ஊதாரிப்பெண்

சில மனையாட்டிகள் பெருஞ் செலவாளிகளாயிருப் பதினால் புருஷன் எவ்வளவு உழைத்தாலும் மிச்சமே யில்லை. இப்படிப்பட்ட ஓட்டைக்குடத்துக்கொப்பான மனைவிகளால் குடும்பங்களுக்கெய்தும் இழிவு இக்கட் டுகளுக்குக் கணக்கில்லை. இவர்களெண்ணப்படி கடை தெருக்களிலுள்ள தித்திப்பான தின்பண்டங்களெல்லாந் தங்களுக்குத் தேவையாம். புடவைக்காரர் கொண்டு திரியும் சருகை பட்டு முதலிய விலையுயர்ந்ததெல் லாந் தங்களுக்குத் தேவையாம். அயலாரும் அந்நியரும் அ ணியும் நகைகளில் வினோதமானதெல்லாம் தங்களுக்கும் பிள்ளைகளுக்கும் கட்டாயத் தேவையாம். அவைகள் சற்று மங்கிப்போனால் முறைக்கு முறை மாற்றவும் பழுக் கச்சுடுவிக்கவும் வேண்டுமாம். சவுக்கியமில்லையென்று தவறணை சாய்ப்புகளிலுள்ள மதுபானங்களும் தேவை யாம். இந்த மனோரதமான அசவுக்கியத்தால் புகை போலப் பறந்து மறைந்த குடும்பங்கள் அநேகமுண்டு. அன்றியும், எங்கெங்கே வேடிக்கை கொண்டாட்டங்க ளோ அங்கெல்லாங் கட்டாயஞ் செலவைப்பாராமல் டம் பமாய்ப் போகவேண்டுமாம்.

இந்த எடுப்புச்சாய்ப்புக்கெல்லாம் புருஷன் இணங் காவிடில் உண்டுபடும் மனக்காய்ச்சல் முறுமுறுப்பு கோ ளாறுகள் மெத்த. பெண்சாதி பசிக்கவில்லையென்று ப லநேரஞ் சாப்படாமல் பட்டினிகிடந்து பழிவாங்குவ தும் அபூர்வமல்ல. இவ்வித பெண்களைத்தான் வேதா கமம் ஒழுக்கு வீட்டுக்கொப்பிடுகின்றது. இடையிடை யே இவர்கள் '' சாம்பலைத் தின்று வெண்ணெயைப் பூச வேண்டும்'' என்று கணவனுக்கு உபதேசமும் ஊட்டு வார்கள். ஆனால், உள்ளபடி இவர்கள் புசிப்பதும் வெண் ணெய் பூசுவதும் வெண்ணெய். பிற்காலம் பிள்ளைகள் வாயில் போடுவதோ சாம்பல். பின்வருஞ்சம்பவத்தைச் சில காலத்துக்கு முன் பலர் பத்திரிகைகளில் வாசித்தி ருப்பார்கள் : புதிதாக விவாகம்பண்ணிய ஓர் அமரிக்க ஸ்திரியும் புருஷனும் ஒரு இல்லிடந்தேடித்திரிந்து க டைசியாய் ஸ்திரீக்கு விருப்பமான ஒருவீட்டைக் கண்டு பிடித்தார்கள். அதற்கு வாடகை மாசம் அறுபத்தைந்து டலர் ( 195 ரூபா ) . அவ்வளவு இறுக்கமுடியாதே யென்று புருஷன் இள நாக்கடித்தாலும் மனைவி அவ்வீட் டில்மிக ஆவல்ப்படுவதைக்கண்டு "உமக்குவேண்டுமானால் அதை எடுப்போம்'' என்றான். ஆனால், இவர்கள் இவ் வள வு வாடகையிறுக்கக்கூடுமோவென்று வீட்டுக்காரன் சந்தேகித்தபடியால் அவர்களை நோக்கி ''உங்களுக்குச் சம்பளம் என்ன வென்று சொல்லக்கூடுமா '' என்றான். அம்மா அதற்கு மறுமொழியாக '' மாசம் நாற்பத்தைந்து டலர் (135 ரூபா ) என்றாள். '' அப்போது புருஷனுக்கு வேறுவரும்படி இருக்கவேணும்போல '' என்று கிரக பதிசொல்ல, அந்த ஊ தாரிப்பெண் " இப்போது உடனே இல்லை. ஆனால், இவருடைய அத்தை” என்று அவள் சொல்வதற்கிடையில் வீடுடையவன் அவளைத் தடுத்து '' இளம்பெண்ணே உன் புருஷன் நாற்பத்தைந்து டலர் உழைக்க, நீ அறுபத்தைந்து டலர் வாடகையிறுக்கத் துணிவது எவ்வளவுபைத்தியமென்பதை நீ கண்டுபிடிக்க வில்லையா '' என்றான். அப்போது அவள் தலையை யசைத்து '' என்றாலும் இந்த இடம் எனக்கு மெத்தப் பிடித்துக்கொண்டது, இதுதான் எனக்கு வேணும், இதை நான் எடுக்கவேபோகிறேன் '' என்றாள். ( J. C. Guardian, 1.7.16) இவ்வித பெண்களைக்காணக்கடல்கடந்து அமரிக்காவுக்குப்போகத்தேவையில்லை. ''வளவனாயினும் அளவறிந்து அளித்து உண் '' என்பதற்கொப்ப நீ பெ ருஞ் செல்வனாயிருந்தாலும் உன் வரவின் அளவையறிந்து அதற்குத் தக்கதாகச் செலவழித்துப் புசித்தனுபவித் துக்கொள்ளவேண்டும்.

