நித்திய ஞானமானவரின் மூலமும், உன்னதத் தன்மையும்!

15. இங்கே, அர்ச். சின்னப்பரோடு சேர்ந்து நாம், "புத்திக்கெட்டாததும், ஆராய்ந்தறியக் கூடாததுமான தெய்வீக ஞானத்தின் ஆழமே!" என்று நாம் அறிக்கையிட வேண்டும் (உரோ. 11:33). அவருடைய ஜென்மத்தை விவரிப்பவன் யார்? (இசை. 53:8; அப். நட 8:33). 

நித்திய ஞானமானவரின் மூலத்தைப் பற்றிப் போதுமான விளக்கம் ஒன்றைத் தர முயலும் அளவுக்கு ஒளிர்விக்கப்பட்ட சம்மனசோ , அவசர புத்தியுள்ள மனிதனோ யாராவது உண்டா? ஏனெனில் இங்கே அவரது தெய்வீக ஒளியின் வீரியமிக்க பிரகாசத்தால் குருடாக்கப்படாதபடி மனிதப் பிறவிகள் அனைவரும் தங்கள் கண்களை மூடிக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

அவரைச் சித்தரிக்கும் முயற்சியில் அவரது உத்தமமான தெய்வீக அழகைக் கறைப்படுத்தி விடாதபடி அனைவரும் மௌனமாக இருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மனித மனமும் தனது ஒன்றுமில்லாமையை, தனது இயலாமையை உணர்ந்து, அவரை ஆராதிக்க வேண்டியதாக இருக்கிறது. இல்லையெனில், அவரை ஆழங்காணும் முயற்சியில், அவரது மகிமையின் பிரமாண்டமான பாரத்தால் அது நசுக்கப் பட்டு விடும்.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...