நித்திய ஞானமானவரின் மனித அவதாரம்!

104. நித்திய ஞானமாகிய நித்திய வார்த்தையானவர் பரிசுத்த தமத்திரித்துவத்தின் மாபெரும் கூட்டத்தில் (எண்கள் 41 முதல் 46 வரை காண்க) வீழ்ச்சியுற்ற மனுக்குலத்தை அதன் பழைய அந்தஸ்தில் மீண்டும் ஸ்தாபிப்பதற்காக மனிதனாக அவதரிக்கத் தீர்மானித்தபோது, அதை அவர் ஆதாமுக்கு அறிவித்திருக்க வாய்ப்பிருக்கிறது. உலகை மீட்டு இரட்சிக்கும்படி தாம் மனிதனாக அவதரிக்க இருப்பதாக பழைய ஏற்பாட்டுக் காலத்தின் பிதாப்பிதாக்களுக்கு அவர் வாக்களித்தார் என்று பரிசுத்த வேதாகமம் நமக்குக் கூறுகிறது. உலக சிருஷ்டிப்பின் காலத்திற்குப் பின் வந்த 4,000 ஆண்டுகளின் போது, பழைய ஏற்பாட்டின் பரிசுத்தர்கள் அனைவரும் தங்கள் ஜெபங்களில் ஏன் மெசையாவின் வருகைக் காக ஏக்கத்தோடு ஜெபித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை இது விளக்குகிறது. "மேகங்கள் நீதிமானை இறங்கச் செய்யக் கடவன, பூமி கற்பம் திறந்து நீதிமானை வெளிப்படுத்தக் கடவது" (இசை 45:7) என்று அவர்கள் அழுது புலம்பிக் கூக்குரலிட்டார்கள். "ஓ ஞானமானவரே, மகா உந்தரின் திருவாயினின்று புறப்படுகிறவரே, எங்களை விடுவிக்க வந்தருளும்.''

அவர்களுடைய கதறல்களும், ஜெபங்களும், பரித்தியாகங் களும் நித்திய ஞானமானவராகிய தேவ திருச்சுதனை அவருடைய பிதாவின் மடியிலிருந்து இழுத்துக் கொண்டுவர வல்லமை கொண் டிருக்கவில்லை. அவர்கள் மோட்சத்தை நோக்கித் தங்கள் கரங் களை நீட்டினார்கள். ஆனால் மகா உன்னதரின் சிங்காசனத்தை எட்டும் அளவுக்கு அவை நீண்டவையாக இருக்கவில்லை. அவர்கள் தங்கள் இருதயங்களின் பலிகளை இடைவிடாமல் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் அனைத்திலும் பெரிதான வரப்பிரசாதத்தைப் பெற்றுத் தர அவை போதுமானவையாக இருக்கவில்லை.

இறுதியாக, மனுக்குல இரட்சணியத்திற்குக் குறிக்கப்பட்ட காலம் வந்தபோது, தமது வாசஸ்தலமாக இருக்கத் தகுதியுள்ள ஒரு வீட்டை நித்திய ஞானமானவர் தமக்கெனக் கட்டினார் (பழ. 9:1). ஆம், அவர் மகா பரிசுத்த கன்னிகையைப் படைத்தார். பிரபஞ்சத்தை உண்டாக்குவதில் தாம் முன்பு பெற்ற இன்பத்தை யும் விட மிகப் பெரிய இன்பத்துடன் அர்ச். அன்னம்மாளின் உதரத்தில் திவ்விய கன்னிகையை அவர் உருவாக்கினார். ஒரு புறம், அனைவரிலும், அனைத்திலும் அதிக அழகாயிருந்த இந்த உன்னதமான சிருஷ்டியின் மீது மகா பரிசுத்த தமத்திரித்துவர் பொழிந்தருளிய கொடைகளை வார்த்தைகளில் எடுத்துரைப்பது இயலாத காரியம். அல்லது மறுபுறத்தில் தன் சிருஷ்டிகர் தனக்குத் தந்தருளிய வரப்பிரசாதங்களோடு ஒத்துழைப்பதில் அவர்கள் காட்டிய பிரமாணிக்கமுள்ள அக்கறையை வர்ணிப்பதும் இயலாத காரியமே. 

