இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கடவுளின் இரக்கம் நிந்திக்கப்படுகிறது!

இந்தப் பரிதாபத்திற்குரியவர்கள் பொறாமையால் பொங்கி நுரைத்தார்கள், மூச்சிறைத்தார்கள், முன்பு நீதிமான்களைத் தாங்கள் ஏளனம் செய்திருந்ததால் இப்போது கடுங்கோபத்தால் பொங்கி னார்கள். “பெக்காத்தோர் வீதேபித் எத் இராஷெத்தூர்; தெந்த்திபுஸ் சூயிஸ் ஃப்ரேமெத் எத் தாபெஷெத் - பாவி (நீதிமானின் நித்திய பேரின்பத்தைக் கண்டு) காய்ந்து, தன் பற்களைக் கடித்து ஏங்கிக் கரைந்து போவான்” (சங்.111:9).

“எனக்கு ஏன் சத்தம் எதுவும் கேட்கவில்லை ?” என்று நான் என் வழிகாட்டியிடம் கேட்டேன்.

“இன்னும் நெருங்கிப் போய்க் கேளும்!” என்று அவர் அறிவுறுத்தினார்.

நான் அந்தப் படிக ஜன்னலில் என் காதை வைத்து அழுத்திய போது, அலறல்களையும் கேவுதல்களையும், தேவதூஷணங்களையும் புனிதர்களுக்கு எதிரான சாபங்களையும் கேட்டேன். அது கிறீச்சிடுகிற, குழப்பமான குரல்கள் மற்றும் கூச்சல்களின் பெரும் கலகமாக இருந்தது.

அவர் பதிலுக்கு, “தங்கள் நல்ல நண்பர்களின் மகிழ்ச்சியான பாக்கியத்தை அவர்கள் நினைவுகூரும்போது, “நோஸ் இன்சென்ஸாத்தி, வீத்தாம் இல்லோரும் ஏஸ்திமாபாமுஸ் இன்ஸானியாம் எத் ஃபீனெம் இல்லோரும் சினே ஓனோரே. எக்சே குவோமோதோ கொம்புத்தாத்தி சுந்த் இந்தெர் ஃபீலியோஸ் தேயி எத் இந்தெர் ஸாங்க்தோஸ் ஸோர்ஸ் இல்லோரும் எஸ்த். எர்கோ எர்ராவிமுஸ் ஆ வியா வெரித்தாத்திஸ் - இவர்களை அல்லவா நாம் பல முறை நிந்தித்தோம், சகல நிந்தைகளுக்கும் பாத்திரவான்கள் என்று எண்ணினோம்! புத்தியீனரான நாம் அவர்களுடைய வாழ்வு பைத்தியமானது என்றும் அவர்களுடைய மரணம் இழிவான தென்றும் நினைத்தோமே. இதோ சர்வேசுரனுடைய மக்களாகப் பாவிக்கப்பட்டு பரிசுத்தரோடு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். நாமல்லவா சத்தியத்தின் வழியை விட்டு அகன்று திரிந்தோம்!” (ஞான. 5:4-5) என்று அவர்கள் ஒத்துக்கொள்வார்கள்” என்றார்.

“அதனால்தான் அவர்கள், “லாஸ்ஸாத்தி சூமுஸ் இன் வியா இனிக்வித்தாத்திஸ் எத் பெர்தீத்ஸியோனிஸ். எர்ராவிமுஸ் பெர் வியாஸ் திஃபீச்சிலெஸ், வியாம் ஆவ்த்தெம் தோமினி இஞ்ஞோரா - விமுஸ். குயித் நோபிஸ் ப்ரோஃபுயித் சூப்பர்பியா? . . . த்ரான்ஸியேருந்த் ஓம்னியா இல்லா தாம்க்வாம் உம்ப்ரா? - அக்கிரமப் பாவ வழியில் நடந்து தவித்தோம். கஷ்டமாக வழிகளைக் கடந்தோம். ஆனால் கர்த்தருடைய வழியை நாம் அறியவில்லை. நம் அகங்காரத்தால் நமக்கு வந்த பலன் என்ன?. . .சகலமும் நிழலைப் போல... கடந்து போயின" (ஞான. 5:7-9) என்று அவர்கள் அலறுகிறார்கள்.”

“நித்தியம் முழுவதும் இங்கே எதிரொலிக்கப் போகிற துக்கப் பாடல்கள் இப்படிப்பட்டவைதான். ஆனால் அவர்களது கத்தல்கள், முயற்சிகள், கூக்குரல்கள் எல்லாமே வீண்தான். ஓம்னிஸ் தோலோர் இர்ருவெத் சூப்பெர் ஏயோஸ்! - எல்லாத் தீமைகளும் அவர்கள்மேல் வந்து விழும்" (யோப். 20:22).”

இங்கே இனி காலம் என்பது இல்லை. இங்கே நித்தியம் மட்டுமே இருக்கிறது.

முழுமையான கடும் அச்சத்திற்குரிய நிலையில் என் சிறுவர்களில் பலரை நான் பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென எனக்கு ஓர் எண்ணம் உதித்தது: “இந்தச் சிறுவர்கள் எப்படி நித்தியத்திற்கும் சபிக்கப்பட்டிருக்க முடியும்? நேற்றிரவு அவர்கள் ஆரட்டரியில் இன்னும் உயிரோடு இருந்தார்களே!” என்று நான் கேட்டேன்.

“இங்கே நீர் பார்க்கிற சிறுவர்கள் எல்லோரும் கடவுளின் தேவ அருளுக்கு இறந்தவர்களாய் இருக்கிறார்கள். இப்போது அவர்கள் இறக்க நேர்ந்தால், அல்லது தங்கள் தீய வழிகளில் அவர்கள் பிடிவாதமாக நிலைத்திருந்தால், அவர்கள் நித்திய சாபத்திற்கு உள்ளாவார்கள். ஆனால் இங்கே நாம் நேரத்தை வீணாக்கிக் கொண் டிருக்கிறோம். நாம் தொடர்ந்து போகலாம்.”