மாசற்ற இதயம்

மரியாயின் மாசற்ற இதயமானது படங்களிலும் சுரூபங்களிலும் மலர்களால் சூழப்பட்டு, வாளால் ஊடுருவப்பட்டு நெருப்புச் சுவாலையுடன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மலர்கள் மரியாயின் மாசுமறுவற்ற தூய்மையைக் காண்பிக்கின்றன. ஜென்மப் பாவமோ, கர்மப் பாவமோ அந்த இரு தயத்தை அணுகியதில்லை. தம் சம்மனசுக்களிடம் பாவத்தைக் கண்ட கடவுள் சம்மனசுக்களின் இராக் கினியான தம் மாதாவிடம் பாவத்தைக் காணவில்லை.

அன்னையின் இருதயத்தை ஊடுருவும் வாள் (சில உருவங்களில் ஏழு வாட்களைப் பார்க்கலாம்) அவள் பட்ட வேதனையையும் துயரத்தையும் காண்பிக்கின்றன. யேசுவைத் தவிர வேறு யாரும் அத்தனை வேதனைப்பட்டதில்லை. தான் நேசிக்கும் மக்களின் பாவ துரோகங்களே மாசற்ற அன்னையின் துயரத்தின் காரணங்கள். அக்கினிச் சுவாலை அவளது இதயத்தில் பற்றி எரிந்த சிநேகத்தைக் காண்பிக்கிறது. தன் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் அவள் கடவுளை நேசித்து ஆராதித்தாள். மானிட உள்ளங்களில் தேவசிநேக அக்கினியைப் பற்றவைக்கும்படி உலகுக்கு வந்த அளவற்ற நேசமாகிய கடவுளை அவள் ஓயாது சிந்தித்து ஆராதித்து நேசித்து வந்தாள்.

மரியாயின் மாசற்ற இதயம் நன்மைத் தனம் நிறைந்தது. துயருறறோரின் கண்ணீ ரை அது துடைக்கிறது. மானிடரை ஈடேற்ற வேண்டும் என்னும் ஆவலால் அது துடித்துக் கொண்டிருக் கிறது. பாவிகளின் அடைக்கலம் அது; எல்லோருக் கும் தேவையான வரப்பிரசாதங்கள் அனைத்தையும் நிரம்பக் கொண்டது. உலகத்தின் மகிழ்ச்சியும் நம் பிக்கையும் அந்த இதயமே.

இப்பொழுது உலகம் இருக்கும் நிலை யாவரும் அறிந்ததே. மரியாயின் மாசற்ற இருதயமே உலகத் தின் நம்பிக்கை. “மரியாயின் இருதயத்திலேயே உண்மைச் சகோதரத்துவத்தை உலகம் கண்டடை யும்; மரியாயின் இருதயத்திலேயே அது கடவுளது பொறுத்தலையும் இரக்கத்தையும் பெறும். மரியாயின் இருதயத்தாலேயே உண்மை , நீதி, சிநேகம் இவற்றா லாகிய புது நகரம் அமைக்கப்படும்; மரியாயின் இரு தயத்தின் மகிமை கீர்த்தியை, சுதந்திரமடைந்த மானிட சந்ததி நேசத்துடனும் நன்றியுடனும் உலகுக்கு அறிவிக்கும்” என இருநூறு ஆண்டு களுக்குமுன் புனித கிரிஞ்ஞன் தெமொன்போர் எழுதி வைத்தார்.

1917-ம் ஆண்டில் பாத்திமாவில் மூன்று சிறுவ ருக்குக் காட்சியளித்த தேவதாய் இதை தெளிவாகக் கூறியிருக்கிறாள். “பாவிகள் மனந்திரும்பவும் என் மாசற்ற இருதயத்துக்கு விரோதமாகச் சொல்லப் படும் தூஷணங்களுக்கும், கட்டிக் கொள்ளப்படும் துரோகங்களுக்கும் பரிகாரம் செய்யும்படியும் வேதனைப்பட மனதாயிருக்கிறீர்களா?" என மே 13ம் நாளன்று அன்னை சிறுவரைக் கேட்டாள்.

“என்னை மக்கள் அதிகமாக அறிந்து அதிகம் நேசிக்கச் செய்யும்படி யேசு உன்னைப் பயன் படுத்து வார். என் மாசற்ற இருதயப்பக்தி உலகெங்கும் ஸ்தாபிக்கப்படவேண்டும் என அவர் விரும்புகிறார்'' என ஜூன் 13ம் நாளன்று அன்னை லூஸியிடம் தெரிவித்தாள்.

