இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தண்டனை

நரகத்தைப்பற்றி பிறர் பேசக் கேட்பதை விரும்பாத அநேகர் இன்று உலகில் இருக்கின்றனர். கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட இந்த உண்மையைப் பற்றி அவர்கள் சிந்திக்க விரும்புவதில்லை. கடவுளின் தவறாத திருச்சபை படிப்பிக்கும் இந்தப் போத னையை அதன் ஏனைய சகல போதனைகளுடனும் நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அறிவேன். நான் எவ்வளவு நல்லவனாயிருந்தாலும் நரகத்தைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பது எனக்கு வெகு பயன் தரக்கூடி யது என நான் அறிவேன். இதைப்பற்றி சிந்திப்பது பாவிக்கும் நீதிமானுக்கும் நல்லது. அவர்களது உள்ளத்தில் தேவ பயத்தை அது எழுப்புகிறது. தேவ பயமே ஞானத்தின் தொடக்கம். உண்மை ஞானி கடவுளின் இராச்சியத்தையும் அவரது நீதியையும் முந்த முந்தத் தேடுவான். அடிக்கடி நான் நரகத்தைப் பற்றி சிந்தித்தால் ஆழ்ந்து சிந்திப்பேனானால்,"ஒருவன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தன் ஆத்துமத்தை இழப்பானானால் அவனுக்கு என்ன பயன்? அல்லது தன் ஆத்துமத்துக்குப் பதிலாக என்ன கொடுப்பான்?” என்னும் இரட்சகரது கேள் விகளுக்குப் பதிலளிப்பது எளிதாகும். இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி மாத்திரமே நினைத்து, மறு வாழ்வில் வரவிருப்பவற்றைப்பற்றி ஆழ்ந்து சிந்தியா திருத்தல் அறிவின்மை . கடவுளை நேசித்து அவருக்கு சேவை செய்வதைத் தவிர எல்லாம் வீண். ஆதலின் நரகத்தைப்பற்றி நான் சிந்தித்தால், காணக்கூடிய பொருட்களின் பிடியிலிருந்து என் இதயத்தை அகற்றி, காணக் கூடாத பொருட்கள் பக்கமாய் அதைத் திருப்புவது எளிதாகும். நான் இறந்த பின் நரகத்துக்குப் போக நேரிடாதபடி, உயிரோடிருக்கும் போதே நரகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். நினை வினால் அங்கு செல்ல வேண்டும். தன்னைத் துரத்து கிறவனைத் தான் பார்க்காதபடி தன் தலையை மண் ணில் புதைக்கும் தீக்கோழியைப் போல் நான் இருக் கக்கூடாது. அதைத் துரத்துகிறவன் அங்கு நிற்கி கிறான். நரகத்தை நான் பாராதது போல் கண்களை மூடிக்கொண்டு நடப்பேனானால், அதில் தவறி விழும் பேராபத்து எனக்கு ஏற்படலாம்.

நரகம் உண்டென்று சிலர் நம்ப விரும்புவதில்லை, இது விந்தையிலும் விந்தையே. அது இல்லையென்று அவர்கள் கண்மூடித்தனமாய்ச் சொல்வதானால், அது இல்லாமல் இருந்து விடப் போவதில்லை. அதன் நெருப்பை அவர்கள் அணைத்து விடப் போகிறதில்லை. தூக்குமரம் இல்லையென்று கொலை செய்தவன் நினைத்தபோதிலும் அவன் தூக்கிலிடப்படுவான். ''மோட்சம் கிடையாது, அது வெறும் கட்டுக் கதை', என சாதிக்கிறான். நகரம் உண்டு, நரகம் என்பது வெறும் கட்டுக்கதையல்ல. இதை நாஸ் தீகன் கண்கூடாய் ஒருநாள் அறிவான். அப்பொழுது அவனுக்கு என்னமாயிருக்கும்?

