இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கடவுளுக்கு அதிக மகிமையளிப்பதற்கு இந்தப் பக்தி முயற்சி மிகச் சிறந்த வழியாயிருக்கிறது.

151. இப்பக்தி முயற்சி சரியாகச் செய்யப்பட்டால் அது நம்முடைய நற்செயல்களின் பலன்களெல்லாம் சர்வேசுரனின் அதிபெரும் மகிமைக்காக உபயோகிக்கப்படு வதை நிச்சயித்துக் கொள்வதற்கு மிகச் சிறந்த வழியா யிருக்கிறது. இந்த உயர் நோக்கத்துக்காகச் செய்கிற வர்கள் அரிதாகவே இருக்கிறார்கள்-இவ்வாறு செய்வதோ நம் கடமையாக உள்ளது. இதன் காரணம் என்ன? ஒன் றில் கடவுளின் மகிமை எதிலே அடங்கியுள்ளது என் பதை நாம் அறியவில்லை; அல்லது அதை நாம் விரும்ப வில்லை என்பது தான். ஆனால் நம் நற்செயல்களின் பலன் களை நாம் ஒப்படைக்கின்ற நம் மாதா கடவுளின் மகிமை எதிலே அடங்கியுள்ளதென நன்கறிவார்கள். அதற்காகவே அவர்கள் செயலாற்றுகிறார்கள். எனவே நாம் முன்பு கூறியுள்ளபடி தன்னை முழுவதும் இத் தலைவிக்கு ஒப்புக்கொடுத்து விட்ட ஒரு உத்தம ஊழியன் தன் செயல்களின் பலன்கள் யாவும் - தன் நினைவு, சொல் எல்லாமே கடவுளின் அதிபெரும் மகிமைக்காகப் பயன் படுகின்றன என்று தைரியமாகக் கூறலாம். தன் அர்ப் பணத்தை வேணுமென்று அவன் மறுக்காமல் மட்டுமே இருக்கவேண்டும். கடவுளைத் தூய்மையான அன்புடன் சுயநலமில்லாமல் நேசித்து தன் நலனுக்கு மேலாக கட வுளின் மகிமையைத் தேடும் ஒருவனுக்கு இதைவிட ஆறுதலான வேறு ஒன்று உள்ளதா?