சுத்தம்

மனுஷனுடைய தோலின் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் சுமார் 2800 வெயர்வைத் துவாரங்கள் உண்டென்றும், அவைகள் ஒரு நடுத்தரமான மனுஷனின் முழுத்தேகத்திலும் ஏறக்குறைய எழுபது இலட்சம் இருக்கின்றனவென்றும், ஈனோ, டோன்முதலிய பெரிய வைத்தியர்கள் கூறுகின்றார்கள். இத்துவாரங்கள் வழியாக இரத்தத்திலிருக்கும் துந்நீர் நிதமும் வெயர்வையாகப் பொழிந்துகொண்டிருக்கிறதாம். நாளுக்கு நாள் குழிப்பு முழுக்கினால் தேகத்தைச் சுத்தமாக்காவிடில் மேற்படி துவாரங்கள் படிப்படியாய் அடைபட துந்நீர் உள்ளடங்கி இரத்தத்தைப் பழுதாக்கிக் கணக்கற்ற நோய்களைப் பிறப்பிக்கின்றதாம்.

பிள்ளைகள் கைக்குழந்தைகளாய் இருக்கையில் தாய் சகோதரிகள் அவர்களை அடிக்கடி குளிப்பாட்டித் துடைத்து உலர்த்தி ஊத்தைபடாதபடி கவனிப்பார் கள். ஆனால், அவர்கள் நடந்தோடித்திரிகிற பருவ மாகும்போது பலநாள் குளிப்பு முழுக்கில்லாமல் எவ் வளவு அசுத்தமாயிருந்தாலும் பெற்றார் முன் போலக் கவனிப்பதில்லை. பெற்றாரின் அசட்டையாலல்லவோ அநேக பிள்ளைகள் காலமே நித்திரையால் எழும்பும் போது முகம் கழுவாமலும், பல் விளக்காமலும், நாக்கு வழியாமலும், வாய் நீர் கடைவாயால் வழிந்து கன்னத் திற் காய்ந்தபடியிருக்க ஊத்தை முகத்தோடும் துர் நாற்றம் வீசும் வாயோடுந் திரிகிறார்கள்.

முத்துப்போல் முளைத்த பற்கள் கவனக்குறைவால் காவிபிடித்துச் சூத்தைகுத்தி அவலக்ஷணமானவையாயும் அரிகண்டம் செய்வனவாயும் இருப்பதுமன்றி உடம்பில் பற்பல நோய்களுக்கும் காரணமாகின்றன. சில நோயாளிகளுக்கு ஐரோப்பிய வைத்தியர் மருந்து செய்யுமுன் ஒருசந்த வைத்தியனைக்கொண்டு பற்களைத் துப்புரவாக்குவித்துக்கொண்டு அல்லது அவைகளை முற்றாய்ப் பிடுங்கு, வித்துப்போட்டு வரும்படி கற்பித்ததை அறிவோம்.

பிள்ளைகள் சற்று வளர்ந்தபின் தங்கள் நாசியிலிருந்து வரும் சளியைத் தாங்களாகச் சீறியெறியப் பழக்கப் படாததினால் அது வடிந்து கொண்டிருக்கும், அல்லது அவர்கள் அதை உறிஞ்சி உறிஞ்சித் திரிவார்கள். சீறினா லும் சிலைத்தலைப்பிற் துடைத்துவிடுவார்கள். இவை யெல்லாம் பிறருக்கு எவ்வளவு அருவருப்புக்கிடமான வையென்று சொல்லத் தேவையில்லை. விரல்களைப் பார்த்தால் பூனைக்குப்போல நகம் வளர்ந்து ஊத்தை யடைந்திருக்கும். சாப்பிடத் துவங்குமுன் கை கழு "வப் பழகாததினால் கையிலும் நகங்களிலுமிருக்கும் ஊத்தை நு தம்பிக் கழன்று உணவோடு சேர்வது அதிசய மல்ல. அ சிறுவருக்கு ஏ தாகுதல் பழவகை, கிழங்கு பலகாரம் முதலியவை கிடைத்தால் அவைகளை மெத்த விருப்பத்தோடு அங்குமிங்குங் கொண்டு திரிந்து சூப்பிக் கடித்துச் சாப்பிடுவார்கள். சாப்பிட்டபின் கையையும் வாயையும் கழுவவோ அவர்களுக்குப் பழக்கமில்லை.

