இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தன் தாயின் நாவில் மைந்தன் ஞானத்தை வைத்துள்ளார்.

29 ஆகஸ்ட் 1944.
 அன்னம்மாளை மறுபடியும் காண்கிறேன்.  நேற்று மாலையிலிருந்து இவ்வாறு அவள் காணப்படுகிறாள்:  நிழல் உள்ள செடிப் பந்தலின் முகப்பில் அமர்ந்து தையல் வேலையில் ஈடுபட்டிருக்கிறாள்.  பழுப்பு மணல் நிறத்தில் ஒரு மிக எளிய அகன்ற உடையணிந்திருக்கிறாள் - அதிக வெப்பத்தினிமித்தமாக இருக்கலாம்.

செடிப் பந்தலின் அடுத்த கோடியில் அறுவடை செய்கிறவர்கள் பயிர்தாளை அறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.   ஆனால் அது, முதல் அறுவடையின் தாளாக இருக்க முடியாது.  ஏனென்றால் திராட்சைக் கனிகள் ஏறக்குறைய பொன்னிறமாகி விட்டன;  பெரிய ஆப்பிள் மரத்தின் கனிகள் ஒளிரும் மஞ்சளாகவும், சிவப்பு மெழுகு போலுமிருக்கிறது.  சோள வயல் கட்டைக் குத்திகளால் நிரம்பியுள்ளது.  அங்கே சிறு சுவாலைகள் போல் பாப்பி மலர்கள் அசைகின்றன.  விறைப்பான தெளிந்த ஒரு வகை தானிய மலர்கள் நட்சத்திர வடிவாகவும், கீழ் வானின் நீலமாகவும் உள்ளன.

நிழல் விழும் செடிப் பந்தலிலிருந்து சின்ன மரியா வருகிறார்கள்.  ஏற்கெனவே துரிதமாயும் சுதந்திரமாயும் உள்ளார்கள்.  அவர்களின் சிறு எட்டுக்கள் ஸ்திரமா           யிருக்கின்றன.  அவர்களுடைய வெள்ளைப் பாத அணிகள்           கற்கள் நடுவில் இடறவில்லை.  அவர்களின் வசீகரமான தோற்றம் மெல்ல அசையும் புறாவின் அடி வைத்தல்            போலுள்ளது.  அவர்களும் முழுதும் வெண்மையாய் ஒரு              சின்னப் புறாவைப் போல், கணுக்கால் வரை நீளும் தன் லினன் ஆடையில் காணப்படுகிறார்கள்.  அது ஒரு அகலமான ஆடை.  கழுத்தில் ஒரு நீல நாடாவால் சுருட்டப்பட்டுள்ளது.  குட்டையான அதன் கைகள் அவர்களின் திரட்சியான ரோஜா நிற முன்கைகளை வெளியில் காட்டுகின்றன.  ஒரு சம்மனசைப் போல் காட்சியளிக்கிறார்கள்:  பட்டுப் போன்ற                இளம் பொன் தேன் நிற முடி.  அதிக சுருள் இல்லாமல் அலை       போல் வளைந்து நுனியில் சுருண்டுள்ளது.  வான நீல நிற            விழிகள்.   அவர்களின் இனிய குறுநகை முகம் ரோஜா நிறம்.              அந்த லினன் ஆடையின் கைகளுக்குள்ளே வீசும் காற்று                    புகுந்து அதை உப்ப வைப்பதால் பறக்க ஆயத்தமாகும் பாதி                        விரித்த இறக்கைகளுடைய சம்மனசு போல் அவர்கள் தோன்றுகிறார்கள்.

 அவர்கள் கரங்களில் பாப்பி மலர்களும், கூல மலர்களும், கூலப் பயிர் விளையும்  நிலங்களில் பூக்கும் மற்ற மலர்களும்  உள்ளன.  அவற்றின் பெயர் எனக்குத் தெரியவில்லை.  அவர்கள் நடந்து வருகிறார்கள்.  தன் தாயின் பக்கத்திற்கு                              வரவும்  ஓடி வருகிறார்கள்.  மகிழ்ச்சியோடு குரல் கொடுத்துக்             கொண்டு ஒரு சிறு புறாவைப் போல் தாயின் மடியை நோக்கி வருகிறார்கள்.  அன்னம்மாளும் தன் கால்களை விரித்து, குழந்தையை ஏற்கிறாள்.   ஊசி குழந்தை மேல் பட்டு விடாமல் தூர வைத்து விட்டு, கரங்களை விரித்து அரவணைக்கிறாள்.

