மனிதாவதாரத்திற்கு முந்திய காலம்!

47. தமது மனிதாவதாரத்திற்கு முந்திய காலம் முழுவதிலும், நித்திய ஞானமானவர் மனிதர்கள் மீது தாம் கொண்டிருந்த நட்புணர்வையும், தமது நன்மைகளை அவர்கள் மீது பொழியவும், அவர்களோடு உரையாடவும் தமக்கிருந்த பெரும் ஆசையையும் ஓராயிரம் வழிகளில் எண்பித்தார். 

என் சந்தோஷமோ, மனுமக்களுடன் இருத்தலேயாம்" (பழ. 8:31). தமக்குத் தகுதியுள்ளவர் களை, அதாவது தமது நட்புக்கும், தமது விலை மதிக்கப்படாத கொடைகளுக்கும், தம் சொந்த ஆளுமைக்குமே கூட தகுதி யுள்ளவர்களாக இருந்த மனிதர்களை அவர் தேடிச் சென்றார். பல்வேறு மக்களினங்களின் வழியாகக் கடந்து சென்றார். அவர் களைத் தம் தீர்க்கதரிசிகளாகவும், கடவுளின் நண்பர்களாகவும் ஆக்கினார் (ஞான. 7:27; காண்.7:14). பரிசுத்த பிதாப்பிதாக்கள், கடவுளின் நண்பர்கள், பழைய, புதிய ஏற்பாடுகளின் புனிதர்கள், தீர்க்க தரிசிகள் அனைவருக்கும் போதகராக இருந்தவர் அவரே (ஞான. 7).

இதே ஞானமானவர் கடவுளின் மனிதர்களை ஏவித் தூண்டி தீர்க்கதரிசிகளின் வாய்களைக் கொண்டு பேசினார். அவரே அவர்களை வழிநடத்தினார், அவர்களுடைய சந்தேகங்களில் அவர்களுக்கு அறிவொளி தந்தார். அவர்களுடைய பலவீனத்தில் பலம் தந்து, எல்லாத் தீமையிலிருந்தும் அவர்களை விடுவித்தார். 

48. ஞானாகமம், பத்தாம் அதிகாரத்தில் பரிசுத்த ஆவியானவர் இதைச் சொல்லும் விதம் இதோ: (ஞான 10:1-21) :

1. மனுக்குலத்துக்குத் தந்தையாகச் சர்வேசுரனால் சிருஷ் டிக்கப்பட்ட முதல் மனிதன் தனிமையாய் உண்டாக்கப் பட்டிருக்கையில், அவனைக் காத்து வந்தது ஞானமே.

2. அவனைப் பாவத்தினின்று விடுவித்துச் சகலத்தையும் அடக்கி ஆளப்பலம் தந்ததும் ஞானமே.

3. அநீதன் தன் கோபத்தில் அதை விட்டகன்ற போது. சகோதர கொலைக்குக் காரணமான கோபத்தால் நிர்ப்பாக்கிய னாய்க் கெட்டான்.

4. அக்கிரமத்துக்கு ஆக்கினையாகச் சலப் பிரளயம் (பெரு வெள்ளம் ) பூமியை மூடிக் கொண்டபோது ஞானமானது மதிப் பற்ற மரத்தால் நீதிமானை நடத்தித் திரும்பவும் காப்பாற்றினது.

5. பிரஜைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து துன்மார்க்கத்திற்குத் தங்களைக் கையளித்தபோது, நீதிமான் யாரென்றறிந்து சர்வேசுர னுக்கு முன்பாக அவனைப் பழுதறக் காப்பாற்றினதும், அவன் குமாரன் மட்டிலிருந்த நேச பாசத்தை வெல்லும்படி செய்ததும் ஞானமே.

6. ஐந்து பட்டணங்களில் அக்கினியால் அழிந்த அக்கிரமி களை விட்டு ஓடிய நீதிமானை இரட்சித்து ஞானமே.

