புத்தாண்டு

இன்னொரு ஆண்டு முடிந்துவிட்டது. ஒவ் வொரு ஆன்மாவிலும் அது ஒரு குறியை விட்டுச் சென்றிருக்கிறது. சென்ற ஆண்டில் முதல் நாளன்று நாம் இருந்த நிலையில் நம்மில் ஒருவராவது இப் பொழுது இல்லை. புண்ணிய பாதையில் ஒன்றில் நாம் முன்னேறிச் சென்றிருக்கிறோம்; அல்லது பின் சென்றிருக்கிறோம்; புது ஆண்டிலென்கிலும் முன்னேறிச் செல்வோமாக.

முடிந்த ஆண்டில் துன்பம், சோதனை, ஆபத்து முதலியவற்றை எல்லோரும் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. உலகம் நம் பாதையில் சோதனைகளை அள்ளி இறைத்தது. ஒருபோதும் சோம்பலாயிராத பசாசு புனித இராயப்பர் சொல்கிற பிரகாரம், கர்ச்சிக்கும் சிங்கத்தைப் போல் யாரை விழுங்கலாமென்று தேடி அலைந்தது. கடைசியில் நம் ஆசா பாசங்களையும் அடக்கியாள வேண்டியிருந்தது.

இவற்றுடன் நாம் செய்த யுத்தத்தில் நாம் காயப் பட்டிருக்கலாம். துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்கலாம். கடவுளது வரப்பிரசாத உதவியினாலும் தேவதிரவிய அனுமானங்களாலும் நாம் சுத்திகரிக்கப்பட் டோம். யோப் என்பவர் சொல்வது போல், வாழ்வு ஒரு போர் என்பதை இனியென்கிலும் நினைவிலிருத்த வேண்டும். சோதனைகளும் துன்பங்களும் எப்பொழுதும் இருக்கும். சம்மனசுகள் தேவ வரப்பிரசாதத்தில் உறுதிப்படுத்தப்படுமுன் சோதனையில் வெற்றி பெற வேண்டியிருந்தது. அநேக சம்மனசுகள் தவறினர். ஆதாம் ஏவாளுக்கும் சிங்காரத் தோப்பில் சோதனையின் காலம் இருந்தது. அவர்கள் சோதனையில் தவறினமையால் ஏற்பட்ட விளைவுகளை நாம் அனுபவிக்கிறோம்.

நமக்கும் சோதனை உண்டு. நாம் வெற்றி பெறும் ஒவ்வொரு சோதனையினாலும் பரலோக பலன்களைச் சம்பாதிக்கிறோம். எதிரிகளின் நாடு வழியாகச் செய் யும் பிரயாணத்துக்கு இவ்வுலக வாழ்க்கையை ஒப் பிடலாம். இதில் பல சங்கடங்களும் இடையூறுகளும் உண்டு. எனினும் கடைசியில், குறிப்பிட்ட இடம் போய்ச் சேருகிறோம். பிரயாணம் செய்கையிலேயே நாம் வழியில் நின்று, நாம் வழியில் சந்தித்த இடங்கள், ஆட்கள், சூழ்நிலை இவற்றை நோக்கி, நம் தவறுகளை யும் வெற்றிகளையும் குறித்துக் கொள்கிறோம். ஏன்? பிரயாணத்தின் முற்பகுதிகளில் நமக்கு வந்த ஆபத் துக்களையும் இடையூறுகளையும் கவனத்துடன் விலக் குவதற்காக; வெற்றிகளைக் குறிப்பது வெற்றி தந்த கடவுளுக்கு நன்றி செலுத்த. கடந்த ஆண்டில் கடவுள் தந்தைக்குரிய அன்புடன் நம்மை வழி நடத்தியிருக் கிறார். நாம் ஜெயிக்க முடியாத சோதனை நம் முன் வைக்கப்படவில்லை. நம் பலத்துக்கு மேற்பட்ட சோதனை வர அவர் ஒருநாளும் அனுமதிக்க மாட் டார். சோதனைகளை ஜெயிக்க ஏராளமான வழிக ளைக் கொடுக்கிறார். புனித சின்னப்பருக்கு பலத்த சோதனைகள் ஏற்பட்டன. அவற்றினின்றும் விடுபட அவர் ஆண்டவரைப் பிரார்தித்தார். அதற்கு ஆண் டவர் “என் வரப்பிரசாதம் உனக்குப் போதுமா னது " என்றார். ஆதலின் சின்னப்பர் சோதனைகளு டன் போராடி வெற்றியும் பேறுபலனும் பெற்றார்.

