இவ்வன்பின் இலட்சணம்

இந்த நேசம் தாய் தந்தையரின் மனதிலும், வாக் கிலும், கிரிகையிலும் விளங்கவேண்டியது. என்னமு காந்திரத்தையிட்டும் இவர்கள் மக்கள் மட்டில் வெறுப் பான எண்ணங்கொள்ளுவார்களாகில் அவர்களைத் தக்க விதமாய் நேசிக்க முடியாது குறையற்றவர்கள் பூமியில் ஒருவருமில்லை. ஆகையால், பிள்ளைகளிடத்தில் சில குறை பாடுகள் இருந்தாலும் இவைகளைப் பாராட்டப்படாது. மேலும், அவர்கள் தேவ சாயலாகப் படைக்கப்பட்டவர்களாகையால் தேவன் அவர்களை அருமையாய்ச் சிநேகித்து அவர்கள் மேல் எப்போதும் கண்ணாயிருக்கிறார்.

வழக்கமாய்ப் பெற்றோரைப்பார்க்கப் பிள்ளைகளே தேவ சமுகத்தில் அதிகம் பரிசுத்தராயிருக்கிறார்கள். அவர்கள் பலமுறையுங் குடும்பத்தின் பெருமையும் பாக்கியமும் பிதா மாதாவுக்கிடையிலுள்ள நேச ஒற்றுமைக்குக் கார ணமுமாகிறார்கள். பெற்றோர் அவர்களைச் சன்மார்க்க . மாய் வளர்த்தால், அவர்கள் பிற்காலம் இம்மையில் பெற்றோருக்குப் பெருமுதவியும் பேர் புகழுமாய் இருப் பதுமன்றி, மறுமையில் மட்டற்ற நித்திய சம்பாவனைக் கு வழியுமாயிருப்பார்கள். இந்த உண்மைகளைத் தாய் தந்தையர் சிந்தித்துக்கொண்டால் தங்கள் பிள்ளைகளை மனதில் சிநேகிப்பது அவர்களுக்குக் கஷ்டமாயிராது.

மக்களை அற்பகாரியங்களுக்கெல்லாம் திட்டிச் சினந் து பேசுவதும் அவர்களைப்பற்றிப் புறணி கூறுவதும் பிறத்தியாரிடம் முறையிடுவதும் அவர்கள் மேல் இருக் கவேண்டிய உருக்கமான நேசங்கெட்டு வெறுப்புண்டா வதற்கு ஏதுவாகும். பிள்ளைகள் குற்றஞ்செய்யும்போ தெல்லாம் அதனால் விளையும் தீமைகளை அவர்களுக்குப் பொறுமையாயும் தயவாயுஞ் சொல்லிக்காட்டி, அதை அவர்கள் திருத்தி நடக்கவேண்டிய முறையையுந் தெரி வித்து, அவர்கள் செய்யும் நன்மைகளைப்பற்றி இடை யிடையே சற்றுப் புகழ்ந்து தாங்கள் அவர்களிடம் ஒரு காலங் காத்திருக்கும் நன்மை சங்கை சலாக்கியங்களை". அவர்களுக்கு நினைப்பூட்டுவது பெற்றோருக்கும் பிள்ளை களுக்குமிடையிலுள்ள அன்னியோன்னிய நேசத்தைப் பெலப்பிக்க வழியாகும். -

பெற்றோரின் நேசம் அதிமுக்கியமாய் இவர்களது கிரியைகளிலே விளங்கவேண்டியது. தங்கள் பிள்ளைக ளின் இகபர நன்மைகளில் என்றுங் கண்ணுங் கருத்து மாயிருந்து அவர்களுக்காக உழைப்பதும், அவர்களுக் கு நேரிடும் தீமைகளை நீக்குவதும், அவர்களுக்கு நல்லறி வூட்டிக் கல்வி கற்பிப்பதும், அவர்களைக் கண்டிக்க அல் லது தண்டிக்கவேண்டிய சமயங்களில் அப்படிச் செய்து அவர்கள் குறைகுற்றங்களைத் திருத்தி நன் முன்மாதிரி காட்டுவதும், அவர்கள் நற்செய்கைகளுக்குப் பதில த் து அவர்களை உற்சாகப்படுத்துவதும், அவர்களுக்காக நாள்தோறுந் தேவனை வேண்டுதல் செய்வதும், அவர் களைச் சன்மார்க்கராய் வளர்த்து நன் நிலையில் வைப்பது மே அவர்களை நேசிக்கும் உத்தமமுறையாம். பின்வரும் - பிரிவுகளில் இவைகளைப்பற்றி விரிவாய்ப் பேசுவோம்.

மக்களின் லெளகீக நன்மையைக் கவனிப்பது தாய் தந்தையருக்கு இயல்பு. இதுமாத்திரம் போதுமென் றெ ண்ணாமல் அவர்களுடைய அழிவற்ற ஆத்தும் நன்மை யிலேதான் அதிக கவனஞ்செலுத்துவது மெய்யான அன் பின் அடையாளமாகும். பிள்ளைகளுடைய ஆத்தும் நன்மையை அசட்டைபண்ணிச் சரீர சிலாக்கியங்களை மாத்திரம் பேணும் பெற்றார் சிநேகங்காட்டி வினையஞ் செய்யுஞ்சத்துருவுக் கொப்பாயிருக்கிறார்கள்.

