குடியனால்வருங் குடிகேடு

குடிவெறியினால் குடும்பங்களுக்கெய்தும் கேடுகள் கணக்கற்றவையாயினும் அவைகளிற் சிலவற்றைப்பற்றி மாத்திரம் இங்கு பேசுவோம். சொத்துச் சம்பத்துள்ள சிலவாலிபர் தங்களுக்குள்ளது குன்றாச் செல்வமென் றெண்ணிக் குடிக்கத்தொடங்குவதினால் சில காலத்துக் குப்பின் செல்வமும் செல்வாக்குஞ் சங்கையும் நிலைவ ரமுங்கெட்டு வீணரும் வெறுவிலிகளுமாய்த் திரிய நே ரிடுவதை உலகம் எக்காலமுங்கண்டுவருகின்றது. குடி காரன் என்றாலும் குலமகன் அல்லது பணக்காரனாயிற் றேயென்றெண்ணிப் பெண் கொடுத்த பேதைப்பெற்றார் படும்பாடு பொதுவாகப் பெரும்பாடு. இவர்கள் தம் மகளைக் குலக்கொலுவில் அல்லது பணமேடையில் ஏற் றுகிறதாக எண்ணிக்கொண்டாலும் உள்ளபடியே பாழ்ங் கிணற்றிலேயே இறக்கிவிடுகிறார்கள். மதுபானிகள் தங் கள் கலியாணத்துக்குத் தடை நேரிடாதபடி தாங்கள் குடியைவிடுவதாகப்பண்ணும் விதம் விதமான வாக்கெல் லாம் '' நீர் மேல் எழுத்துக்குநேர்''. இவர்கள் பண்ணும் இவ்வித சாலங்களை நம்பிக் கெட்டகுடிகள் அநேகம். ஒ ருவன்குடிக்கத்தொடங்கியவுடன் குடிகாரனாய்ப் போகி றதில்லை. ஆரம்பத்தில் கொஞ்சமதுபானம் போதும். அதையும் எட்டிலே பத்திலேமாத்திரம் பாவிப்பதுபோ தும். அதுகாரணமாக வருஞ்செலவுஞ் சுருக்கம். ஆ னால், நாட்போகப்போக அதிகமாயும் அடிக்கடியும் மது பானம் வேண்டும். இல்லாவிடில் சாப்பட விருப்பமுமில்லை, வேலைசெய்து உழைக்க உசாருமில்லை. ஆனால், குடிக்கத்தொடங்கா திருந்தால் இந்தத் துர்ப்பழக்கமும் அதனால் விளையும் இத்தொல்லைகளும் வரமாட்டாவே.