செல்வர் யாம் என்று தாம் செல்வுழி எண்ணாத
புல்லறிவாளர் பெருஞ் செல்வம் - எல்லிற்
கருங் கொண்மூ வாய்திறந்தபின்னுப்போற்றோன்றி
மருங்கு அறக் கெட்டுவிடும்

அதாவது தங்களைச் செல்வரென்றெண்ணி யதிகமாய்ச் செலவழிக்கும் புத்தியீனருடைய பெருஞ்செல்வமானது மின்னலைப்போற்றோன்றி அழியுமாம். - சளசண்டிகளான பெண்கள் இரகசியமாய்ப் படுங் கடனைத் தடுக்கவும் அழிக்கவும் முடியாததினால் சில கணவர் தங்கள் மனைவிகள்படுங் கடனுக்குத்தாங்கள் பொ றுப்பாளிகளல்லவென்று பண்ணிய அறிவித்தலைப் பத் திரிகைகளில் வாசித்திருக்கிறோம். வேறுசில மாதர் அ யலில் அறிமுகமானவர்களை முகமுறிக்கப்பயந்து கண வரிடங்கேளாமல் அல்லது அவர்களிடங் களவாயெடுத் துக்கைக்கடனாய்க் கொடுத்த காசை அறவிடமுடியாம லும் கணவருக்கறி வியாமலும் இருக்கவில்லையா? கடன் கேட்கிறவர்களுக்குக் கொடாமல்விட்டால் சிணுங்குவார் கள். கொடுத்தபின் கேட்கப்போனால் கோபங்கொள் வார்கள். கோயிற் திருவிழாக்களையுஞ் சடங்குவீடுக ளையுஞ்சாட்டி விலையுயர்ந்த நகைகளை மண்டிரவலாய் வாங்கி அடைவுவைத்து அல்லது அறுதியாய் விற்று வயிறு வளர்க்கிறவர்களால் ஏய்க்கப்பட்ட போதைப்பெண் களும் பலருண்டு. இவர்கள் கொடுத்ததைக் கேட்டா லும்பழி , கேளாமல் விட்டாலும் நட்டம். இவர்கள் பாடு '' உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பன த்தி '' பாடு போல் ஆகிறது. அப்போதுதான், அணிலை மரத்திலேற விட்ட நாயைப்போலக் குளறிக் கூத்தாடுவார்கள். அப் போதுதான் தாங்கள் செய்த தவறையும் அதினால் வந்த நட்டத்தையும் உணர்ந்து '' இரப்பாரைப்பிடித்ததாம் பறைப்பிராந்து'' என்று ஒப்புச்சொல்லி மாரடிப்பார் கள். முறையாய்க் கொடுக்கல் வாங்கல் செய்வது நல் வழக்கமாயினும் முறைகேடாய்ச் செய்வது பல தொல்லைக் கும் நட்டத்துக்கும் வழியாகின்றது. ப இப்படியெல்லாஞ் செலவிடவும் பணத்தை அழிக் கவும் பொருளைச் சிதைக்கவும் முற்படுகிறவர்கள் வீட்டு வேலைகளைச் செய்வதிலும் பொருளைத் தேடுவதிலும் பொ துவாகக் கட்டையாயிருப்பது வழக்கம். வீட்டுவேலை செய்யவேண்டியது தாய்க்கிழவியுந் தங்கைச்சிமாருமே யென்றெண்ணுவது பெருந்தப்பிதம். உழைப்பும் ஒறுப்பான நடையுமாகிய புண்ணியங்கள் விளங்காத வீடு களில் பெண்சாதி நாட்பட்ட நோய்ப்பட்டிருந்தால் புருஷன் வறுமையினால் பார்வைத்தாழ்ச்சி பண்ணுவ தும், பலசாக்குப்போக்குச்சொல்லி மனைவியைக் கைவி டுவதும், அல்லது தருமவைத்தியசாலையிற் கொண்டு போய்ப்போட்டுவிட்டு விலகிவிடுவதும், அதனால் அவ ளுக்கும் பிள்ளைகளுக்கும் பற்பல இடையூறுகள் நேரிடு வதும் அரிதானசம்பவங்களல்ல.