இது நேற்று மாலையில் காணப்பட்ட காட்சி.  இன்று அது மீண்டும் காணப்பட்டு அதே காட்சி தொடருகிறது.

அந்தச் சிறு புறா “அம்மா, அம்மா!” என்று கூப்பிட்டுக் கொண்டே  தன்  தாயின்  மடியில் முகம் புதைத்துக்           கொள்கிறது. பாதங்கள் தரைப் புல்லில் பதிந்துள்ளன.  முகம் தாயின் மடியில் படிந்து அவர்களின் பொன்னிற முடி மட்டும் கழுத்தின் பின்புறமாகத் தெரிகிறது.  அன்னம்மாள் குனிந்து அன்புடன் அதில் முத்தமிடுகிறாள்.

குழந்தை மரியா தன் தலையை உயர்த்தி மலர்களைத்   தாயிடம் கொடுக்கிறார்கள்.  அவை யாவும் தன் அம்மாவிற்கே.  ஒவ்வொரு பூவிற்கும் தான் கண்டுபிடித்த ஒரு கதையைச் சொல்கிறார்கள்:

“இந்த பெரிய நீல மலர், என் அம்மாவுக்கு               ஆண்டவரின் முத்தத்தைக் கொண்டு வருவதற்காக,  மோட்சத்திலிருந்து இறங்கி வந்த நட்சத்திரம்.  இங்கே இந்தப் பரலோகப் பூவின் இருதயத்தில் அம்மா முத்தமிடுங்கள்.  அது கடவுளின் சுவையைக் கொடுக்கும்.

அப்பாவின் கண்களைப் போன்ற இள நீலமாகிய             இந்தப் பூவின் இதழ்களில் ஆண்டவர் என் அப்பாவை அதிகம் நேசிக்கிறார் என எழுதியிருக்கிறது.  ஏனென்றால் என் அப்பா நல்லவர்.

இந்தச் சின்னப் பூ (மியோ சோட்) - இது ஒன்று மட்டும்தான் கிடைத்தது - என்னைக் கடவுள் நேசிப்பதாகச் சொல்லும்படி இதை அவர் படைத்தார்.

இந்தச் சிவந்த பூக்கள் - அம்மாவுக்கு இவை என்ன          வென்று தெரியுமா?  தாவீதரசனின் ஆடையின் துண்டுகள்.  இஸ்ராயேலின் எதிரிகளுடைய இரத்தம் தோய்ந்தவை.  போர்க்களங்களிலும் வெற்றித் தளங்களிலும் விதைக்கப்          பட்டவை.  ஆண்டவருக்காக அவர் போரிட்டபோது கிழிந்த அவருடைய வீர வைராக்கிய அரச உடையிலிருந்து வந்த துண்டுகள்.

இந்த சாந்தமான வெள்ளைப் பூ.  வானத்தை நோக்கியுள்ள ஏழு சிமிழ்களால் செய்தது போலுள்ளது.  வாசனை நிரம்பியிருக்கிறது.  இது சுனைப் பக்கத்தில் வளர்ந்தது - அப்பா முட்கள் நடுவிலிருந்து இதைப் பறித்துத் தந்தார்கள்.   இது சாலமோனின் ஆடையிலிருந்து செய்யப்பட்டது.  அவர் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், அவருடைய சின்னப்              பேத்தி பிறந்த அதே மாதத்தில், இஸ்ராயேலரின் கூட்டங்களுக்கு மத்தியில் வாக்குத்தத்தப் பேழைக்கும், கிருபாசனத்திற்கும்            நடுவில் தம் அழகிய ராஜ கம்பீரமான ஆடையாபரணங்களுடன் நடந்து சென்ற போது அணிந்திருந்தார்.  அவருடைய           மகிமையைச் சூழ்ந்திருக்க மீண்டும் இறங்கி வந்த                    மேகத்தைக் கண்டு மகிழ்ந்து துதிப் பாடலையும் தம்                  மகிழ்வின் மன்றாட்டையும் பாடினார்.

இந்தப் பூவைப் போல எப்போதும் நான் இருக்க  ஆசிக்கிறேன்.  ஞானியான அரசனைப் போல் நானும் என் வாழ்நாள் முழுவதும் சங்கீதங்களையும் ஜெபங்களையும் கிருபாசனப் பேழைக்கு முன்பாக பாடிக் கொண்டிருக்க விரும்புகிறேன்” என்று கூறுகிறார்கள்.

