ஜெர்த்துருத்

அன்று கிப்பன்ஸ் சுவாமியார் வகுப்புக்கு வரும்போது, அவரது கையில் பாத்திமா அன்னையின் நேர்த்தியான சுரூபம் ஒன்று இருந்தது. மாணவர் யாவரும் அதையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் அதை மேஜையில் வைத்து “இதை இன்று வெகுமதியாகக் கொடுக்கப்போகிறேன். யாருக்குக் கொடுக்கலாம்? ஜாண் உன் அபிப்பிராயம் என்ன?" என்றார்.

ஜாண் எல்லாப் பாடங்களிலும் அநேகமாய் எப்பொழுதுமே உயர்ந்த மார்க்குகள் பெறுகிறவன். அவன் சொல்லக்கூடிய பதில் எல்லா மாணவரும் அறிந்ததே “சுவாமி, படிப்பில் மிக்க தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு அதைக் கொடுங்கள்'' என்றான். "வேண்டாம், வேண்டாம்'' என்று சிலர் கூச்சலிட் டார்கள்.

“விளையாட்டில் திறமை வாய்ந்தவனுக்கே சுரூபத்தைக் கொடுக்கவேண்டும்'' என்றான் ஜேம்ஸ். பள்ளிக்கூடத்துக்கு தவறாமல் வந்தவனுக்கு அதைக் கொடுக்கவேண்டும் என சிலர் கூறினார்கள். சுவாமி யாரோ, ''நான் கேட்கும் கேள்விக்கு நல்ல பதில் சொல்பவனுக்கே பாத்திமா அன்னையின் சுரூபம் கிடைக்கும்'' எனக் கூறினார். இதைக் கேட்டதும் படிப்பில் திறமையற்ற சிலர் தலையைக் கீழே போட் டனர்.

"ஜாண், நீ படிப்பை முடித்ததும் என்ன செய்யப் போகிறாய்?'' என்று குரு கேட்டார்.

"நான் டாக்டர் வேலைக்குப் படிக்கப் போகி றேன்''. மன

“அதன் பின்?" “மருந்து கொடுத்து நோயாளிகளைக் குணப் படுத்துவேன்''

“அதன் பின்?"

“என் பேர் எங்கும் பரவும். நோயாளிகள் திரளாக என்னிடம் வருவார்கள். பெரிய வைத்திய சாலை ஒன்று கட்டி ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை செய்வேன்'.

அதன் பின், அதன் பின் என சுவாமியார் கேட்டுக்கொண்டே போனார். கடைசியாக ஜாண் விசனத்துடன் “நான் எல்லோரையும் போல் சாவேன்'' என்றான்.

“ஜேம்ஸ், படிப்பை முடித்ததும் நீ என்ன செய்யப்போகிறாய்?" என குரு வினவினார். அவன், “இறைச்சிக்கடை திறக்கப் போகிறேன்” என்றதும் பிள்ளைகள் யாவரும் கொல்லென்று சிரித்தார்கள். அவன் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. “அதன் பின் என்ன செய்வாய்?" “ஏராளமான பணம் சம்பாதிப்பேன்" "அதன் பின்?"

“இந்தப் பக்கத்திலுள்ள ஆடுகளையெல்லாம் நானே வாங்கிக்கொள்வேன்''

“அதன் பின்?"

“பெரிய வீடுகட்டி, கலியாணம் செய்து, மனைவி மக்களுடன் வாழ்வேன்''.

''அதன் பின்?''

"கடைசியாக கிழவனாகி இறந்து போவேன்'' என ஜேம்ஸ் சொல்கையில் அவனுக்கு கண்ணீர் வந்து விட்டது. 

அதே வகுப்பில் இருந்த மின்னி என்னும் சிறுமியை சுவாமியார், "மின்னி, நீ என்ன செய்யப் போகிறாய்?” என்றார்.

அவள் "நான் கன்னியாஸ்திரியாய்ப் போவேன்'' என்றதும் சிறுமிகள் அவளைக் கேலி செய்யத் தொடங்கினர். சுவாமியார் அவர்களை அதட்டி விட்டு, “அதன் பின் என்ன செய்வாய்?" என்றார்.

“நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்து கொடுப்பேன். சாக இருக்கும் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்து மோட்சத்துக்கு அனுப்புவேன்''.

