பெற்றோராகுமுன் சவுக்கியத்தைப் பேணுதல்

வாலவயதில் அநேகர் தங்கள் தேக சுகத்தை இரு வித துர்ப்பழக்கங்களால் அதாவது, குடிவெறியினாலும் துர்நடையினாலும் பாழாக்கிவிடுகிறார்கள். மதுபானம் துர் ஆசாபாச இச்சைகளை வேகமாய்த் தூண்டிவிடுகின் றது. இத்துப்பழக்கங்களால் தேகம் பெலனற்று நோ யுற்று குருக்குத்திபாய்ந்த பயிர்போலும், போர் விழுந்த மரம்போலுமாகின்றது. உள்வயிரமழிந்து போரான பெருமரத்தைத் தறிவைத்துப்பார்த்தாலும் அதிலுள்ள பழுதை எப்போதும் உடனே கண்டுபிடிக்கமுடியாது. அது நல்லமரம்போலத்தோற்றினாலும் விறகுக்கேயன்றி வேலைக்குதவாது. அவ்வாறே குடியினால் அல்லது துர்நடையினாற் பழுதுபட்ட உடம்புள்ளவர்கள் சிறப்பும் சவுக்கியமுமுள்ளவர்களாய்க் காணப்படி னும் அவர்களு டையமாம்சமும் உதிரமும் சத்துக்கெட்டு விஷம் பாய்ந்து பற்பல நோய்களுக் கிரையாய்ப் போகின்றன. இப்படி நோய்த்தவர்கள் செனிப்பிக்குங்குழந்தைகள் தேகசுக மும் பலமுமுள்ளவர்களாயிருத்தல் முடியாது. ஆத் துமம் சரீரத்துடன் ஐக்கியமாய் ஒன்றித்திருப்பதினால் சரீரத்தின் குறைகள் ஆத்துமத்தின் தத்துவங்களையும் தாக்குகின்றன.

மதுபானத்தினாலும் காமா தூரத்தினாலும் தங்கள் தே கங்களுக்கு நஞ்சூட்டுகிறவர்கள் படிப்படியாய்ப் புலன் கெட்டுப் புத்திமயங்கி மனந்தளர்ந்து நினைவுதடுமாறி அறிவற்ற மிருகங்களுக்கொப்பாய்ப் போகிறார்கள் . அவர்களிலுள்ள இப்பழுதுகள் சாதாரணமாய் அவர்கள் சந்தானத்திலுந் தாவுகின்றன. மானிடர் அனைவரும் சிறுப்பந்தொட்டு மதுவையும் மோகத்தையும் நீக்கி ந டப்பார்களாயின் இக்காலம் பெற்றார்மட்டிலும் பிள்ளை கள் மட்டிலும் வைத்தியருக்குள்ள வேலை ஆயிரம் மடங்கு குறைவாயிருக்குமென்று பெக்கெர் என்னும் நூலாசிரியர் கூறுகின்றார். ஆகையால், முக்கியமாய் பெற்றோராக வரவிருக்கும் வாலிபரே மடந்தையரே நீங் கள் மணவாளர் மணவாளிகளாகுமுன்னும் பின்னும் உங் கள் மேலும் உங்கள் வருங்கால புத்திரசந்தானத்தின்மே லும் இரக்கம்வைத்து மதுபானத்தையும் துர்நடையை யும் விலக்கி நடக்க உங்களை ஆவலோடு வேண்டுகின் றேன். யாராவது உங்களை இத்துப்பழக்கங்களுக்கு ஏய்த் திருப்பார்களாகில் அவர்களைச் சிநேகங்காட்டி வினை யஞ்செய்யுஞ் சத்துராதிகளாக விலக்கி நடவுங்கள். மேற் குறித்த இருதீச்செயல்களையும் ஒன்றிகளன்றிச் சமு சாரிகளும் நீக்கிநடப்பது எவ்வளவு அகத்தியமென் பதை விளக்க வேண்டியதில்லை.

சிலர் தங்கள் ஆஸ்திபணம் எட்டத்திற் பிரிந்து போகாதபடி ஒன்றுக்குளொன்றாயிருக்கவேண்டுமென்ற ஆசையினால் அல்லது வேறுசில நியாயங்களை விட்டு கிட்டின இனத்துக்குள் விவாகஞ்செய்வார்கள். இது சுபா வமுறைக்கொவ்வா திருப்பதுமன்றி மனுக்குலம் விருத்தி யான பின் தேவசித்தத்துக்கு மெதிராய்ப்போனதென்று வேதாகமத்திற் காண்கிறோம். ''எவனாகுதல் தனக்கு நெருங்கின உறவின்முறையான ஸ்திரீயைச் சார்ந்து அ வளை விவாகம்பண்ணலாகாது (லேவி 18. 6) இப்படிக் கலியாணம் முடிக்கிறவர்களில் அநேகர் நோய்வாய்ப் பட்டு அல்லது சந்தானமற் று, பற்பல இடையூறுகளை யும் அனுபவித்ததை ஆங்காங்கு கண்டுவருகிறோம். இ வர்கள் பிள்ளைப்பாக்கியம் பெற்றாலும் இவர்களது பிள் ளைகள் பெரும்பாலும் நோய், பெலவீனம், நினைவீனம் புத்திக்குறைவு, அங்கவீனம் முதலியவையுள்ளவர்களா யிருக்கவும் நேரிடுகின்றது. நெருங்கிய முறைக்கலியா ணத்தின் பலனைத் தீர்க்கமாய் ஆராய்ந்தறிந்த சில நூ லாசிரியரின் அபிப்பிராயப்படி இவ்விவாகங்களில் நூற் றுக்கு ஐந்து சித்தித்து நிலைப்பது அருமையாம். ஆ. கையால், பெற்றாரும் பெற்றாராக வரவிருப்பவர்களும் தங்களுடையவும் தங்கள் பிள்ளைகளுடையவும் சீவனுக் கும் சவுக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய கார ணங்கள் யாவையும் சாவதானமாய் விலக்கி நடக்கக் கடவார்கள்.