“மகளே, இந்தப் புனிதமான காரியங்கள் உனக்கு எப்படித் தெரியும்?  யார் உனக்கு சொல்லிக் கொடுத்தார்கள்?  அப்பாவா?”

“இல்லை.  அது யார் என்று எனக்குத் தெரியவில்லை.  இவைகளை நான் எப்போதும் அறிந்திருந்ததாக எண்ணுகிறேன்.  ஒரு வேளை எனக்குச் சொல்லிக் கொடுக்கிற நான் காணாத        ஒருவர் இருக்கக் கூடும்.  நல்லவர்களிடம் பேசும்படி கடவுள் அனுப்பும் தூதர்களுள் ஒருவராயிருக்கலாம்.  அம்மா, எனக்கு இன்னொரு கதை சொல்வீர்களா?” 

“உனக்கு எந்தக் கதை கேட்க விருப்பம்?” 

சின்ன மரியா தன் நினைவுகளில் ஆழ்ந்தபடி     சிந்திக்கிறார்கள்.  இக்காட்சியைப் படம் பிடித்து               நிரந்தரமாக்க வேண்டும்.  அவர்களுடைய எண்ணங்களின்    நிழல்கள் அக்குழந்தை முகத்தில் படிகின்றன.  இஸ்ராயேலின வரலாற்றைச் சிந்தித்தபடி புன்னகை, பெருமூச்சு, பிரகாசம், மேக படலங்கள் காணப்படுகின்றன. பின் ஒரு தீர்மானித்திற்கு வந்தவர்களாய்:  “கிறீஸ்து வாக்களிக்கப்படுகிற, கபிரியேலும், தானியேலும் வருகிற கதையைச் சொல்லுங்கள்” என்கிறார்கள்.

கண்களை மூடிக் கொண்டு, கதையை மரியா    கேட்கிறார்கள்.  அதை நன்றாக நினைவில் பதிப்பது போல்                தன் தாயின் வார்த்தைகளைத் தாழ்ந்த குரலில் தானும் சொல்கிறார்கள்.  கதையின் முடிவுக்கு வந்ததும்:  “அம்மா, எம்மானுவேல் நம்மிடம் வருவதற்கு இன்னும் எவ்வளவு காலமாகும்?” என்று கேட்கிறார்கள்.

“இன்னும் ஏறக்குறைய முப்பது வருடங்கள் ஆகும்” 

“அவ்வளவு நீண்ட காலமா?  நான் அப்போது தேவாலயத்தில் தங்கியிருப்பேன்... அம்மா சொல்லுங்கள்:  நான் இரவும் பகலும், பகலிலும், இரவிலும் விடாமல் வருந்தி வருந்தி மன்றாடினால், அதே காரியத்திற்காகவே நான்                         கடவுள் ஒருவருக்கே சொந்தமாக என் வாழ்நாளெல்லாம் இருக்க விரும்பினால், நித்திய பிதாவானவர் மெசையாவை சீக்கிரமாக தம் மக்களுக்கு அனுப்பும் வரப்பிரசாதத்தை எனக்குத் தருவாரா?” 

“எனக்குத் தெரியாது பிள்ளாய்.  தீர்க்கதரிசி “எழுபது வாரங்கள்” என்று கூறுகிறார்.  தீர்க்கதரிசனம் சரியாக இராமல் போகாது.  ஆண்டவர் மிக இரக்கம் உள்ளவர்” - அப்போது மரியாயின் கண்களில் கண்ணீர் வருவதைப் பார்த்த               அன்னம்மாள் துரிதமாக:  “ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்றால் நீ நன்றாக, மிக நன்றாக மன்றாடினால், அவர் உன் மன்றாட்டைக் கேட்பார்” என்கிறாள்.

அச்சிறிய முகத்தில் மீண்டும் புன்னகை அரும்புகிறது.  மரியா தன் தாயை ஏறெடுத்துப் பார்க்கிறார்கள்.  திராட்சைக் கிளைகளூடே வரும் சூரியக் கதிர்கள் மரியாயின்                    கண்ணீர்த் துளிகளை ஆல்ப்ஸ் மலையில் பாசிச்  செடியின்      மெல்லிய தண்டில் படிந்த பனித் துளிகளைப் போல் பிரகாசிக்கச் செய்கின்றன.

