இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறந்தோரை மறவாதே

கடவுள் அளவில்லாத சகல நன்மைச் சொரூபி என ஆறுலட்சண மந்திரத்தில் நாம் சொல்கிறோம். என்னென்ன நன்மைகள் உண்டோ அவற்றையெல்லாம் அவர் அளவற்றவிதமாய்க் கொண்டிருக்கிறார். அவர் அளவில்லாத இரக்கமுள்ளவர். தகப்பன் தன் பிள்ளை மீது கொண்டிருக்கும் இரக்கத்தை விட கட வுள் மானிடர் மீது அதிக இரக்கமுள்ளவர். உன்னைச் சுற்றிலும் பார். கடவுளின் இரக்கத்தை நீ அறிய வருவாய். கடவுள் நம்மீது கொண்டிருக்கும் இரக் கத்தின் சிறந்த அடையாளங்களில் ஒன்று உத்தரிக் கிற ஸ்தலமே. உத்தரிக்கிற ஸ்தலமானது கடவுளுக்கு நம்மீதுள்ள இரக்கத்தைச் சிறந்தவி தமாக எடுத்துக் காட்டுகிறது. உத்தரிக்கிற ஸ்தலம் இல்லாவிட்டால் அநேகர் சர்வேசுரனைத் தரிசித்துச் சுகிக்க முடியாது. உயிரோடிருக்கையில் பரிகரிக்கப்படாத குற்றங்கள் பல மரணத்துக்குப் பின் அங்கு பரிகரிக்கப் படுகின்றன.

சிலர் சாவான பாவமே செய்ததில்லை. என்றாலும் அற்பக் குற்றங்களுடன் சாகிறார்கள். வேறு அநேகர் சாவான பாவம் செய்திருக்கின்றனர். அவற்றிற்கு மன்னிப்படைந்து விட்டார்கள். எனினும் சாவான பாவத்துக்குரிய அநித்திய தண்டனைக் கடனை முற்றி லும் அவர்கள் இன்னும் தீர்க்கவில்லை. அசுத்த மானது எதுவும் மோட்சத்தினுள் நுழைய முடியாது. அவர்களை நரகத்தில் தள்ளுவது நியாபமல்ல. ஆதலின் அவர்கள் தாங்கள் இன்னும் தீர்க்க வேண் டிய தண்டனையை உத்தரிக்கிற ஸ்தலத்தில் தீர்க்கின் றனர். கடவுளைத் தரிசிக்கும்படி அவர்கள் சுத்த மாக்கப்படும் வரை அவர்கள் அங்கு வேதனைப்படுகி றார்கள். அந்த வேதனைகளைப் பொறுமையுடன் சகித்து பழைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்கி றார்கள்.

மோட்சம் செல்லு முன் எல்லோரும் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகிறார்கள் என்று சொல்ல முடி யாது. இவ்வுலகில் கடவுளுக்காக வாழ்ந்து, அனைத் தையும் கடவுளுக்காகவே செய்து, தங்களுக்கு வந்த துன்ப வேதனைகளையெல்லாம் அவருக்காகவே பொறுமையுடன் சகித்து தங்கள் குற்றங்கள் அனைத்துக்கும் பரிகாரம் செய்தவர்கள் செத்ததும் நேரே மோட்சம் செல்கிறார்கள். நேரே மோட்சம் போகிறவர்களை விட உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போய் பின் மோட்சம் செல்கிறவர்கள் மோட்ச மகிமையில் குறைந்தவர்க ளாய் இருப்பார்களென்று திட்டமாய்ச் சொல்ல முடி யாது. மோட்சத்தில் உயர்ந்த இடம் பெறுவது அவரவரது பேறுபலன்களைப் பொருத்ததா யிருக்கும்.

உத்தரிக்கிற ஸ்தலத்தின் சொற்ப வேதனையும் உலகத்தின் மிகக் கொடிய வேதனைகளை விட அதிகக் கொடூரமானது என புனித தோமாஸ் அக்குயினாஸ் கூறுகிறார்.

உத்தரிக்கிற ஸ்தல வேதனைகளைக் காட்சியில் பார்த்த பாஸி புனித மரிய மதலேனம்மாள் "உத்த ரிக்கிற ஸ்தலத்தின் வேதனையுடன் ஒப்பிட்டுப் பார்த் தால், வேத சாட்சிகள் அனுபவித்த வேதனைகளும், இவ்வுலகின் கொடிய நெருப்பும் ஒரு பூந்தோட்டத் தின் இனிமையைப்போலிருக்கும்'' என்கிறாள்.

“உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஒருநாள் இருப்பதை விட உலகம் முடியும்வரை உலகத்தின் சகல வேதனை களையும் ஒருமிக்கச் சகிப்பது எளிது'' என்று புனித சிரில் என்னும் மேற்றிராணியார் சொல்கிறார்.

உத்தரிக்கிற ஸ்தலத்தின் மிகக் கொடிய வேதனை கடவுளைப் பாராதிருத்தலே. மனிதன் கடவுளுக்காக உண்டாக்கப்பட்டிருக்கிறான். இந்த உலகத்தின் பொருட்களோ இடங்களோ ஆட்களோ எதுவும் அவ னுக்கு சம்பூரண திருப்தியை ஒருபோதும் கொடுக் கப்போவதில்லை. என்றாலும் உலகில் இருக்கும்வரை அவன் இதைச் சரிவர உணர்வதில்லை. காரணம், அவனுக்கு இருக்கும் உலக கவலைகளும் வேலை களுமே. ஐம்புலன்களால் உணரக்கூடியதை அதிகமாக நாடிச் செல்கிறான். தன்னை உண்மையாகவே திருப்தி செய்யக்கூடிய கடவுளை மறந்து திரிகிறான்.