106. மனிதரின் பாவங்களால் இது வரை முரட்டுத்தனமாகத் தடுக்கப்பட்டு வந்த கடவுளின் அளவற்ற நன்மைத்தனத்தின் பெரும் தாரைகள் இப்போது மரியாயின் மாசற்ற இருதயத் திற்குள் முழு அளவில் பெரு வெள்ளமாகப் பாய்ந்து வந்து, அதை நிரப்பின. ஆதாமும், அவனுடைய சந்ததியாரும் தங்கள் தொடக்க இஷடப்பிரசாத அந்தஸ்தில் நிலைத்திருந்திருப்பார்கள் என்றால், அவர்கள் மிகத் தாராளமாகப் பெற்றிருக்கக் கூடிய எல்லா வரப்பிரசாதங்களையும் நித்திய ஞானமானவர் மாமரிக்குத் தந்தருளினார். ஒரு சிருஷ்டி பெற்றுக்கொள்ளக் கூடிய அளவுக்கு கடவுளின் முழுமை மாமரிக்குள் பொழியப் பட்டது என்று ஒரு புனிதர் கூறுகிறார். ஓ மரியாயே, மகா உந்ந்தரின் அதியற்புதப் படைப்பே, நித்திய ஞானமானவரின் அற்புதமே, சர்வ வல்லபரின் அதிசயமே, வரப்பிரசாதத்தின் பாதாளமே, உம்மைச் சிருஷ்டித்த சர்வேசுரன் ஒருவரே, தாம் உம்மீது பொழிந்தருளிய வரப்பிரசாதத்தின் உயரத்தையும், அகலத்தையும், ஆழத்தையும் அறிவார் என்ற நம்பிக்கையில் சகல புனிதர்களோடு நானும் சேர்ந்து கொள்கிறேன். 

107. மகா பரிசுத்த கன்னிகையின் இவ்வுலக வாழ்வின் முதல் பதினான்கு ஆண்டுகளின் போது, கடவுளின் இந்தக் கன்னிகை வரப்பிரசாதத்திலும், தேவ ஞானத்திலும் எவ்வளவு அற்புதமான விதத்தில் வளர்ச்சி பெற்று, அவருடைய அன்புக்கு எவ்வளவு பிரமாணிக்கமாக இருந்து வந்தார்கள் என்றால், சம்மனசுக்களும், ஏன் கடவுளுமே கூட அவர்களைப் பற்றிய பரவசமுள்ள மகிழ்ச்சி யாலும், பிரமிப்பாலும் நிரப்பப்பட்டார்கள். ஒரு பாதாளத்தைப் போல ஆழமானதாயிருந்த அவர்களது தாழ்ச்சி அவரை சந்தோஷப்படுத்தியது. பரலோகத் தன்மையுள்ளதாக இருந்த அவர்களது மாசற்றதனம் அவரை அவர்களை நோக்கி இழுத்தது. அவர்களது உயிருள்ள விசுவாசத்தையும், அவர்களது இடை விடாத அன்பின் மன்றாட்டுக்களையும் அவர் எவ்வளவு மறுக்கப் பட இயலாதவையாகக் கண்டார் என்றால், அவர்களுடைய நேச மன்றாட்டுக்களால் அவர் வெற்றிகொள்ளப்பட்டார். "மாமரி யின் நேசம் எவ்வளவு மேன்மை மிக்கதாக இருந்தது என்றால், அது சர்வ வல்லப சர்வேசுரன் மீதே வெற்றி கொண்டது" என்று அர்ச் அகுஸ்தீனார் விளக்குகிறார்.

