இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உத்தம விதமாய் நம்மை முழுவதும் மாதாவுக்கு அர்ப்பணம் செய்தல்

121. மரியாயின் மூலம் சேசு கிறீஸ்துவுக்கு நாம் முழுவதும் சொந்தமாகும் படியாக நம்மை முழுவதும் மாதாவுக்குச் சொந்தமாகக் கொடுத்து விடுவ தே இப்பக்தி முயற்சியாகும்  (மாதாவே! உமக்கே எங்கள் மனம், ஆன்மா, சரீரம். அனைத்தையும், எங்களை முழுவதையும் அர்ப்பணிக்கிறோம்'' --- அர்ச். தமசீன் அருளப்பர் Sermo in dormitione B. M. V).

மாதாவிடம் நாம் அர்ப்பணிக்க வேண்டியவை:

(1) நம் சரீரம், அதன் அங்கங்களுடன் எல்லாப்புலன் களுடனும்.

(2) நம் ஆன்மா , அதன் எல்லா சத்துவங்களுடனும்.

(3) நம் லௌகீகப் பொருள்கள், இப்பொழுது இருப் பவை, இனிமேல் இருக்கப் போகின்றவை,

(4) நம் உள்ளரங்க ஆன்மீகப் பொருள்கள், அதாவது நம் பேறுபலன்கள், புண்ணியங்கள், முந்திய இன்றைய வருங்கால நற்செயல்கள்.

ஒரே வார்த்தையில் நம் இயல்புத் தன்மையிலும், வரப் பிரசாத முறையிலும் நம்மிடம் உள்ளவை யாவும் வருங் காலத்தில் நம் இயல்புத் தன்மையிலும் வரப்பிரசாத முறையிலும், மகிமையிலும் நம்முடையதாக இருக்கக் கூடிய யாவும். இவற்றில் ஒரு சிறு காசு, உரோம அளவு, ஒரு சிறிய நற்செயல் கூட நமக்கென ஒதுக்காமல் கொடுத்து விடுவது. நித்திய காலத்திற்கும் இவ்வாறு கையளித்து விடுவது. நாம் இவ்வாறு கையளிப்பதற்கும். ஊழியம் புரி வதற்கும் கைம்மாறாக எந்த வெகுமானமும் கிடைக்கும் என்று நம்பியோ எதையும் எதிர்பார்த்தோ அல்ல. மாதா வழியாகவும் மாதாவிலும் சேசு கிறீஸ்துவுக்குச் சொந்த மாயிருக்கும் மகிமை ஒன்றையே தேடி இவ்வாறு நாம் கொடுக்கிறோம். இந்த நல்ல தலைவி, சிருஷ்டிகளிலெல்லாம் அதிக குணமும் நன்றியும் உடையவர்களாகவே எப்போதும் இருக்கின்றார்கள். அப்படி அவர்கள் இல்லாதிருந்தாலும் கூட நாம் இவ்வாறு கொடுப்போம்.

122. நம்முடைய நற்செயல்கள் என்னும்போது இரண்டு காரியங்களை நாம் அதில் கவனிக்கவேண்டும் ஒன்று பரிகரிப்பு, இன்னொன்று பேறுபலன். அதாவது, நற்செயல்களின் உத்கரிப்புத் தன்மை அல்லது மன்றட் டுத் தன்மைகளை நாம் கவனிக்க வேண்டும். ஒரு நற்செய லின் பரிகரிப்புத் தன்மை அல்லது மன்றாட்டுத்தன்மை என்பது பாவத்துக்குரிய தண்டனைக்கப் பரிகரிப் பாக அல்லது ஒரு புதிய வரப்பிரசாகக்கைப் பெற்றுத்தர அந்நற்செயல் பயன்படுவதாகும். ஒரு நற்செயலால் பேறு பலன் விளைதல் அல்லது அதன் பேறுபலன் என்று கூறப்படுவது என்னவென்றால் அச்செயல் நமக்கு வரப்பிரசாகத்தையும் நித்திய மகிமையையம் அடைந்து கருவதாகும். இது இங் ஙனமிருக்க கன்னிமாதாவுக்கு நம்மை அர்ப்பணம் செய் வதால், நம்முடைய எல்லா நற்செயல்களின் மன்றட்டு பேறுபலன் ஆகியவற்றை , அதாவது, நற் செயல்களால் விளையக்கூடிய எல்லா பலன்களையம் வரப்பிரசாதங்களை யும் மற்றவர்களுக்கக் கொடுக்க விடுவதற்காக நாம் அவற்றை மாதாவிடம் ஒப்படைப்பதில்லை (ஏனென்றால். கட்டுப்படி பார்த்தால் நம் பேறுபலன்களும் வரப்பிரசா தங்களும் புண்ணியங்களும் பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியாதவை. பிகாவுடன் நமக்குப் பிணையாக வந்த சேசு கிறீஸ்து மட்டுமே தம் பேறு பலன்களை நமக்குக் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார்.) ஆல்ை நாம் இனிமேல் விளக் கிக்கூற இருப்பதுபோல், மாதா நமக்காக அவற்றைக் காப் பாற்றி, அதிகரிக்கச் செய்து, அழகுபடுத்தும்படியாகவே அவர்களிடம் அவற்றை நாம் ஒப்படைக்கிறோம். (எண் 146, 147 காண்க) ஆயினும் நம் நற்செயல்களின் பரிகரிப்புப் பலன்களை, மாதா தான் விரும்பியவர்களுக்கு கொடுக்கும்படியாகவும் இறைவனின் அகிமிக தோத்திரத் திற்காகவும் அவர்களிடம் ஒப்படைக்கிறோம்.