“பாவிகளுக்காக உங்களைப் பரித்தியாகம் செய்யுங்கள். அடிக்கடியும், முக்கியமாக பரித்தியாகங்கள் செய்யும் பொழுதும் 'ஓ யேசுவே, நாங்கள் உம்மை நேசிப்பதாலும், பாவிகள் மனந்திரும்பவும், மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு வருவிக்கப்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாகவும் இதை ஒப்புக் கொடுக்கிறோம்'' எனச் சொல்வீர்களாக... நரகத்தை யும் அதில் நிர்ப்பாக்கிய பாவிகளின் ஆத்துமங்களை யும் நீங்கள் பார்த்தீர்கள். ஆத்துமங்கள் நரகத்தில் விழாமல் காப்பாற்றும் வண்ணம் என் மாசற்ற இரு தயப்பக்தி உலகில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என நம் ஆண்டவர் விரும்புகிறார். நான் சொல்கிற பிர காரம் மனிதர் செய்வார்களானால் அநேக ஆத்துமங் கள் காப்பாற்றப்படும், உலகில் சமாதானம ஏற் படும்.

'யுத்தம் (1914--1918) முடியப் போகிறது. ஆனால் கடவுளுக்கு விரோதமாகச் செய்யப்படும் துரோகங்கள் நிறுத்தப்படாவிட்டால் இன்னொரு அதிக கொடிய யுத்தம் தொடங்கும்... இதைத் தடுக்கும்படியாக உலகம் என் மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக் கொடுக்கப்பட வேண்டும். மாதத்தின் முதற் சனிக் கிழமை தோறும் நிந்தைப் பரிகாரமாக மக்கள் திவ்விய நற்கருணை உட்கொள்ள வேண்டும். நான் சொல்கிற பிரகாரம் மக்கள் செய்வார்களானால் ருஷியா மனந்திரும்பும்; உலகில் சமாதானம் நிலவும். அல்லாவிடில் ருஷியா தன் தப்பறைகளை உலகெங் கும் பரப்பும்; யுத்தங்களையும் திருச்சபைக்கு விரோத மாக குழப்பங்களையும் எழுப்பும்; நல்லவர்கள் அநேகர் வேதசாட்சியாவார்கள். பாப்பானவர் மிக துன்பப் பட நேரிடும்... அநேக நாடுகள் அழியும்...எனினும் இறுதியாக என் மாசற்ற இருதயமே வெற்றிபெறும். என் மாசற்ற இருதயத்துக்கு உலகம் ஒப்புக் கொடுக் கப்படும், ருஷியா மனந்திரும்பும், உலகுக்கு சமாதா னம் அருளப்படும்'' என தேவதாய் ஜூலை 13ம் நாளன்று அறிவித்தாள்.

மாதாவைப் பார்க்கும் பாக்கியம் பெற்ற சிறுவர் மூவரில் லூஸி மாத்திரமே இன்னும் உயிருடனிருக் கிறாள். தன் வழியாக மரியாயின் மாசற்ற இருதயப் பக்தி உலகில் பரவ கடவுள் விரும்புகிறார்; அதற்கா கவே கடவுள் தன்னை உலகில் விட்டு வைத்திருக்கிறார் என லூஸி அறிவாள். ஜஸிந்தா சாகுமுன் லூஸியை நோக்கி, “நல்ல கடவுள் தம் வரப்பிரசாதங்களை மரியா யின் மாசற்ற இருதயத்தின் வழியாகத் தர விரும்பு கிறார். இந்த வரப்பிரசாதங்களை அவள் வழியாகக் கேட்க நாம் தயங்கலாகாது; யேசுவின் இருதயமா னது மரியாயின் மாசற்ற இருதயத்துடன் வந்திக்கப் பட விரும்புகிறார்; சமாதானத்தை மனிதர் மரியாயின் மாசற்ற இருதயத்திடம் மன்றாடிக் கேட்க வேண்டும். ஏனெனில் கடவுள் அதை அவளிடம் ஒப்படைத்திருக் கிறார். இதையெல்லாம் நேரம் வந்ததும் நீ தெளிவாக எடுத்துக் கூறவேண்டும்'' என்றனள்.

மேற்கூறியவற்றிலிருந்து நாம் அறிவதென்ன? மரியாயின் மாசற்ற இருதயப் பத்தி எங்கும் பரவ வேண்டும்; இது கடவுளுடைய விருப்பம். உலகத்தை அலைக்கழிக்கும் தீமைகள் அந்த மாசற்ற இருதயத் தின் மூலமாகவே அகலும். குடும்பங்களில் தந்தை யின் கோபத்தைத் தடுத்து வெற்றிபெறுவது என்ன? தாய் உள்ளமே. பாவம் நிறைந்த உலகத்தைத் தண் டிக்க கடவுள் தம் நீதியின் கரத்தை நீட்டியிருக்கிறார். மாசற்ற அன்னையின் தாய் உள்ளம் மாத்திரமே அந்த கோபத்தைத் தணிக்கும்.

