இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ப்பணித்தலும் அதற்கு ஆயத்த முயற்சிகளும்

227, இப்பக்தி முயற்சி ஒரு சபை என்ற அளவில் நிறுவப்படவில்லை. அவ்வாறு நிறுவப்படல் விரும்பத்தக் கது. (அர்ச். மோன் பார்ட்டின் இவ் விருப்பம் 1913-ல் நிறைவேறியது. இருதயங்களுக்கு அரசியான மரியாயின் உயர் சபை உரோமையில் அவ்வாண்டு நிறுவப்பட்டது உலகில் பல இடங்களில் அதன் கிளைகள் உள்ளன.) இதனைக் கைக் கொள்ள விரும்புகிறவர்கள், நான் "சேசு கிறீஸ்துவின் அரசாட்சிக்கு ஆயத்தத்தின் (இப்படி ஒரு நூலையும் அர்ச். மோன் போர்ட் எழுதியுள்ளதாகத் தெரிகிறது.) முதல் பாகத்தில் கூறியுள்ளபடி செய்ய வேண்டியவை என்ன வென்றால்: சேசு கிறீஸ்துவின் சிந்தைக்கு எதிராயிருக்கும் உலக சிந்தையைத் தங்களிடமிருந்து ஓழிக்க, குறைந்தது 12 (பன்னிரண்டு) நாட்கள் செலவிட வேண்டும். அதன் பின் மூன்று வாரங்களாக சேசு கிறீஸ்துவின் சிந்தையால் தங்களைத் தானே நிரப்பி வர வேண்டும். இதை மரியா யின் வழியாகச் செய்ய வேண்டும். இதில் அனுசரிக்க வேண்டிய முறை பின்வருமாறு:

228. முதல் வாரத்தில் : அவர்கள் தங்கள் நிலையை. (அதாவது தங்கள் ஆத்தும நிலையை) அறிவதற்காகவும் தங்கள் பாவங்களுக்கு மனஸ்தாபமாகவும் தங்கள் செபங் களையும் பக்தி முயற்சிகளையும் செய்ய வேண்டும். அதே கருத்துக்காக தங்களுடைய எல்லா கிரியைகளையும் தாழ்ச்சி மனப்பான்மையோடு செய்ய வேண்டும். அவர்கள் விரும்பி இவ்வாறு செய்யலாம் : நம் கெட்டுப்போன சுபாவத்தைப் பற்றி நான் கூறியுள்ளவற்றை தியானிக்கலாம். அந்த வாரத்தின் ஆறு நாட்களிலும் அவர்கள் தங்களை (ஒரு நாளைக்கு ஒன்றாக]. நத்தை, புழு, தேரை, பன்றி, பாம்பு, வெள்ளாடு என்று கருத வேண்டும். அல்லது அவர்கள் அர்ச். பெர்னார்ட் கூறியுள்ள பின் வரும் கருத்துக்களைத் தியானிக்கலாம்; நீ எதாக இருந்தாய்? - அசுத்த வித்தா யிருந்தேன் நீ எதாக இருக்கிறாய்? - அசுத்தப் பாத்திரமா யிருக்கிறேன். நீ என்ன ஆகப் போகிறாய்? - புழுக்களின் உணவாகப் போகிறேன்.

1 அவர்கள் நமதாண்டவரிடமும் பரிசுத்த ஆவியிடமும் தங்களை ஒளிர்விக்கும்படி இவ்வாறு மன்றாட வேண்டும். "ஆண்டவரே! நான் பார்வையடைய வேண்டும்'' (லூக். 14, 41)- அல்லது "ஆண்டவரே என்னை நான் அறியச் செய்யும்'' (அர்ச். அகுஸ்தீன்) - அல்லது ''பரிசுத்த ஆவியே எழுந்து வாரும்" என்று மன்றாட வேண்டும். ஒவ்வொரு நாளும் அவர்கள் பரிசுத்த ஆவியின் பிரார்த்தனையையும் அதைத் தொடர்ந்து வரும் செபத்தையும் (முதல் பகுதி யில் காட்டப்பட்டுள்ளபடி) செய்து வர வேண்டும். மற்ற வரப்பிரசாதங்களுக்கு அடிப்படையாக இருக்கும் இவ் அரு ளைத் தங்களுக்குப் பெற்றுத் தருமாறு அவர்கள் கன்னி மரியா யிடம் சென்று மன்றாட வேண்டும். இதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் "சமுத்திரத்தின் நட்சத்திரமே'' (Ave Maris stella) என்ற கீதத்தையும் தேவ மாதா பிரார்த்தனை யையும் சொல்ல வேண்டும்.