செக்நேரி என்னும் குரு பேர்போன பிரசங்கி. தபசுகாலத்தில் செய்த பிரசங்கமொன்றில் அவர் பின் வருமாறு சொல்கிறார்: “உலகத்தை ஆண்டு நடத்தும் படி கடவுளுக்கு இரு கரங்கள் இருக்கின்றன என நாம் ஒரு விதத்தில் சொல்லலாம். ஒன்று அவரது இரக்கம். இரண்டாவது கரம் அவரது நீதி. இந்த இரு கரங்களுய் சமமாயிருக்கவேண்டும். கடவுளின் இரக்கம் எல்லையற்றது என அறியாதவன் யார்? பாவி யைக் காப்பாற்றும்படி அவர் செய்யாமல் விடுவது ஏதாவது உண்டா ? அவன் அவருக்கு வருவிக்கும் நிந்தை அவமானங்களைச் சகிக்கிறார். அவன் செய்யும் பரிகாசத்தைப் பொறுக்கிறார். அவனுக்காக மோட் சத்திலிருந்து வந்து பிறந்து பாடுபட்டு இறக்கிறார். அவரது இரக்கத்தை விரும்பாதவனுக்கு, ஐயோ, ஐயோ கேடு. அவரது இரக்கத்தின் பிரகாரமே அவ ரது கண்டிப்பும் மனிதனை அவனது கிரியைகளுக்குத் தக்கபிரகாரம் தீர்மானிக்கிறது. (சர்வப். 16 | 13). அவரது இரக்கம் மாபெரிது. நிர்ப்பாக்கிய பாவியின் தலைமேல் அவரது நீதியின் கரம் விழும்.''

உலகத்தின் தொடக்கத்திலிருந்து சகல துஷ்டர் களும் தங்கள் அயலாருக்குச் செய்திருக்கும் சகல அ நீதிகளையும் நான் நினைத்துப்பார்க்கையில், பிரான்ஸ் நாட்டுப் புரட்சியின்போது அக்கிரமியான ஒரு நடுவனைநோக்கி ஒரு குரு சொன்னது முற்றிலும் உண்மையே என நான் அறிகிறேன். “நரகம் உண்டு என நீ விசுவசிக்கிறாயா?" என நடுவன் கேட்க, "ஆம். நரகம் உண்டென்று விசுவசிக்க நான் உன்னையும் உன் நடத்தையையும்பற்றி நினைப்பதே போதும். இதற்குமுன் நான் நரகத்தைப்பற்றி சந்தேகித்திருந் தாலும் இப்பொழுது அது உண்டென்று விசுவசிக் கிறேன் " என குரு அமைதியாய்ப் பதிலளித்தார்.

எரிமலைகளிலுள்ள விஷம் கக்கும் பாதாளங்கள் நம்மை எசசரிக்கும் நரகத்தின் புகை போக்கிகளா என நான் சில சமயங்களில் நினைக்கிறேன். புனித பெர் நார்து இவ்விதமே நினைத்தார். நித்திய நெருப் பின் சிறிய புகைபோக்கிகள் என அவர் அவற்றை அழைப்பார். இவ்வித நினைவுகள் எனக்குத் தேவை யில்லை. நரகத்தைப்பற்றி எனக்கு வேறு எவரும் அறிவிக்க அவசியமில்லை. நரகத்தைப்பற்றி வேத புத்தகத்தில் கடவுள் சொல்வதை நான் ஏற்றுக்கொள் கிறேன். அது மிகப் பயங்கரமானது.

பாவத்தின் விளைவே நரகம். ஒவ்வொரு பாவத் திலும் நரகப்பொரி இருக்கிறது. இதை நான் எப் பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். பாவத் தின் சாபத்தைப் பூமியிலேயே பார்க்கலாம் என்று எனக்குத் தெரியும். நான் கனமான பாவம் செய்த தும், கடவுளையும் மன அமைதியையும் இழக்கிறேன். சிருஷ்டிகளை அளவுக்கு மிஞ்சித் தேடும் நான், அவை களாலேயே துன்புறுத்தப்படுகிறேன். என்மேல் எனக்கு வெறுப்பு உண்டாகிறது. இவ்விதம் நான் "பாவத்தையும் அக்கிரமத்தையும் எவர்கள் செய்கி றார்களோ அவர்கள் தங்கள் ஆத்துமத்திற்குச் சத் துராதிகளாகிறார்கள்" என்னும் ரப்பேல் தூதர் செசன்ன வார்த்தைகளை நான் உறுதிப்படுத்து கிறேன். மூன்று விதமாக நரகத்தைப்பற்றி நான் சிந்திக்கலாம். பசாசுடனும் நரகத்தில் வேகிறவர் களுடனும் நெருப்பில் நான்படும் வேதனை முதலாவது நரகம். இரண்டாவது நரகம், அதிக வேதனையுள் ளது. அது கடவுளை இழப்பது. இதுவே நரகத்தின் மிகக் கொடிய வேதனை. மூன்றாவது நரகம் அவரும் பிக்கை. இவை யாவற்றையும் நித்தியத்துக்கும் நான் அனுபவிக்க வேண்டும். இவை ஒருபோதும் முடியா. நான் கனமான பாவம் செய்தால், நானே எனக்கு நரகத்தை உண்டாக்கிக் கொள்கிறேன். முதலாவதாக நான் சாவேனானால் தண்டனையாக, என் ஏக நோக்க மும் கடைசிக் கதியுமான கடவுளை விட்டு என்றென் றும் பிரிந்திருப்பேன். இரண்டாவதாக, நான் கன மான பாவம் செய்தால் கடவுளை விட்டு விலகி சிருஷ்டி களின் பக்கமாய்த் திரும்புகிறேன். அந்நிலையில் நான் சாவேனானால் தண்டனையாக சகல சிருஷ்டிகளுடைய கோபத்துக்கும் மிகக் கொடிய நெருப்புக்கும் நான் ஆளாவேன். மூன்றாவதாக, நான் கனமான பாவம் செய்தால், அது எனது குற்றமே. அந்த நிலையில் நான் இறந்தால் இருண்ட அவநம்பிக்கை என்னும் நரக நெருப்பில் நித்தியத்துக்கும் நானே எனக்கு உபாதை யாயிருப்பேன்.