"அதன் பின்?''

“நம் நாட்டில் என் வேலை முடிந்த பிற்பாடு நான் சீனாவுக்குப் போவேன்; அங்கு அநேக குழந்தைகள் ஞானஸ்நானம் பெறாமற் சாகிறார்கள். அவர்களை நான் காப்பாற்றுவேன்''.

“அதன் பின்?"

"வேத விரோதிகள் என்னைப் பிடித்துக் கொல்வார்கள். நான் வேதசாட்சியாக உயிர் விடுவேன்''.

"இது நல்ல பதில்'' எனக் கூறி எஞ்சியிருந்தவர்களிடமும் அதே கேள்விகளைக் கேட்டார். பலர் பல விதமான பதிலளித்தார்கள். ஜெர்த்துருத் என்னும் சிறுமி மாத்திரமே இனி பதிலளிக்க வேண்டியவள்.

எல்லோரையும் அமர்த்திய பின், “ஜெர்த்துருத், பயப்படாதே, தைரியமாய்ச் சொல்'' என்றார்.

"சுவாமி, நான் படிப்பை முடித்த பின் சம்மனசாய்ப் போவேன்" என அவள் பதிலளித்தாள். இதைக் கேட்டதும் வகுப்பில் பெரும் சந்தடி ஏற்பட்டது. அது அமர்ந்ததும், “அதன் பின் என்ன செய்வாய்”? எனக் குரு கேட்டார்.

“தேவநற்கருணைப் பெட்டிக்குக் காவல் செய்வேன்''

“எவ்விதம்?"

“கோவிலில் இருக்கும் சற்பிரசாதப் பேழையினருகில் நான் நின்று யேசு அரசரை வணங்கிக் கொண்டிருப்பேன். விசுவாசிகள் கோவிலுக்கு வந்ததும், பேழையைத் திறந்து விடுவேன். அவர்கள் யேசு வைப் பக்தியுடன் உட்கொள்ள உதவி செய்வேன்".

''அதன் பின்?"

“சம்மனசுக்கள் சாகமாட்டார்கள்; ஆதலின் நானும் சாகாமல் சற்பிரசாத தேவனுக்கு சேவை செய்வேன். ஒரு கோவில் இடிந்து தகர்ந்ததும் இன்னொரு கோவிலுக்குப் போவேன். இவ்விதம் உலக முடிவுவரை ஒவ்வொரு கோவிலாய்ச் சென்று, திருப் பேழைக்குக் காவல்புரிவேன்.''

எல்லோரும் இமை கொட்டாமல் ஜெர்த்துருத்தையே நோக்கினர். அவள் இவ்வளவு சிறந்த பதில் கொடுப்பாளென குருவானவர் கனவிலும் கருதவில்லை. “ஜெர்த்துருத், நீயே என் கேள்விகளுக்கு சிறந்த பதில் கொடுத்தவள். ஆதலின் இந்தச் சுரூபம் உனக்கே'' எனக் குரு கூறினார். எல்லோரும் கை தட்டினார்கள். சிறுமி அடக்க ஒடுக்கத்துடன் வந்து அதை வாங்கிக் கொண்டு தன் இடம் சென்றாள்.

ஜெர்த் துருத் தன்னை மறந்து பிறருக்காகவே வாழ்ந்தவள். அந்தச் சுரூபத்தைக் கொண்டு என்ன செய்வது என அவள் உடனே தீர்மானித்து விட் டாள்.

அவளுக்கு ஒரு சின்னத் தம்பி உண்டு. அவன் நொண்டி. வீட்டிலும் வீட்டுத் தோட்டத்திலுமே அவன் தன் நேரத்தைக் கழிப்பான்; வெளியே போக முடியாது. அவனை மகிழ்விக்கத் தீர்மானித்த ஜெர்த்துருத், வீட்டுக்குப் போனதும் அந்தச் சுரூபத்தை, தம்பியின் தலையணையின் கீழ் மறைத்து வைத்து விட்டு தோட்டத்திற்கு ஓடி, "தம்பி சாமுவேல், சின்ன யேசு உனக்கு ஒரு நேர்த்தியான சாமான் கொண்டுவந்திருக்கிறார்'' என்றாள்.