வாடிக்கையாய்க் குடிக்கிறசிலர் தாங்கள் அசப்பி யம் பேசாமலும் சண்டை சச்சரவு பிடியாமலுமிருந்து அன்றன்று பெண்சாதிபிள்ளைகளுக்கு அரும் பூட்டாய் உண்ண உடுக்கக் கொடுத்துவந்தால் தாங்கள் குடிப்பதி னால் யாதொரு நட்டமுமில்லையென்று சொல்லிக்கொள் வார்கள். ஆனால் இவர்கள் குடிப்பது கிரயமின்றிக் கி ணற்றிலள்ளுந் தண்ணீரா? குடியால் அழியுங்காசைக் கணக்கிட இவர்களுக்கு விருப்பமில்லை. சமுசாரியான காலந்தொட்டு நாள்வட்டத்தில் ஆறுசதத்துக்குமாத்தி ரங் குடிக்கிறவன் பதினைந்து வருஷத்தில் முன்னூற்றுச் சொச்சரூபாய் குடியிற் செலவழிக்கிறான். இத்தொகை இக்காலம் வறிய குடும்பங்களில் ஒரு பிள்ளையின் சீதன மல்லவா? ஆனால், தினவெறியர் நாள்வீதம் ஆறுசதத் துக்கு மாத்திரம் குடிக்கிறார்களா? வருஷாவருஷம் இச் சிறிய இலங்கைத்தீவில் கள்ளுச்சாராயக் குத்தகையால் மாத்திரம் அரசாட்சியாருக்குவரும் இலட்சக்கணக்கான பவுணையும் குத்தகைகாரர் அடையும் பெருமிலாபத்தை யும் இறுக்கிறவர்கள் யார்? மேலான நிலையிலுள்ளவர் கள் விலையுயர்ந்த ஐரோப்பிய குடிவகைகளை அவாவி நிற்க, ஐவீசு குறைந்தவர்களே இந்தப் பிரமாண்டமான தொகையைக் கள்ளிலுஞ் சாராயத்திலும் செலவழித்து வருகிறார்கள். குடிவகைகளுக்கு மாத்திரமன்றி குடிவெ றியால் உண்டுபடும் வருத்தங்களுக்கும் வழக்குகளுக் கும் வேறு வீண் செலவுகளுக்கும் இறைக்கப்படும் ப ணங்கொஞ்சமா? இதெல்லாங் குடும்பங்களைக் குட்டிக் கொள்ளையடித்தகாசல்லவா? குடியர் குடியை விலக்கிமட் டசனமென்னும் புண்ணியத்தை அனுசரித்து இந்தப் பெரிய தொகைப் பணத்தை மிச்சம் பிடிப்பார்களானால் எத்தனையாயிரங் குடும்பங்களில் பெற்றோரும் பிள்ளை களும் சீராயும் சிறப்பாயும் மனமகிழ்ச்சியாயும் சீவிப் பார்கள்! தகப்பன் உழைப்பது தவறணைக்கானால் தாய் உழைத்துக் குடும்பத்தைத் தாபரிக்க இயலுமா? புரு ஷன் நாளுக்குநாள் நாலணா இரண்டணாவாகத் தவற ணைக்கு இருப்பதை பெண்சாதிபிள்ளைகள்கையிற்கொ டுத்துவந்தால் இவர்கள் இந்தப் புண்ணியசீலனை எவ் வளவு நன்றியாய்ப் போற்றிப்புகழ்ந்து பசிபட்டினிகிட வாமல் சந்தோஷமாய்க் காலங்கழிப்பார்கள்! நியாயத் தீர்ப்புநாளில் சருவேசுரனும் இவனுக்கு எவ்வளவு சம் பாவனையை அளிப்பார்?

ஆனால், இதற்கெதிராய்க் குடிகாரர் வீடுகளிலேகா ணப்படுவதென்ன? உண்ணப்போதியஉணவில்லை; உடுக்க ஆன துணியில்லை; தலைக்கு ஒரு துளி எண்ணெயில்லை; படுக்க ஒரு பாயில்லை; பிள்ளைகளைப் படிப்பிக்கபணமில்லை; வீட்டுக்கு வேண்டிய தட்டுமுட்டில்லை; உள்ளசட்டிபானை களும் முறைக்குமுறை மதுபானியின் வேகவெறிக்கு இரையாய்ப்போவதினால் இடையிடையே சமைக்கவும் சாப்பிடவும் வேண்டிய தளபாடங்களுமில்லை. தேசவழ மைக்கும் காலத்தன்மைக்கும் மாறாக குடிகாரன்வீட் டுக் குமர்ப்பிள்ளைகளின் காதும்மூளி, கழுத்தும் வெ றுமை. இவர்களுக்கு ஆன உடை நகைகளில்லாததினால் கோயிலுமில்லை, பூசையுமில்லை. இவ்வீடுகளில் பெண் பிள்ளைகள் குமரிருக்குங்காலத்துக்குக் கணக்குமில்லை, கேள்வியுமில்லை. இவர்கள் வாழ்க்கைப்பட்டாலும் வழக்கமாய் வெறுவிலிக்கும் வரத்தன்போக்கனுக்கு மேயாம். வீடுவாசலின் நிலைவரமும் அலங்கோலமே. எவ்வளவு உழைத்தாலும் மிச்சமேயில்லை. வேதாகமஞ் சொல்லுகிறதுபோல், '' குடிகாரனான தொழிலாளி ஆஸ் திக்காரனாய்ப் போவதில்லை '' (சர்வபிரசங்கி 19.1) க டன்காரரின் வரத்துப்போக்கும் முறைப்பாடும் முறு முறுப்பும் வீட்டுக்காரருக்குப் பெரும் அரிகண்டம். அ வர்களைக் காண மதுபானி மறைந்துவிடுவான். இப்படி யெல்லாம் பெண் மக்களைக் குமரிருத்தி, ஆண்மக்களைச் சரியாய்ப் படிப்பியாமல் மூடராய்த் திரியவிட்டு, மனைவி மக்கள் எல்லாரையும் பட்டினிகிடத்திக் குடும்பத்தைக் கெடுக்குங் குடிகாரர் கடைசி நாளில் கடவுள்கண்ணில் எப் படி விழிக்கப்போகிறார்களோ தெரியாது.

