இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கோழைத்தனம் புண்ணியமல்ல வென்பது

பாவத்தில் விழுந்ததைப் பற்றி உண்டாகிற பயம், ஆயாசம், அச்சத்தைப் பல பேர் புண்ணியமென்று எண்ணுவார்கள். கட்டிக் கொண்ட பாவத்தைப் பற்றி அவர்கள் படுகிற சஞ்சலங் கஸ்தி ஒரு பக்கத்தில் மனஸ்தாபத்தினால் உண்டானாலும் அதற்கு முக்கிய முகாந்தரம் அவர்களுடைய ஆங்காரமாம்.

அவர்கள் தங்கள் பலத்தை நம்பினதே, அந்தக் கஸ்திக்குக் காரணம். அதெப்படியென்றால், புண்ணியத்தில் தேறினோமென்று அவர்கள், தந்திர சமயத்தை விலக நினையாத நேரத்தில், தாங்களும் மற்றவர்களைப் போலப் பாவி கள் பலவீனரென்று அவர்கள் அறியும்போது, தாங்கள் பாவத்தில் விழுந்தது ஆச்சரியம், தங்கள் எண்ணமெல்லாந் தவறிப்போனதே யென்று கலங்கிக் கஸ்திப்பட்டு அவநம்பிக்கைப்படுகிறார்கள்.

இந்த நிர்ப்பாக்கியம், தாழ்ச்சி உள்ளவர்களுக்கு ஒருக்காலும் நேரிடாது. ஏனெனில், அவர்கள் தங்கள் பலத்தை ஒரு பொருட்டாய் எண்ணார்கள் . சர்வேசுரன் மீது முழு நம்பிக்கையை வைப்பார்கள். அவர்கள் பாவத்தில் விழுவது அவர்களுக்கு ஆச்சரியமாயிராது. அது தங்கள் பலவீனத்திற்கும், நிலையற்ற தனத்திற்கும் உரியதென்று அவர்கள் உறுதியாய் அறிவார்கள்.