

அந்தத் தீர்வைநாளில் நான் கலக்கமடையாதபடி இப்பொழுது நான் புண்ணியவானாய் நடக்க வேண் டும். ரோமை சக்கரவர்த்தியான நீரோ என்பவனைப் பற்றி சிபிலினோவும், டியோனும் எழுதிவைத்திருக் கிறார்கள். வயதிலும் வேலையிலும் மிகமிகப் பிரக்கி யாதி பெற்ற பிரபுக்கள் பலரை நீரோ ஒரு நாள் தன் னிடம் வரும்படி அழைத்தான். “நீங்கள் உடனே பகிரங்க நாடகசாலைக்குப் போய், கோமாளிகளைப் போல் முகமூடிகளையணிந்து கொண்டு நடன மாட வேண்டும்'' என்றான். முடியாதென அவர்கள் மறுத் தனர். “நான் சொன்னபடி செய்தாக வேண்டும், என் விருப்பத்தை எதிர்க்கலாகாது'' என நீரோ கண்டிப் பாய்ச் சொல்லிவிட்டான். வேறு வழியில்லை. அவர் கள் ஒத்துக்கொண்டார்கள். தங்களைப் பிறர் அறிந்து கொள்ளாவண்ணம் அவர்கள் முகமூடிகளையும் வேறு உடைகளையும் தரித்துக்கொண்டு மேடைமீது ஏறி னார்கள். அவர்கள் கோமாளிக் கூத்து ஆடிக்கொண் டிருக்கும் சமயத்தில் நீரோவின் ஆட்கள் வந்து, ஆடிக் கொண்டிருந்த பிரபுக்களின் முகமூடிகளை அகற்றி விட்டார்கள். ஜனங்கள் ஒரே கூச்சலாய் மேடைமீது இருந்த பிரபுக்களைக் கேலி செய்தார்கள். பிரபுக்களில் அநேகர் வெட்கத்தைத் தாங்கமாட்டாமல் அதே இடத்தில் விழுந்து செத்தார்கள் என டியோன் எழுதி வைத்திருக்கிறார். பெர்நார்து என்பவர் பெரிய அர்ச்சியசிஷ்டர். தாழ்ச்சி மிகுந்தவர். கடைசி நாளில் நடைபெறும் பொதுத் தீர்வையைப்பற்றிப் பேசுகை யில், அவர், “இதோ பெர்நார்தைப் பார். அவனுக் கும், அவனது வேலைகளுக்கும் எவ்வளவு வித்தியா சம் என கடவுள் என்னைப் பார்த்துச் சொல்கையில் எனக்கு எவ்வளவு வெட்கமாயிருக்கும்'' என்பார்.

பாவச்சோதனை வருகையில் பெலாஜியா என்னும் பெண்ணைப் போல் நான் நடந்து கொள்வேன். பொதுத்தீர்வையைப் பற்றி புனித நோனுஸ் என்ப வர் ஓர் அரிய பிசரங்கம் செய்தார். அதைக் கேட்ட தும் அவள் மனந் திரும்பியதுடன், தன் பாவங்களுக் காகக் கடும் தபசு செய்யும்படி ஒலிவேத் மலைமீது ஒரு சிறு குடிசையைத் தனக்கென்று கட்டிக்கொண் டாள். அங்கிருந்து ஜோசபாத் கணவாயை நன்றாகப் பார்க்கலாம். கடந்த காலத்தில் அவள் செய்த பாவங் களை பசாசு அவளுக்கு நினைப்பூட்டி பாவசோதனை யை உண்டாக்கும் போதெல்லாம், அவள் தன் குடி சையின் கதவைத் திறந்து, “ஓ நிர்ப்பாக்கிய பெலா ஜியா, நீ ஒரு நாள் தீர்ப்பிடப் போகிற இடத்தைப் பார். ஒரு நாள் நீ அங்கிருப்பாய். வலது பக்கத்திலா இடது பக்கத்திலா? அது தெரியாது. வலது பக்கத் தில் இருக்க வேண்டும். அப்படியானால் உன்னைத் தண்டித்து இந்தச் சோதனையைத் துரத்து என்பா ளாம். சாவு, தீர்வை, மோட்சம் அல்லது நாகம் இவற்றைப் பற்றி நான் அடிக்கடி நினைத்துக் கொள் வேன். இவற்றை நினைத்தேனானால் நான் ஒரு போ தும் பாவம் செய்யமாட்டேன்.