மதுபானம் வேலை செய்ய உசார் கொடுக்கிறதென்று குடிகாரர் சொல்வது வழக்கம். குடியாதவர்கள் பிரயாசமான வேலைகளைச் செய்வதில்லையா? மதுபானத்தை முற்றாய் விலக்கி நடக்கும் மகமதியருக்கு ஊக்கங் குறை வா? உழைப்புக் குறைவா? சுகம், பெலன், செல்வம் நீடிய ஆயுள், ஆதியவையில் யாதேனுங் குறைவுண்டா ? குடியாதவன் எப்போதும் ஒரேவிதமாய்ச் சுகத்தோ டும் சுறுசுறுப்போடும் வேலை செய்ய, குடிகாரன் விறகு முடிய நெருப்பு நூர்ந்து போவது போல மதுபானஞ் சமிபாட்டிற்போக உசாரற்றுச் சோர்ந்துபோகிறான். உ றக்கமே இவனுக்கு உணவும் உயிரும் போலாகின்றது. இரவில் ஆறு மணித்தியாலம் மாத்திரஞ் சயனிக்கிறவர் கள் தங்கள் சீவியத்திலே மட்டமாய் நாலிலொருபங்கை நித்திரையிற் செலவழிக்க மதுபானியோ வெறிமயக் கத்திலும் வியாதியிலும் நித்திரையிலும் தன் சீவியகா லத்தில் ஏறக்குறைய அரைவாசியைச் செலவழிக்கிறான் என்னலாம். - அன்றியும், குடியன் நெடுங்காலஞ் சீவிப்பதும் அ ரிது. முதுவயசாகுமுன் தேகம் பெலன்கெட்டு நோ யில் அழுந்த வாழ்நாளுங் குறைகின்றது. பெரும்பான் மையாய்க் குடியினால் விளையும் வியாதி கிராணி. இது நோயாளியை நெடுநாளாய் உலைத்து வதைத்துக் குட லைப்புண்ணாக்கி நாற்றமெடுக்கச்செய்ய இவனுக்கு உல கமே நரகம் போலாகின்றது. இவன் கிடைதலைகாலம் மிகப் பரிதாபத்துக்குரியதாயிருந்தாலும் இவனுக்கு ம னமிரங்குவாரைக் காண்பது அருமையிலருமை. இவன் சாகிற பாயில்விழவே தவறணைத்தோழருந் தங்கள் பாடு. குடிகாரன் வீட்டில் மதுபானமிருக்குமட்டும் கூட்டாளி களின் வரத்துப்போக்குக்கும் பைம்பலுக்குங் குறைவில்லை. அவன் நெடுநாள் பாய்க்குப் பாரமாய்க் கிடந்தாலோ அவனை எட்டிப்பார்க்க அவர்களில் ஒருவருமில்லை. அந்தியகாலத்தில் உலோகமுறைப்படி துன்பம் பார்க்கவருகிறவர்களும் குடியின்பலனாகிய கிராணியின் நாற்றத்தைத் தாங்கமாட்டாமல் சற்று நேரம் எட்டத்திலிருந்துவிட் டுப்போய்விடுவார்கள். வழக்கமாகக் குடிகாரர் இரக்க மில்லாத கன்னெஞ்சராய்ப் போகிறபடியால் பிறரும் அவர்கள் மேல் இரக்கமில்லாதிருப்பது ஆச்சரியமல்ல. பெண்சாதிபிள்ளைகளும் பலநாளாய் நித்திரைவிழித்து, சத்திகழிச்சலெடுத்து, நாற்றமனுபவித்து, உள்ளதை யும் செலவழித்து ஈடுமவைத்து, கடனும்பட்டு, கடைசி யில் மனமும் அலுத்து இந்தப் பரமசண்டாளனாற் தங் களுக்கெப்போதும் அலைக்கழிவும் ஆக்கினையும் அழிவு மேயன்றி யாதொரு நன்மையுமில்லாததினால் இவன் மு டிவு எப்போது வருமென்று பொறுமையீனமாய்க் காத் திருக்கவும் நேரிடுகின்றது. அன்றியும், குடியன் சணத் துக்குச்சணம் படும்முறுக்குவலியினாற் பக்கத்துக்குப்பக் கம் புரண்டுருண்டு வேதனை தாங்கமாட்டாமல் தான் தானே மரணத்தை விரும்புவான். ஆனால், சாவோடு இவன் உபத்திரவந் தீர்ந்துபோகுமா? தேவசமுகத்தில் ஒருகுடும்பத்தைத் தாபரிக்க உடன்பட்டுச் சமுசாரி யான பின் குடித்து வெறித்து தன்பாடு பார்த்துக்கொண்டு பெண்சாதிபிள்ளைகளை வறுமைப்படவிட்ட அநியாயத் துக்கு நித்தியமாய் நரக நெருப்பிலெரிந்து உத்தரிக்க வேண்டிய காலஞ் சமீபித்திருக்கையில் இவன் செத்தென்ன? சிலகாலம் பிழைத்தென்ன? வேதாகமப்படி திருடரும், குடிகாரரும், உதாசினரும், கொள்ளைக்கார ரும் தேவனுடைய இராச்சியத்தைச் சுதந்தரிப்பதில்லை (1 கொரி. 6. 10). பூமியிலும் தலைமுறை தலைமுறையாய் இவனுக்கு இகழ்ச்சியேயன்றிப் புகழ்ச்சியில்லை.