நரகத்தில் நெருப்பு உண்டு. இது உண்மை என நான் அறிவேன். பினோல் என்னும் குரு சான் சுல்ப் பீஸ் குருமடத்தில் சத்துவ சாஸ்திரம், ரசாயன சாஸ் திரம் என்னும் இரு பாடங்களையும் கற்பித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் என்ன காரணமோ தெரிய வில்லை, அவர் கையாடிக் கொண்டிருந்த தீப்பாஷா ணம் (phosphorus) நெருப்புப் பிடித்து விட்டது. ஒரு விநாடியில் அவருடைய கையில் நெருப்புப் பற்றியது. சில நிமிடங்களுக்குள் அவரது கை நிலக்கரிபோல் கறுப்பாகி உருவமற்றுத் தோன்றியது. சகிக்க முடி யாத வேதனை. அவர் அறிவை இழந்தார். என்றாலும் இராப்பகலாய் அவர் சத்தமிட்டுக்கொண்டிருந்தார். அதைக் கேட்கப் பரிதாபமாயிருந்தது. சில சமயங் களில் அவர் சொன்ன வார்த்தைகள் தெளிவாய் ஒலித்தன. "ஓ என் மக்களே, என் மக்களே, நரகத் துக்குப் போக வேண்டாம், நரகத்துக்குப் போக வேண்டாம். நரகத்துக்குப் போகாதீர்கள்'' என்று அவர் கத்தினார்.

புனித லாரென்ஸ் என்னும் வேதசாட்சியைக் கொன்ற விதத்தைக் கேள்விப்படுகையிலும் என் உடலெல்லாம் நடுங்குகிறது. ஒரு பெரிய பாத்திரம் நெருப்பின் மேல் வைக்கப்பட்டது. அது சூட்டால் சிவப்பாகும்வரை அதில் வைக்கப்பட்டது. ஈவு இரக்கமற்ற கொலைகாரர்கள் அர்ச்சியசிஷ்டரைப் பிடித்து, உபாதிக்கும் பயங்கரத்துக்குரிய அந்தப் பாத்திரத்துடன் அவரது வெறும் உடலைச்சேர்த்துக் கட்டினார்கள். வேதனை தாங்க மாட்டாமல் அவர் உடல் முழுவதும் நடுங்கியது. இவ்வி தம் வீரத்தனம் நிறைந்த அந்த வேதசாட்சி சாகும் வரை உபாதைப் பட்டார். இது மிகக் கொடிய வேதனையே.