இத்தனை கணக்கற்ற நலன்களை உலகுக்குப் பெற் றுக்கொடுப்பது நம் கையில் இருக்கிறது. அதற்காக நாம் செய்ய வேண்டியது என்ன? மரியாயின் மாசற்ற இருதயத்தின் மேல் நாம் பக்தி கொண்டிருக்கவேண் டும். இந்தப் பக்தி, ஒப்புக்கொடுத்தல், நிந்தைப் பரி காரம் இவ்விரண்டிலும் அடங்கியிருக்கிறது. அதா வது, நாம் நேசத்துக்குப் பதில் நேசம் காண்பித்து, அந்த மாசற்ற இருதயத்துக்கு வருவிக்கப்படும் நிந்தை அவமானங்களைப் பரிகரிக்க முயல்கிறோம்.

மரியாயின் மாசற்ற இருதயத்துக்குத் தோத்திர மாக நம் ஒவ்வொரு செய்கையையும் ஒப்புக்கொடுக் கிறோம். அந்த அன்னைக்குப் பிரியப்பட்டு, அவளை வந்தித்து, அவளுக்குக் கீழ்ப்படிந்து, அவளது உடைமையாயிருக்க நாம் ஆசிக்கிறோம். நாம் அவளை நேசித்து அவளுக்குச் சேவை செய்வதாகவும் அவ ளது புண்ணியங்களை நாமும் கண்டு பாவித்து அவ ளது மகிமைக்காக சில குறிப்பிட்ட பக்தி முயற்சி களைச் செய்வதாகவும் வாக்களிக்கிறோம்.

"மரியாயின் மாசற்ற இருதயமே, என்னை முழு தும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்'' என நாள் தோறும் காலையிலும், கூடுமானால் மற்ற நேரங்களி லும் சொல்லி நம்மை ஒப்புக்கொடுக்கலாம்; அல்லது வீட்டிலோ கோவிலிலோ, அன்னையின் திருஉருவத் தின் முன் நின்று ஒப்புக்கொடுத்தலுக்கென்று எழு தப்பட்டுள்ள நீண்ட மன்றாட்டுகளைச் சொல்லலாம். குடும்பத்தினர் ஒன்று கூடியிருக்கையில் தலைவன், தலைவி அல்லது குருவானவர் இந்த ஒப்புக்கொடுத் தல் மன்றாட்டை வாசிக்கலாம். நாம் வார்த்தைகளி னால் சொல்வதை கிரியைகளால் காட்டவேண்டும். அதாவது, விசேஷ விதத்தில் மரியாயின் மைந்தன், ஊழியன் என உரிமை பாராட்டும் நாம், அதற்கேற்ப வாழ்க்கை நடத்தவேண்டும். கண், காது, வாய், இரு தயம், நினைவு இவை எல்லாவற்றையும் அன்னைக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு அந்த அவயவங்களை அவளுக் குப் பிரியமற்ற வழியில் பயன்படுத்தலாகாது.

அன்னையின் மாசற்ற இருதயத்துக்கு நாம் நிந் தைப் பரிகாரம் செய்கையில் அவளை நாம் மகிமைப் படுத்துகிறோம். நம் நிந்தைப் பரிகாரம் தேவதாய்க் குப் பிரியப்பட நாம் அவளோடு ஒன்றிக்கவேண்டும். பாவத்தின் மேல் நமக்குள்ள பற்று தலை முதலில் அகற்றினாலொழிய இந்த ஓன்றிப்பு ஏற்படாது. 

ஏனெனில் பாவமே இந்த ஒன்றிப்பை அழிக்கிறது. அவளது வேதனைகளில் நாமும் பங்குபற்றி, கிறிஸ்து நாதரது ஞானச் சரீர்த்துக்காக அவளுடன் சேர்ந்து நாம் நம்மையும் பலியாக ஒப்புக்கொடுப்போமானால் இது மிகச் சிறந்ததாகும்.

நமக்கு வரும் சோதனை யே, நாம் செய்யும் பரித் தியாகங்கள் வேலைகள் ஜேபங்கள் படும் துன்ப வருத் தங்களை யேசுவின் திரு இருதயத்துக்கோ , மரியாயின் மாசற்ற இருதயத்துக்கோ, அல்லது இருவருக்குமே, நேசத்துடன் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கலாம். அன்னை பாத்திமாவில் சொல்லித்தந்த “ஓ யேசுவே, நாங்கள் உம்மை நேசிப்பதாலும், பாவிகள் மனந் திரும்பவும், மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு வருவிக்கப்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாகவும் இதை ஒப்புக்கொடுக்கிறோம்'' என்னும் ஜெபத்தை இச் சந்தர்ப்பங்களில் சொல்லவேண்டும்.