ஓ விளக்கப்பட இயலாத அதிசயமே ! இந்த தெய்வீக ஞானமானவர் தமது பிதாவின் திருமடியை விட்டுப் புறப்பட்டு, ஒரு கன்னிகையின் மாசற்றதனத்தின் லீலிகளுக்கு மத்தியில் இளைப்பாறும்படியாக, அவர்களுடைய மாசற்ற திருவுதரத்தில் பிரவேசிப்பதைத் தேர்ந்து கொண்டார். அவர்களில் மனிதனாக அவதரிப்பதன் மூலம் அவர்களுக்குத் தம்மையே தர ஆசை கொண்ட அவர், தம் சார்பாக அவர்களை வாழ்த்தவும், அவர்கள் தம் திரு இருதயத்தின் மீது வெற்றி கொண்டார்கள் என்றும், அவர்கள் சம்மதித்தால் அவர் அவர்களுக்குள் மனிதனாக அவதரிப்பார் என்றும் அவர்களுக்கு அறிவிக்கவும் அதிதூதரான கபிரியேலை அனுப்பினார். அதிதூதரும் தம்மிடம் ஒப்படைக்கப் பட்ட அலுவலைச் செவ்வனே நிறைவேற்றி, மாமரி ஒரு தாயாகும் அதே வேளையில் அவர்கள் தொடர்ந்து ஒரு கன்னிகையாகவே நிலைத்திருப்பார்கள் என்று அவர்களுக்கு உறுதி தந்தார். தாழ்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற தன் ஆசையையும் மீறி, மகா பரிசுத்த கன்னிகை, பரிசுத்த தமத்திரித்துவரும், சகல சம்மனசுக்களும், உலகம் முழுவதும் எத்தனையோ நூற்றாண்டு களாக எதற்காகக் காத்துக்கொண்டிருந்தார்களோ, அந்த விலை மதிக்கப்படாத சம்மதத்தை முழுமனதோடு தந்தார்கள். தன் சிருஷ்டிகருக்கு முன்பாகத் தன்னையே தாழ்த்தி, "இதோ, நான் ஆண்டவருடைய அடிமையானவள். உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது" (லூக் 1:38) என்று திருவாய்மலர்ந்தார்கள். 

108. கடவுளின் தாயாவதற்கு மாமரி சம்மதம் தெரிவித்த அதே கணத்தில் அநேக புதுமையான சம்பவங்கள் நிகழ்ந்தன என்பதைக் கவனியுங்கள். பரிசுத்த ஆவியானவர் மாமரியின் மாசற்ற இருதயத்தின் மகா பரிசுத்த திரு இரத்தத்திலிருந்து ஒரு சிறு மனிதக் கருவை உருவாக்கி, அதை உத்தமமான ஓர் உயிராக வடிவமைத்தார். கடவுள் தம்மால் சிருஷ்டிக்கப்படக் கூடிய அனைத்திலும் அதிக உத்தமமான ஆத்துமத்தைப் படைத்தார். நித்திய ஞானமாகிய சர்வேசுரனுடைய திருச்சுதனானவர் தமது தெய்வீக ஆள்தன்மையோடு ஒரு சரீரத்தையும், ஆத்துமத்தையும் இணைத்துக் கொண்டார். இதோ, பரலோகத்திலும் பூலோகத் திலும் நிகழ்ந்த அனைத்து புதுமைகளிலும் மேலான அற்புதம், அளவு கடந்ததாகிய தேவசிநேகத்தின் அதிசயம்! ''வார்த்தை யானவர் மாம்சமானார்!'' (அரு.1:14). நித்திய ஞானமானவர் மனித னாக அவதரித்தார். தாம் கடவுளாக இருப்பதை நிறுத்தி விடாமலே, கடவுள் மனிதனானார். இந்த தேவ மனிதனே சேசுக் கிறீஸ்துநாதர், அவரது திருப்பெயருக்கு இரட்சகர் என்பது பொருள்.