இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இப்பக்தி முயற்சியால் சேசு கிறீஸ்து வும் பிதாவுமே நமக்குக் காட்டியுள்ள முன் மாதிரி கை யை நாம் பின்பற்றுகிறோம். தாழ்ச்சியையும் கைக்கொள்ளுகிறோம்.

சேசு கிறீஸ்துவுக்கு அதிக உத்தமவிதமாய்ச் சொந் தமாகும்படி நம்மை மிகப் புனித கன்னி மாமரிக்கு அர்ப்பணிப்பது தன்னிலே நீதியுள்ள தென்றும் நம் ஆன்மாக்களுக்குப் பயனுள்ளதென்றும் இப்பக்தி எடுத்துக்காட்டுகிறது.

139. நல்ல போ தகரான சேசு கிறீஸ்து ஒரு கைதி யைப் போலும் அன்பின் அடிமையைப் போலும் புனித கன்னி மரியாயின் உதரத்துள் அடைபட்டிருக்கவும், முப்பது ஆண்டுகளாக அவர்களுக்கு அடங்கிக் கீழ்ப் படியவும் மனங்கோணவில்லை. மனிதவதாரமெடுத்த தேவ ஞானமாயிருப்பவர் நேரடியாகத் தம்மை மனுக் குலத்திற்கு கொடுத்திருக்கமுடியும். ஆயினும் அவர் அவ்வாறு செய்யாமல் மிகவும் புனித கன்னிமாமரியின் வழியாகவே தம்மைத் தந்தார். தேவ ஞானத்தின் இந்த நடைமுறையை நன்கு சிந்திக்கும் மனித மனம் இந்த இடத்தில் அப்படியே செயலிழந்து விடுகிறது! மனித வாழ்வு முழு மலர்ச்சிபெறும் வயதில், பிறர் உதவி தேவையின்றி முழு சுதந்திரமாக இவ்வுலகிற்கு வர அவர் சித்தங்கொள்ளவில்லை. ஆனால் எளிய ஒரு குழந்தையாக, தம் புனித அன்னையின் உதவியும் துணை யும் தேவைப்படும் சிசுவாக வந்தார். அளவற்ற ஞான மானவர் தம் பிதாவை மகிமைப்படுத்தவும் மனுக் குலத்தை மீட்கவும் எல்லையில்லா தாகங்கொண்டிருந்தார். இதை நிறைவேற்றிக் கொள்ள தம்மைத்தாமே எல்லாவற்றிலும் மாதாவுக்குக் கீழ்படுத்திக்கொள்வதைத் தவிர அதிக துரிதமும் உத்தமுமான வேறொரு வழியை அவர் காணவில்லை. இவ்வாறு அவர் தம்மை மரியாயிக்குக் கீழ்ப்படுத்தியது மற்ற பிள்ளைகளைப் போல் தன் முதல் எட்டு, பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் மட்டுமல்ல, ஆனால் முப்பது ஆண்டுகளாக! இம்முப்பது ஆண்டுகளையும் அவர் புதுமைகள் செய் வதிலும் உலகம் முழுவதற்கும் போதிப்பதிலும், எல்லா மனிதரையும் மனந்திருப்புவதிலும் செலவிட்டிருந்தால் பிதாவுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய மகிமையைவிட அம்முப்பது - ஆண்டும் அவர் மாதாவுக்கு அடங்கி அவர்களைச் சார்ந்து வாழ்ந்து வந்ததால் அதிக மகிமை யைப் பிதாவுக்குக் கொடுத்தார். இது இவ்வாறில்லா மல் வேறுவகையாய் இருக்கக்கூடிய தாயிருந்தால் அவ் வேறு வகையையே அவர் கைக்கொண்டிருப்பார். ஆ! சேசுவைக் கண்டு பாவித்து மாதாவுக்கு நம்மைக் கீழ்ப் படுத்தும்போது நாம் கடவுளை எவ்வளவு மகிமைப் படுத்துகிறோம்! எவ்வளவு மகிமைப்படுத்துகிறோம்!!

இவ்வளவு தெளிவான, இவ்வளவு தெரிந்த ஒரு முன்மாதிரிகையை நம்முன் வைத்துக் கொண்டு-சேசுவின் முன் மாதிரிகையைப் பின்பற்றி நம்மை - மாதா வுக்குக் கீழ்ப்படுத்துவதைவிட கடவுளை மகிமைப்படுத் துவதற்கு, வேறு சிறந்த சுருக்கமான வழியைக்கண்டு பிடிக்க முடியும் என்று நம்ப நாம் அவ்வளவு மடமை உள்ளவர்களாகவா இருக்கிறோம்?