அவன் இறந்ததும் ஆன்மா உடலைவிட்டுப் பிரி கிறது. சரீரத்திலிருந்து விடுபட்டதும் ஆத்துமமா னது, கடவுள் ஒருவரே தன் கதி என்பதை நன்றாக அறிகிறது. கடவுளை நோக்கித் தாவுகிறது. கடவுளை அவரது சர்வ மகிமையில் ஒரு வினாடி பார்த்திருக் கிறது. அவரை எல்லாவற்றிற்கும் மேலாக விரும்பி நேசிக்கிறது. அவரைச் சகல சம்மனசுக்களுடனும் பரிசுத்தவான்களுடனும் சேர்ந்து சுகிக்க வேண்டு மென்று ஏங்குகிறது. ஆனால் கடவுள் தீர்ப்புக் கூறி விட்டார். உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப்போய் உத்த ரித்துவிட்டு என்னிடம் வா என அவர் தீர்ப்பிடுகிறார். "கடவுளைச் சுகிக்க முடியாதிருக்கிறேனே, அவர் ஒரு வர் மாத்திரமே எனது பாக்கியம் " என அந்த ஆத்து மம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்துகொண்டு ஏங் கித் துடித்துக்கொண்டிருக்கிறது.

உத்தரிக்கிற ஆத்துமங்கள் தங்களுக்குத் தாங் களே உதவி செய்ய முடியாது. இவ்வுலகில் ஒருவன் பாவம் செய்கிறான். உத்தம மனஸ்தாபப்பட்டு பாவத்தை குருவிடம் வெளியிட்டு மன்னிப்புப் பெற் றுக்கொள்கிறான். என்றாலும் பாவத்துக்காக தீர்க்க வேண்டிய அநித்திய தண்டனை இன்னும் உண்டு. நற்கிரியைகள் செய்து அந்தத் தண்டனையை உத்தரிக் கலாம். இந்த உலகில் இருக்கும்வரை மாத்திரமே பேறுபலன் சம்பாதித்து உத்தரிக்கலாம். இறந்த பின் இவ்விதம் செய்யமுடியாது. ஏனெனில் ஒருவரும் வேலை செய்ய முடியாத இரவு நேரம் வந்துவிட்டது.

உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படுகிறவர் களிடம் தேவநேசம் பற்றி எரியலாம்; தங்கள் பாவங் களுக்காக அவர்கள் மிகு துயரப்படலாம்; தேவ சித் தத்துக்கு அவர்கள் பொறுமையுடன் பணிந்து நடக் கலாம்; கடவுளை சிநேகிக்கலாம்; என்றாலும் இவற்றால் அவர்கள் பேறுபலன்களைச் சம்பாதிக்க முடி யாது. உலகில் இருக்கும் வரை மேற்கூறப்பட்ட வற்றால் ஏராளமான பலன் கிடைக்கும். உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருப்பவர்கள் கடைசி வரை தங்கள் தண்டனையை அனுபவித்தாக வேண்டும்; அல்லது வேறு யாராவது இவர்களுக்கு உதவி புரிந்தாக வேண்டும்.

"என் சிநேகிதர்களே, என் இரக்கமாயிருங்கள், நீங்களாவது என் மீது இரக்கமாயிருங்கள், ஆண்ட வரது கரம் என் மீது இருக்கிறது. நான் எனக்கு உதவி செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். சீக்கி ரம் உதவி செய்யுங்கள்'' என்னும் கூக்குரல் இரவும் பகலும் இடைவிடாது உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து வெளிவருகிறது.

உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஆத்துமங்கள் எத்தனை காலம் வேதனைப்படுகிறார்கள் என நிச்சயமாய்த் தெரி யாது, அவரது குற்றங்களுக்கேற்ப வேதனையும் நீடிக்கும். இருபது, நாற்பது, ஐம்பது ஆண்டுக ளாக உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்பட்ட ஆத்து மங்கள் பிரான்செஸ் என்னும் கன்னியாஸ்திரீக்குத் தோன்றி அவளிடம் உதவி கேட்டிருக்கின்றன. சிலர் உலக முடியும் வரை அங்கு வேதனைப்படுவார் கள் என புனித பெல்லார்மின் கூறுகிறார். சிலர் பல நூற்றாண்டுகளாக அங்கு வேதனைப்படுகின்றனர் என அன்னா கத்தரீன் எம்மெரிக் சொல்கிறாள். உலக முடிவில் அகோர வேதனைப்பட்டு தங்கள் உத்தரிப் புக் கடனைத் தீர்த்து மோட்சம் செல்வார்கள் என சாஸ்திரிகள் அபிப்பிராயப்படுகிறார்கள்.

உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஒரு மணி நேரம் வேத னைப்படுவது எத்தனையோ ஆண்டுகளைப் போல் இருக்கும். இறந்து போன ஒரு சந்நியாசியார் மற்ற சந்நியாசிகளுக்குத் தோன்றி, மூன்று நாட்களாக அங்கு வேதனைப்பட்டது ஆயிரம் வருடங்கள் போல் இருந்தது எனத் தெரிவித்திருக்கிறார். இன்னொரு சந்நியாசியார் சில மணிநேரம் அங்கு வேதனைப்பட்ட பின் அது நூற்றைம்பது ஆண்டுகள் போலிருந்த தாகத் தெரிவித்திருக்கிறார்.

சத்திய திருச்சபையின் ஆறுதல் தரும் போதனை களில் ஒன்று அர்ச்சியசிஷ்டர்களுடைய சமுதீத பிர யோஜனமென்னும் போதனை. அர்ச்சியசிஷ்டர்கள் மோட்சத்திலும் உத்தரிக்கிற ஸ்தலத்திலும் பூமியி லும் இருக்கின்றனர். இவர்கள் ஒருவர் மற்றொரு வருக்கு பிரயோஜனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். மோட்சத்திலிருக்கிறவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலி ருக்கிறவர்களுக்கும் பூமியிலிருப்பவர்களுக்கும் உதவி புரிகின்றனர். உத்தரிக்கிற ஸ்தலத்திலிருப்போர் பூமியிலிருப்போருக்கு உதவியாயிருக்கிறார்கள்.