229. இரண்டாம் வாரத்தில்: ஒவ்வொரு நாளும் அவர்கள் செய்யும் செபங்களிலும் அலுவல்களிலும் மரியாயைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்த அறிவை அவர்கள் பரிசுத்த ஆவியிடம் கேட்கவேண்டும். நாம் மாதாவைப் பற்றி எழுதியுள்ளவற்றை வாசித்து தியானிக்க வேண்டும். முதல் வாரத்தில் செய்தது போல் தினமும் பரிசுத்த ஆவி பிரார்த்தனை, "சமுத்திரத்தின் நட்சத்திரமே'' என்ற பாடல் இவற்றுடன் ஒரு முழு ஜெப மாலை அல்லது குறைந்த பட்சம் 53 மணி ஜெபமாலை இந்தக் கருத்துக்காகச் சொல்ல வேண்டும்.

230 மூன்றாம் வாரத்தில் : சேசு கிறீஸ்துவைப் பற்றிய அறிவை அடைந்து கொள்ள அவர்கள் முயற்சிப்பார்கள். அவரைப் பற்றி நாம் எழுதியுள்ளவற்றை வாசித்து தியானித்து (இரண்டாம் பாகத் துவக்கத்தில் காணப்படும்) அர்ச். அகுஸ்தீனுடைய செபத்தைச் சொல்லலாம். இந்த அர்ச்சிஷ்டவருடன் சேர்ந்து எப்பொழுதும் 'ஆண்டவரே நான் உம்மை அறிய செய்தருளும்" என்றோ "ஆண்டவரே உம்மை யாரென்று நான் காணச் செய்தருளும்'' என்றோ சொல்லலாம். முந்திய வாரங்களில் செய்தது போல் பரி சுத்த ஆவி பிரார்த்தனை, ''சமுத்திரத்தின் நட்சத்திரமே” இவற்றுடன் சேசுவின் திருநாமத்தின் பிரார்த்தனையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

231. மூன்று வார முடிவில் அவர்கள் தங்களை சேசு கிறீஸ்துவின் அன்பின் அடிமைகளாக மரியாயின் கரங்கள் வழியாய் அர்ப்பணிக்கும் கருத்தோடு பாவசங்கீர்த்தனம் செய்து திவ்ய நற்கருணை உட்கொள்வார்கள். நற்கருணை வாங்கியபின்-பின்னால் கூறப்படும் முறைப்படி- அர்ப்பணிக் கும் செபத்தைச் சொல்ல வேண்டும். இச் செபம் இந் நூலின் இறுதியில் காணப்படும். இச் செபத்தின் அச் சிட்ட பிரதி ஒன்று அவர்களிடம் இருந்தால் தவிர. அதை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். அதே தினத்தில் அந்த அர்ப்பணித்தலில் கையொப்பம் இடவேண்டும்.

232. அந்நாளில் சேசு கிறீஸ்துவுக்கும் அவருடைய திரு அன்னைக்கும் ஏதாவது காணிக்கை செய்வது நல்லது ஞானஸ்நான வார்த்தைப் பாடுகளை அநுசரியாத முந்திய பிரமாணிக்கமின்மைக்குத் தபசாக அல்லது தங்கள் மீது சுதந்திர உரிமை பூண்டுள்ள சேசுவையும் மாதாவையும் அவர்கள் முற்றிலும் எதிர்பார்த்து சார்ந்திருப்பதன் அடை யாளமாக அக்காணிக்கை செலுத்தப்படலாம். அதன் தொகை அவரவர் வசதியையும் பக்தியையும் பொருத்தது- உதாரணமாக உபவாசம், பரித்தியாகம், தானதர் மம், மெழுகுவர்த்தி காணிக்கை முதலியன. நல்ல இரு தயத்தோடு அவர்கள் ஒரு ஊசியைக் கொடுத்தாலும், நல்ல எண்ணத்தை மட்டும் நோக்குகிற சேசுவுக்கு அது போதுமானது.

- 233. ஆண்டுக்கு ஒரு முறையாவது அதாவது இவ் வர்ப்பணத்தின் வருடாந்திர நாளில் அவர்கள் இதைப் புதுப்பிக்க வேண்டும். அதே பக்தி முயற்சிகளை மூன்று வாரங்களுக்கு அனுசரிக்க வேண்டும். மாதந் தோறும் ஏன் ஒவ்வொரு நாளும் கூட ஒரு சில வார்த்தைகளில் "நான் முழுவதும் உங்களுக்குச் சொந்தம்; எனக்கிருப்பவை யாவும் உங்களுடையதே'' இவ்வாறு கூறி அதைப் புதுப்பித்துக் கொள்ளலாம். "ஓ என் அன்புள்ள சேசுவே! உம் திருத் தாயின் வழியாக உமக்கு நான் முழுச் சொந்தமாயிருக் 'கிறேன்'' என்று கூறலாம்.