140. பிதாவும் சுதனும் பரிசுத்த ஆவியும் மாதா மீது நாம் கொண்டிருக்க வேண்டிய சார்பு பற்றி நமக்கு அளிக்கும் முன் மாதிரிகையை முன்பு கூறியுள்ளேன் அல்லவா? (எண் 14 - 39). அதை நாம் நம் தேவ அன்னை மீது கொள்ள வேண்டிய சார்புக்கு ஒரு சான் றாக இங்கு நினைவுபடுத்திக் கொள்வோம். பிதா தம் ஏகசுதனை மாதா வழியாகவே கொடுத்தார். கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். மாதாவின் வழியாகவே தமக்குப் பிள்ளைகளைச் சேர்க்கிறார். தம் வரப்பிரசாதங்களை மாதா மூலமாகவே அளிக்கிறார். சுதனாகிய சர்வேசுரன் மனுக்குலத்துக்கென உருவாக்கப்பட்டது கன்னிமரியா யின் வழியாகவே . தினமும் அவர் பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் மரியாயின் வழியாகவே பிறப்பிக்கப்படு கிறார். அதே மரியாயின் மூலமாகவே தம்முடைய பேறு பலன்களையும் புண்ணியங்களையும் அளிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் மரியன்னையின் வழியாகவே சேசு கிறீஸ் துவை உருவாக்கினார். கிறீஸ்துவின் ஞானசரீரத்தின் அங்கங்களை உருவாக்கியும் வருகிறார். தம்முடைய கொடைகளையும் வரங்களையும் அவர்கள் மூலமாகவே விநியோகிக்கிறார். பரிசுத்த தமதிரித்துவத்தின் இத்தனை முன் மாதிரிகைகளை - இவ்வளவு ஊக்கமளிக்கும் அவற்றை - நம் முன்னால் வைத்துக் கொண்டு நாம் செல்லும் பாதையாக மாமரி அன்னையைக் கைக்கொள் ளாமலிருக்க முடியுமா? நம்மை மாதாவுக்கு அர்ப் பணிக்கத் தவற முடியுமா? கடவுளை அணுகவும் நம் மையே அவருக்கு பலியாக்கவும் நாம் மாதாவையே சார்ந்திருக்க வேண்டாமா? அல்லாவிடில் அது கடை கெட்ட குருட்டுத்தனமாகுமே!

141. இப்பொழுது நான் கூறியவற்றுக்கு ஆதார மாக வேதபிதாக்களின் உரைகளிலிருந்து ஒரு சில வற்றை லத்தீனில் இங்கு தருகிறேன் : :Duo filii Mariae Sunt, homo Deus et homo purus; unius corporaliter, et alterius quorum spiritualiter Mater est Maria" (St. Bonaventure and Origen speculum B. V. M.) இதன் பொருள் "மரியாயிக்கு இரண்டு பிள்ளைகள் : ஒன்று கடவுள் - மனிதன். இன்னொன்று வெறும் மனி தன். கடவுள் - மனிதனுக்கு மாதா சரீரப்பிரகாரம் தாய். வெறும் மனிதனுக்கு ஞானத்தாய் "(அர்ச். பொனவெந்தூர்; ஓரிஜன்).

“Heec est voluntas Dei, qui totum nos volui habere per Mariam; ac proinde, si quid spei, si quid gratiae, si quid salutis ab ea noverimus redundare'. (St. BernardDe aquaeductu No. 6)

இதன் பொருள் "இது கடவுளின் சித்தம் : நாம் யாவற்றையும் மரியாயின் வழியாகவே கொண்டிருக்க வேண்டுமென அவர் சித்தங்கொண்டார். எனவே நம் மிடம் ஏதாவது நம்பிக்கையோ வரப்பிரசாதமோ மீட்பின் அருளோ இருக்கிறதென்றால் அது நமக்கு மரியாயின் வழியாகவே வந்தது என நாம் அறிந்தி ருப்போமாக'' அர்ச். பெர்னார்ட்)

"Omna dona virtutes, gratiac ipsiusspiritus sancti quibus vult et quando vult quamodo vult, quantum vult, per ipsius manus adminjtursantur'. (8t. Bernardine)
இதன் பொருள் : "பரிசுத்த ஆவியின் எல்லாக் கொடைகள், புண்ணியங்கள், வரப்பிரசாதங்களும் மரியாயின் கரங்கள் வழியாகவே அவர்கள் யாருக்குக் கொடுக்க விரும்புகிறார்களோ, எப்பொழுது கொடுக்க விரும்புகிறார்களோ, எப்படிக் கொடுக்க விரும்புகிறார்களோ , எவ்வளவு கொடுக்க விரும்புகிறார்களோ அவ் வாறே பகிர்ந்தளிக்கப்படுகின்றன. (புனித பெர்னார்டின்).

''Quia indignus eras eui daretur, datum est Mariae, ut per eam acciperes quid quid haberes'' [St. Bernard]. | இதன் பொருள் : 'உன்னிடம் எதுவும் கொடுக்கப் பட நீ தகுதியற்றவனாயிருப்பதால் நீ எதையெல்லாம் கொண்டிருக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் மரியா யிடமிருந்தே பெற்றுக்கொள்ளும்படி யாவும் அவர் களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.'' (அர்ச். பெர்னார்ட்).