பாத்திமாவில் மாதா படிப்பித்த சிறந்த நிந்தைப் பரிகாரம் மாதத்தின் முதற் சனிக்கிழமையில் உட் கொள்ளும் பரிகார நன்மையே. உலகத்தை மரியா யின் மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக்கொடுப்பதற்கு அடுத்தபடியாக மாதா கேட்டது இதுவே. (ஒவ் வொருவரும் தன்னை ஒப்புக்கோடுப்பது அதி முக்கிய மானது.)

"எனக்கு நிந்தைப் பரிகாரம் செய்யும் நோக்கத் துடன் ஐந்து மாதங்களாக தொடர்ச்சியாக முதற் சனிக்கிழமையன்று பாவ சங்கீர்த்தனம் செய்து திவ்விய நன்மை உட்கொண்டு, ஐம்பத்து மூன்று மணி ஜெபம் செய்து, என்னுடன் சேர்ந்து ஜெப மாலையின் தேவ இரகசியங்களைப்பற்றி கால்மணி நேரமாக சிந்திக்கும் அனைவருக்கும் ஈடேற்றத்துக்குக் தேவையான வரப்பிரசாதங்களை மரண நேரத்தில் கொடுத்து உதவுவதாக வாக்களிக்கிறேன்'' என 1925 டிசம்பர் 10-ம் நாளன்று லூஸியாவிடம் தேவ தாய் அறிவித்தாள். இந்த நிபந்தனைகளை நிலை றுகையில், மரியாயின் மாசற்ற இருதயத்துக்குவற் விக்கப்படும் நிந்தைகளுக்குப் பரிகாரம் செய்ய நோக்கம் எப்பொழுதும் நம் மனதில் இருக்கவேண் டும். மானிடரின் பாவாக்கிரமங்கள் நன்றியின்மை இவையே அன்னையின் மாசற்ற இருதயத்தை விடாது ஊடுருவும் வாள். நாம் நித்திய வாழ்வு அடைய இரக் கம் நிறைந்த அன்னையின் இருதயம் வழி காண்பித்த தற்காக நாம் அவளுக்கு எவ்வளவோ கடமைப்பட் டிருக்கிறோம். நாம் மிகு நன்றியுடன் நடக்க வேண் டும்.

கன்னிமரி அன்பினால் கடவுளின் தாயானாள், நம் தாயும் ஆனாள். இந்த அன்பு அவளுடைய இருதயத்தில் வதிகிறது. கடவுளுடையவும் மானிட ருடையவும் தாய் என்ற முறையில் கடவுளுடன் நம்மைச் சமாதானப்படுத்தி வைக்கக்கூடிய நிலையில் அவள் இருக்கிறாள். அவள் நம்மை நேசிப்பதாலும் தன் பேறு பலன்களாலும், கடவுளுக்குச் சமர்ப்பித் துள்ள நிந்தைப் பரிகாரங்களாலும், நமக்கு வேண்டிய வரப்பிரசாதங்களையும் உதவிகளையும் பெற்றுக் கொடுக்கிறாள். அவள் சகல வரப்பிரசாதங்களின் மத்தியஸ்தி; வரப்பிரசாதங்களின் வாய்க்கால்; மரி யாயின் கரங்கள் வழியாக வரப்பிரசாதங்களை நாம் பெற்றுக் கொள்கிறோம். வரப்பிரசாதங்களை நமக்குப் பெற்றுத்தர அவள் ஆசையாயிருக்கிறாள். தன் மாசற்ற இருதயத்தில் பற்றி எரிந்த தேவ சிநேகமும் பிற சிநேகமும் சகல உள்ளங்களிலும் பற்றி எரியச் செய்ய அவள் ஆசிக்கிறாள். எல்லா இருதயங்களையும் நேசிப்பவரும் அவற்றின் அரசருமான தன் மகனி டம் அனைவரையும் அழைத்துச் செல்ல அவள் விரும்புகிறாள். ஆனால் இதை எத்தனையோ நன்றி கெட்ட ஆத்துமங்கள் எதிர்த்து நிற்கின்றன, தடை செய்கின்றன. இது அவளது இருதயத்தை வாட்டு இதில் அன்னையின் இருதயத்துக்கு ஆறுதலளிக்க வேண்டும். ஆறுதல் அளிக்கச் சிறந்த வழி அன்னை காண்பித்துள்ள வழியில் நடப்பதே மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு நம்மை உண்மை யாகவே ஒப்புக் கொடுத்து, நிந்தைப் பரிகாரம் செய் வோமாக.