ஏன் இத்தனை வேதனை? என உத்தரிக்கிற ஸ்தலத் திலிருப்போரிடம் கேட்டுப் பார். அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? ''நாங்கள் பூமியில் இருக்கை யில் கடவுளை எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் முழுப் பலத்துடனும் முழு மனதுடனும் முழு ஆத்து மத்துடனும் நேசித்து, எங்கள் அயலாரை எங்களைப் போல் நேசித்திருந்தால் இறந்ததும் நேரே மோட்சம் போயிருப்போம்'' என அவர்கள் பதில் சொல் வார்கள்.

இந்த உலகில் இருப்பவர்கள் இன்னும் பகல் நேரத்தில் இருக்கிறார்கள். வேலை செய்யலாம், பேறு பலன் சம்பாதிக்கலாம், தங்கள் தண்டனைக் கடன்களை இவ்வுலகிலேயே தீர்த்து நேரே மோட்சம் போகலாம்

ஒரு ஊரில் பத்தியுள்ள குரு ஒருவர் இருந்தார். அவர் பெரும் தபசி. "உங்களுக்கு மரணம் சமீபித்து வருகிறது. உங்கள் ஆத்தும இனைப்பாற்றிக்காக ஒரு திவ்விய பலிபூசை ஒப்புக்கொடுக்கப்படும் வரை நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்பட வேண் டும்'' என அவருக்கு ஒரு நாள் அறிவிக்கப்பட்டது. தம் உற்ற நண்பராகிய ஒரு குருவிடம் அவர் இச் செய்தியைச் சொல்லி, ''நான் இறந்ததும் நீங்கள் எனக்காகப் பூசை செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார். அவரும் சரி என வாக்களித்தார்.

குரு இறந்தார். நண்பர் உடனே திவ்விய பலியை ஆரம்பித்தார். என்றுமில்லாப் பக்தியுடன் அந்தப் பூசையை ஒப்புக் கொடுத்தார். அவர் பூசையை முடித்துவிட்டு நன்றி செலுத்திக்கொண்டிருக்கையில் இறந்தவரது ஆத்துமம் அவருக்குக் காணப்பட்டது. முகத்தில் மகிழ்ச்சி, ஆனால் குரலில் விசனம். "என்ன சகோதரரே, நீங்கள் சொல்வது ஒன்று, செய்வது வேறொன்றா? கொடுத்த வாக்கை மறந்துபோனீர் களே. நான் இறந்து ஓர் ஆண்டாகியும் நீங்களாவது ஏனைய குருக்களாவது ஒரு பூசையும் எனக்காக ஒப் புக்கொடுக்கவில்லையே. ஒரு வருடமாக என்னை உத் தரிக்கிற ஸ்தலத்தில் விட்டுவிட்டீர்களே'' என இறந் தவர் முறையிட்டார். உயிரோடிருந்தவர், “சுவாமி, நீங்கள் இறந்ததும் தொடங்கின பூசைப் பலியை இப்பொழுது தானே முடித்தேன். உங்கள் உடலை இன்னும் அடக்கம் செய்யவில்லையே'' என்றார். "அப் படியா? உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகள் அவ்வ ளவு பயங்கரமானவை. ஒருமணி நேரம் போகிறது ஒரு வருடம் போலிருக்கிறது." என இறந்தவர் கூறி, உயிருடனிருந்தவருக்கு நன்றி செலுத்தி மோட்சம் சென்றார்.

பச்சை மரத்துக்கு இந்தப் பாடானால் பட்டமரத் தின் கதி என்ன? அந்தக் குரு தபசி. அவரே இவ்வ ளவு வேதனைப்பட்டால் நாம் என்ன வேதனைப்பட வேண்டியிருக்குமோ தெரியாது.

“என் மனைவி மக்கள் பக்தியுள்ளவர்கள். அன் புள்ளவர்கள். எனக்கு நண்பர்கள் பலர் உண்டு. நான்  இறந்ததும் இவர்கள் யாவரும் சேர்ந்து எனக்காக பூசைகள் செய்வித்து ஜெபித்து என்னைச் சீக்கிரம் மோட்சத்துக்கு அனுப்புவார்கள்'' என சிலர் நினைத் துக்கொண்டிருக்கலாம். அவர்கள் ஏமாந்து போகி றார்கள். நீ இறந்தபின் உன் ஆத்துமத்தைப் பற்றி நினைப்பவர்கள் சொற்பப்பேர். அநேகர் தங்கள் நேசர் களைப் புதைத்ததும் அவர்களை அடியோடு மறந்து விடுகிறார்கள். சில இடங்களில் இறந்தவர்களுக்காக முப்பதாம் நாளன்று பூசை செய்விக்கிறார்கள். முப் பது நாட்களாக அநேகமாக இறந்த ஆத்துமங் களுக்கு எவ்வித உதவியும் செய்வதில்லை. வேறு சிலர் ஆண்டுதோறும் ஒருமுறை, இறந்தோரை நினைத்து வேண்டிக்கொள்கிறார்கள். நீ எப்படி பிற ருக்கு அளக்கிறாயோ அதே அளவில் உனக்கு அளக் கப்படும். நீ இறந்த உன் நேசர்களை மறப்பது போல், உன்னையும், உன் நேசர்கள் மறந்து போவார்கள்.

தன் கையே தனக்கு உதவி. உயிருடனிருக்கும் போதே பாவத்துக்குப் பரிகாரம் செய். ஜெபம், தபசு. தர்மம் இவற்றைத் தாராளமாகச்செய்து உன் பழைய பாவங்களுக்கான அநித்திய தண்டனையை இப்பொ ழுதே உத்தரித்து விடு. பிறர் செய்வார்கள் எனக் காத்திராதே.

உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு நாம் ஏன் உதவி செய்ய வேண்டும்? அவர்களுக்கு உதவி செய்வது நம் மேற் சார்ந்த கடமை. நாம் உண்மையாகவே கடவுளை நேசித்தால், அந்த நேசத்தை செய்கையில் காட்டு வோம். கடவுளுக்குப் பிரியமானவற்றைச் செய்து அவரது மகிமையைப் பரப்ப நம்மாலானதெல்லாம் செய்வோம். உத்தரிக்கிறஸ் தலத்தின் ஆத்துமங்கள் மேற் பக்தியாயிருந்து அவர்களுக்கு உதவி செய்வது கடவுளுக்கு மிக மிகப் பிரியமானது என திருச்சபை யும், வேதசாஸ்திரிகளும் திண்ணமாகக் கூறுகிறார் கள்.

இறந்தவர்கள் மீது காண்பிக்கும் இரக்கம் உயிருடனிருப்பவர்கள் மீது காண்பிக்கும் இரக்கத்தை விட கடவுளுக்கு அதிக பிரியமானது என்று புனித தோமாஸ் அக்குயினாஸ் சொல்கிறார்.

உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு நாம் காண்பிக்கும் இரக்கத்தில் ஆத்தும சரீர தர்மக் கிரியைகள் யாவும் அடங்கியிருக்கின்றன என்று புனித பிரான்சிஸ் சலேசியார் கூறுகிறார்.

ஏழைக்கு ஒரு பெரிய தர்மம் கொடுப்பதை விட உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு உதவி செய்வது அதிக பலனுள்ளது என வேதபாரகரான புனித ராபர்ட் பெல்லார்மின் சொல்கிறார்.

யேசு ஒருமுறை மரி லற்றாஸ்ட் என்னும் கன் னிக்குக் காட்சியளித்து, ''உத்தரிக்கிற ஆத்துமங் களுக்கு நீ உதவி செய்தால் கடவுளுக்கு நீ மிகமிகப் பிரியமுள்ளவளாகிறாய்" என்றார்.

“உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக நீ செய்யும் சிறு ஜெபமும் எனக்கு மிகப்பிரியம். ஏனெனில் அவர் களை விடுவிக்க வேண்டும் என எனக்கு அதிக ஆசை'' என்று யேசு புனித ஜெர்த்துருத்தம்மாளுக்கு அறி வித்திருக்கிறார்.

''நான் காட்டுக்கு அல்லது சிறைக்குச் செல்ல விரும்புகிறேன். அங்கு போய் உத்தரிக்கிற ஆத்து மங்களுக்காக பலன் சம்பாதிப்பதே என் இடைவிடா வேலையாயிருக்கும். என் முயற்சியினால் சிலரையா வது சீக்கிரம் மோட்சத்துக்கு அனுப்பி அவர்கள் கடவுளை வாழ்த்தி ஸ்து திக்கும்படி செய்வேன்'' என ஜாண் என்ற குருவானவர் சொல்கிறார்.

“நமக்காக பரகதியில் கடவுளைத் துதித்து நேசித்து மகிமைப்படுத்த ஒருவர் இருப்பது எவ்வ ளவு நல்லது!'' என பாபர் சுவாமியார் கூறுகிறார்.

நாம் உண்மையாகவே கடவுளை நேசித்தால், நம் அயலாரையும் நேசிப்போம். அவர்களுடைய ஆத் தும சரீர அவசரங்களில் அவர்களுக்கு உதவி செய் வோம். உத்தரிக்கிற ஆத்துமங்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்ய முடியாத நிலையில் இருக்கி றார்கள். நாமே அவர்களுடைய நம்பிக்கை, நம்மையே அவர்கள் நம்பியிருக்கிறார்கள்.

உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருப்போர் நம் உற்றார் நம் நேசர்கள். நமது நன்றிக்கும் நேசத்துக்கும் உரிய வர்கள். அவர்கள் உயிருடனிருக்கையில் நமக்கு பல உபகாரங்களைச் செய்திருக்கிறார்கள். நமக்கு ஆறுதல ளித்து நம்மை உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் குற்றத்துக்காளாகி உத்தரிக்கிற ஸ்தலத் தில் வேதனைப்பட நாம் காரணமாயிருந்திருக்கலாம்.

அவர்கள் இதற்குள் மோட்சம் போயிருப்பார்கள் என எளிதில் நினைத்து சும்மா இருப்பது சரியன்று. சர்வேசுரன் அளவற்ற நீதியுள்ளவர். சகல குற்றங் களுக்காகவும் பரிகாரம் செய்தாக வேண்டும். பாவக் கறையெல்லாம் அகற்றப்பட்ட பின்னரே மோட்சம் செல்லலாம். அசுத்தம் எதுவும் மோட்சத்தில் நுழைய முடியாது

வேதசாஸ்திரியான புனித அகுஸ்தீன் என்பவ ருடைய தாய் மோனிக்கம்மாள் இறந்த பின் அவர் கடவுளைப் பார்த்து, ''சர்வேசுரா, என் தாய் நல்ல வாழ்வு நடத்தினாள்; உம் நாமத்தை மகிமைப்படுத்தி னாள். ஆனால் மிகப் பரிசுத்த வாழ்வும் உமது பரி சுத்ததனத்துக்கு முன் என்ன? என் தாயின் நற்கிரி கைகளைப்பற்றி நான் பேசமாட்டேன். ஆனால் அவ ளுடைய பாவங்களைப் பொறுக்கும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுறேன். அவளுக்காகச் சிலுவையில் உயிர் விட்டவருடைய காயங்களிலிருந்து வடிந்த இரத்தத்தைக் குறித்து என் மன்றாட்டைக் கேட்டரு ளும்'' என பிரார்த்தித்தார்.

பெற்றோரை நேசிக்கவேண்டும், அவர்கள் சங்கடப்படுகையில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது கடவுளின் நான்காம் கட்டளை. பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சிரமப்பட்டு சம்பாதித்துக் காப் பாற்றி ஆளாக்கி விடுகிறவர்கள் பெற்றோர். இறந்த பெற்றோரை மக்கள் மறத்தலாகாது. இறந்தவர்கள் கணவனானாலும், மனைவியானாலும், மக்களானாலும், சகோதரனானாலும், அவர்களை மறக்கக்கூடாது.

