லூர்துகெபியில் ஜெபமாலை

"மக்கள் இன்னும் தொடர்ந்து பாவம் செய்வார்களானால், அன்னையின் எச்சரிப்புகளுக்குச் செவிகொடாது போவார்களானால், உலகத்தைத் தண்டிக்கும்படி நீட்டப்ட்டிருக்கும் தேவ சுதனுடைய கரத்தை விட்டு விடும்படி தேவதாய் வற்புறுத்தப்படுவாள்'' என்னும் எச்சரிப்பு கொடுத்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தன. மக்கள் அதைச் சட்டை பண்ணவில்லை. ஆனால் அந்த அன்புள்ள அன்னை தன் பிரமாணிக்கமற்ற மக்களை அந்நிலையில் விட்டு விடவில்லை இன்னொரு முறை வந்தாள். தவம் செய்யுங்கள், தவம் செய்யுங்கள், தவம் செய்யுங்கள், தவம், ஜெபம் என்றாள். இந்த செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் படி தெரிந்து கொள்ளப்பட்டவள் பெர்நதெத். அமலோற்பவ அன்னை ஜெபமாலையும் கையுமாய் வந்தாள். முதற் காட்சியிலேயே ஜெபமாலையில் தொங்கிய சிலுவையால் தன்மேல் சிலுவை அடையாளம் வரைந்து, ஜெபமாலை ஜெபிக்க பெர்நதெத் துக்கும் கற்பித்தாள். அவள் ஜெபிக்கையில் அன்னை ஜெபமாலை மணிகளை உருட்டினாள்; ஒன்றும் சொல்லவில்லை; பத்துமணி ஜெபத்தின் இறுதியில் திரித்துவ ஆராதனை வந்ததும் பெர்நதெத்துடன் சேர்ந்து அதைச் சொன்னாள்.

பதினெட்டு முறை தேவதாய் காட்சியளித்தாள். முதற்காட்சி 1858 பெப்ருவரி பதினோராம் நாளன்று. கடைசிக் காட்சி அதே ஆண்டு ஜூலை16-ம் நாளன்று.

முதல் மூன்று காட்சிகளும் பின் வர இருந்தவை களுக்கு ஒரு முன்னோடிபோல் இருந்தன. பிந்திய பதினைந்திலும் அன்னை அறிவிக்க வந்த செய்தி அடங்கியிருக்கிறது.

மூன்றாவது காட்சியின் போது, தான் அறிவிக்க விரும்புவதை எழுதித் தரும்படி பெர்நதெத் அன்னை யிடம் கேட்டாள். “எழுதித்தர அவசியமில்லை. பதினைந்து முறை இங்கு வா'' என அன்னை தெரிவித் தாள். முதற் காட்சியிலேயே அந்தச் செய்தியைத் தெரிவித்திருக்கலாம்; எனினும் தேவதாய் பதினைந்து காட்சிகளில் அதை வெளியிடத் தீர்மானித்தாள். ஜெபமாலையின் பதினைந்து தேவ இரகசியங்களிலும் சித்தரிக்கப்பட்டிருக்கும் கடவுளது அன்பு இரக்கம் என்னும் இரகசியங்களைக் காண்பிக்கவே தேவதாய் இவ்விதம் செய்தாள் என லூர்துமலைக் காட்சிகளை ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

ஜெபமாலையின் சந்தோஷ, துக்க, மகிமைத் தேவ இரகசியங்களுக்கு ஏற்ப, இந்தக் கடைசி பதினைந்து காட்சிகளும் மூன்று பகுதிகளில் அடங்கும். அந்தக் காட்சியின்போது பெர்நதெத்தின் முகத் தோற்றமும் | சாயல்களும் சந்தோஷமாகவும் துயரம் நிறைந்ததாக வும் மகிமையுடனும் இருந்தன.

இந்தப் பதினைந்தில் முதல் ஐந்து காட்சிகள் அருளப்பட்டபோது, பெர்நதெத்தின் முகத்தில் பெரும் மகிழ்ச்சி தோன்றியது. பலமுறை அவள் புன்முறுவல் பூத்தாள்; தலை வணங்கினாள்; மிகு ஆனந் தத்துடனிருந்ததாகக் காண்பித்தாள்.

பெப்ருவரி 25-ம் நாளன்று பதினைந்தில் ஆறாவது காட்சி. பெர்நதெத்தின் மகிழ்ச்சி மறைந்தது. கண்ணீர் நிரம்பி வடிந்தது. அபூர்வ காரியங்களை அவள் செய்தாள். முழந்தாளில் நடந்தாள், புல்லைத் தின்னத் தொடங்கினாள், தேவதாய் சுட்டிக்காட்டிய சகதி நீரை அருந்தினாள். பெர்நதெத்தைப் பார்த்த யாவரும் அவள் துயரம் மிகுந்திருந்ததைக் கவனித் தனர். இதேபோல் தான் இதையடுத்த நான்கிலும். இந்த ஐந்திலும் வெகு வேதனைப்பட்டாள், சொல்ல முடியாத துயரம் அவளது உள்ளத்தில் குடிகொண் டிருந்தது.

மார்ச்2-ம் நாளன்று கடைசி ஐந்தில் முதற்காட்சி. துயரம் மாறியது, பெர்நதெத் ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தாள். இது அதிகரித்துக்கொண்டே சென்றது சில சமயங்களில் அவள் பரவசமானாள்.

மார்ச் 25-ம் நாள் மங்கள வார்த்தைத் திரு நாளன்று, "நானே அமல உற்பவம் " என அன்னை அறிவித்தாள். இம்முறை பெர்நதெத் முக்கால் மணி நேரம் பரவசத்தில் இருந்தாள். பதினைந்து நிமிடங்களாக மெழுகுதிரியின் நெருப்பு அவள் கையைத் தொட்டபோதிலும் அவள் அதை உணரவில்லை. கடைசிக் காட்சியில் ஜெபமாலையின் பதினைந்து பத்து மணி ஜெபத்தையும் பெர்நதெத் சொல்லி முடித்தாள்.

உலகிலுள்ள மக்கள் யாவரும் தவம் செய்ய வேண் டும், பாவிகளுக்காக ஜெபிக்க வேண்டும் என்பனவே அமலோற்பவ அன்னை லூர்து கெபியில் அறிவித்த செய்திகள். அவள் விரும்பிய ஜெபம் ஜெபமாலை என் பதும் மேற்கூறியவற்றிலிருந்து தெளிவாக விளங்கு கிறது. ஜெபமாலை செய்கையில் பெர்நதெத்திடம் இருந்த உணர்ச்சிகள் நம்மிடம் இருக்க வேண்டும். அதற்கு நல்ல வழி தேவ இரகசியங்களைப் பற்றி சிறிதென்கிலும் சிந்தித்துப் பார்ப்பதே.