“அப்படியானால் நான் மன்றாடுவேன்.  இதற்காக நான் ஒரு கன்னியாயிருப்பேன்” என்கிறார்கள் மரியா.

“சரி, கன்னியாயிருப்பதென்றால் அதன் பொருள் என்னவென்று உனக்குத் தெரியுமா?” 

“கன்னியாயிருப்பதென்றால் மனித அன்பை அறியாதிருப்பது;  கடவுளின் அன்பை மட்டுமே அறிந்திருப்பது.  கன்னியாயிருப்பதென்றால் ஆண்டவரைப் பற்றி மட்டுமே சிந்திப்பது.  சரீரத்தில் குழந்தையாகவும், இருதயத்தில் சம்மனசாகவும் இருப்பது.  கடவுளை மட்டுமே நோக்க        கண்களைக் கொண்டிருப்பது;  அவருக்கு மட்டுமே செவி கொடுப்பது; அவரை மட்டுமே வாயால் புகழ்வது;  தன்னைப் பலிப் பொருளாக கடவுளுக்கு அர்ப்பணிக்கவே கரங்களையும், அவரைத் தீவிரமாய்ப் பின்செல்லவே கால்களையும் கொண்டிருப்பது.  அவருக்கு அளிக்கப்படுவதற்காகவே இருதயத்தையும், வாழ்வையும் வைத்திருப்பது.” 

இதைக் கேட்ட அன்னம்மாள்:  “மரியா, ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக! அப்படியானால் உனக்குக்  குழந்தைகளே இருக்க மாட்டார்களே!  நீயோ குழந்தைகளை நேசிக்கிறாய்.  சின்ன ஆட்டுக் குட்டிகளையும், புறாக்களையும் மிகவும் விரும்புகிறாய்...  அது உனக்குத் தெரிகிறதா?  ஒரு தாய்க்கு அவள் குழந்தை ஒரு சின்ன சுருள்முடி வெள்ளை  ஆட்டுக் குட்டி; பட்டு இறகுகளையும், பவழ வாயையுமுடைய சின்னப் புறா - நேசிக்கப்படவும், முத்தமிடவும் அது “அம்மா” என்று கூப்பிடுவதைக் கேட்கவும்.  தெரிகிறதா?” 

மரியா கூறுகிறார்கள்:  “அம்மா!  அதெல்லாம்     ஒன்றுமில்லை.  நான் ஆண்டவருக்குச் சொந்தமாயிருப்பேன்.  தேவாலயத்தில் இருந்து ஜெபிப்பேன்.  அப்போது ஒரு வேளை            ஒரு நாள் எம்மானுவேலைக் காண்பேன்.  அவருடைய                   தாயாக இருக்க வேண்டிய கன்னிகை ஏற்கெனவே பிறந்திருக்க வேண்டுமே!  பெரிய தீர்க்கதரிசி கூறுவதுபோல், அக்கன்னிகை தேவாலயத்தில் இருப்பாள்... நான் அவளுடைய தோழியாயிருப்பேன்.  அவளுடைய வேலைக்காரியாக         இருப்பேன்.  ஆமாம்!  நான் மட்டும் கடவுளுடைய            வெளிச்சத்தால் அவளை சந்திக்க முடிந்தால் ஆசீர்வதிக்கப்             பட்ட அவளுக்கு ஊழியஞ் செய்யவே ஆசிக்கிறேன்.  பின்னால் அவள் தன் குமாரனை என்னிடம் கொண்டு வருவாள்.  என்னை அவரிடம் கூட்டிப் போவாள்.  அவருக்கும் நான் பணி             புரிவேன்... அம்மா, இதை எண்ணிப் பாருங்கள்!. மெசையாவுக்கு ஊழியம் செய்வதென்பதை...!” 

மரியாயை மேலே உயர்த்துகிற இந்த நினைவால்          அவர்கள் மேற்கொள்ளப்படுகிறார்கள்.  அதே சமயம் முழுவதும் தாழ்த்தவும் படுகிறார்கள்.  கரங்களைக் குறுக்காகத் தன்           நெஞ்சில் வைத்து தலையைத் தாழ்த்தி முன்னால் சற்று குனிந்தபடி உணர்வு நிரம்பியவர்களாய்ச் சிவந்து காணப்படுகிறார்கள்.  நான் கண்ட மங்கள வார்த்தைக் காட்சியின் குழந்தைப் பதிப்பு போல் அது இருக்கிறது.

