இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வேறுசில கொடுமைகள்

பெற்றோர் பிரயாசப்பட்டு உழைத்துப் பிள்ளைகளைச் சீராய் வளர்க்கவும், படிப்பிக்கவும், நன்னிலையில் வைக்கவும் பாரமான கடமை பூண்டவர்களாயிருக்கையில், இவையெல்லாவற்றையும் நினையாமல், உள்ளதையும் உழைப்பதையும் குடியிலும் சூதிலும், தங்கள் நிலைமைக்கு மேலான போசன பதார்த்தங்களிலும், விலையுயர்ந்த உடையிலும், வீண் கொண்டாட்டங்களிலும், மிதமிஞ்சிய சுகானுபவங்களிலும் செலவழித்துப்போட்டு, பிற்காலத்திற் பிள்ளைகளை அந்தரிக்கவிடுவதும் பெருங் கொடுமையாம்.

வேறுசிலர், பணவாஞ்சையினால் பிள்ளைகள் படிக்க வேண்டிய வயதில் அவர்களை அற்றைக்கூலிக்கு உழைக் க, அல்லது அந்நியர் வீடுகளில் வேலைகாரராயிருக்க அனுப்பிவிடுவது பெரும்பாதகம். இன்னுஞ் சில தாய் தந்தையர். சோம்பேறிகளும் சுகப் பிரியருமாயிருந்து பிள்ளைகளுக்காகத் தாங்கள் உழைக்கவேண்டிய காலத் தில் பிள்ளை களே தங்களுக்காக உழைக்கும்படி செய்வா ர்கள்.

கொஞ்சக்காலத்துக்குமுன் அசீசிநகரியில் அநேக பெரிய தனவான்கள் சேர்ந்திருந்த சங்கமொன்றில் பின் வரும் பரிதாபமான வர்த்தமானம் வாசிக்கப்பட்டது: ''தற்காலத்திலும் சிசிலி தீவிலுள்ள கந்தகச் சுரங்கக்கா ரர் அவ்விடங்களிலுள்ள வறிய பெற்றோருக்கு ஒரு சிறுதொகைப் பணங்கொடுத்து அவர்களுடைய பிள்ளை களைச் சிறுவயதிற்தானே கூலிக்காரராகப்பிடிக்கிறார்கள். அடிமை வியாபாரம் நடந்த காலங்களில் சிறைப்பட்ட பிள்ளைகள் மேற் கொடிய எசமான்களுக்கு இருந்த பூரண அதிகாரம் சுரங்கக்காரருக்கும் இப்பிள்ளைகள் மேல் உண் டு.

இவர்கள் யாதொரு சம்பளம் இல்லாமல் கடுஞ்சூ டுள்ள அச்சுரங்கங்களில் நாள் முழுதும் கந்தகஞ் சுமப் பார்கள். இவ்வளவு கடினமான வேலையை ஒவ்வொரு நாளும் மிதமிஞ்சிச் செய்வதினால் புத்திக்கூர்மையும் தேகவளர்ச்சியுமற்று அந்தங்கெட்டுச் சீவியகாலமுழுதும் நோயாளிகளும் நிர்ப்பாக்கியருமாகிறார்கள்'' என்பது. இதையெல்லாம் கண்டறிந்திருந்தும் அங்குள்ள இரக்க மற்ற பெற்றோர் தங்கள் வறுமையைக்காட்டி இன்னும் அப்படித் தங்கள் பிள்ளைகளைக் கொடுக்கத் துணிகிறார் களே. சிலநாட்களுக்குமுன் நாம் இவ்விஷயத்தைப்பற்றி எழுதிக் கொண்டிருக்கையில் பிள்ளைகளின் அருமையை அனுபவத்தாலறிந்த ஓர் நடுவயதுப் பெண், தன் வீட்டில் அடைக்கலந்தேடிவந்திருந்த ஒரு பத்து, பன்னிரண்டு வயசுப் பெண்பிள்ளையைக் கூட்டிக்கொண்டுவந்து விபரித்த சரித்திரம் மிகப்பரிதாபத்துக்குரியது.