நரக நெருப்பு எரிகிறது; என்றாலும் இருளை உண்டாக்கும். தன் வாயில் அகப்படுகிறவர்களை விழுங்குகிறது; என்றாலும் எரித்து விடுவதில்லை. அவர்களை உபாதிக்கிறது; எனினும் அவர்களை அறி விழக்கச் செய்வதில்லை. வெறும் அழுகையையல்ல, ஆனால் கூக்குரலையும் பற்கடிப்பையும் உண்டாக்கும். நம் பூமியின் நெருப்பை நரக நெருப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உலக நெருப்பு சித்தரிக்கப்பட்ட நெருப் புக்குச் சமம் என்கிறார் புனித அன்செலம். உலக நெருப்பு நரக நெருப்புக்கு முன் குளிருக்கு சமானம் என புனித வின்சென்ற் பெரெர் சொல்கிறார். நரக நெருப்பு கோபாக்கினி , இந்த அக்கினி ஒவ்வொரு மனிதனையும் அவனது செய்கைகளுக்குத் தக்கபடி தண்டிக்கும். ஒரு மனிதன் எவைகளைக் கொண்டு பாவம் செய்கிறானோ அவற்றிறகேற்ப அவன் தண் டிக்கப்படுவான். காட்டு மிருகங்கள் பல கூட்டமாய் நிற்கின்றன. அவற்றையெல்லாம் கடுங் காயப்படுத்தி னால் அவை ஒன்றையொன்று உபாதிக்குமாம். அதே போல் நரக நெருப்பில் உபாதைப்படுவோர் ஒருவர் மற்றவருக்கு மிகக் குரூர உபாதையாயிருப்பார்கள் என நான் வாசித்திருக்கிறேன். புனித தோமாஸ் அக்குயினாஸ் சொல்வது போல், ''நரகத்தில் வேதனைப்படுவோரின் பெருந் தொகையானது தனிது வேதனைகளை அதிகரிக்கும் '". அங்கு எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ அத்தனை நரகங்கள் இருக்கும் என ஒரு விதத்தில் நாம் சொல்லலாம். இதையெல்லாம் கேட்கும் போது நான் பயந்து, ''பசாசின் வலைகளிலி ருந்து என்னை இரட்சித்தருளும், ஆண்டவரே'' என திரும்பத் திரும்பப் பிரார்த்திக்கிறேன்.

நரகத்தைப் பற்றி அச்சுறுத்தி எழுதுவோரை நான் குறை கூறுவதில்லை. அவ்விதம் எழுதியதற் காக அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். உண்மை யான வெறும் வார்த்தைகளால் நரகத்தை விவரிக்க முடியாது. இந்நேரத்தில் நரகத்தில் அநேக ஆத்து மங்கள் வேதனைப்படுகின்றன. அவை எழுத்தாளர் களையும் பிரசங்கிகளையும் பார்த்து , கூடுமானால் என்ன சொல்லும்? “ஓ நரக வேதனைகளைப் பற்றி எங் களிடம் அதிகமாய் என் சொல்லவில்லை? நரகத்தைப் பற்றி உண்மையாக விவரித்துரைத்து எங்கள் இதயங்களில் பயத்தை ஏன் எழுப்பவில்லை? அப்படி யானால் நாங்கள் நரகத்தில் விழாதபடி அதிக பிர யாசை எடுத்திருப்போமே! நித்திய நரகத்தைப்பற்றி ஏன் தெளிவாய் எடுத்துச் சொல்லவில்லை? ஓ நரக நெருப்பு ஆயிரம் மடங்கு அதிக உக்கிரம் வாய்ந்தது என்று ஏன் சொல்லாது போனீர்கள்? நீங்கள் அப் படிச் சொல்லியிருந்தால் ஒரு வேளை நாங்கள் இங்கு வந்திருக்கமாட்டோம். ஐயோ, ஐயோ!” என அவர்கள் கத்துவார்கள். "ஆண்டவரே, என் உடலை உமது பயத்தால் ஊடுருவுவீராக'' "அர்ச்சியசிஷ்ட மரி யாயே, நரக நெருப்பில் நாங்கள் விழாதபடி எங்களைக் காத்தருளும்.''