மரியா மீண்டும் கூறுகிறார்கள்:  “ஆனால் இஸ்ராயேலின் அரசர், ஆண்டவரின் அபிஷேகம் பெற்றவர், தனக்கு ஊழியம் செய்ய என்னை அனுமதிப்பாரா?” 

“அதைப் பற்றி ஐயம் கொள்ளாதே.  “அறுபது அரசிகளும், எண்பது மறுமனையாட்டிகளும், எண்ணற்ற கன்னிகளும்            அவருக்கு இருக்கிறார்கள்.” என்று சாலமோன் இராஜா கூறவில்லையா?  அரசருடைய அரண்மனையில் எண்ணற்ற கன்னிகைகள் ஆண்டவருக்கு ஊழியம் செய்து கொண்டிருப்பார்கள்.”

“பார்த்தீர்களா?  அப்படியானால் நிச்சயமாக நான்               ஒரு கன்னியாக இருக்க வேண்டுமே!  கண்டிப்பாக!  அவர் தம் தாய் ஒரு கன்னியாக இருக்க வேண்டுமென விரும்பினால்                அவர் கன்னிமையை மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக            ஆசிக்கிறார் என்றுதானே அர்த்தம்? அவருடைய தாயைப்               போல் ஏறக்குறைய என்னை ஆக்கும் கன்னிமைக்காக              அவருடைய ஊழியக் காரியாகிய நான் அவரால் நேசிக்கப்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.  அதுதான் எனக்கு வேண்டும்... மேலும் ஆண்டவரை நோகச் செய்ய மட்டும்                  நான் பயப்படாமலிருந்தால், நான் ஒரு பாவியாக, ஒரு பெரிய பாவியாக இருக்கவும் விரும்புகிறேன்... அம்மா சொல்லுங்கள், கடவுள்மேல் கொண்ட அன்பினால் ஒருவன் பாவியாயிருக்க முடியுமா?” 

“நீ என்ன சொல்கிறாய் மகளே?  நீ சொல்வதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லையே!” 

“அதாவது இரட்சகராகிற கடவுளால் நேசிக்கப் படுவதற்காக ஒரு பாவத்தைக் கட்டிக் கொள்வது.  இழக்கப்பட்டவன் இரட்சிக்கப்படுகிறான் அல்லவா?  இரட்சகருடைய அன்பான பார்வையைப் பெற்றுக் கொள்ள, அவரால் நான் இரட்சிக்கப்பட விரும்புகிறேன்.  அதற்காகத்தான் பாவங் கட்டிக் கொள்ள விரும்புகிறேன்; அவருக்கு அருவருப்பூட்டும்படி பாவத்தைச் செய்வதற்கல்ல.  நான் இழக்கப்படாவிட்டால், அவர் என்னை எப்படி இரட்சிப்பார்?”

அன்னம்மாளின் வாய் அடைத்துப் போகிறது.  அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

சுவக்கீன் அவளுக்கு உதவுகிறார்.  அவர் புல்தரையில், திராட்சைக் கன்றுகளின் தாழ்ந்த வேலிக்குப் பின்னால் சத்தமில்லாமல் அங்கு வந்து:

“அவர் உன்னை முன்கூட்டியே இரட்சித்திருக்கிறார்.  ஏனென்றால், நீ அவரை நேசிக்கிறதையும் அவரை                       மட்டுமே  நீ நேசிக்க விரும்புவதையும் அவர் அறிந்திருக்கிறார்.  அதனால் நீ ஏற்கெனவே இரட்சிக்கப்பட்டிருப்பதால், நீ விரும்புகிறபடியே நீ கன்னிகையாயிருக்கலாம்” என்கிறார்.

“அப்படியா அப்பா!” என்று அவர் முழங்கால்களைக்      கட்டிக் கொண்டு தன் தந்தையைப் போன்றிருக்கும் தன்             தெளிந்த நீலக் கண்களால் சுவக்கீனைப் பார்க்கிறார்கள்                    சின்ன மரியா.  இந்த நம்பிக்கை அவரிடமிருந்து அவர்களுக்குக் கிடைத்ததால் மிக்க மகிழ்ச்சியடைகிறார்கள்.

