இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பரிசுத்த மாமரியின் வாழ்வு முழுவதும் நீடித்த வேதசாட்சியம்!

சேசுவின் திருப்பாடுகள், அர்ச். பெர்னார்ட் சொல்வது போல, அவரது பிறப்பிலேயே தொடங்கி விட்டன. எல்லாக் காரியங்களிலும் தன் திருமகனைப் போலவே இருந்த மாமரியும், தன் வாழ்நாள் முழுவதிலும் தனது வேதசாட்சியத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது. அர்ச். பெரிய ஆல்பெர்ட் குறித்துக் காட்டுவது போல, மாமரியின் திருப்பெயருக்கு, ""கசப்பான கடல்'' என்னும் பொருளும் உள்ளது. "மாரே ஆமாரும்.'இவ்வாறு, ""உன் நெருக்கிடை கடலைப் போல் அபாரமாயிருக்கிறதே!'' என்ற ஜெரேமியாஸின் வார்த்தைகள் மாமரிக்குப் பொருந்துபவையாக இருக்கின்றன (புலம்பல். 2:13). ஏனெனில் கடல் முழுவதும் கசப்பும், உவர்ப்புமாக இருப்பது போலவே, மரியாயின் வாழ்வும் மீட்பரின் திருப்பாடுகளைப் பற்றிய பார்வை தந்த கசப்பால் நிரம்பியிருந்தது. அவரது திருப்பாடுகள் எப்போதும் அவர்களது மனதில் தங்கியிருந்தன. தீர்க்கதரிசிகள் அனைவரையும் விட மிக உயர்வான அளவில் பரிசுத்த ஆவியானவரால் ஒளிர்விக்கப்பட்டவர்களாக, மாமரி அதே தீர்க்கதரிசிகளால் பரிசுத்த வேதாகமங்களில் மெசையா பற்றிப் பதிவு செய்யப்பட்டிருந்த காரியங்களை, அவர்களை விட அதிகத் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. தேவதூதர் அர்ச். பிரிஜித்தம்மாளுக்கு வெளிப்படுத்தியதும் இதுதான். அவர் தொடர்ந்து அவளிடம்: ""மகா பரிசுத்த திவ்ய கன்னிகை, அவதரித்த வார்த்தையானவரின் தாயாராக ஆகுமுன்னமே, மனிதர்களின் இரட்சணியத்திற்காக அவர் எவ்வளவு துன்பப்படுவார் என்பதை அறிந்திருந்தார்கள். மேலும், தம்முடையதல்லாத பாவங்களுக்காக மிகக் கொடூரமான மரணத்திற்கு உள்ளாக்கப்பட இருந்த இந்த மாசற்ற இரட்சகரின் மீது அந்த மாசற்ற கன்னிகை அளவற்ற தயவிரக்கம் கொண்டிருந்தார்கள். அப்போது முதலே அவர்களுடைய மாபெரும் வேதசாட்சியம் தொடங்கி விட்டது'' என்று வெளிப்படுத்தினார். மாமரி இந்த இரட்சகரின் தாயாராக ஆனபோது, அவர்களுடைய இந்தத் துயரமும் வேதனையும் அளவற்ற விதமாக அதிகரித்தன. எந்த அளவுக்கெனில், தனது பரிதாபத்திற்குரிய திருமகன் தாங்க வேண்டி யிருந்த பல்வேறு வாதைகளின் துயரமான காட்சி தியானங்களின் காரணமாக, அவர்கள் உண்மையாகவே ஒரு நீண்ட வேதசாட்சிய வேதனையை அனுபவித்தார்கள். அது அவர்களது வாழ்நாள் முழுவதும் நீடித்த ஒரு வேதசாட்சியமாக இருந்தது. இது அர்ச். பிரிஜித்தம்மாளுக்கு ஒரு