குருக்களிடமிருந்து விசுவாசிகள் எத்தனை உப காரங்களைப் பெறுகிறார்கள். பிறந்ததிலிருந்து சாகும் வரை ஆறுதலும், உதவியும், ஆலோசனையும் அளிப் பவர்கள் அவர்கள். இறந்த குருக்களுக்காக வெகு உருக்கமாகக் கடவுளைப் பிரார்த்திக்கவேண்டும். மரி லற்றாஸ்ட் என்பவளுக்கு யேசு ஒருமுறை தோன்றி, "மகளே, குருக்களுக்காக ஜெபி. இந்தத் தங்கள் கடமையை விசுவாசிகள் மறந்து போகின்றனர். இரட்சணிய விஷயத்தில் குருக்கள் நம் தந்தையருக் குச் சமானம்'' என்றார்.

இறந்த இரு பாப்புமாரும் அநேக மேற்றி ராணி மாரும் குருக்களும் முத்திப்பேறு பெற்ற பிரான் செஸ் அம்மாளுக்குத் தோன்றி உதவி கேட்டிருக்கின்றனர் பதவி உயர உயர அவர்களது பொறுப்பும் உயரும் கடவுள் அவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறார்

உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆத்து மங்களை கடவுள் நேசிக்கிறார். அவர்கள் படும் வேதனை மிகக் கொடிது. அவர்கள் சீக்கிரம் விடுவிக்கப்பட வேண்டும் என அவர் ஆசிக்கிறார். அவர்களை விடு விக்க உதவி செய்கிறவர்களுக்கு அவர் விசேஷ தயவு காண்பிக்கிறார். “தங்கள் துன்ப வேதனைகளில் உத்த ரிக்கிற ஆத்துமங்களின் அடைக்கலத்தைத் தேடுகிற வர்களுக்கு கடவுள் விசேஷ சலுகை காண்பிக்கிறார்'' என பரிசுத்தவான் ஒருவருக்கு அறிவிக்கப்பட்டது.

“மோட்சத்தில் இருக்கும் அர்ச்சியசிஷ்டர்களின் மன்றாட்டின் பலனால் பெற்ற உபகாரங்களை விட உத் தரிக்கிற ஆத்துமங்கள் வழியாக நான் அதிக உதவி பெற்றிருக்கிறேன்'' என பொலோஞ்ஞா புனித கத்த ரீனம்மாள் சொல்கிறாள்.

"பல அர்ச்சியசிஷ்டர்களை நோக்கிப் பிரார்த்தித் தேன். என் மன்றாட்டுக் கேட்கப்படவில்லை. உத்தரிக் கிற ஆத்துமங்களின் உதவியை நாடினேன். நான் கேட்ட காரியம் கிடைத்தது'' என ஒரு பரிசுத்த பெண் கூறுகிறாள்.

“உத்தரிக்கிறஸ் தலத்தில் இருப்போரின் மன்றாட் டினால் நீ நூற்றுக்கணக்கான உபகாரங்கள் பெற்றி ருக்கிறாய்" என சியென்னா புனித கத்தரீனம்மாளுக்கு யேசு ஒருமுறை அறிவித்தார்.

உத்தரிக்கிறஸ்தலத்தில் வேதனைப்பட்ட ஆத்து மங்களில் ஒன்று முத்திப்பேறு பெற்ற பிரான்செஸ் அம்மாளுக்குக் காட்சியளித்து, "உங்களுக்காக நாங் கள் கடவுளிடம் பரிந்து பேசுகிறோம். யாராவது எங்களுக்கு உதவி செய்வாரானால் அவர் கடவுளுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்யவும் பாவத்தை விலக்கவும் நல்ல மரணம் அடையவும் வரம் பெற்றுக் கொடுக்கிறோம்" என்றது.

“சர்வேசுரா, வேதனைப்படும் எங்களுக்கு உதவி செய்கிறவர்களுக்கு சம்பாவனையளிப்பீராக'' என உத்தரிக்கிற ஆத்துமாக்கள் ஜெபித்ததை புனித விறிச்சித்தம்மாள் கேட்டாளாம்.

உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு உதவி செய்த தால் ஒருவன் சூதாட்டத்தினின்று விடுப ட்டான். இன்னொருவன் குடிக்கிற பழக்கத்தை விட்டுவிட் டான். அநேகர் கெட்ட சோதனைகளினின்று விடு பட்டிருக்கின்றனர். கடைசித் தேவதிரவிய அனுமானங்களைப் பெற்று பாக்கியமாய் மரிக்கும் வரம் அநேகருக்குக் கிடைத்தது.

அல்போன்ஸ் கொர்ஸெல்லி என்னும் யேசுசபை குருவானவர் பரிசுத்த கற்புக்கு விரோமான பலத்த சோதனைகளால் நெடுநாள் உபத்திரவப்பட்டார். அவர் வெகு பிரயாசைப்பட்டும் சோதனைகள் ஒழிய வில்லை. கடைசியாக அவர் தேவதாயிடம் ஓடினார். மாதா தோன்றி உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக அதிகமாக ஜெயிக்கும்படி சொன்னாள். அவர் அவ் விதமே செய்தார். சோதனைகள் குறைந்தன.

உத்தரிக்கிற ஆத்துமங்களின் ஆறுதலுக்காக முப்பத்து மூன்று நாட்களாக, தொடர்ச்சியாக திவ் திய பூசை கண்டு சிலுவைப்பாதை செய்த அநேகர் விசேஷ உபகாரங்கள் பெற்றிருக்கின்றனர்.

உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு உதவி செய்ய பல வழிகள் உண்டு. சுத்த கருத்துடன் கடவுளுக் காகச் செய்யப்படும் எந்த நல்ல கிரிகைகளையும் உத் தரிக்கிற ஆத்துமங்களுக்காக ஒப்புக்கொடுக்கலாம்.