“ஆம் என் கண்மணி, அப்படியேதான், பார்!  இந்தச்      சின்னக் குருவியை உனக்கு நான் கொண்டு வந்தேன்.  இது தன் முதல் பறவையிலே ஊற்றுக்கு அருகே வந்து இறங்கியது.             அதை நான் அங்கேயே விட்டிருக்கலாம்.  ஆனால் அதன் பலவீனமான இறக்கைகளுக்கு அங்கிருந்து மீண்டும் பறந்து  செல்லப் பலமில்லை.  பாசி படிந்த கற்களில் பற்றிப் பிடித்து           நிற்க அதன் சிறிய கால்களால் கூடவில்லை.  அது                     நீருக்குள் விழுந்திருக்கும்.  ஆனால் அது வரையிலும் நான் காத்திருக்கவில்லை.    அதை நான் எடுத்தேன்.  இப்போது     உன்னிடம் அதைக் கொடுக்கிறேன்.  நீ அதை உன் விருப்பப்படி செய்யலாம்.  விஷயம் என்னவென்றால் அது ஆபத்தில்          விழுவதற்கு முன்னே காப்பாற்றப்பட்டு விட்டது.                    கடவுளும் இப்படியே உனக்குச் செய்திருக்கிறார்.  மரியா,             இந்தக் குருவிக் குஞ்சு தண்ணீருக்குள் விழுமுன் நான் காப்பாற்றியதால் அதை அதிகம் நேசித்தேனா, அல்லது                  அது விழுந்தபின் அதை எடுத்திருந்தால், அதிகம் நேசித்து இருப்பேனா?” 

“இப்போதே அதைக் காப்பாற்றியதால்தான்.  ஏனெனறால் அது குளிர்ந்த நீரில் விழுந்து கஷ்டப்பட நீங்கள் விடவில்லை.”

“கடவுளும் நீ பாவஞ் செய்யுமுன்பே உன்னைக் காப்பாற்றியதால் உன்னைக் கூடுதலாக நேசித்திருக்கிறார்.” 

“நானும் என் முழு இருதயத்தோடும் அவரை              நேசிப்பேன்.  முழுமையான இருதயத்தோடு.  என் அழகிய            சின்னக் குருவியே!  நானும் உன்னைப் போல்தான்.  நம்மைக் காப்பாற்றியதால் ஆணடவர் நம் இருவரையும் சமமாக நேசித்திருக்கிறார்.  இப்போது நான் உன்னை வளர்த்து போக விட்டு விடுவேன்.  நீ காட்டிலும், நான் தேவாலயத்திலும் கடவுளின் புகழைப் பாடுவோம்.  நாம் அவரைப் பார்த்து: “ஆண்டவரே, எதிர்பார்த்திருக்கிறவர்களுக்கு நீர் வாக்களித்தவரை அனுப்பியருளும்” என்று சொல்லுவோம்.  அப்பா!  என்னை எப்பொழுது ஆலயத்திற்குக் கொண்டு செல்லப் போகிறீர்கள்?” 

“விரைவிலேயே மரியா.  ஆனால் நீ உன் அப்பாவை விட்டுப் பிரிவதற்கு வருந்தவில்லையா?” 

“வருந்துகிறேன்.  அதிகம் வருந்துகிறேன் அப்பா.          நீங்களும் அங்கு வருவீர்கள்தானே?... எப்படியென்றாலும் அது வேதனை தராவிட்டால் அது எப்படி ஒரு பலி ஆகும்?” 

“நீ எங்களை நினைப்பாயா?” 

“எப்போதும் உங்களை  நான் நினைப்பேன்.  எம்மானுவேலுக் காக மன்றாடிய பின் உங்களுக்காக மன்றாடுவேன்.  உங்களுக்கு மகிழ்ச்சியும், நீண்ட ஆயுளும் ஆண்டவர் தரும்படியாக.                அவர் இரட்சகராகும் நாள் வரையிலும்.  அதன் பின்              உங்களை மோட்ச ஜெருசலேமுக்கு எடுத்துச் செல்லும்படி மன்றாடுவேன்.” 

சுவக்கீன் மரியாயை தம் கரங்களில் அரவணைக்கிறார்.  காட்சி முடிகிறது.


சேசு கூறுகிறார்: 

பண்டிதர்களுடைய விமர்சனங்கள் எடுப்பான எதிர்வாதங்களுடன் ஏற்கெனவே எனக்குக் கேட்கின்றன.