142. அர்ச். பெர்னார்ட் கூறுவது : கடவுளுடைய வரப்பிரசாதங்களை அவரிடமிருந்து நேரடியாகப் பெற் றுக்கொள்ள நாம் தகுதியற்றவர்களாயிருப்பதைக் கண்டு, கடவுள் அவற்றை மரியாயிடம் கொடுத்துள் ளார். அவர் நமக்குத் தரவிரும்பும் எல்லாவற்றையும் நாம் மரியாயின் வழியாகப் பெற்றுக்கொள்ளுமாறு அங்ஙனம் செய்துள்ளார். மேலும் கடவுளின் உப காரங்களுக்குப் பதிலாக நாம் அவருக்குச் செலுத்த வேண்டிய நன்றி, வணக்கம், அன்பு, இவற்றை மரியாயின் கரங்கள் வழியாகப் பெற்றுக்கொள்வதிலே கடவுள் தம் மகிமையைக் காண்கிறார். எனவே அர்ச். பெர்னார்ட் கூறுவதுபோல “எந்த வாய்க்கால் வழியாக வரப்பிரசாதம் வந்ததோ அதன் வழியாகவே அது தன் மூலத்தைச் சென்று அடையுமாறு'' நாமும் கடவு ளின் மாதிரிகையைப் பின்பற்றுவது நியாயமே.

இதைத்தான் நாம் இந்தப் பக்தி முயற்சியில் செய் கிறோம். நமதாண்டவருக்கு நாம் செலுத்தவேண்டிய மகிமையையும் நன்றியையும் கன்னித்தாயின் மத்தி யஸ்தத்தின் வழியாக அவர் பெற்றுக்கொள்ளுமாறு, நம்மையும், நமக்குள்ள யாவற்றையும் நமதன்னைக்கு நாம் அர்ப்பணிக்கிறோம். நமதாண்டவருடைய அள வில்லாத மகத்துவத்தை நாமாக நெருங்கிச் செல்ல நாம் அபாத்திரர், தகுதியற்றவர்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். எனவே மிகவும் புனித கன்னி மரியாயின் மனுப்பேசு தலை உபயோகித்துக் கொள்கி றோம்,

143. மேலும், இப்பக்தி முயற்சி ஆழ்ந்த தாழ்ச்சி என்ற புண்ணியப் பயிற்சியாகவும் இருக்கிறது. மற் றப் புண்ணியங்களையெல்லாம் விட இதைக் கடவுள் அதி கம் விரும்புகிறார். தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளும் ஓரு ஆன்மா கடவுளைத் தாழ்த்துகிறது. தன்னையே தாழ்த்திக்கொள்ளும் ஒரு ஆன்மா கடவுளை உயர்த்து கிறது. "கடவுள் ஆங்காரிகளுக்கு எதிர்த்து நின்று தாழ்மையுள்ளவர்களுக்கு வரப்பிரசாதத்தைக் கொடுக் கிறார்'' (இயா. 4, 6). அவர்முன் காணப்படவும் அவரை அணுகவும் நீ தகுதியற்றவன் என்று ஒப்புக் கொண்டு உன்னைத் தாழ்த்துவாயானால், அவர் உன் னிடம் வருவதற்கும் உன்னில் தன் மகிழ்ச்சியைக் கொள் வதற்கும், உன்னையும் மீறி உன்னை உயர்த்துவதற்கும், கீழிறங்கி தன்னைத் தாழ்த்திக்கொள்கிறார். ஆனால் இதற்கு மாறாக உனக்குப் பரிந்து பேச யாருமின்றி நீயே முரட்டுத்தனமாய்க் கடவுளை அணுகினால் அவர் உன்னை விட்டு விரைந்து விலகுகிறார். அவரை உன்னால் அடைய முடியாது.

ஆ! சர்வேசுரன் இருதயத் தாழ்ச்சியை எவ்வளவு விரும்புகிறார் ! இத்தகைய தாழ்ச்சியை நோக்கியே இப்பக்தி முயற்சி நம்மை நடத்திச் செல்கிறது. ஏனென்றால், நமதாண்டவர் எவ்வளவு சாந்தமும் இரக் கமும் உள்ளவராயிருந்தாலும் அவரிடம் நேர்முகமா கச் செல்லாதபடி இது நமக்குப் படிப்பிக்கிறது. ஆனால் எதற்கும் நாம் மரியாயின் மன்றாட்டின் உதவியையே தேடவேண்டும். கடவுள் முன்னால் செல்வதற்கும், அவ ருடன் பேசுவதற்கும், அவரை அணுகுவதற்கும், அவருக்கு ஏதாவது கொடுப்பதற்கோ அல்லது நம்மை அர்ப்பணிப்பதற்கோ எதற்குமே நாம் அவ்வாறே செய்யவேண்டும்.

ஞானத்துக்கு இருப்பிடமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.