இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நிலையற்ற பக்தர்கள், கள்ளப் பக்தர்கள், சுய நலப் பக்தர்கள்

நிலையற்ற பக்தர்கள்

101. மரியாயின் மீது பக்தி கொள்வதும் விடுவதுமாக இருப்பவர்களே நிலையற்ற பக்தர்கள். இப்பொழுது, உருக்கமான பக்தியிலிருப்பார்கள். அடுத்து உப்பு சப்பற்றுப் போவார்கள். ஒரு சமயம் மாதாவுக்காக எதையும் செய்யத் தயாராயிருப்பார்கள், கொஞ்சம் பிந்தி முழுவதும் மாறிவிடுவார்கள். தேவ அன்னை மீதுள்ள எல்லாப் பக்தி முயற்சியையும் செய்வதென ஏற்றுக் கொண்டு ஆரம்பிப்பார்கள். மாகாவின் பக்தி சபைகளில் சேருவார்கள். பின் சபை ஒழுங்குகளை சரிவர அனுசரிக்க மாட்டார்கள். நிலவைப் போல் நிலைமாறுவார்கள். நிலவைப் போல் அவர்களையும் மாமரி தன் பாதத்கினடியில் போடுகிறார்கள். ஏனென்றால், விசுவாசியான இக்கன்னி கையின் பிரமாணிக்கத்தையும் நிலைத்து நிற்கும் தன்மை னியயும் கைக்கொள்ளுகிற ஊழியருடன் எண்ணப்படத் தகுகியற்றவர்களும் நிலைமாறுகிறவர்களுமாக அத்தகை யோர் இருக்கிறார்கள் மிகுதியான செபங்களாலும் பக்தி முயற்சிகளாலும் தனக்குத்தானே சுமை ஏற்றிக் கொள்ளா மலிருப்பதே நல்லது. சிலவற்றை , அன்புடனும் பிரமாணிக்கத்துடனும். உலகம் பசாசு சரீரம் இம்மூன்றையும் பொருட்படுத்தாமல் நன்கு நிறைவேற்றுவதே மேலானது.

கள்ளப் பக்தர்கள்

102. தாங்கள் இருப்பதை விட வேறுவிதமாக மற்றவர்களுக்குக் காணப்படும் பொருட்டு, தங்கள் பாவங்களையும் தீய பழக்கங்களையும் பிரமாணிக்கமுள்ள இக்கன்னிகையின் போர்வைக்குள் மறைத்துக் கொண்டி ருப்பவர்களே கள்ளப் பக்தர்கள்.

சுய நலப் பக்தர்கள்

103. சுயநலமே நோக்கமாகக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் ஏதாவது நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற வேண்டும், ஆபத்திலிருந்து தப்பவேண்டும், நோய் குணமாக வேண்டும், அல்லது இது போன்ற ஒரு தேவை நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக தேவ அன்னையிடம் மன்றாடுவார்கள்: மற்றப்படி அவர்களை நினைக்கமாட்டார்கள். இவர்களெல்லாம் கடவுளுக்கும் அவர் திரு அன்னைக்கும் ஏற்புடையவர்களல்ல, இவர்கள் தவறான பக்தியுடையவர்கள்,

104. ஆகவே எதையும் நம்பாமல் எல்லாவற்றையும் குறைகூறும் விமர்சனப் பக்தரோடும், ஆண்டவர் மீதுள்ள மரியாதைக்காக மாதா மீது அதிக பக்தி கொள்ள பயப்படும் தடுமாறும் பக்தரோடும், தங்கள் பக்தியை யெல்லாம் வெளிக் கைங்கரியங்களிலே கொண்டிருக்கும் வெளி ஆசாரப் பக்தரோடும், மாதா மீது தாங்கள் காட்டும் தவறான பக்தியின் மறைவில் பாவத்தில் உழலும் துணிந்த பக்தரோடும், தங்கள் நிலையற்ற தன்மையால் பக்தி முயற்சிகளை மாற்றிக் கொள்ளும் அல்லது மிகச் சிறிய சோதனை வரு முன்னே பக்தி முயற்சியை யெல்லாம் கைவிட்டு விடும் நிலையற்ற பக்தரோடும்' நல்லவர்களெனக் காணப்படும்படி மாதாவின் சபைகளில் சேர்ந்து சபைச் சின்னங்களை அணிந்து கொள்ளும் கள்ளப் பக்தரோடும், இறுதியாய் இலௌகீக நன்மை களைப் பெறவும் அல்லது உடல் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்காகவுமே மாதாவிடம் மன்றாடும் சுயநலப் பக்தரோடும் சேர்ந்துவிடாதபடி நாம் எச்சரிக் கையாயிருக்க வேண்டும்.