புகையிலை முக்கியமாக இளைஞரின் சுகத்துக்குஞ் சுத்தத்துக்கும் ஏற்றதல்ல. என்றாலும், அநேக பிள்ளை கள் கொடுப்பு நிறையப் புகையிலையைத் தக்கையாய் அடைந்துகொண்டு அல்லது வாயில் கொட்டன் சுருட் டைக் கவ்விக்கொண்டு திரிவார்கள். இவ்விஷயத்தைப் பற்றி துல்லொக் என்பவர் எழுதியிருப்பது யாதெனில் முற்றாய் வளர்ந்தவர்கள் மட்டாய்ப் புகையிலை பாவிப் பதினால் அவர்களுக்குச் சற்று நயமுண்டென்று ஒத்துக் கொண்டாலும், இளைஞருக்கு அது சற்றுந் தேவையு மில்லை, அ தினால் யாதோர் நன்மையுமில்லை. இதைப் பற்றி ஓர் பெரிய வைத்தியர் சொல்வதாவது : சுருட்டுக் குடிக்கும் பையன் ஆண்மையுள்ளவனாயும், கெட்டிக் காரனாயும் வருவது அரிது. வழக்கமாக அவன் சரீர பெலனற்றவனாயிருப்பதுடன் வ மனப்பெலனு மற்றவ னாவான். ஆகையால், உலகத்தில் உயர்ச்சி அடைய விரும்பும் வாலிபர் புகையிலையைப் பாஷாணம்போல் விலக்குவார்களாக. புகையிலை பாவிக்கும் பழக்கம் அடிக்கடி உமிழ்நீர் துப்பும் அருவருப்பான பழக்கத்தை உண்டாக்கிச் சீரணிப்பைக் குறைத்து சுவாசத்தைப் பழுதுபடுத்தி, பணத்தையும், நேரத்தையும் பாழாக்கி விடுகின்றது. இக்கெட்ட பழக்கத்துக்கு அடிமைப்பட்ட பின் அதை விடுவது மிக வல்லையாகையால் அதைப் பழகாதிருப்பதே தாவிளை '' என்கிறார். புகையிலை தின் கிறவர்களுடைய வாய் எவ்வளவு நாறுகிறதென்பதை அவர்கள் அறியவும் மாட்டார்கள், பிறர் சொன்னால் அதை ஒத்துக்கொள்ளவும் மாட்டார்கள். புகையிலை யைப்போல வெற்றிலை தின்னும் பழக்கமும் வெறுப் புக்குரியதாம். அதனாலல்லவோ சீர்திருத்தமுள்ளவர் கள் அதை விலக்கி வருகிறார்கள். என்றாலும், அநேக பெண்கள் வெற்றிலை பாவிப்பதினால் தங்கள் அழகான பல்லும் உதடும் நாவும் வாய்முழுவதும் எவ்வளவு அசுத்தமாயும் அலங்கோலமாயும் போகின்றனவென்பதைக் கவனியாமல் அப்பழக்கத்தில் பெருமையும் அக்களிப்புக் கொள்ளுகிறார்கள். கட்டுமட்டில்லாமல் வெற்றிலை பாவிக்கிறவர்கள் வாயைத் திறந்து ஒரு முகக் கண்ணாடியில் தங்கள் உதடு பல்லு நாக்கு முதலியவை களின் அவலக்ஷணத்தை உற்றுப் பார்ப்பார்களாகில் வெட்கப்பட்டு ஒருவேளை இப்பழக்கத்தை மட்டுப் படுத்திக்கொள்வார்கள். ஐயையோ சிலர் தேவாலயங் களிலும் கொடுப்பு நிறைய வெற்றிலையைத் தக்கையா யடைந்துகொண்டு வந்திருப்பார்களே.

சில பிள்ளைகளின் தேகம் முழுவதும் பசைபூசிக் காயவைத்த தோல்போல ஊத்தை நிறைந்திருக்கிற தையும் காலையில் உப்புப் பூத்திருக்கிறதையும் பெற்றார் காணாமலிருக்கிறதில்லை. எண்சாணுடம்புக்குச் சிரசே பிரதானமென்றாலும் அடிக்கடி தலை தோயாமலும் மயிர் சீவாமலும் விடுவதினால் சொடுகும் ஈரும் பேனும் நிறைந்திருக்கும். தலைமயிரோ என்றால் பிசான் பிடித்து சிக்கிமுறுகிப் பறட்டை பத்தியிருக்கும். தாய்மார் மக்களுக்குப் பேன்குத்துகிறதிற் செலவழிக்கும் நேரத் தில் கொஞ்சத்தையாகுதல் அவர்களுடைய தலைக்குக் கிழமைக்குக் கிழமை அரைப்பு சீயாக்காய் அல்லது சவுக்காரம் புரட்டி , தோயவார்த்து நாளுக்குநாள் கொஞ்சம் எண்ணெய் தேய்த்துத் தலைமயிரைச் சீவிக் கட்டிவந்தால் அல்லது பிள்ளைகளை அப்படிச் செய்து வரப் பழக்கினால் இவர்கள் தலை நிறைய நீச சீவசெந்துக்க ளான பேனையும் ஈரையும் சுமந்து திரியவும் பேன்கடி தாங்கமாட்டாமல் அடிக்கடி தலையைச் சொறிந்து விறாண்டிக்கொண்டிருக்கவும் வேண்டியதில்லையே..