திவ்விய பூசையே உத்தரிக்கிற ஆத்துமங்களுக் குத் தலைசிறந்த ஆறுதல். யேசுவின் சரீரமும் இரத் தமும் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்படும் இரத்தம் சிந்தாத பலி திவ்விய பூசை. சீவியருக்காகவும், இறந் தோருக்காகவும் முதலில் சிலுவையில் ஒப்புக்கொடுக் கப்பட்ட இந்தப்பலி, இப்பொழுது பீடத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டு, எல்லோருக்கும், இரக்கமும் பொறுத்தலும் பெற்றுக்கொடுக்கிறது. பூசையில் தேவ பலிப்பொருளே தம் பிதாவை நோக்கி பிராத் திக்கிறார். அவரது மன்றாட்டு அளவற்ற வல்லமையுள்ளது.

முத்திப் பேறு பெற்ற ஹென்றி சூசோ என்னும் குருவும் இன்னொரு குருவானவரும் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவர்கள் இருவரில் முதலில் இறப்பவரது ஆத்தும இளைப்பாற்றிக் காக, உயிரோடிருப்பவர் பல திவ்விய பூசைப்பலி நிறைவேற்ற வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம். சூஸோவின் நண்பர் சில ஆண்டுகளுக்குப் பின் இறந்தார். சூஸோ சுவாமியாரிடம் ஏற்கனவே பூசைக்கான கருத்துக்கள் பல இருந்தமையால், “இறந்தவருக்காக உடனே பூசைகள் செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லையே'' என நினைத்து, தம் நண்பருக்காக பூசை ஒப்புக் கொடாதிருந்துவிட் டார். எனினும் அவருக்காக தபசுமுயற்சிகளும் ஜெப மும் அதிகமாகச் செய்தார். சில நாட்களுக்குப் பின் இறந்த குரு சூஸோவுக்குத் தோன்றி, தம் வாக்கை மறந்ததற்காக அவரைக் கடிந்து கொண்டார். தாம் அவருக்காக பல தப முயற்சிகளும் ஜெபங்களும் செய்து வந்ததாக சூஸோ சொன்னதும், இறந்தவர், ''உத்தரிக்கிற ஸ்தலத்தின் பயங்கர வேதனைகளிலி ருந்து என்னை விடுவிக்க இந்த நற்கிரியைகளுக்கு அவ் வளவு வல்லமை இல்லை. யேசுவின் திரு இரத்தமே என்னை விடுவிக்க அதிக பலனுள்ளது. நீங்கள் பூசை கள் செய்து எனக்காக ஒப்புகிகொடுத்திருந்தால் நான் இதற்குமுன் மோட்சம் போயிருப்பேனே " என முறை யிட்டார். சூஸோ மறுநாளிலிருந்து அவருக்காகப் பூசைப்பலி நிறைவேற்றினார். இறந்தவர் சில நாட் களுக்குப்பின் மகிழ்ச்சியுடன் காணப்பட்டு, "மோட் சத்தில் சம்மனசுகள் அர்ச்சியசிஷ்டர் ஆகியோரின் மத்தியில் நான் இருந்து உங்களுக்காக ஜெபிப்பேன்'' என்று சொல்லி மறைந்தார்.

"இன்று நான் அடையக்கூடிய பலன்களையெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக ஒப்புக் கொடுக்கிறேன்'' என அதிகாலையில் எழுந்ததும் சொல்லி வா.

புனித பெரிய தெரேசம்மாள் வசித்த மடத்தில் ஒரு கன்னியாஸ்திரி இருந்தாள். அவள் மிக பரிசுத்தவதியல்ல. சாதாரணமான பக்தியுள்ளவள். அந்தக் கன்னியாஸ்திரி இறந்தாள். அவளது ஆத்துமம் நேரே மோட்சத்துக்குப் போவதை தெரேசம்மாள் பார்த்தாள். அவளுக்கு அதிசயமாயிருந்தது. ஆண்டவரிடம் காரணத்தைக் கேட்டாள். "அவள் தேவ நீதிக்கு உத்தரிக்க வேண்டிய கடன் ஏராளம். ஆனால் உயிருடனிருக்கையில் அவள் என்னென்ன பலன்களை அடைய முடியுமோ அவற்றையெல்லாம் அவள் அடைந்திருந்தாள். ஆதலின் நேரே மோட்சம் போகிறாள்'' என ஆண்டவர் அறிவித்தார்.

முன்காலத்தில் திருச்சபையின் பலன்களை அடைய வேண்டுமானால் கடும் தபசு, ஒரு சந்தி உப வாசம் , தூரத்திலுள்ள கோவில்களைச் சந்தித்தல் முதலிய நிபந்தனைகள் இருந்தன. இப்பொழுது தாயாகிய திருச்சபை தாராள குணத்துடன் நிபந்த னைகளைக் குறைத்திருக்கிறது.

உத்தரிக்கிற ஆத்துமங்கள் மீது பக்தி கொண்டி ருக்கிறவர்களிடம் அநேக புண்ணியங்கள் உண்டு. விசுவாசம், துன்பப்படுகிறவர்கள் மீது இரக்கம், அனுதாபம், பிற சிநேகம், நன்றி, தேவ சிநேகம் முதலிய புண்ணியங்களை அவர்களிடம் காணலாம்.

துன்ப உபத்திரவப்படும் அயலானுக்கு கூடு மான பொழுதெல்லாம் உதவி புரிவது கிறிஸ்தவ பிறசிநேகம். தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் இறந்து உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படுவோ ரும் நம் அயலாரே என புனித தோமா ஸ் அக்குயி னாஸ் கூறுகிறார். தங்களுக்குத் தாங்களே உதவி செய்ய முடியாத நிலையில் இருக்கும் உத்தரிக்கிற ஆத் துமங்களுக்கு உதவி செய்ய மறுப்பது கிறிஸ்தவ பிற சிநேகத்துக்கு விரோதமாகும்.

