இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வேளாங்கண்ணியில் போர்த்துக்கீசியர்

17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சீனாவின் மக்காவ் துறைமுகப் பகுதி போர்த்துக்கீசிய ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அங்கிருந்து புறப்பட்ட போர்த்துக்கீசிய வணிக மரக்கலம் வங்கக் கடலில் தவழ்ந்தபோது புயல் உருவாகியது. மரக்கலம் புயல் காற்றின் வீச்சுக்கும், உயர் அலைகளின் சீற்றத்துக்கும், இருளடைந்த வானத்தின் கீழ் பொழியும் கடுமையான மழைக்கும் இடையே தத்தளித்தது.

தம்மிடம் அன்பு கொண்ட தம் மக்களைத் தவிக்கவிடாத மரியாள், அவர்களின் மரக்கலம் ஆபத்தின் றிக் கரையை அடைந்திட உதவினாள் வேளாங்கண்ணி என்று அழைக்கப் பட்ட அவ்விடத்தில் அன்னைக்கு அவர்கள் 24 அடி நீளமும். 12 அடி அகலமும் உள்ள சிற்றாலயம் ஒன்றை எழுப்பினார்கள். அடுத்த முறை வந்தபோது, பழைய புதிய ஆகமத்தின் நிகழ்ச்சிகளை விளக்கும் சதுரப் பீங்கான் ஓடுகளால் பீடத்தை அணி செய்தனர்.

தமது இடது கையில் பாலன் ஏசுவை ஏந்தியவளாய், வலது கரத்தில் செங்கோலைப் பிடித்தவாறு பூமியின்மீது நிற்கும் மாதரசியாக அன்னையின் திருச்சுரூபம், பீடத்தின் நடுவில் இடம் பெற்றது. பீடம் கொண்ட அந்த அன்னை , மக்களால் ஆரோக்கிய அன்னை என்று அழைக்கப்பெற்றாள். மரியாள் வேளாங்கண்ணியைத் தமது திருத்தலமாக்கி, அனைத்து மக்களுக்கும் அருளாசீரையும் எண்ணற்ற உதவிகளையும் புரிந்து வந்துள்ளதை வரலாறு உரைக்கின்றது.