இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நாட்பூசை காணுதல்

தேவ செம்மறிப்புருவையானவர் கொல்லப்பட்ட பாவனையாய் நிற்கக் கண்டேன். (அருளப். காட்சி 5; 6)

கரைகாணாத அன்பின் சமுத்திரமாயிருக்கிற சருவேசுரன் பாவத்தால் கெட்டுப்போய்க் கிடந்த மனுச் சந்ததியை மீட்கத் திருச்சித்தங் கொண்டு, தம்மோடு ஏக சுபாவம் உடையவரும் இராச்சிய பாரம் பண்ணிக் கொண்டிருக்கிறவருமாகிய திருச்சுதனை இப் பூவுலகத்திலே மீட்பராக அனுப்பச் சித்தமானார். இந்தத் திருச்சுதன் மனுஷனாகி இவ்வுலகத்தில் முப்பத்து மூன்று வருஷஞ் சீவித்து, கடைசியாய், நமக்காக மனோவாக்குக்கு எட்டாத வாதைகளைப் பட்டுச் சீவனையும் விட்டார். ஆனால், கிறீஸ்தவர்களே, பிதாவின் ஏக பேறான, நித்தியராகிய சுதனானவர் தாமும் அளவில்லாதவரானபடியால், அவர் மனுமக்களை நேசிக்கத் தொடங்கியபோது அளவில்லாமலே நேசிப்பவரானார்.  அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தில் எழுதியிருக்கிறபடி இவ்வுலகத்தில் இருக்கிற தம்முடையவர்களை நேசிக் கத் தொடங்கி அவர்களைக் கடைசி பரியந்தம் நேசிக்கிறவரானார். ( அருளப். 13 ; 1.) அதெப்படியெனில், அவர் உலகத்தின் பாவத்தைப் போக்குகிற தேவ செம்மறிப்புருவையாக மரிக்கிறதற்கு முந்திய நாளாகிய பெரிய வியாழக்கிழ மை, எங்களுக்காகக் கையளிக்கப்படப்போகிற தமது திரு மானிடச் சரீரத்தையுஞ் சிந்தப்படப்போகிற திரு இரத்தத்தையும் நமது ஆத்துமாக்களுக்கு ஓர் பரிசுத் த ஓசீவனமாகத் தந்ததுமல்லாமல், அந்தத் திருச் சரீ ரத்தையுந் திரு இரத்தத்தையுங் கொண்டு பண்ணுகிற திவ்விய பூசைப்பலியையும் அப்போது தானே ஏற்ப டுத்தியருளினார். தேவநற்கருணை யிலே அவர் நம்மு டைய அன்றாடக அப்பமாக வந்தார். திவ்விய பூசைப் பலியிலே, தாம் முன் சிலுவையில் ஒருதரம் நிறைவேற் றின திருப்பலியை ஓயாமல் புதுப்பித்து, கொல்லப் பட்ட செம்மறிப்புருவைபோல, பிதாவுக்குத் தம்மை ஓயாமலே ஒப்புக்கொடுக்கவும், எங்கள் அக்கிரமங்க ளுக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கவும், தம்மு டைய திருமரணத்தின் ஞாபகத்தை ஓயாமல் நமக்கு நினைப்பூட்டவும் திருவுளமானார். அந்தத் திரு மரணத் தை முக்கியமான விதமாய் நாம் ஞாபகப்படுத்திக் கொண்டாடுகிற பரிசுத்த காலமாகிய இத் தபசு நாட் களிலே, யேசுநாதசுவாமியுடைய அளவற்ற அன்பின் அடையாளமாகிய திவ்விய பூசைப்பலியைக் குறித்துச் சில வார்த்தைகளைச் சொல்லுவது நலமல்லவா? திவ்வி ய பூசையின் மகத்துவத்தை, அதின் இயல்பை, நீங் கள் சரியாய்க் கண்டுகொண்டால், பூசை காணக் கட மையான ஞாயிறு கடன் திருநாட்களில் மாத்திரமல்ல, வேறு நாட்களிலும் அதைக் காண வெகு ஆசை மூளுவீர்களல்லவா? ஆகையால் இப்போது நாம் சற்று நேரம் திவ்விய பூசையின் மகத்துவத்தைச் சிந்திப்போம். சிந்தித்து இயன் றமட்டும் நாட்பூசை காண நம்மைத் தூண்டிக் கொள்ளுவோம்.