சேசுவும் பாவிகளும்

நம் இரட்சகரின் இவ்வுலக வாழ்வின் பக்திக்குரிய பக்கங்களில், வேறு எதையும் விட அதிகமாக நம் மனதைத் தொடுவது, பாவிகளின் மீது அவர் கொண்டிருந்த இனிய தயாளம்தான். நம் ஆண்டவர் இன்றும் கூட நம் நிமித்தமாக தமது நேசம், இரக்கம் ஆகியவற்றின் இந்த அலுவலைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டேயிருக்கிறார்.

சரீரம் தனது அசுத்தப் புலனிச்சையையும், தனது மென்மையான முகஸ்துதிகளைக் கொண்டும், தனது இரகசியக் கவர்ச்சிகளைக் கொண்டும், தனது அசுத்த இன்பங்களைக் கொண்டும் பெருந்திரளான ஆன்மாக்களை நரகத்தில் விழச் செய்கிறது.

உலகம் தனது வெளிப்பகட்டையும், தனது பொய்க் கொள்கைகளையும், ஆங்காரத்தையும், ஆதாயம் சம்பா திக்கும் மோகத்தையும் கொண்டு எண்ணற்ற ஆன்மாக் களைக் கடவுளிடமிருந்து பறித்துக் கொள்கிறது.

இன்று பலரால் அலட்சியம் செய்யப்படுவதும், வேறு பலரால் இல்லாத ஒருவனைப் பற்றிய கற்பனையான புராணக் கதை என்று ஒதுக்கப்படுவதுமாகிய பசாசு உண்மையில் ஒரு மிகப் பெரிய, ஆபத்தான உண்மையாக இருக்கிறது. கடவுளுக்கும், மோட்சத்தில் தனது ஆசனங் களை நிரப்பும்படி கடவுளால் நியமிக்கப்பட்டுள்ள நமக்கும் எதிரான அடக்க முடியாத வெறுப்போடு, அவன் அர்ச். இராயப்பர் சொல்கிறபடி, கர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல யாரை விழுங்கலாம் என்று எங்கும் சுற்றித் திரிகிறான் (1 இரா.5:8 காண்க). அர்ச். சின்னப்பர் தம் பங்கிற்கு, நாம் நம்மைப் போன்ற மாம்சத்தோடும், இரத்தத்தோடுமல்ல, மாறாக, “அந்தகார உலகாதிபதிகளோடும், ஆகாய மண்டலங் களிலுள்ள அக்கிரம அரூபிகளோடும்'' (எபே.6:12) நாம் போராட வேண்டியுள்ளது என்று நம்மை எச்சரிக்கிறார். தங்கள் அதியற்புதமான புத்திக்கூர்மையை இன்னும் கொண்டிருப்பவர்களும், ஆனால் நம் அழிவுக்காக அதைப் பயன்படுத்துபவர்களுமாகிய கெட்டுப் போன சம்மனசுக் களோடு நாம் போராட வேண்டியுள்ளது.