“எங்கே? எங்கே?" எனக் கூறிக்கொண்டு சாமுவேல் தன்னாலியன்ற அளவு விரைவாய் ஓடி வந் தான். அக்காளுடன் தன் படுக்கை அறையில் நுழைந் தான். ஒவ்வொரு இடமாய்த் தேடினான். ''பெட்டி யில் பார், அல்மேராவைச் சோதி, அங்கு பார், இங்கு பார்'' என ஜெர்த் துருத் ஏவிக்கொண்டிருந்தாள். கடைசியாக சிறுவன் தலையணையை எடுத்தான். ஆசையோடு சுரூபத்தை எடுத்து முத்தமிட்டு மார் போடு அணைத்துக் கொண்டான். அவன் கொண்ட ஆனந்தம் நம் தியாக சிறுமியைப் பரவசத்திலாழ்த் தியது.

ஜெர்த்துருத் படிப்பை முடித்ததும் சம்மனசாகி தேவ நற்கருனைப் பேழைக்குக் காவல்புரிய ஆசித் தாள். சம்மனசாவது அவளால் ஆகக்கூடிய காரிய மல்ல. ஆனால் உண்மையாகவே அவள் தேவநற் கருணைக்குக் காவல் புரிந்தாள்.

கோவிலில் அவள் வேறெதையும் கவனிக்க மாட்டாள். அவளது கண்கள் திருப் பேழையையே பார்த்து நிற்கும். யேசு அவள் கண்முன் உயிரோடு நின்றாப்போலும், அவள் அவரோடு அந்நியோந்நிய மாய் பேசுவது போலும் தோன்றும். -

திவ்விய நன்மை வாங்கிய பின் கரங்குவித்து கண்களை மூடி யேசுவுடன் சல்லாபிப்பாள். அதே சமயத்தில் நன்மை வாங்குகிறவர்களில் அநேகர் தங் கள் இருதயங்களில் இருக்கும் யேசுவை உபசரியா திருக்கின்றனர் என அவள் அறிந்து, அவர்களது இதயங்களில் இருக்கும் யேசுவை தான் ஆராதிப் பாள், நன்றி செலுத்துவாள்; அவரை ஆராதிக்கும் படி தேவதாய், புனித சூசையப்பர், தன் காவற் சம்மனசு, பேர் கொண்ட அர்ச்சியசிஷ்டர் முதலிய பரலோக வாசிகளையும் அழைப்பாள்.

பகலில் கடிகாரத்தில் அல்லது கோவிலில் மணியடிக்கையில், இரவில் விழிக்க நேரிட்டால், பின்வருமாறு தனக்குள் ஜெபிப்பாள் : “யேசுவே, இவ்வினாடியில் உலகில் எங்காவது ஓரிடத்தில் திவ்விய பூசை நடக்கிறது; விசுவாசிகள் உம்மை உட்கொள்கிறார் கள். ஆனால் அவர்களில் அநேகர் தங்கள் உள்ளத்திலிருக்கும் உம்மை ஒரு நிமிடம் முதலாய் நினைப்ப தில்லை, ஆராதிப்பதில்லை, உமக்கு நன்றி செலுத்துவ தில்லை, தங்கள் பாவங்களுக்காக பரிகாரம் செய்வ தில்லை, தங்களுக்குத் தேவையான காரியங்களை உம்மிடத்தில் கேட்பதில்லை. யேசுவே, அவர்களுக்குப் பதிலாக நான் உம்மை ஆராதிக்கிறேன்; அவர்கள் நன்றி செலுத்துவதில்லை. அவர்களுக்குப் பதிலாக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; அவர்களது பாவங்களையும் மறதியையும் பொருட்படுத்தாது அவர்களை மன்னித்தருளும், அவர்களுக்கு வேண்டிய ஆத்தும சரீர நலன்களைக் கொடுத்தருளும் " என் பாள்.

எத்தனையோ பேழைகளில் யேசு சகலராலும் மறக்கப்பட்டு வசிக்கிறார் அந்தப் பேழைகளை ஜெர்த்துருத் நினைவால் தரிசித்து, யேசுவை வணங்கி நேசித்து நன்றி செலுத்தி பாவப்பரிகாரம் செய்வாள்.

கடைசியாக அவள் சாகவேண்டிய நேரம் வந்தது. தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் சேவித்த யேசுவை உட்கொண்டு பாக்கியமாய் இறந்தாள்.