7. அவர்களுடைய அக்கிரமத்திற்கு அத்தாட்சியாயிருக்கிறது ஏதேனில் : அந்தப் பூமியானது இன்னமும் புகைந்து மனித சஞ்சார மில்லாத காடாய்க் கிடக்கிறது; மேலும் அவ்விடத்தில் காலம் தப்பி மரங்கள் கனிகளைத் தருகின்றன. அவிசுவாசமுள்ள ஆத்துமத்தின் ஞாபக ஸ்தம்பமாக ஓர் உப்புச் சிலை இன்னும் காணப்படுகிறது.

8. ஏனெனில் ஞானத்தை அடையத் தேடாதவர்கள் நன்மைகளின் அறியாமையில் விழுந்தது மாத்திரமல்ல, ஆனால் இன்னமும் தாங்கள் கட்டிக் கொண்ட பாவங்களை மறைக்கக் கூடாத விதமாய்த் தங்கள் புத்தியீனத்தின் அடையாளங்களை மனிதருக்கு விட்டிருக்கிறார்கள். 

49. 9. தன்னை அனுசரணை செய்கிறவர்களையோஞானமானது கெடுதிகளினின்று காப்பாற்றினது.

10. தன் சகோதரன் கோபத்திற்குப் பயந்தோடின நீதிமானை நேர் வழியாய் ஞானமானது கூட்டிப் போய், அவனுக்குச் சர்வேசுரனுடைய இராச்சியத்தைக் காண்பித்து, அவனுக்குப் பரிசுத்தருடைய அறிவைத் தந்து, அவன் தன் வேலைகளால் மிகுந்த இலாபமும், சம்பாத்தியமும் அடையும்படி செய்தது மன்றி,

11. அவனை மோசம் செய்யத் தேடினவர்களிடத்தினின்று அவனை மீட்டு அவனை செல்வந்தனாக்கியது.

12. அது சாத்துராதிகளினின்று அவனைக் காப்பாற்றி துன்மார்க்கரிடமிருந்து அவனைப் பாதுகாத்து பலமான யுத்தத் தில் அவன் வெற்றி கொள்ளவும், சகலத்தையும் விட ஞானமே வலிமையுள்ளதென்று அறிந்து கொள்ளவும் செய்தது.

13. அது விற்கப்பட்ட நீதிமானை விட்டுவிட்டதில்லை. பாவி களிடத்தினின்று அவனை மீட்டது; அவனுடன் பாழுங்கிணற்றில் இறங்கினது.

14. அது சிறையிலிருந்த அவனுக்கு இராஜ செங்கோலைக் கையில் வைத்து அவனை உபாதித்தவர்களை அவன் வசமாக்கி னதுமன்றி, அவனைக் குற்றஞ்சாட்டினவர்களைப் பொய்யர் என்று காண்பித்து, அவனுக்கு நித்திய மகிமையைத் தந்தது.

15. அது நீதிமான்களாகிய ஜனங்களையும், குற்றமற்ற பிரஜை களையும் அவர்களை உபாதித்த தேசத்தாரிடத்தினின்று இரட்சித்தது.

16. அது சர்வேசுரனுடைய ஊழியனின் ஆத்துமத்தில் பிரவேசித்து, குரூர அரசனுக்கு விரோதமாய் அடையாளங் களாலும், அற்புதங்களாலும் எதிர்த்து நின்றது.

17. நீதிமான்களுக்கு அவர்களுடைய பிரயாசைகளின் சம்பாவனை தந்தது; அற்புதமான வழியாய் அவர்களை நடத்தினது; பகலில் அவர்களுக்கு நிழலும், இரவில் நட்சத்திர ஒளியுமாயிருந்தது.

18. அது செங்கடல் மார்க்கமாய் அவர்களைக் கூட்டிப் போய் ஆழமான தண்ணீரை அவர்கள் கடந்து போகும்படி செய்தது. 