ஆத்து மங்கெட்டுப்போனால் புகைபோல மறைந்துபோகிற சரீர சுக வாழ்வினால்வரும் பயனென்ன? பிள்ளைகளைச் சரி யாய் நேசிக்க அறிந்திருந்த சன்மார்க்க பிதா மாதாக்கள் தங்கள் மக்களுடைய ஆத்துமகதி அபாயத்துக்குள்ளா யிருக்கும் வேளைகளில் இவர்கள் சரீர செளக்கிய வாழ் வையிழந்தாலும் ஆத்துமத்தின் நித்திய பேரின்ப வாழ் வையடையவே வழிபண்ணுவார்கள்.

வரிவேதகாலத் தில் தேவப்பிரசைகளாயிருந்த யூதசனங்களை அந்தியோ) க்கஸ் என்னும் அன்னியவரசன் எதிர்த்துக் கலகம்பண்ணிவருகையில் மக்கபேயர் என்னுங் குடும்பத்தைச்சேர் ந்த ஒரு தாயையும் ஏழு குமாரரையும் பிடித்து வரிவேத முறைமைக்கு மாறாய்ப் பன்றியிறைச்சி சாப்பிடவேண் டுமென்றுஞ் சாப்பிடாவிடில் அவர்கள் அனைவரும் வதைத்துக் கொல்லப்படுவார்களென்றும் அச்சுறுத்தி னான்.

சொல்லரிய மாதாவென்று வேதாகமம் துதிக்கும் இத்தாயுடைய நல்வளர்ப்பின் பயனாக பிள்ளைகள் தேவ கட்டளையை மீறுவதிலும் தங்கள் உயிரை இழக்கவே" துணிந்து நின்றபடியால் அரசன் தாய்க்கு முன்பாக அவர்களுடைய தோலை உரிப்பித்தும் நாக்கையும் கை கால்களையும் வெட்டுவித்தும் அவர்களை நெருப்பில் எரிப் பித்தான். இப்படி ஆறு குமாரரும் ஒரே தினத்தில் ஒருவருக்குப்பின் னொருவராய்க் குரூரமாய்க் கொல்லப் படுவதைத் தாய் கண்ணாரக் கண்டு கொண்டு நின்றும் சற் றாவது மனம் பதறாமல் வேதாகமம் சொல்வதுபோல ''ஞானம் நிறைந்தவளாய்'' பெண் பிள்ளையின் நேசப்பற் றுதலோடு ஆண் பிள்ளையின் திடனை யுஞ்சேர்த்து அவர்க ளுக்குத் தைரியமும் தேவநம்பிக்கையுமான வார்த்தை களைச் சொல்லித் தேற்றிக்கொண்டிருந்தாள்.

இராயன் இதெல்லாங்கண்டு ஆச்சரியமுங் கோபாவேசமும் நிறை ந்தவனாய் ஏழாம் பிள்ளையாகிய தன் கடைக்குட்டிக் காகுதல் புத்தி சொல்லி அவனுயிரைத் தப்புவிக்கும்படி தாயை நெருக்கினான். அவள் அந்த மகனுக்கு உரைத் தமொழி யாதெனில், என் மகனே உன்னை ஒன்பது மாசம் உதரத்திற் சுமந்து பெற்றுப் பாலூட்டி இந்த வயது வரைக்கும் வளர்த்துக் காப்பாற்றின என்மேல் இரக்கமாயிரு. மகனே வானத்தையும் பூமியையும் அவைகளி லுள்ள யாவையும் கண்ணோக்கிப் பார்க்கும்படி உன்னை மன்றாடுகிறேன். ஒன்றுமில்லாமையிலிருந்து சருவேசு ரன் தாமே சகலத்தையும் மனுச் சன்மத்தையும் படைத் தாரென்று யோசித்து அவருக்கேயன்றி இந்தக் கொலை பாதகனுக்கு நீ அஞ்சாதிரு. உன் சகோதரருக்குப் பாத்திரமான பங்காளியாகி அவர்களோடு தேவ இரக் கத்தில் நானுன்னை ஏற்றுக்கொள்ளும்படி நீ மரணத்தை ஏற்றுக்கொள் என்றாள்.

தாயின் ஏவுதற்படி அந்தச் சிறு பிள்ளையும் சகலத்திலும் சருவேசுரனை நம்பி மாசற்றதாய் மரித்துவிட்டது. பிள்ளைக்குப்பின் தாயும் கொலை செய்யப்பட்டாள். (2 மக்கபேயர். 7)

இதுவல்லோ பெ ற்றோர் பிள்ளைகளை அவர்களது நித்திய நன்மைக்காகவும் தேவனுக்காகவும் நேசிக்கவேண்டிய சுபாவத்துக்கு மேலானமுறை.