நித்திய ஞானமானவரை நோக்கி ஜெபம்.

1. ஓ தெய்வீக ஞானமானவரே, பரலோக பூலோக ஆண்டவரே, அறியாதவனும், பாவியுமாயிருக்கிற அடியேன் உமது தேவ இலட் சணங்கள் பற்றிப் பேசத் துணிந்துள்ளது பற்றி தாழ்ச்சியோடு உமது மன்னிப்பை இரந்து கேட்கிறேன். உமது திருவிழிகளின் ஒரு பார்வையாலும், உமது திருவாயின் ஒரு சுவாசத்தாலும் என் மனதின் இருளையும், என் உதடுகளின் அசுத்தத்தையும் தேவரீர் கழுவி சுத்திகரிக்கும் வரையிலும், அவற்றைக் கண்ணோக்காதிருக்கும்படி உம்மை மன்றாடுகிறேன்.

உம்மில் எவ்வளவோ அதிகமான அழகும், இன்பமும் இருக் கின்றன. தேவரீர் அநேக தீமைகளிலிருந்து என்னை மூடிப் பாது காத்து, ஏராளமான நன்மைகளை என்மீது பொழிந்திருக்கிறீர். நீரோ வெகு குறைவாக அறியப்பட்டிருக்கிறீர், எவ்வளவோ அதிகமாக அசட்டை செய்யப்படுகிறீர். நான் எப்படி மவுனமாக இருக்க முடியும்? நீதியும், நன்றியறிதலும் மட்டுமல்ல, மாறாக, என் சொந்த ஆவல்களே கூட உம்மைப் பற்றிப் பேசுமாறு என்னை வற்புறுத்துகின்றன. ஆயினும், ஆண்டவரே, நான் பேசப் போவது மிகுந்த குறைபாடுள்ளதாக, ஒரு மழலையின் பிதற்றலாக மட்டுமே இருக்கும் என்பது உண்மைதான். என்றாலும், உமது நிறைவான வயதை அடைந்ததும் (எபே. 4:13) மழலைப் பிதற்றலைக் கடந்து, முறையாகப் பேசக் கற்றுக் கொள்ள ஆர்வமா யிருக்கிற ஒரு குழந்தையாகவே இன்னும் இருக்கிறேன். 

2. நான் எழுதும் காரியத்தில் ஒழுங்கோ , பொருளோ இல்லாதது போலத் தோன்றும் என்பதை நான் அறிந்திருக்கிறேன், ஆயினும் உம்மை சொந்தமாகக் கொண்டிருக்க நான் எவ்வளவோ அதிக மாக திரிந்து (ஞான. 8:18), எல்லா இடங்களிலும் உம்மைத் தேடு கிறேன். இவ்வுலகில் உம்மை அறியச் செய்ய நான் பாடுபடு கிறேன் என்றால், அதற்குக் காரணம், உம்மைப் பற்றி விளக்கிச் சொல்பவர்களும், உம்மைப் பிறர் அறியச் செய்பவர்களும் நித்திய ஜீவியத்தைக் கொண்டிருப்பார்கள் என்று நீர்தாமே வாக்களித் திருக்கிறீர் என்பதுதான் (சர்வப். 8:18).

ஆகவே, என் அன்புள்ள ஆண்டவரே. எனது இந்த எளிய வார்த்தைகளை ஞானமிக்க ஒரு பிரசங்கத்தைப் போல ஏற்றுக் கொள்ளும். என் எழுதுகோலிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் உம்மைக் கண்டடைவதற்கான படிக்கட்டு களாக நினைத்தருளும், நான் உம்மைப் பற்றி எழுத இருப்பவை களை வாசிப்பவர்கள் பூமியிலும், பரலோகத்திலும் உம்மைச் சொந்தமாகக் கொண்டிருக்கவும், உம்மை நேசிக்கவும் ஒரு புதிய ஆசையால் நிரப்பப்படும்படி, உமது பரலோக சிங்காசனத் திலிருந்து இவற்றின் மீது உமது ஆசீர்வாதங்களையும், அறிவுத் தெளிவையும் பொழிந்தருளும்.

ஆமென்.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...