“இன்னும் மூன்று வயது முடிவுறாத ஒரு சிறுமி இவ்வாறு எப்படிப் பேச முடியும்?  இது மிகைப்படக் கூறுவதாகும்.”  ஆனால் இவர்களே என்னுடைய பாலப்பருவத்தில் பெரியவர்களின செயல்களை எனக்குப் பொருத்திக் கூறி என்னை ஓர் விபரீதப் பிறவியாக்குவதை நினைப்பதில்லை.

எல்லோருக்கும் ஒரே வகையாகவோ, அல்லது ஒரே சமயத்திலோ அறிவுத்திறம் கொடுக்கப்படுவதில்லை. புத்தி விவரம் அறியும் வயது ஆறு என்று திருச்சபை நிர்ணயித்துள்ளது.  ஏனென்றால் அடிப்படை முக்கியமான விஷயங்களிலாவது, பின் தங்கிய குழந்தை கூட, அந்த வயதில் நன்மை தீமையைக் கண்டுகொள்கிறது.  ஆனால் அந்த வயதுக்கு வெகு முன்னாலேயே போதிய அளவு வளர்ச்சி பெற்ற கண்டுபிடித்தலோடு, தெரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும், விரும்பவும் செய்யக் கூடிய பிள்ளைகள்  இருக்கிறார்கள்.  சின்ன இமெல்டா லாம்பெர்தினி, விற்றர்போ ரோசா, ஓர்க்கென் நெல்லி, நென்னோலினா ஆகியோர்.                 கடின பண்டிதர்களே, என் அன்னையும் அவர்களைப் போல் சிந்திக்கவும், பேசவும் முடிந்தது என்று நீங்கள் நம்புவதற்கு அக்குழந்தைகள் அத்தாட்சியாக இருக்கிறார்கள்.  ஆயிரக்  கணக்கான இப்படிக் குழந்தைகள், பூமியில் மூத்தோர்களைப்           போல் சில பல ஆண்டுகள் அறிவைப் பயன்படுத்திய பிறகு என்னுடைய மோட்ச இராச்சியத்தில் இப்பொழுது இருக்கிறார்கள். அவர்களுள் நான்கு பேருடைய பெயர்களை மட்டும் இங்குமங்குமாக எடுத்துக் கூறியுள்ளேன்.

அறிவு என்பதென்ன?  கடவுளின் ஒரு கொடை.  ஆகவே அவர் தம் விருப்பப்படி யாருக்கும் அவர் விரும்பும்போது               அதைக் கொடுக்க முடியும்.  புத்தியும் அறிவாற்றலும்  உடையவரான அரூபியாயிருக்கிற கடவுளைப் போல்                 உங்களை அதிகம் ஆக்குவனவற்றுள் ஒன்று அறிவு ஆகும்.           அறிவும் புத்தியும் கடவுள் சிங்காரத் தோட்டத்தில் மனிதனுக்கு அளித்திருந்த கொடைகளாகும்.  வரப்பிரசாதம் முதல்      பெற்றோரின் ஆன்மாவில் உயிருடன் இருந்தபோது, அவர்களிடம் அது பழுதற்றதாய் செயல்பட்ட போது, அவர்கள் எப்படி ஜீவன் நிறைந்தவர்களாயிருந்தார்கள்!

“எல்லா ஞானமும் கடவுளிடமிருந்தே வருகிறது.  அது நித்தியத்திற்கும் அவருடையதே” என்று ஜேசு பென்சீராக் ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.  அப்படியானால் மனிதர்கள் கடவுளின் பிள்ளைகளாயிருந்திருந்தால் அவர்கள் எத்தகைய ஞானத்தைக் கொண்டிருந்திருப்பார்கள்!

நீங்கள் வரப்பிரசாதத்திலிருந்தும் நேர்மையிலிருந்தும்        தவறி விழுந்ததின் இயல்பான பலாபலன்தான் உங்கள்               அறிவில் காணப்படும் இடைவெளிகளாகும். தேவ வரப்பிரசாதத்தை இழந்ததினால் நீங்கள் ஞானத்தை உங்களிடமிருந்து பல நூற்றாண்டுகளுக்குத் தள்ளிப்            போட்டுவிட்டீர்கள்.  எரி நட்சத்திரம் மேகக் கூட்டங்களுக்குப் பின்னால் மறைந்திருப்பது போல் ஞானம் தன் பிரகாசமுள்ள ஒளி வீச்சுகளுடன் உங்களிடம் வந்து சேராமல் உங்களுடைய தவறான போக்குகளால் மேலும் மேலும் கனமாக்கப் பட்ட பனிப்புகை மூட்டங்கள் வழியாகவே அது உங்களை வந்தடைந்தது.