காட்சியில் மிகத் துல்லியமாகக் குறித்துக் காட்டப்பட்டது. உரோமையிலுள்ள அர்ச். மாமரியின் பெரிய பேராலயத்தில் இந்தக் காட்சி அவளுக்கு அருளப்பட்டது. இக்காட்சியில் திவ்விய கன்னிகை அர்ச். சிமியோனோடும், ஒரு மிக நீண்டதும், இரத்தத்தால் சிவந்திருந்ததுமான ஒரு வாளைச் சுமந்திருந்த ஒரு தேவதூதரோடும் அவளுக்குத் தோன்றினார்கள். இதன் மூலம் மரியாயின் வாழ்நாள் முழுவதும் அவர்களது மாசற்ற இருதயத்தைக் குத்தித் துளைத்துக் கொண்டிருந்த நீண்ட, கசப்பான துயரம் குறித்துக் காட்டப்பட்டது. ரூப்பெர்ட் என்பவர் இக்காட்சியில் மாமரி பின்வருமாறு பேசுவதாகக் கற்பனை செய்கிறார்: ""மீட்கப்பட்ட ஆன்மாக்களே, என் அன்புக் குழந்தைகளே, என் பிரியமுள்ள சேசு என் கண்களுக்கு முன்பாக மரித்துக் கொண்டிருந்ததை நான் கண்ட அந்த வேளைக்காக மட்டும் என்மீது பரிதாபப்படாதீர்கள். ஏனெனில், சிமியோனால் முன்னுரைக்கப்பட்ட வியாகுல வாள் என் வாழ்நாள் முழுவதுமே என் ஆத்துமத்தைத் துளைத்துக் கொண்டிருந்தது. என் தேவ குழந்தையானவருக்கு நான் தாயமுது ஊட்டும்போதும், என் கரங்களில் தூக்கி வைத்து, அவருக்குக் கதகதப்பை நான் அளித்த போதும், ஏற்கெனவே என் குழந்தைக்காகக் காத்திருந்த கசப்பான மரணத்தை நான் தீர்க்கதரிசனமாகக் கண்டிருந்தேன். ஆகவே, எத்தகைய நீண்ட, கசப்பான வியாகுலங்களை நான் அனுபவித் திருப்பேன் என்று சிந்தித்துப் பாருங்கள்!''நீண்டதும், இரத்தத்தால் சிவந்திருந்ததுமான ஒரு வாளைச் சுமந்திருந்த ஒரு தேவதூதரோடும் அவளுக்குத் தோன்றினார்கள். இதன் மூலம் மரியாயின் வாழ்நாள் முழுவதும் அவர்களது மாசற்ற இருதயத்தைக் குத்தித் துளைத்துக் கொண்டிருந்த நீண்ட, கசப்பான துயரம் குறித்துக் காட்டப்பட்டது. ரூப்பெர்ட் என்பவர் இக்காட்சியில் மாமரி பின்வருமாறு பேசுவதாகக் கற்பனை செய்கிறார்: ""மீட்கப்பட்ட ஆன்மாக்களே, என் அன்புக் குழந்தைகளே, என் பிரியமுள்ள சேசு என் கண்களுக்கு முன்பாக மரித்துக் கொண்டிருந்ததை நான் கண்ட அந்த வேளைக்காக மட்டும் என்மீது பரிதாபப்படாதீர்கள். ஏனெனில், சிமியோனால் முன்னுரைக்கப்பட்ட வியாகுல வாள் என் வாழ்நாள் முழுவதுமே என் ஆத்துமத்தைத் துளைத்துக் கொண்டிருந்தது. என் தேவ குழந்தையானவருக்கு நான் தாயமுது ஊட்டும்போதும், என் கரங்களில் தூக்கி வைத்து, அவருக்குக் கதகதப்பை நான் அளித்த போதும், ஏற்கெனவே என் குழந்தைக்காகக் காத்திருந்த கசப்பான மரணத்தை நான் தீர்க்கதரிசனமாகக் கண்டிருந்தேன். ஆகவே, எத்தகைய நீண்ட, கசப்பான வியாகுலங்களை நான் அனுபவித் திருப்பேன் என்று சிந்தித்துப் பாருங்கள்!''