அநேக பிள்ளைகள் கிழிந்த ஊத்தைக் கந்தையோடு திரிவதற்குப் பெற்றார் சொல்லுஞ் சாட்டுப்போக்கு தாங்கள் முட்டுப்பட்டவர்க ளென்பதாம். இளைஞர் கிழமைக்குக் கிழமை அல்லது வேண்டுமானால் நாளுக்கு நாள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்துடுக்கவுங் கிழிந்ததைத் தைக்கவும் பெற்றார் அவர்களைப் பழக்குவதற்கு எவ்வளவு செல்வந் தேவையோ தெரியவில்லை.

எத்தனையோ பிள்ளைகள் சிரங்கில் அவிந்து உத்தரிப் பதற்கு விசேஷ காரணங்களி லொன்று பல அசுத்த மல்லவா? கால் கை கழுவியபின்னும் ஸ்நானஞ்செய்த பின் னும் தேகத்தை நன்றாய்த் துடையாமல் விடுவதா லும் சிலருக்குச் சிரங்குண்டுபடக் கூடுமென்பது சில வைத்தியரின் எண்ணம். சேற்றிலும் வெள்ளத்திலும் விளையாடுவதினால் நீர்ச்சுரங் குண்டுபடுமென்று அநேகர் அனுபவத்தால் அறிவார்கள்.

பிள்ளைகள் நாள்தோறும் பள்ளிக்குப் போகுமுன் கால் கை முகங்கழுவித் தலைசீவித் துப்புரவாய் உடுத்துக் கொண்டு போகும்படி நல்லபெற்றார் மெத்தக் கவனிப் பார்கள். அது தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் பெரும் மேன்மையும் பெருமையுமென்று அவர்களுக்கு நன்றாய்த் தெரியும். ஆனால், கசுமாலரான பெற்றாருக்கு அதெல்லாம் அலுப்பாம். சில பாடசாலைகளிற் பிரவே சிக்கும்போது அங்குள்ள துர்நாற்றத்திலும் பிள்ளை களின் அலங்கோலமான வேஷத்திலுமிருந்து அவர்க ளுடைய வளர்ப்பும் வீடுவளவும் எத்தன்மையானவை யென்று இலகுவாய் உத்தேசிக்கக்கூடும்.

வீடுவாசலைப்பார்த்தால் அங்கே விளக்குமாறில்லை யென்று விளங்கிக்கொள்ள வேண்டியதா யிருக்கும். இடைக்கிடை கூட்டினாலும் குப்பையை அள்ளி எட்டத் திலே குப்பைக்கிடங்கிற் கொட்டிவிடாமல் பலநாள் முற்றத்தில் மூலைக்கு மூலை ஒதுக்கிவிடுவார்கள். துப்புர வும் சுறுசுறுப்புமற்ற சோம்பேறிப் பெண்கள் சமையல் சாப்பாடு முடிந்தவுடன் சட்டிபானைகளை நன்றாய்க் கழு விக் காயவையாமல் அசட்டையாய் விட்டுவிடுவார்கள். அடுத்தநேரம் அவைகளைப் பரும்படியாய் அலைசிப் போட்டுச் சமைப்பார்கள். இது சுத்தத்துக்கும் சுகத் துக்கும் எவ்வளவு மாறுஎன்பதை அவர்கள் நினைக்கிற தில்லை. சிலகாலத்துக்குமுன் தொகையான மாணாக்கர் வசித்திருந்த ஓர் வீட்டில் அநேகருக்கு மும்முரமான வயிற்றுவலி உண்டுபட்டது. அங்கு வைத்தியஞ்செய்து வந்த டாக்டர் கிறெனியர் அவர்களைச் சுகப்படுத்தப் பிரயாசப்பட்டும் முடியாமல் ஒருநாள் அவ்வீட்டெச மானை நோக்கி நான் உங்கள் அடுக்களையைப் பார்க்க வேண்டுமென்றார். அவ்விடத்துக்கு அவரைக் கூட்டிப் போனபோது அவர் சமையற் பாண்டங்களைக் கவன மாய்ப் பரிசோதித்து அவைகளில் ஒட்டிக் காய்ந்திருந்த ஊத்தையை எசமானுக்குக் காட்டி, "இது தான் பிள்ளை களின் வருத்தத்துக்கு காரணம். இன்றுதொட்டு சமையற்காரர் தீன்முடிந்தவுடன் ஒவ்வொரு நேரமும் சகல சமையற்பாண்டங்களையும் நன்றாய்க் கழுவிக் காய வைக்கும்படி கவனித்து வாருங்கள். அப்போது பிள்ளை களின் வருத்தமும் வலிய நீங்கும். அசுத்தமே அநேக நோய்களுக்குக் காரணம்'' என்றார். சில நாட்களாக அப்படிச் செய்தபின் அவர் சொன்னது முழுதுஞ் சரி யென்று கண்டுபிடித்தார்கள்.

