185. இவ்வழகிய வரலாற்றை விளக்குமுன் ஒரு காரியம் கூறப்பட வேண்டும். புனித வேத பிதாக்கள் அனைவரும் வேதாகம விரிவுரையாளர்களும் யாக்கோபு, சேசு கிறீஸ்துவுடையவும் முன் குறிக்கப்பட்டவர்களுடைய வும் அடையாளம் என்றும், ஏசா தண்டனைத் தீர்ப்புப் பெற்றவர்களின் அடையாளம் என்றும், கருத்துக் கொண் டுள்ளார்கள். இதன் உண்மையை உணர்வதற்கு நாம் அவ்விருவரின் செயல்களையும் நடத்தையையும் சீர் தூக்கிப் பார்ப்பதே போதுமானது.