பச்சை உத்தரீயம்

ஜூஸ்தீனா சகோதரி புனித வின்சென்ட் தெபால் என்பவரது பிற சிநேக சகோதரிகளின் சபையைச் சேர்ந்தவள். தியான சாலையில் இருந்த மாதா சுரூபத்தின் முன் 1840-ம் ஆண்டு ஜனவரி 28-ம் நாளன்று அவள் ஜெபித்துக் கொண்டிருக்கையில் தேவதாய் அவளுக்குக் காட்சியளித்தாள். அன்னை வெள்ளை உடை தரித்திருந்தாள். பாதங்கள் வெறுமனே காணப்பட்டன. நீலநிறப் போர்வை தரித்திருந்தாள். முக்காடு கிடையாது. உரோமம் தோட்பட்டைகள் மீது கிடந்தது. தன் இதயத்தை அவள் கையில் ஏந்தியிருந்தாள். அதன் உச்சியிலிருந்து அக்கினிச் சுவா லைகள் எழும்பின. பரலோக அழகும் மகத்துவமும் காணப்பட்டன. அதே ஆண்டில் நான்கைந்து முறை மாதாவின் முக்கியமான திருநாட்களில் அந்தக் காட்சி திரும்பவும் காணப்பட்டது. தேவதாய் பிறந்த திரு நாளாகிய செப்டம்பர் 8-ம் நாளன்று அன்னை காட்சி யளிக்கையில் ஒரு கரத்தில் அவளது இதயம் இருந் தது. இன்னொரு கரத்தில் பச்சை உத்தரீயம். அது நீண்ட சதுரமான துணி. அதைக் கழுத்தில் தொங்க விடுவதற்கென அதன் ஒரு நுனியில் பச்சைக் கயிறு சேர்க்கப்பட்டிருந்தது. உத்தரியத்தின் ஒரு புறத் தில் மாதாவின் உருவம். முந்தின முறை காட்சிய ளித்தது போல் அதே நிலையில் உருவம் இருந்தது. மறு பக்கத்தில் ஓர் இருதயம். அதிலிருந்து சூரிய னின் கதிர்களை விட அதிக பிரகாசமுள்ள கதிர்கள். நெருப்புச் சுவாலைகள் அதிலிருந்து வெளி வந்தன. அது வாளால் ஊடுருவப்பட்டிருந்தது. அதைச் சுற் றிலும், மரியாயின் மாசற்ற இருதயமே, இப்பொழு தும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள் ளும்" என்னும் வார்த்தைகள். வார்த்தைகளுக்கு மேல் தங்கச் சிலுவை.

பாவிகளையும் அவிசுவாசிகளையும் மனந்திருப்ப வும், நல்ல மரணம் என்னும் வரத்தை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கவும், பிற சிநேக சபைச் சகோதரி கள் இந்த உத்தரீயத்தைப் பயன் படுத்த வேண்டும் என தேவதாய் ஜூஸ்தீனா சகோதரிக்கு அறிவித்தாள். அதை கூடிய சீக்கிரம் செய்து பரப்ப வேண்டும் என்று அவளது உள்ளத்தில் ஒரு குரல் கூறியது.

இது மற்ற உத்தரியங்களைப் போலல்ல. இதைத் தரிப்பவர்கள் எந்தச் சபைகளிலும் சேரத் தேவை யில்லை. தரிக்கையில் எவ்வித ஜெபமும் அவசிய மில்லை. ஒரு குருவானவர் அதை மந்திரித்ததும், சுரூ பத்தைத் தரிப்பது போல் யாரும் அதை அணிந்து கொள்ளலாம். அதைத் தரித்திருப்பவர்கள் அதில் எழுதப்பட்டிருக்கும், “மரியாயின் மாசற்ற இருதய யமே, இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் எங் களுக்காக வேண்டிக்கொள்ளும் ' என்னும் ஜெபத்தை நாள் தோறும் ஒரு முறையாவது சொல்ல வேண்டும். பாவிகள், அவிசுவாசிகள் முதலியோர் அதை அணிந்து கொள்ள மறுப்பார்களானால் அதை அவர்களது படுக்கையில் அல்லது அறையில் வைக்க லாம். அல்லது அவனையறியாமல் அவனுடைய உடையில் தைக்கலாம். அவனுக்குப் பதிலாக அவ னுடைய உபகாரி அந்த ஜெபத்தை சொல்லி வர வேண்டும். தேவதாயின் கரங்களிலிருந்து வந்த கதிர்கள் வெவ்வேறு அளவுள்ளவையாயிருந்தன. பக்தர்களிடமிருக்கும் நம்பிக்கையின் அளவு, அவர் கள் பெறும் ஆசீர்வாதங்களும் இருக்கும் என இவை காட்டுகின்றன. பதினோராம் பத்திநாத பாப்பரசர் இந்த உத்தரீயத்தை வாங்கி புதுமைச் சுரூபத்துடன் அதைத் தம் மேஜை மீது வைத்திருந்தார்.

இந்தப் பச்சை உத்தரீயத்தால் பலவித வரப்பிர சாதங்களும் உபகாரங்களும் ஆரோக்கியமும் கிடைத் தன.