அதன் பொழிப் பாவது: உழைக்கக்கூடிய தாயுந் தகப்பனுமுள்ள இச்சிறுமியைத் தாயானவள் தன்னூரிலிருந்து இவ்விடங்கொண்டுவந்து ஓர் வீட்டில் வேலைக்குவைத்தாள். இவள் அவ் வீட்டிலிருக்க விருப்பமற்று வேறுவீடுகளிற்போயிருந்து பார்த்தாள். வேலைக்கிருந்த வீடுகளில் பட்ட அடி ஆக்கினையையுஞ் சிறுப்பனையையும், கேட்ட நிந்தையான பேச்சுகளையும் தாங்கமாட்டாமல், மேற்சொல்லியபெண் வீட்டிற் பலமுறையும்வந்து ஒளித்துக்கொள்வாள். வேலைக்கு வைத்திருந்தவர்கள் இவளைப் பிடிக்கவரும்போதெல்லாம் ஒரு பழம் பாயினால் தன்னை மூடிக்கொள்வாள். அல்லது அயல்வீடுகளிற்போய் மறைந்துவிடுவாள். இவளிருக்கும் கேவல ஸ்திதியுஞ் சிந்துங்கண்ணீரும் பார்க்குமெவர்க்கும் பரிதாபமெழுப்பக்கூடியது. இதை இவள் பிதா மாதா அறிந்திருந்துங் கவனியாமல் இருக்கிறார் களாம்.

ஐயையோ! கவலை, கஸ்தி, மிடிமை, தனிமை இவைகளின்றிப் பள்ளிக்கூடத்தில் படித்து வீட்டிலே விளையாடிப் பிதா மாதாவின் அன்பு, அணைப்பு, ஆதரவு முதலியவைகளை அனுபவிக்கவேண்டிய வயதில் இவளுக் கு நேரிட்டிருக்கும் நிர்ப்பாக்கியம் இரக்க உருக்கமற்ற வேறெத்தனையோ பெற்றோரின் பிள்ளைகளுக்கும் சம்ப விப்பதை உலகங் கண்டுவருகின்றதே..

பிள்ளைகள் அறிந்தும் அறியாமலும் ஏதுங் குற்றஞ் செய்யும்போது பெற்றோர் பொறுமையீனங்கொள்ளா மல், அவர்களுக்குத் தயவாய் நற்புத்தியூட்டி முன்மாதி ரிகைகாட்டி வேண்டிய சமயங்களில் நியாயமாய்த் தண் டித்துத் திருத்துவதேமுறை. என்றாலும் பெற்றோரின் திட்டு, பிள்ளைகளுக்குப் பெருந்தின்மைகளை விளைவிக்கு மென்பதைக் கவனியாமல் சிலர் வாயில் வந்தபடி அவர்கள் ளைத் திட்டிச் சபிப்பார்கள்.

மேலுந் தங்கள் கோபந்தீரக் குழந்தைகளைத் தூஷணித்துக் கிள்ளிக், குட்டி, அடித்து இழுத்து வாதிப்போருமுண்டு. இதனால் பிள்ளைகள் பெற்றோர்மட்டிற் பற்றுதலற்று ஏங்கிக் கலங்கிப் புத்தி மழுங்கி மூடரும் முரண்டருமாய்ப் போகிறார்கள். சில சமயங்களில் பிதா மாதா கோபவெறியினால் மக்களை எக் கச்சக்கமாய் அடித்து உதைப்பதினாலும், வேறுபலகுரூர மான ஆக்கினைகளை இடுவதினாலும் பிள்ளைகள் வலதுகு றைந்து அல்லது நோயுற்றுச் சீவியகாலமுழுதும் கேவ லப்பட்டு வருந்த நேரிடுகின்றது.

அறிவற்ற துஷ்ட மிருகங்களுள் முதலாய்க் கண்டு கேட்டறியாத இக்குரூர செயல்களை முற்றாய் விலக்கிப் பிள்ளைகளை அன்பாய் நடத்துவதே இவர்கள் பிற்காலம் பெற்றோரை நேசித்துக் கனம்பண்ணவும் குடும்பத்தில் சமாதானம் நிலைத்து அதன்மேல் தேவாசீர்வாதம் இறங்கச்செய்யவும் வழியாகும்.