இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஏசா தண்டனைத் தீர்ப்படைந்தவர்களின் முன் அடையாளம்

(1) மூத்தவனான ஏசா உடற்பலமும் நல்ல உடற் கட்டும் உடையவன், அம்பு எய்வதில் லாவகமும் திறமை யும் கொண்டவன். வேட்டையாடிப் பிடிப்பதில் மிக சாமர்த்தியமுடையவன்.

(2) அவன் அபூர்வமாகத்தான் வீட்டில் இருப்பான். தன் பலத்தையும் சாமர்த்தியத்தையும் நம்பி எப்போ தும் வெளியில்தான் வேலை செய்வான்.

[3] தன் தாய் ரபேக்காளை மகிழ்விக்க அவன் அவ் வளவு கவலைப்படுவது கிடையாது. அதற்காக எதுவும் செய்வதில்லை.

[4] அவன் பேராசையுடையவன். தின்ன விரும்பு வான். எவ்வளவிற்கென்றால் ஒரு பாத்திரம் உணவுக்காகத் தன் பிறப்புரிமையை விற்றுவிட்டான்.

[5] காயினைப் போல் தன் சகோதரனான யாக்கோபு மீது மிகவும் பொறாமை கொண்டிருந்தான். அவனை அளவுக்கு மிஞ்சி உபத்திரவப் படுத்தினான்.

மரியாயின் அன்பைப் பெறும் பொருட்டு அவர்களின் பிரமாணிக்கமுள்ள பிள்ளைகளும் ஊழியர்களும் கைக்கொள்ளும் பக்தி முயற் சிகளில் அவர்கள் குற்றம் கண்டுபிடிப்பார்கள். காரணம் என்னவென்றால், இந்தப் பக்தி முயற்சிகள் இரட்சண்யத் திற்கு அவசியமில்லை என்பது அவர்கள் கொள்கை. மரியாயை வெளிப்படையாய்ப் பகைக்காமலிருப்பதும் மாதாவின் பக்தி முயற்சிகளைப் பகிரங்கமாய் புறக்கணி யாமலிருப்பதும் போதும் என்பார்கள். இவர்கள். மரியன் னையிடம் ஒரு அன்பில்லாமலும் தங்கள் வாழ்வில் ஒரு திருத்தம் இல்லாமலுமிருந்து கொண்டே தேவதாய்க்குப் புகழ்ச்சியான சில செபங்களைச் சொல்லி முனகுவதால் அவர்களின் சலு கை யைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர்களுக்கு ஊழியம் செய்வதாகவும் நினைத்துக்கொள் கிறார்கள்.

189. (4) தீர்ப்பிடப்பட்டவர்கள் தங்கள் பிறப்புரி மையை அதாவது மோட்ச ஆனந்தங்களை, ஓரு பாத்தி ரம் உணவுக்கு அதாவது இந்த உலக இன்பங்களுக்காக விற்றுவிடுகிறார்கள். அவர்கள் சிரிக்கிறார்கள். குடிக்கிறார் கள். தின்கிறார்கள். தங்களை மகிழ்வித்துக்கொள்கிறார்கள். விளையாடுகிறார்கள், நடனமாடுகிறார்கள். அதற்கு மேல் பரலோக தந்தையின் ஆசீரைப் பெறத் தகுதியாகும் பொருட்டு அவர்கள் ஏசாவைப் போல் எதுவுமே செய் வதில்லை. ஒரே வார்த்தையில் சொன்னால் அவர்கள் உலகத்தைப் பற்றி மட்டுமே நினைக்கிறார்கள். உலகத்தை மட்டுமே நேசிக்கிறார்கள். உலகத்திற்காகவும் அதன் இன்பங்களுக்காகவுமே அவர்கள் பேசுகிறார்கள், செய்கி றார்கள். ஒரு குறுகிய கணப் பொழுதான இன்பத்திற் காக, ஒரு வாய்ப்புகை போன்ற கௌரவத்திற்காக, ஒரு துண்டு காய்ந்த நிலத்திற்காக - அது எப்படிப் பட்டதோஅவர்கள் தங்கள் ஞானஸ்நான அருளையும், மாசின்மை என்ற ஆடையையும் பரலோக உரிமையையும் விற்று விடுகிறார்கள்.

190. [5] இறுதியாக- தீர்ப்பிடப் பட்டவர்கள், முன் குறிக்கப்பட்டவர்களை இடைவிடாமல் பகைத்து துன்புறுத் துகிறார்கள், மறைவிலும் வெளியரங்கமாகவும் அப்படிச் செய்கிறார்கள், முன் குறிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு ஒரு பாரம். அவர்களை வெறுத்து குற்றஞ்சுமத்தி பரி கசித்து நிந்திக்கிறார்கள். அவர்களைக் கொள்ளையடித்து ஏமாற்றி வறுமைப்படுத்துகிறார்கள். துரத்தி வேட்டை யாடி புழுதியில் வீழ்த்துகிறார்கள். அதே வேளை தங்களுக்கு வேண்டியதைத் தேடிக்கொண்டு, அனுபவித்துக் கொண்டு நல்ல பதவிகளை வகித்துக் கொண்டு செல்வந்தராகிக் கொண்டு அதிகாரத்தைப் பற்றிக் கொண்டு சௌகரிய மாக வாழ்கிறார்கள்.