கத்தரீனுக்கு அன்னை அளித்த செய்தி

பெருந் துன்பங்கள் பிரான்ஸ் நாட்டுக்கு வர இருக்கின்றன. ஆபத்து மிகப் பெரிதாயிருக்கும். ஆனால் பயப்படாதே. பிற சிநேகச் சபைச் சகோதரி களையும் குருக்களையும் நல்ல கடவுளும் அர்ச்சியசிஷ்ட வின்சென்டும் பாதுகாப்பார்கள் ...-- யேசுவின் சிலுவை பகைக்கப்படும். அநேக குருக்கள் கொல்லப் படுவார்கள். அதிமேற்றிராணியார் கொல்லப்படு வார். தெருக்களில் இரத்தம் ஓடும். உலக முழுவதும் உபத்திரவங்களாலும் துயரத்தாலும் நிரம்பும். நல்ல கடவுள் உனக்கு ஓர் அலுவலைக் கொடுக்க விரும்புகி றார். அது என்ன என்று பின்னர் நான் அறிவிப் பேன். நீ அதிகத் துன்பப்பட வேண்டியிருக்கும். ஆனால் பயப்படாதே. காலம் மோசமான காலம். பிரான்சில் கொடிய நிகழ்ச்சிகள் நடக்கப் போகின் றன. அரசனின் சிம்மாசனம் கவிழ்த்த ப்படும். சகல வித உபத்திரவங்களாலும் உலகம் நிரம்பும். இந்தப் பீடத்தினருகே அடிக்கடி வா. இங்கு வந்து கேட்ட வர்களுக்கு அநேக வரப்பிரசாதங்கள் வழங்கப் படும். பணக்காரருக்கும் ஏழைகளுக்கும், உயர்ந்தோ ருக்கும் தாழ்ந்தோருக்கும், அவை கொடுக்கப்படும். ஒரு நாள் வரும் உலகத்துக்கு இனி நம்பிக்கையே இல்லை, எல்லாம் போயிற்று என்று அந்நாளில் நினைப்பார்கள். நம்பிக்கையாயிரு. நான் உன்னுடன் இருப்பேன். சிலுவையைக் காலால் மிதிப்பார்கள். நம் ஆண்டவரது விலா திரும்பவும் திறக்கப்படும்... என் கரங்கள் எப்பொழுதும் உன்னைக் கண்காணிக் கும். உனக்கு அநேக வரப்பிரசாதங்களைக் கொடுப்பேன். கேட்பவர்களுக்கெல்லாம் முக்கிய வரப்பிர சாதங்கள் கொடுக்கப்படும். ஆனால் மக்கள் ஜெபிக்க வேண்டும்... நீ பார்க்கும் உருண்டையானது உலகத் தையும் முக்கியமாக பிரான்சையும் ஒவ்வொரு தனி நபரையும் குறிக்கிறது. அதற்காகவும் உலகிலுள்ள ஒவ்வொருவருக்காகவும் நான் ஜெபித்துக் கொண்டி ருக்கிறேன். இந்த உருண்டையில் விழும் கதிர்கள், கேட்பவர்களுக்கு நான் கொடுக்கும் வரப்பிரசாதங் களைக் குறிக்கின்றன. சில கற்களில் கதிர்கள் இல்லை, ஏனெனில் அநேக மக்கள் வரப்பிரசாதங்களைக்கேட்ப தில்லை, அசதியே காரணம்.''

கடைசி முறையாக தேவதாய் காட்சியளித்த போது “நீ என்னைப் பார்க்கமாட்டாய். ஆனால் நீதி யாசனம் செல்கையில் என் குரலைக் கேட்பாய்" என்றாள்.