கடைசித் தீர்வை நாளில் நடக்கப் போகிறவை களைப்பற்றி ஆண்டவரே சொல்லியிருக்கிறார். அவை புனித மத்தேயு எழுதிய சுவிசேஷத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றைப்பற்றி நான் சிந் திக்கப் போகிறேன். பிறசிநேகக்கிரியைகளைப் பற்றி ஆண்டவர் அதில் சொல்லியிருக்கிறார். சரீர சம்பந்த மான புண்ணியக் கிரியைகளை மாத்திரம் அவர் அங்கு குறிப்பிட்ட போதிலும் இவற்றை மாத்திரம் கடவுள் கருதுகிறார் என நாம் நினைக்கக்கூடாது. அவரது பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களது மனதில் நன்கு பதியும்படி கிறிஸ்துநாதர் அவற்றை எடுத்துக் கூறினார் என வேதாகமத்துக்கு வியாக்கி யானம் கூறுபவர்களில் சிலர் சொல்கிறார்கள்.

அன்றியும் மனுமகன் தமது மகிமைப் பிரதாபத் தில் வரும்போது சகல சம்மனசுக்களும் அவரோடு வர, அவர் தமது மகத்துவ பத்திராசனத்தில் வீற்றி ருப்பார். அப்போது சகல ஜாதி ஜனங்களும் அவர் முன்பாகக் கொண்டுவந்து சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் வெள்ளாடுகளினின்று செம்மறி யாடுகளைப் பிரிப்பது போல அவரும் அவர்களை வெவ் வேறாகப் பிரித்து, செம்மறியாடுகளை தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத் திலுமாக நிறுத்துவார். அப்போது அரசன் மது வலதுபக்கத்திலிருப்பவர்களை நோக்கிப் பொல்லுவார்: என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே வாருங் கள். உலகமுண்டான துமுதல் உங்களுக்காக ஆயத் தம் பண்ணப்பட்டிருக்கிற இராச்சியத்தைச் சுதந் தரித்துக்கொள்ளுங்கள் வெளிபான் பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங் கொடுத்தீர்கள். தாகமாயிருந்தேன், எனக்குப் பானங் கொடுத்தீர்கள். பரதேசியாயிருந்தேன், எனக்கு விடுதி கொடுத்தீர் கள். நான் வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ் திரம் கொடுத்தீர்கள். வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள். காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார்.

அப்போது நீதிமான்கள் மறுமொழியாக அவரை நோக்கி, ஆண்டவரே, நீர் எப்போது பசியாயிருக்கக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம்? தாகமா யிருக்கக்கண்டு உமக்குப் பானங் கொடுத்தோம்? நீர் எப்போது பரதேசியாயிருக்கக்கண்டு உமக்கு விடுதி கொடுத்தோம்? அல்லது வஸ்திரமில்லாதிருக்கக் கண்டு வஸ்திரங் கொடுத்தோம்? எப்போது நீர் வியாதியுற்றவராக அல்லது காவலிலிருக்கிறவராகக் கண்டு உம்மிடத்தில் வந்தோம்? என்று கேட்பார்கள்.

அரசன் அவர்களுக்கு மறுமொழியாக: என்னு டைய மிகவும் சிறிய சகோதரர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் செய்தபோதெல்லாம் எனக்கே அதைச செய்தீர்களென்று மெய்யாகவே உங்களுக் குச் சொல்லுகிறேன் என்பார்.

பிறகு அவர் இடது பக்கத்திலிருப்பவர்களை நோக்கி: சபிக்கப்பட்டவர்களே! என்னை விட்டகன்று பசாசுக்கும், அதன் தூதர்களுக்கும் ஆயத்தம்பண் ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். ஏனெனில் நான் பசியாயிருந்தேன், நீங்கள் ஏனக்குப் போ ஜனங் கொடுக்கவில்லை. தாகமாயிருந்தேன், எனக்குப் பானங் கொடுக்கவில்லை. பரதேசியாயிருந் தேன், எனக்கு விடுதி கொடுக்கவில்லை. வஸ்திரமில் லாதிருந்தேன், நீங்கள் என்னை உடுத்தவில்லை. வியாதி யஸ்தனும் சிறையாளியுமாயிருந்தேன், நீங்கள் என் னைச் சந்திக்கவில்லை என்பார்.

அப்போது அவர்கள் அவருக்கு மாறுத்தாரமாக: ஆண்டவரே! நீர் பசித்திருக்கிறதையாவது, தாகமா யிருக்கிறதையாவது, பரதேசியாயிருக்கிறதையாவது, வியாதியாயிருக்கிறதையாவது, காவலிலிருக்கிறதை யாவது நாங்கள் எப்போது கண்டு உமக்கு உதவி செய்யாமலிருந்தோம்? என்பார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரத்தியுத்தாரமாக : அதிக சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் செய்யாதபோதே எனக்கே செய்யாதிருக்கிறீர்க ளென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

இவ்விதமாக இவர்கள் நித்திய ஆக்கினைக்கும், நீதிமான்களோ நித்திய ஜீவியத்திற்கும் போவார்கள் என்று திருவுளம் பற்றினார்.