இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இப்பக்தி முயற்சியால் நாம் நம் அயலாருக்கு அதிகமான நன்மை செய்கிறோம்

171, இப்பக்தி முயற்சியால் நம் அயலாருக்குக் கிடைக்கும் பெரிய நன்மை, இதனை நாம் கைக் கொள்ளத் தூண்டும் இன்னொரு காரணமாகும். இப்பக்தியால் நம் அயலார் மீது ஒரு சிறந்த முறையில் நாம் பிறர் சிநேகம் கொள்கிறோம். ஏனென்றால் நம்முடைய எல்லா நற் செயல்களின் மன்றாட்டுப் பலன்களையும் பரிகாரப் பலன் களையும் - ஒரு சிறு நினைவு. ஒரு துன்பம் கூட விடு படாமல் அனைத்தையும் மரியாயின் கரங்கள் வழியாக நாம் அடுத்தவர்களுக்குக் கொடுத்து விடுகிறோம். நாம் சம்பாதித்துள்ள எந்தப் பரிகாரப் பலன்களும் நம் மரண நாள் வரையிலும் நாம் சம்பாதிக்க கூடியவை யும் மாதாவின் விருப்பப்படி பாவிகள் மனந்திரும்ப வும் உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்கள் விடுதலை பெறவும் உபயோகிக்கும்படி சம்மதிக்கிறோம்.

இது உத்தம பிறர் சிநேகம் அல்லவா? பிறர் சிநேகத் தினால் சேசு கிறீஸ்துவின் சீடன் அறியப்படுகிறான் என்றால் இதுவன்றோ அவருடைய உண்மைச் சீடனா யிருப்பது? வீண் பெருமையைப் பற்றி எந்தப் பயமு மில்லாமல் பாவிகளை மனந்திருப்பும் முறை இது அல் லவா? நாம் நம் அந்தஸ்தின்படி செய்ய வேண்டிய தற்கு அதிகமாய் எதுவும் செய்யாமலே உத்தரிக்கிற ஆத்துமங்களை விடுவிக்கும் முறை இது அல்லவா?

172. இவ் ஏழாம் காரணத்தின் உயர்வை நாம் கண்டு பிடிக்க வேண்டுமானால், ஒரு பாவியை மனந்திருப்பு வது என்பது என்ன, ஒரு ஆன்மாவை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுவிப்பது என்பது என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். இவை அளவில்லாத நன்மைகள் - பரலோக பூலோக சிருஷ்டிப்பை விட இவை பெரிய நன்மையான காரியங்களாகும். (அர்ச். அகுஸ்தீன் (Tract 72 in Joan)) ஏனென்றால் இவற்றால் நாம் கடவுளை ஒரு ஆன்மாவுக்குக் கொடுக்கிறோம். இப் பக்தி முயற்சியால் நாம் நம் வாழ்நா ளெல்லாம் ஒரே ஒரு ஆன்மாவை உத்தரிக்கிற ஸ்தலத் திலிருந்து விடுவிக்கிறதாயிருந்தாலும், ஒரே ஒரு பாவியை மனந்திருப்புகிறதாயிருந்தாலும் கூட பிறர் சிநேகமுள்ள ஒவ்வொரு மனிதனையும் இப்பக்தி முயற்சியைக் கைக் கொள்ளத் தூண்டுவதற்கு அது போதாதா?

இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். அதாவது, நம்முடைய நற்செயல்கள் மரியாயின் கரங்கள் வழியாகச் செல்லும் போது அதிக தூய்மை பெறுகின்றன. அதன் பயனாக அவற்றின் பேறுபலன், பரிகார மன்றாட்டுப் பலன்கள் அதிகரிக்கின்றன. இதனாலேயே அவற்றிற்கு - உத்தரிக்கிற ஆன்மாக்களை விடுவிக்கவும் பாவிகளை மனந் திருப்பவும் - மரியாயின் தாராளமுள்ள கன்னிமைக் கரங்கள் வழியாகச் செல்லாவிட்டால் இருக்கும் வலிமையை விடஅதிக வலிமை ஏற்படுகின்றது. மாதா வழியாக நாம் கொடுக்கும் அற்பக் காரியமும் சுயநலம் நீக்கப்பட்டு தன்னலமற்ற பிறர் சிநேகத்திலிருந்து புறப்படுவதால் கடவுளின் சினத்தைத் தணித்து அவருடைய இரக்கத் தைப் பெறுவிக்க மிகவும் சக்தி பெறுகின்றது. இந்தப் பக்தி முயற்சியைக் கடைபிடித்து தன் அந்த ஸ்தின் சாதாரணக் காரியங்களை மட்டுமே செய்து வந்துள்ள ஒரு மனிதன், தான் அநேக உத்தரிக்கிற ஆன்மாக்களை விடுவித் திருப்பதையும் அநேக பாவிகளை மனந்திருப்பியிருப்பதை யும் தன் மரண சமயத்தில் அறிய வரக்கூடும்! இதனால் அவனுடைய தீர்வை நேரத்தில் அவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியுண்டாகும்! நித்தியத்திற்கும் அவனுக்கு இது எவ்வளவு மகிமையாயிருக்கும்!