ஆகவே, ""என் வாழ்வு துக்கத்திலும், என் வருஷங்கள் புலம்பல்களிலும் கடந்துபோயின'' (சங்.30:10), ""என் துக்கம் எந்நேரமும் எனக்கு முன்பாக இருக்கிறது'' (சங்.37:18) என்ற தாவீதரசரின் வார்த்தைகளை மாமரி இன்னும் அதிக நியாயத்தோடு கூறலாம். ""என் வாழ்வுமுழுவதும் துயரத்திலும் கண்ணீரிலும் செலவிடப்பட்டது; ஏனெனில், என் அன்புக்குரிய திருச்சுதனின் மீது நான் கொண்ட பரிதாப உணர்வாகிய என் துயரம் ஒருபோதும் என் கண்களுக்கு முன்னிருந்து விலகவில்லை, ஏனெனில் அவர் ஒரு நாள் அனுபவிக்க இருந்த துன்பங்களையும் மரணத்தையும் நான் ஏற்கெனவே தீர்க்கதரிசனமாகக் கண்டேன்.'' தனது திருமகனின் மரணம் மற்றும் பரலோக ஆரோகணத்திற்குப் பிறகும் கூட உண்ணும்போதும், வேலை செய்யும்போதும், மற்ற எல்லா நேரங்களிலும், ஒவ்வொரு கணமும், சேசுவின் திருப்பாடுகளின் நினைவு மாமரியின் இருதயத்தில் மிக ஆழமாகப் பதிந்திருந்தது என்றும், அது அவர்களது ஞாபகத்தில் எப்போதும் புதிதாக நிலைத்திருந்தது என்றும் தேவ அன்னையே அர்ச். பிரிஜித்தம்மாளுக்கு வெளிப்படுத்தினார்கள். இதன் காரணமாக, மகா பரிசுத்த கன்னிகை தன் வாழ்நாள் முழுவதையும் ஒரு தொடர்ச்சியான துயரத்திலேயே கழித்தார்கள், ஏனெனில் அவர்களது இருதயம் எப்போதும் வருத்தத்தாலும், துன்பத்தாலும் நிறைந்திருந்தது என்று டோலர் என்பவர் கூறுகிறார்.

ஆகவே, துயரப்படுவோரின் வேதனைகளை வழக்கமாகக் குறைத்து விடும் காலம், மாமரியை மட்டும் விடுவிக்கவில்லை ; அதை விட அதிகமாக, அது அவர்களது வியாகுலங்களை இன்னும் அதிகரிக்க மட்டுமே செய்தது. ஏனெனில், ஒரு புறத்தில் சேசு வயதில் வளர்ந்து, மேலும் மேலும் அழகாகவும், நேசத்திற்குரியவராகவும் ஆகிக் கொண்டிருக்க, மறு புறத்தில் அவரது மரண நேரமும் மேன்மேலும் நெருங்கி வந்து கொண்டிருந்தது. இதனால் இவ்வுலகில் அவரை இழந்து போவது பற்றிய எண்ணத்தில் மாமரியின மாசற்ற இருதயத்தில் எப்போதும் துயரம் அதிகரித்தே வந்தது. இது பற்றி தேவதூதர் அர்ச். பிரிஜித்தம்மாளிடம் கூறிய வார்த்தைகள்: ""ரோஜா முட்கள் நடுவில் வளர்வது போல, கடவுளின திருத்தாயாரும் துன்பங்களின் மத்தியிலேயே வயதில் அதிகரித்தார்கள்; ரோஜாச் செடி வளர வளர, முட்கள் அதிகரிப்பது போலவே, ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்ட தேவ இரகசிய ரோஜாவாகிய மாமரியிலும் அவர்களது வயதோடு சேர்த்து, அவர்களது வியாகுல முட்களும் அதிகரித்தன. வயது அதிகரிக்க அதிகரிக்க, அவர்களது இருதயத்தை அவையும் அதிக ஆழமாகக் குத்தி ஊடுருவின.''