பின்பு, கிறீஸ்து வந்து கடவுளுடைய அன்பின் மிகச்               சிறந்த கொடையாகிய தேவ வரப்பிரசாதத்தை மீண்டும்           உங்களுக்கு அளித்தார்.  ஆனால் இந்த இரத்தினத்தை தெளிவோடும், பரிசுத்தமாகவும் வைத்துக் கொள்ள உங்களுக்குத் தெரிகிறதா?  இல்லை.  உங்களுக்கு அது தெரியவில்லை.  பாவஞ் செய்து, உங்கள் தனி விருப்பத்தினால் அதை நீங்கள் நசுக்கி             விடாத போது, உங்கள் இடைவிடாத சிறு குற்றங்களாலும், பலவீனங்களாலும் தீமையின் மேல் கொள்ளும் சார்பினாலும்   அதை நீங்கள் அழுக்கடையச் செய்கிறீர்கள்.  அந்த முயற்சிகள் உங்கள் ஏழு தலையான பாவங்களுடன் ஓர் உண்மையான               விவாக உறவாடுதலாக இல்லாவிட்டாலும், தேவ வரப்பிரசாத ஒளியையும், அதன் செயல்பாட்டையும் பலவீனப்                படுத்துவதாக இருக்கின்றன.  மேலும் முதல் பெற்றோருக்குக் கடவுள் அளித்திருந்த மகத்தான அறிவின் ஒளியை பலவீனப்படுத்துவதற்கு, நூற்றாண்டு நூற்றாண்டாக, உங்கள் உடலிலும், மனதிலும் தீய பாதிப்பை ஏற்படுத்துகிற கேடு இருக்கிறது.

ஆனால் மரியம்மாள் தூய புதிய ஏவாளாக கடவுளின் மகிழ்ச்சிக்கென சிருஷ்டிக்கப்பட்டது மட்டுமல்ல, அவர்களே உயரிய ஏவாள், உந்நதருடைய தலைசிறந்த கைவினைப் பொருள்; தேவ வரப்பிரசாதத்தால் நிரம்பியிருந்தவர்கள்;  கடவுளின் மனதில் வார்த்தையானவருடைய தாயாக இருந்தவர்கள்.

ஜேசு பென் சீராக் கூறுவது:  “ஞானத்தின் ஊற்றாயிருப்பவர் வார்த்தையானவரே.”  அப்படியானால் குமாரன் தம் தாயின் நாவில் தம் ஞானத்தை வைத்திருக்க மாட்டாரா?

தீர்க்கதரிசியின் வாய் வார்த்தையானவரின் வார்த்தைகளை - தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஞானத்தை மனிதர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியிருந்த காரணத்தால், நெருப்புக் கங்கலால் சுத்திகரிக்கப்பட்டதானால், சிநேகமாயிருப்பவர் தம் குழந்தைப் பத்தினியுடைய சொற்களை - வார்த்தையானவருடைய தாயின் சொற்களைப் பரிசுத்தமாக்கி, அவர்கள் ஒரு குழந்தையைப் போலும், அதற்குப் பின்  ஒரு ஸ்திரீயைப் போலும் பேசாமல்,  கடவுளின்  பெரிய  ஒளியிலும், அவருடைய ஞானத்திலும் உருகிப் போன பரலோக சிருஷ்டியாகவே எப்போதும் பேசும்படி உயர்த்தியிருக்க மாட்டாரா?

பிற்காலத்தில் என்னில் காணப்பட்டது போலவே மரியாயின் குழந்தைப் பருவத்திலும் காட்டப் பெற்ற உயர்ந்த அறிவு அல்ல இதிலுள்ள அற்புதம்.  உண்மையான அற்புதம் எதில் இருக்கிறதென்றால், அவர்களிடம் குடிகொண்டிருந்த அளவில்லாத அறிவை, மக்கள் கூட்டங்கள் கண்டு அதிர்ச்சியடையாமலும், சாத்தானின் கவனம் ஈர்க்கப்படாமலும், இருக்கும்படி அது தகுந்த கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டதேயாகும்.

கடவுளைப் பற்றி அர்ச்சிஷ்டவர்கள் கொள்ளும் “ஞாபகப்படல்” என்பதின் ஒரு பாகமாகிய இப்பொருள் பற்றி நான் மீண்டும் கூறுவேன்.