இப்படியிருக்க, ''குடியாதவீடுவிடியாது'' என்று குடிகாரர் சற்றும் வெட்கமில்லாமற் சொல்லிக் குடித்து வெறித்துத் திரிகிறார்களே. '' குடிகாரன்வீடுவிடியாது" என்றதல்லவோசரியான முதுமொழி. குடிக்கிறவர்களே குடியாதேயுங்கள், குடியிற் செலவழிக்கும் சல்லியை குடும்பத்துக்குக் கொடுங்களென்றாற் கேட்பார்களா? கேட்க மனமில்லாவிடிற் குடிக்கும்போதெல்லாம் '' குடிகாரன் தேவனுடைய இராச்சியத்தைச் சுதந்தரிப்ப தில்லை'' என்னும் தேவவாக்கியத்தையாகுதல் நினைத் துக்கொள்வார்களாகில் குடிவெறியைக் குறைக்கவென் கிலும் உதவுமே. மதுபானி குடித்தழித்துச் செத்த பின் அவன் குடும்பம் அனுபவிக்கும் தாங்கொணா வ றுமை மிகப் பிரலாபத்துக்குரியது. இக்காலம் சுயிஸ் சாதியாருள் ஒருவன் தன்பெண்சாதிபிள்ளைகளைக் குரூ ரமாய் நடத்தினால் அல்லது தன்னால் இயன்றளவு அ வர்களைத்தாபரியாமல் அசட்டைபண்ணினால் அரசாட் சியார் அவனை ஓர்விதம் றியலில் வைத்து வேலை செய்யப் பண்ணி அவன் உழைப்பை அவனுடைய குடும்பத்துக்கு அனுப்புகிறார்கள். இப்படி இங்கும் அரசாட்சியார் செய்வார்களானால் எத்தனையாயிரம் பெண்சாதிபிள்ளை கள் அரசாட்சியாரைக் கையெடுத்துக் கும்பிடுவார்கள்!

தகப்பன் மாத்திரங் குடிக்கிற குடும்பத்துக்கு இவ் வளவு ஆபத்துக்களானால் தகப்பனுந் தாயுங் குடிக்கிற குடும்பத்தின் நிலைவரம் என்னவாயிருக்கும்! குடிக்கிற வளைப்பற்றி வேதாகமஞ் சொல்வதியாதெனில், '' குடி காரி கடுங்கோபக்காரி, அவள்மே லுண்டான அருவருப் பும் அதினாலுண்டான வெட்கமும் மறைக்கப்படாது'' (சர்வபிரசங்கி 26. 11 ) மதுபானிகளின் மக்கள் குடி யாதிருப்பது அரிது. பழக்கமும் பரவணியாகின்றது.

சூதாடுவதும், உழைப்பு ஒறுப்பனவு ஆகிய புண் ணியங்களுக்கு அழிவான துர்ப்பழக்கங்களிலொன்று. இதனால் விளையுங் கலிபிலிகளும், வீண்போகும் நேரமும் அழியும் பணமும், இவ்வளவெனக் கணக்கிடக்கூடியதல்ல.