கடவுளை இழந்திருப்பதே நரகத்தில் மிகப்பெரும் உபாதை என நான் அறிவேன். இது எவ்வளவு கொடிய உபாதை என இப்பொழுது நான் சரிவரக் கண்டு பிடிப்பதில்லை என நான் ஒத்துக் கொள்கி றேன். என் அறிவு மங்கிய அறிவு. என்றாலும் நான் கடவுளை இழந்தால் எல்லாவற்றையும் இழக்கிறேன் என நான் அறிவேன். கடவுளே என் ஆதித்தொடக் கம். என் கடைசிக் கதியும் அவரே. கடவுளோடு இன்பம் அனுபவிப்பதற்காக நான் உண்டாக்கப்பட் டிருக்கிறேன். என்னையறியாமலே என் இருதய மானது கடவுளது முக தரிசனத்தை நாடுகிறது. நன்மையை நான் எப்பொழுதும் தேடுகிறேன். கடவுளே சர்வ நன்மைச் சொரூபி. இதையெல்லாம் நான் அறிவேன். கடவுளை விட்டு அகற்றப் படுவது அவரை நான் அனுபவிக்கத் தொடங்க வேண்டிய நேரத்தில் அவரை விட்டுத் துரத்தப்படுவது நித்திய வேதனையாகும். “என்னை நன்றாகக் கட்டட்டும், கூரிய ஆணிகள் நிறைந்த ஒரு தூணை வானத்திலி ருந்து பூமி வரை வைத்து, இந்த வினாடியிலிருந்து உலக முடிவுவரை என்னை மேலும் கீழும் அந்தத் தூணில் வைத்து இழுக்கட்டும். ஒரு வினாடி நான் கடவுளது அழகைப் பார்க்க அனுமதிக்கப்படுவேனா னால் அதுவே போதும். இந்த அழகைப் பார்ப்ப தற்காக இந்த வேதனைகளையெல்லாம் நான் மகிழ்ச்சி யுடன் சகிப்பேன்'' என பசாசு ஒருமுறை சொன்ன தாக நான் எங்கோ வாசித்திருக்கிறேன். புனித பிரான்சிஸ் சலேசியார் ஒரு முறை காட்சி ஒன்று கண்டார், கிறிஸ்துநாதரது கரத்தையும் அதிலுள்ள காயத்தையும் அவர் பார்த்து மகிழ்ச்சியினால் சாக இருந்தார் என நான் வாசித்திருக்கிறேன். சர்வ அழகு வாய்ந்த இரட்சகரைப் பார்ப்பது பேரின்ப மாகும்.

மிகவும் மகத்தான சம்பாவனையைக் கடவுள் எனக்காகத் தயாரிக்கிறார். தம்மையே எனக்குத்தர அவர் தயாரித்திருக்கிறார். கடவுளை நேசிப்பவர்களுக் குத் தரும்படி கடவுள் தயாரித்திருப்பவற்றை கண் பார்த்ததில்லை, காது கேட்டதில்லை, மனிதனது புத்தி யில் நுழைந்ததில்லை. கடவுளை இழப்பது, பரலோகத் திலுள்ள அர்ச்சியசிஷ்டர்களின் ஆனந்தமான கட வுளை இழப்பதே, நரகத்திலிருப்போரின் மிகப் பெரிய வேதனை, சொல்லமுடியாத வேதனை! “இந்த வேதனை கடவுளைப் போல் பெரிது'' என்கிறார், புனித பெர்நார்து. "உன்னால் உரூபிகரிக்கக்கூடிய சகல வேதனைகளையும் கொண்டுள்ள ஆயிரம் நரகங்களை ஒன்றாய்ச் சேர். கடவுளை இழக்கும் கொடிய வேத னைக்குமுன் அவை ஒன்றுமில்லாமைக்குச் சமானம்'' என புனித கிறிசோஸ்தோம் அருளப்பர் கூறுகிறார்.

மனச்சாட்சியின் உபாதையால் குற்றவாளி மிகக் கொடிய வேதனைப்படுகிறான் என புத்தகங்களில் நான் வாரித்திருக்கிறேன். தன் சகோ தரனைக் கொன்ற காயீன், "என் பாவம் அதிக பெரிதா யிருக்கிறதால் அது மன்னிக்கப்படாது. இனி நான் பூமியில் பரதேசியும், நாடோடியுமாயிருப்பேன். அப் படியானால் என்னைப்பார்த்த எவனும் என்னைக் கொல்லுவானே'' என்று கூறி அவநம்பிக்கையுடன் பூமியில் சுற்றித்திரிந்தது என் நினைவுக்கு வருகிறது.

