இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பெர்சியர்களும், சீனர்களும், ஜப்பானியர்களும் பாவசங்கீர்த்தனம் செய்கிறார்கள்

ஒவ்வொரு மனிதனும், அவன் எந்த இனத்தை அல்லது மனநிலையைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, கிறீஸ்தவனோ, யூதனோ, இந்துவோ, முகம்மதியனோ, அஞ்ஞானியோ யாராக இருந்தாலும் சரி, வேறு ஒருவ னிடம் தனது இருதயத்தைத் திறந்து காட்ட வேண்டியதன் தேவையை மிக அடிக்கடி அவன் உணர்கிறான். இது எவ்வளவு உண்மையானதாக உள்ளது என்றால், இந்துக் களும், பெர்சியர்களும், சீனர்களும் இன்னும் பல்வேறு அஞ்ஞான மக்களினங்களும் உண்மையில் தங்களுக்குச் சொந்தமான ஒரு வகைப் “பாவசங்கீர்த்தனத்தை'' உண்மை யாகவே ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். இது அவர்களுடைய சுபாவத்தை அழுத்துகிற ஒரு தேவையை நிறைவேற்றுவதாக இருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, , அவர்களுடைய இந்தப் “பாவ சங்கீர்த்தனத்தில்'' கடவுள் மட்டுமே தரக்கூடிய தேவ உதவி களும், உத்தரவாதங்களும், வரப்பிரசாதங்களும், ஆறுதல் களும் இல்லை என்பதால், அவை பயனற்றவையாகவே இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, குருவின் பாவ மன்னிப்பு அவற்றில் இல்லை. ஆயினும் அவர்களுடைய தாழ்ச்சியுள்ள முயற்சி பெரும் நன்மையை விளைவிப் பதாகவே உள்ளது. அது அடிக்கடி, உணரக்கூடிய நல்ல விளைவுகளை உண்டாக்குகிறது. இயக்கம் சரியான திசையில் இருந்தாலும், அதில் உத்தரவாதங்கள் குறைவு படுகின்றன என்பதுதான் பரிதாபம்!