123. இதன் பயன் யாதெனில் இப்பக்தி முயற்சியினால், நாம் சேசு கிறீஸ்துவுக்குக் கொடுக்கக்கூடிய அனைத்தையும் மரியாயின் கரங்கள் வழியாகக் கொடுப்பதால், மிக உத்த மமான முறையில் கொடுக்கிறோம். நம்முடைய மற்றெல் லாப் பக்தி முயற்சிகளால் கொடுப்பதைவிட அதிகமாகக் கொடுக்கிறோம். மற்றப் பக்தி முயற்சிகளில், நம் நேரத் தில் ஒரு பகுதியையும் நம் நற்செயல்களில் ஒரு பாகத்தையும், நாம் செய்யும் பரிகாரங்களில் ஒரு பங்கையும் நம் பரித்தியாகங்களில் சிலவற்றையும்தான் நாம் அவருக்கு அளிக்கிறோம். ஆனால் இந்தப் பக்தி முயற்சியால், யாவும் கொடுக்கப்பட்டு விடுகின்றன, யாவும் வசீகரிக்கப்பட்டு விடுகின்றன. நம் உள்ளரங்க நற்கனிகளையும் நம் அன்றாட நற்செயல்களால் சம்பாதிக்கப்பட்ட பரிகரிப்புப் பலன் களையும் நம் விருப்பப்படி உபயோகிக்கும் உரிமை கூட விட்டுக்கொடுக்கப்படுகிறது. இது எந்த ஒரு துறவற சபை யிலும் கூட செய்யப்படாத ஒன்றாகும். துறவற சபைகளில் தரித்திர வார்த்தைப்பாட்டினால் நம் உலகப் பொருட்களை இறைவனுக்கு அளிக்கிறோம். கற்பென்னும் வார்த்தைப் பாட்டினால் நம் சரீர நலன்களைக் கொடுக்கிறோம் கீழ்ப் படிதல் என்னும் வார்த்தைப் பாட்டினால் நம் சித்தத்தை யும், சில சந்தர்ப்பங்களில் அடைபட்ட வாழ்வு என்னும் வாக்குறுதியால் நம் விருப்பப்படி எங்கும் செல்லும் உரி மையையும் கொடுத்துவிடுகிறோம். ஆயினும் இந்த வார்த் தைப்பாடுகளால் நம்முடைய நற்செயல்களின் பலன்களை விரும்பியபடி உபயோகிக்கும் உரிமையை அல்லது சுதந் திரத்தை இறைவனுக்கு நாம் கொடுப்பதில்லை. ஒரு கிறீஸ் தவனுக்கு மிகவும் விலைமதிப்புள்ளதும் மிகப் பிரியமுள்ள சொத்து எனக்கருதப்படுவதுமான நம் பரிகார முயற்சி களையும் பலன்களையும் நம்மால் முடிந்த மட்டும் இத் துறவற இவ்வார்த்தைப் பாடுகளால் நாம் துறப்பதுமில்லை

124. இதிலிருந்து என்ன பெறப்படுகிறதென்றால், யாதொருவன் தன் மனப்பூர்வமாக சேசு கிறீஸ்துவுக்கு மாதா வழியாகத் தன்னை அர்ப்பணித்துப் பலியாக்கி விட்டானோ அவன் தன் நற்செயல்களின் பலன்களை இனி தன் விருப்பப்படி எதுவும் செய்யமுடியாது. அவன் அனுபவிக்கும் துன்பங்கள், அவன் நினைவுகள், சொல்லாலும் செயலாலும் அவன் ஆற்றும் நன்மைகள் எல்லாம் மாதாவுக்கே சொந்தமாகிவிடுகின்றன. மாதா அவற்றைத் தன் திரு மகனின் சித்தப்படியும் அவருடைய அதிமிக மகிமைக்காகவும் செலவிடலாம். ஆயினும் இவ்வாறு மரியாயைச் சார்ந்திருப்பதால் ஒருவனுடைய தற்போதைய அல்லது வருங்கால வாழ்வின் கடமைகள் பாதிக்கப்படுவதில்லை. உதாரணமாக ஒரு குரு தன் அந்தஸ்தின் கடமையாலோ அல்லது மற்றப்படியோ ஒரு குறிப்பிட்ட ஆளுக்கு தான் நிறைவேற்றும் பலி பூசையின் பரிகார, மன்றாட்டுப் பலன்களை ஒப்புக்கொடுப்பது பாதிக்கப்படாது. ஏனென்றால் இந்த ஒப்புக் கொடுத்தலானது கடவுளால் வகுக்கப்பட்ட திட்டப்படியும் நம் அந்தஸ்தின் கடமைப்படியுமே செய்யப்படுகிறது.

125. இன்னொரு காரியமும் நடைபெறுகிறது: அதாவது, நாம் கன்னிமாமரிக்கும் சேசு கிறீஸ்துவுக்கும் நம்மை ஒரே சமயத்தில் அர்ப்பணம் செய்கிறோம். சேசு கிறீஸ்து, தம்முடன் நம்மையும் நம்முடன் தம்மையும் ஒன்றாக இணைக்கும்படி தெரிந்து கொண்ட உத்தம வழி என்ற முறையில், மாதாவுக்கு அர்ப்பணம் செய்கிறோம். நம் இறுதிக் கதியாயிருப்பவர் நமதாண்டவர் என்ற முறை யில் நமதாண்டவருக்கு அர்ப்பணம் செய்கிறோம். நாம் என்றுள்ளவை யாவையும் அவர் இரட்சகர், அவர் சர்வே சுரன் என்பதால் அவருக்கே அவை உரியவையாகும்.