இவ்வுலகில் பாவியின் மனச்சாட்சி அவனை எவ் வளவு உபாதித்தாலும், அதினின்று தப்பித்தோட முயல்வான். தப்பித்தோடுவதில் ஓரளவு அனுகூல மும் பெறுவான். மனச்சாட்சியின் உபாதையை நசுக் கும்படி, உலக இன்பங்களில் பாவி தன்னை அமிழ்த்து கிறான். அல்லது மதிமயங்கக் குடிக்கத் தொடங்கு கிறான். அல்லது அந்த வேதனையை அடக்கும்படி அதைப் பரிகசித்துச் சிரிக்கிறான். அல்லது வேதத் துக்கு விரோதமான சந்தேகங்களால் அதை மறைத் துவிட முயல்கிறான். அல்லது இவை எல்லாவற்றை யும் ஒருமிக்கச் செய்கிறான். ஆனால் ஒருநாள் வரும், அன்று மனச்சாட்சியின் வேதனையை நசுக்கக்கூடிய பராக்குகள் யாவும் மறைந்தொழிந்தழியும். தன் மனச்சாட்சியைத் தூக்கிக்கொண்டு, மனச்சாட்சியை தன் சகல வேதனைகளுடனும் எடுத்துக்கொண்டு, நித்தியத்தினுள் நுழைவான். அது அங்கு அவனை விடாது குற்றஞ்சாட்டி நித்தியத்துக்கும் குரூரமாய் உபாதித்துவரும். ஓ பயங்கரத்துக்குரிய அவ நம்பிக்கை.

இவ்வித தீர்ப்பிடப்பட்ட நிர்ப்பாக்கிய பாவி ஒரு வன் பூமிக்குத் திரும்பிவர முடியுமானால், அவனுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்படுமானால் எவ்வளவு வித்தியாசமாய் அவன் ஒழுகுவான். யாருமே நுழை யாத காட்டுக்குப்போய் தபசிபோல் அங்கு வாழ்வான். ரொட்டியும் நீரும் மாத்திரமே அருந்தி மகிழ்ச்சி யுடன் வாழ்வான். தன் கடைசி மூச்சுவரை மிகக் கொடிய தவமுயற்சிகளையும் செய்வான். ஓ நிர்ப்பாக் கியனே, இப்பொழுது இதையெல்லாம் நினைத்துப் பயனில்லை. “ஓ நான் பெரிய முட்டாள்!'' என அவன் கூவி அழுகிறான். நானும் அவனுடன் சேர்ந்து "ஓ நான் பெரிய முட்டாளாய் இருந்திருக்கிறேன். என் வாழ்க்கையைத் திருத்த இன்னும் நேரம் இருக்கிறது பற்றி நான் மிக மகிழவேண்டும்'' என கூக்குரலிடு வேன்.

நரகம் நித்தியம். அது ஒருபோதும் முடிவடை யாது. “இவர்கள் நித்திய தண்டனைக்குச் செல்வார் கள்'' என இரட்சகர் நம்மைப் பார்த்துச் சொல் கிறார். இதைவிடத் தெளிவாக அவர் பேசமுடியாது. ஆதலின் புனித சின்னப்பர் சொல்வதுபோல், நான் நித்திய தண்டனைக்குள்ளாக விரும்பினாலொழிய நம் ஆண்டவராகிய யேசுக்கிறிஸ்துநாதரின் சுவிசேஷ போதனைக்கு நான் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். இது சிரமமானது என நான் நினைக்க மாட்டேன். நித்தியத்தைப்பற்றி அடிக்கடி நான் நினைக்கவேண் டும். நித்தியத்துக்கும் நரக வேதனை! ஓ இது எவ் வளவு பயங்கரமானது! நரகத்தைப்பற்றி நினைப்பதை விட மோட்சத்தைப்பற்றி அதிகமாய் நினைப்பேன். அனெனில் நான் நரகத்துக்குப் போகப் போவதில்லை. மான் மோட்சத்துக்குப் போவேன். மோட்சத்துக் குப் போகும்படியே நான் வாழப் போகிறேன். மோட் மத்துக்கென்றே கடவுள் என்னை உண்டாக்கினார். மான் மோட்சம் செல்லவேண்டும் என கடவுள் விரும் புகிறார். நானும் அதையே விரும்புகிறேன். மோட் அத்தினின்று எதுவும் என்னைப் பிரிக்க முடியாது

ஹா என்னும் குருவானவர் ஒரு புத்தகம் எழுதி யிருக்கிறார். அதன் ஒரு பகுதி “நரகத்தின் சித்திரம் " என்றழைக்கப்படுகிறது. அந்தப் புத்தகம் எழுதப் பட்டபின் பயங்கரத்துக்குரிய உலக யுத்தங்கள் நடந் திருக்கின்றன. நரகத்தின் வேதனைகளைப் போன்ற பல உபாதைகளை பலர் பட்டிருக்கின்றனர். அவற் றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பின் வரும் வரலாற்றில் சொல்லப்படும் உபாதைகள் அவ்வளவு கொடியவை யல்ல என நினைக்கலாம்.