19. அது அவர்களுடைய சத்துராதிகளையோ சமுத்திரத்தில் அமிழ்த்தித் தன்னை அனுசரிக்கிறவர்களைப் பாதாளத்தினின்று வெளியே கொண்டு வந்தது; ஆனதால் நீதிமான்கள் அக்கிரமிக ளுடைய சொத்துக்களை எடுத்துக் கொண்டார்கள்.

20. பிறகு அவர்கள் உம்முடைய பரிசுத்த நாமத்தைப் பாடித் தோத்தரித்தார்கள். ஆண்டவரே! வெற்றி கொண்ட தேவரீரது கரங்களையும் வாழ்த்தினார்கள்.

21. ஏனெனில் ஞானமானது ஊமைகளின் வாயைத் திறந்தது. குழந்தைகளை வாய்ச்சாலகம் உள்ளவர்களாக்கினது. 

50. ஞானாகமத்தின் அடுத்த அதிகாரத்தில் (ஞான 11), மோயீச னும், இஸ்ராயேலரும் பாலைவனத்தில் வாழ்ந்து வந்த காலத்தில் நித்திய ஞானமானவர் எப்படி பலதரப்பட்ட தீமைகளிலிருந்து அவர்களை விடுவித்தார் என்று பரிசுத்த ஆவியானவர் விளக்கு கிறார். இத்துடன் பழைய, புதிய ஏற்பாடுகளில் நித்திய ஞான மானவரால் பெரும் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றப்பட்டவர் களையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களில் சிங்கங்களின் குகைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட தானியேலும், தன்னை அபாண்டமாகக் குற்றஞ்சாட்டிய கிழவர்களிடமிருந்து காப் பாற்றப்பட்ட சூசான்னாவும், பாபிலோனின் தீச்சூளையிலிருந்து காப்பாற்றப்பட்ட மூன்று இளைஞர்களும், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அர்ச். இராயப்பரும், கொதிக்கும் எண்ணெய் நிரம்பி கொப்பறையினின்று அற்புதமாகப் பாதுகாக்கப்பட்ட அர்ச். அருளப்பரும், தாங்கள் அனுபவிக்க வேண்டியிருந்த சரீர வாதைகளால் விசுவாசத்தை இழக்காதபடியும், தங்கள் நற்பெய ருக்குக் களங்கம் ஏற்படாதபடியும் காத்துக் கொள்ளப்பட்ட எண்ணிலடங்காத வேதசாட்சிகளும், ஸ்துதியர்களும் அடங்கு வார்கள். இவர்கள் எல்லோரும் நித்திய ஞானமானவரால் விடுவிக்கப்பட்டு, குணப்படுத்தப்பட்டார்கள். "கர்த்தரே! ஆதிமுதல் உமக்குப் பிரியமாயிருந்தவர்கள் யாரோ, அவர்கள் எல்லோரும் ஞானத்தினால்தான் குணமடைந்தார்கள்" (ஞான. 9:19).

51. இப்போது நாம் அறிக்கையிடுவோம் : " ஞானமானவர் யாருடைய ஆத்துமத்தைத் தன் வாசஸ்தலமாகத் தேர்ந்து கொண்டு, அவனில் பிரவேசித்திருக்கிறாரோ, அந்த மனிதன் ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியானவன்! எப்பேர்ப்பட்ட போர்களில் அவன் ஈடுபட நேர்ந்தாலும் சரி, எப்போதும் அவன் வெற்றி பெறுவான். எப்பேர்ப்பட்ட ஆபத்து அவனை அச்சுறுத்தினாலும், எந்தத் தீங்குமின்றி அதிலிருந்து அவன் தப்புவான். எத்தகைய துயரங்கள் அவனைத் தாக்கினாலும், அவன் சந்தோஷத்தையும் ஆறுதலையும் கண்டடைவான். எத்தகைய அவமானங்கள் அவன் மீது குவிக்கப்பட்டாலும் சரி, காலத்திலும், நித்தியம் முழுவதிலும் அவன் உயர்த்தப்பட்டு , மகிமைப்படுத்தப்படுவான்."


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...