காலையில் விழித்தவுடன் பாய் தலையணையைப் பத் திரமாய்ச் சுருட்டி வையாமலும் இடைக்கிடை வெயி லில் காயப்போட்டுத் துப்புரவாக்காமலும் விடுவதினால் மூட்டை மொய்த்து இரவில் நித்திரையைக் குளப்பு வது நூதனமல்ல. யேசுநாதருடைய திரு மேனியைக் கல்லறையில் அடக்கஞ்செய்தபோது யூதமுறைமைப் படி அவருடைய சிரசிற் கட்டியிருந்த துகில் அவர் உயிர்த்தெழுந்தபோது மறு வஸ்திரங்களோடு ஒழுங் கீனமாய்க் கலந்திராமல் மடித்து கல்லறையின் ஒரு பக்கத்தில் புறம்பாய் வைக்கப்பட்டிருந்ததென்று சுவி சேஷத்தில் வாசிக்கிறோம். (அர்ச். அருளப்பர் 20) இதற் கெதிராக ஒழுங்குந் துப்புரவுமற்றவர்கள் உடுபுடவை களையும் மறு சாமான்களையும் மடித்து அடுக்கி ஒழுங்காக வையாமல் கண்டபடி கிடக்க விட்டுவிடுவார்கள்.

அன்றியும், ஊருக்குங் காலத்துக்குமுரிய சாமான்கள் அதாவது தவசதானியம் பழவகை புகையிலை கரு -வாடு சுண்ணாம்பு ஊத்தைப் புடவை முதலியவைகள் எவ்வளவு நோய்க்கு வழியானவைகளா யிருந்தாலும் சிலர் அவைகளைத் தாங்கள் புழங்கும் அறைகளிற் குவித்து வைப்பார்கள். ஒரு வீட்டுக்கருகில் வைக்கோல் எரு சருகு சாம்பல் குப்பை முதலியவைகளைக் குவிப் பதும், ஆடு மாடுகளைக் கட்டுவதும் சவுக்கியத்துக் கேற்றவையல்ல.

சிலர் கருத்தற்ற சாத்திரவிதிப்படி அல்லது செல வைச் சுருக்குகிறதற்காக பதிந்த வீடுகளைக்கட்டி கொளுவிஓடு போடுவதினால் அவ்வீடுகளிற் சஞ்சரிக்கிற வர்கள் சூரிய வெப்பத்தால் வெம்பி நெடுகிலும் நோய்ப் பட்டு உத்தரிப்பதைக் கண்டுவருகிறோம். வேலியை உயர அடைத்து காற்றோட்டத்தைத் தடுப்பது தமிழ் ரின் தப்பறைகளில் ஒன்றென்று பிறர் முறைக்குமுறை புறணி கூறுவதை நம்மவர் அறியாமலிருக்கவில்லை.

சில ஊரவர்கள் சவுக்கியத்தைக் கவனியாமல் வரு மானத்தை மாத்திரங் கருதி வளவு நிறைய வாழை கொழுந்து பலா முதலிய பயிர்களை உண்டுபண்ணிச் சுகத்துக்கு வேண்டிய வெயிலையும் காற்றோட்டத்தை யுந் தடுத்துவிடுவதினால் அவர்களில் அநேகர் ஊதி வெளிறியிருப்பதையும் மழை பனிகாலங்களில் வீட் டுக்குவீடு நாலு ஆறுபேர் காய்ச்சலாய்க்கிடந்து வருந்து வதையும் காணலாம்.

முறைக்குமுறை அம்மை பேதி பெருவாரிக்காய்ச் சல் முதலான கொள்ளை நோய்கள் உண்டுபடும்போது குடிசனங்கள் தங்கள் வீடுவளவுகளைத் துப்புரவாக்கும் படியும் சவுக்கியத்துக்கு மாறானவைகளைத் தொலைக்கும் படியும் அரசாட்சியார் கட்டளை செய்வதற்கும் தண்டம் விதிப்பதற்கும் காரணமென்ன? அசுத்தம் அநேக நோய்கள் உண்டுபடவும் பாம்பவும் காரணமாயிருக்கிற படியாலல்லவா? ஆகையால், ''வறுமையிற் செம்மை '' என்னும் முதுமொழிப்படி பெரியோருஞ் சிறியோரும் தங்களாலியன்றளவு சுத்தத்தைக் கவனித்து நடப்பதே