சென்ற ஆண்டின் தவறுகளை நாம் நன்கு பயன் படுத்தி புத்தாண்டுக்கான பிரதிக்கினைகளைத் தயா ரிக்க வேண்டும். ஒருவர் பாக்கியின்றி எல்லோரும் அத்தியாவசியம் செய்ய வேண்டிய பிரதிக்கினை ஒன்றுண்டு. "புத்தாண்டிலிருந்து பாவத்தையும் பாவ சமயங்களையும் விலக்குவேன்" என்பதே அது. ஆட்கள், இடங்கள், கெட்ட புத்தகங்கள், பத்திரிகை கள், படங்கள், நாடகம், சினிமா, பாடல்கள் முதலி யன பாவ சமயங்கள். என்ன பிரயாசைப்பட்டாவது இவற்றை விலக்க வேண்டும். ''உன் வலது கண் உனக்குப் பாவ காரணமானால் அதைப் பிடுங்கி உனக்குத் தூரமாய் எறிந்து போடு. ஏனெனில் உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உன் அவயங்களில் ஒன்று சேதமாய்ப் போகிறது உனக்கு உத்தமம்; உன் வலது கை உனக் குப் பாவ காரணமானால் அதைத் தறித்து விடு. ஏனெனில் உன் சரீரம் முழுவதும் நரகத்திற்கு உட் படுவதைப் பார்க்கிலும் உன் அவயங்களில் ஒன்று சேதமாய்ப் போவது உனக்கு வாசி'' (மத். 5/29-30) எனக் கிறிஸ்துநாதர் கூறுகிறார். கண், கை, இவற் றைப் போல் நமக்கு மிக அருமையான ஆட்களோ, இடங்களோ, பொருட்களோ நம்மைப் பாவத்துக்கும் அதன் வழியாக நரகத்துக்கும் இட்டுச் செல்லுமா னால், அவற்றை பரித்தியாகம் செய்ய வேண்டும் என்கிறார் நம் நலனை விரும்பும் யேசு.

புத்தாண்டின் வாசலில் நாம் நிற்கிறோம். நம்மில் நாலுகோடி மக்களுக்கு இது வாழ்வின் கடைசி ஆண்டு. இது உண்மை. மேலே கூறப்பட்ட பிரதிக்கினையை நுணு நுணுக்கமாய்ப் பின்பற்றுவாயானால் நீ அஞ்ச வேண்டாம். பிரதிக்கினையை இந்த ஒரு முறை மாத்திரம் அனுசரியாவிட்டால் என்ன? என பசாசும் கெட்ட தோழர்களும் கூறலாம். பிரதிக்கினைக்குப் பிரமாணிக்கமாயிருக்க ஆண்டவரது உதவியைக் கேள். பாவ சமயங்ளை எப்படியாவது விலக்கு. ஒரு முறை எதிரியின் சொல்லுக்கு இணங்குவாயானால் பின் இணங்காதிருப்பது கடினம். நாளை பார்த்துக் கொள்வோம் என்று கூறாதே. 

மிசுரி நாட்டு மலைப் பிரதேசத்தில் ஒரு குரு வேதம் போதித்து வந்தார். முப்பது மைல் தூரத்தில் ஒருவன் கடின வியாதியாக இருப்பதாக ஒரு நாட் காலையில் செய்தி எட்டியது. உடனே அவர் குதிரை மீதேறிப் புறப்பட்டு, மாலை நேரம் அங்கு போய்ச் சேர்ந்தார். காலையில் வியாதியாயிருந்தவன் சுகமாகி, விறகு கீறிக் கொண்டிருந்தான். அவனும் அவனுடைய மனைவியும் குருவானவரை நோக்கி: “சுவாமி, எங்களுடன் இராத் தங்குங்கள்; நீங்கள் இப்பொழுது புறப்பட்டால் இருட்டு முன் வீடு போய்ச் சேர முடியாது'' என்றார்கள். சுவாமியாரோ, “சரி, நாளைக் காலையில் இந்த வீட்டிலேயே பூசை செய்து உங்களுக்கு திவ்ய நன்மை கொடுக்கிறேன். இப்பொழுது பாவசங்கீர்த்தனம் செய்து கொள்ளுங்கள்'' என அன்றிரவு கூறினார். “பூசைக்கு முன் நேரம் இருக்கிறது, அப்பொழுது பாவசங்கீர்த்தனம் செய்கிறோம்" என அவர்கள் சொல்லிவிட்டார்கள். அதிகாலையில் குருவானவர் எழுந்து அவர்களுக்காகக் காத்திருந்தார். அவர்கள் வரக் காணோம். கதவைத் திறந்து பார்த்தார். கணவனும் மனைவியும் செத்துக் கிடந்தார்கள்

கணக்கற்ற வரப்பிரசாதங்களையும் நலன்களையும் நமக்குத் தரும்படி புது வருடத்தைக் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார். கிறிஸ்துநாதரின் சீடர்களான நாம் உண்மையாகக் கிறிஸ்துநாதரைப் பின் பற்றி, இந்த ஆண்டிலிருந்து புண்ணிய பாதையில் முன்னேறத் தீர்மானிப்போம். நாம் கடவுளுக்குப் பிரமாணிக்கமாயிருந்து பாவத்தையும் பாவசமயங்களைம் விலக்க நல்ல மனதுடன் பிரயாசைப் படுவோமானால் கடவுள் நம் முயற்சிகளையும் வேலைகளையும் ஆசீர்வதிப்பார்.