நம் தந்தை , தாய், உறவினர், உபகாரிகள் ஆகி யோரின் குரல் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடாது வெளிவருகிறதை நீ கேட்பதில்லையா? அவர் களுக்கு நீ உதவி செய்ய மறுப்பாயானால் நீ நன்றி யற்றவன், குரூர குணம் படைத்தவன், கன் னெஞ்சன்.

உண்மையாகவே நீ யேசுவை நேசித்தால் உத்த ரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி செய்வாய். அவர் களும் நம்மைப்போல் கிறிஸ்துநாதருடைய இரத்தத் தால் மீட்கப்பட்டவர்கள், அவரது ஞான உடலைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு நாம் உதவி செய்கை யில் கிறிஸ்துநாதருக்கு நாம் ஆறுதலளிக்கிறோம். அவர்களுக்கு உதவி செய்யாதிருந்தால் கிறிஸ்துநாத ரிடம் நன்றியற்றவர்களாய் நடக்கிறோம். கிறிஸ்து நாதர் எவ்வளவு தாராள குணத்துடன் நம்மை நரகத் தில் விழாதபடி காப்பாற்றி மோட்சவாசலைத் திறந்து விட்டிருக்கிறார். இதற்காக எத்தனை பாடுகளைப் பட்டார்.

நாம் பல பாவங்களைச் செய்திருக்கிறோம். அந்தப் பாவங்கள் மன்னிக்கப்பட்டாலும் அவற்றிற்குரிய அநித்திய தண்டனையை இன்னும் நாம் தீர்க்கவேண் டியிருக்கிறது. உத்தரிக்கிற ஆத்துமங்கள் மீது நமக் கிருக்கும் பத்தியானது இந்தத் தண்டனைக் கடனை நமக்கு நினைப்பூட்டுகிறது. நம் பழைய பாவங்களுக்கு நாம் பரிகாரம் செய்ய நமக்குச் சந்தர்ப்பமளிக்கிறது. சாவான பாவத்தின் மீது நமக்கு வெறுப்புண்டாக்கு கிறது. கோபம், தற்பெருமை, தேவ சேவையில் சோம் பல், நேரத்தை வீணாக்குதல், அவசியமற்ற பேச்சு, முதலிய குற்றங் குறைகளை நாம் நீக்க நமக்கு உதவி செய்கிறது. நம்மைத் திருத்திக் கொள்கிறோம். தாழ்ச் சியும் நம்மீது விழிப்புமுள்ளவர்களாகிறோம்.

பென்சில்வேனியா வில் வசித்த ஒரு மனிதனிடம் நேர்த்தியான குதிரை ஒன்று இருந்தது. 1932-ம் ஆண் டில் அவன் அந்தக் குதிரையை இழக்க இருந்தான். குதிரையைக் காப்பாற்றும்படி செய்யப்பட்ட மானிட பிரயாசையாவும் வீணாயிற்று. உத்தரிக்கிற ஸ்தலத் தில் வேதனைப்படும் ஆத்துமங்களின் உதவியை அவன் தேடினான். குதிரை காப்பாற்றப்பட்டது. அதைப்பற்றி குதிரையின் சொந்தக்காரனே பின் வருமாறு எழுதுகிறான்:--

என்னிடம் வெகு நல்ல குதிரை ஒன்று இருந்தது. ஒரு நாள் மாலையில் என்ன நேரிட்டதோ தெரியாது. குதிரையின் லாயத்திறகும் ஒரு குழிக்கும் இடையில் இருந்த சுவரை குதிரையானது விடாது உதைத்துக் கொண்டே இருந்தது. கடைசியாக சுவர் இடிய குதிரை குழிக்குள் விழுந்தது. அந்தக் குழி ஐந்து அடி ஆழம், அகலம் சுருக்கமே. குதிரையின் முதுகு கீழே கிடந்தது. நாங்கள் போய் குதிரையைப் பார்த்தோம். பரிதாபமாயிருந்தது. அது தன் கால்களை உயரத் தூக்கி அடித்துக் கொண்டிருந்தது. யாரும் அதனரு கில் போக முடியவில்லை. மிருக வைத்தியர் வந்தார். ஒன்றும் செய்ய முடியாது எனச் சொல்லி விட்டார். மிருகங்களைக் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்டிருந்த சங் கத்துக்குச் சொல்லியனுப்பினோம். அவர்கள் வந்து பார்த்து விட்டு ''குதிரை ஓயாமல் கால்களால் உதைத்துக் கொண்டிருக்கிறது. அதனருகே யாரும் செல்ல முடியாது. இந்த நிலையில் குதிரையைக் காப்பாற்ற முடியாது, அதைச் சுட்டுக் கொல்ல வேண்டியது தான் " என்றார்கள். குதிரையைச் சுட்டுக் கொல்லக்கூடியவரைத் தேடி, டாக்டர் வெளியே போனார். எங்களது பிரமாணிக்கமுள்ள நண்பனான குதிரையின் பரிதாப முடிவைப் பார்க்க மனமின்றி நாங்கள் வீட்டுக்குத் திரும்பினோம். குதிரை லாயத் தில் ஒருவரும் இல்லை.

"இதற்கிடையில் என் மனைவிக்கு ஒரு யோசனை உதித்தது. அருகிலிருந்த சந்நியாசிகளின் மடத்துக்கு எங்கள் மகளை பணத்துடன் அனுப்பி, உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆத்துமங்களுக்காக ஒரு பூசை செய்விக்க ஏற்பாடு செய்தாள். மடத்துக்கு சென்ற சிறுமி இன்னும் திரும்பி வரவில்லை. வீட்டுக்கு வெளியே சத்தம் கேட்டது. என்ன சத்தம் என்று பார்க்க ஜன்னல் வழியாக வெளியே நோக்கினோம். சில நிமிடங்களுக்கு முன் உதவியின்றி குழியில் கிடந்து அவஸ்தைப்பட்ட எங்கள் நல்ல குதிரை அங்கு நின்று கொண்டிருந்தது. அதிசயத்துடன் எல்லோரும் வெளியே ஓடினோம். குழியை விட்டு குதிரை எப்படி வெளியேறியது என்று எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. உத்தரிக்கிற ஆத்துமங்களின் மன்றாட்டுப் பலனால் இந்த அதிசயம் நடந்தது என நாங்கள் யாவரும் உறுதியாக நம்பினோம். அவர் களுக்கு எங்கள் நன்றியின் அறிகுறியாக இதைப் பிர சுரிக்க விரும்புகிறோம்.

நவம்பர் மாதத்தில் அநேக நல்ல கிறிஸ்தவர்கள் உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு வெகு உதவி செய் கிறார்கள். கத்தோலிக்கக் கிராமங்களில் உத்தரிக்கிற ஆத்துமங்களின் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. தங்கள் நேசர்களின் கல்லறைகளை மலர் களாலும், மெழுகுதிரிகளாலும் அலங்கரித்து தங்கள் கண்ணீரால் நனைக்கின்றனர். இறந்த நம் நேசர்களை இவ்விதம் நினைப்பது தவறல்ல. அவர்களுக்காக அழுது புலம்புவது குற்றமல்ல. ஆண்டவரே லாசரின் கல்லறையருகே அழுதார். எனினும் உண்மையான, உயிருள்ள, விசுவாசமுள்ளவர்கள் இவற்றுடன் ஒரு போதும் திருப்தியடைய மாட்டார்கள். மலர்கள். தீபங்கள், அழுகை, புலம்பல் இவற்றை மரித்த நேசர் கள் விரும்புவதில்லை. ஜெபம், தபம். தான தர்மம் இவற்றையே அவர்கள் விரும்பி எதிர்பார்க்கிறார்கள். “இறந்தவர்களின் அடக்கச் சடங்கை ஆரவாரத்து டன் நடத்தவும், அவர்களது கல்லறைகள் மீது அழகிய சின்னங்களை அமைக்கவும் பலர் பெரும் தொகை யைச் செலவழிக்கிறார்கள். உண்மையான கிறிஸ்த வனோ இறந்தவர்களின் ஆத்துமங்களைச் சீக்கிரம் மோட்ச கரை சேர்க்கும்படி ஜெபம், தபம். தானதர் மம் முதலியவற்றை ஏராளமாகச் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாயிருப்பான்'' என ஆல்பன் ஸ்டோல்ஸ் என்பவர் கூறுகிறார்.

சுயபரித்தியாகம் நிறைந்த நேசம். இதையே உத் தரிக்கிற ஆத்துமங்கள் நம்மிடமிருந்து எதிர்பார்க் கிறார்கள். உத்தரிக்கிற ஸ்தலத்தில் அவர்கள் வேத னைப்படவேண்டிய காலத்தை நாம் குறைக்க வேண் டும். உத்தரிக்கிற ஆத்துமங்களுடைய திருநாளில் மாத்திரமல்ல, நவம்பர் மாதத்தில் மாத்திரமல்ல, நம் வாழ்நாள் முழுவதுமே அவர்களுக்கு நாம் நம்மால் கூடிய ஆறுதல் அளிக்கவேண்டும். எல்லோராலும் மறக்கப்பட்டு, உதவியற்றவர்களாய் உத்தரிக்கிற ஸ்த லத்தில் வேதனைப்படுவோர்மீது நாம் அதிக இரக்க மும் தாராள குணமும் காண்பிக்கவேண்டும். அதற் கான வழிகளிற் சில கீழே தரப்பட்டிருக்கின்றன :

1. தேவதிரவிய அனுமானங்களைத் தக்க விதமாகப் பெற்று ஏராளமான பலன்களைச் சம்பாதித்து அவற்றை உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக ஒப்புக் கொடு.

2. அவர்களுக்காக திவ்விய நற்கருணை உட் கொள். இது அவர்களது விலைமதிப்பற்ற மீட்புக் கிரயம்.

3. அடிக்கடி திவ்விய பூசை கண்டு வா. கூடுமா னால் அவர்களுக்காக பூசை செய்விப்பாயாக.

4. உன் அனுதின பேறு பலன்கள் அனைத்தை யும் அவர்களுக்காகக் கையளி.

5. மரித்த விசுவாசிகளுக்காக உருக்கமாகவும், பத்தியுடனும் ஜெபி. கல்லறைத் தோட்டத்தின் பக்கமாய்ச் செல்கையில் அவர்களை அதிகமாய் நினைத்து ஜெபி.

6. உன் சக்திக்கு ஏற்ற அளவு தர்மம் செய்து, தர் மத்தைப் பெற்றுக்கொள்கிறவர்களிடம் உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக, ஏழைகளை விட அதிக சங்கடப் படும் அந்த ஆத்துமங்களுக்காக, வேண்டிக்கொள் ளச் சொல். 

7. சுத்திகரிக்கும் ஸ்தலமாகிய உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளைப்பற்றி அடிக்கடி சிந்தித்துப் பார். உன் சாவையும், சாவுக்குப் பின் வரும் தீர்வை யையும் பற்றி நினை. வாழ்நாளில் இரக்கமின்றி வாழ்ந் தால் தீர்ப்பும் இரக்கமற்றதாயிருக்கும் என்பதை மறந்து போகாதே.

8. அடிக்கடி கல்லறைத் தோட்டத்தைச் சந்தி. இது உனக்கு அதிக நன்மை பயக்கும். அங்கு ஜோட னைகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிராதே. ஆனால் சாவு, தீர்வை, மோட்சம், நரகம் இவற்றைப்பற்றி சிந்தி.

“பாவங்களினின்று மீட்கப்படும்படி மரித்தோருக்காக வேண்டிக்கொள்வது பரிசுத்தமும் பிர யோஜனமுமுள்ள எண்ணமாயிருக்கின்றது''

(2-மக்க . 12/36)