லாசலேத்

"ஒரு நாள் வரும், அப்பொழுது எங்கும் ஆபத்து சூழ்ந்திருக்கும். மீட்பின் நம்பிக்கை இல்லை எனத் தோன்றும். எனினும் நம்பிக்கையுடனிரு....... அதைரியங் கொள்ளாதே. நான் உன்னுடனிருப்பேன். மகளே, சிலுவையை நிந்திப்பார்கள், காலால் மிதிப்பார்கள், ஆண்டவரது விலா திரும்பவும் ஊடுருவப்படும். தெருக்களில் மானிட இரத்தம் ஓடும். அகில உலகும் துக்கத்திலாழ்ந்திருக்கும்... மக்கள் ஜெபிக்க வேண்டும்.... ஜெபிக்கும் யாவருக்கும் வரப்பிரசாதங்கள் வழங்கப்படும் " என்று கத்தரீன் லபூரே என்னும் கன்னிக்கு தேவதாய் அறிவித்துப் போய் பதினாறு ஆண்டுகளாயின. மாமரி விடுத்த செய்தியை மக்கள் மதிக்கவில்லை. எனினும் அன்னை மனம் மடியவில்லை. திரும்பவும் வந்தாள்.

1846-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் நாளன்று பிரான்ஸ் நாட்டிலுள்ள லாசலேத் என்னும் ஊருக் கருகாமையில் தேவதாய் காட்சி கொடுத்தாள். அந்த அன்னையைப் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள் இரு சிறுவர். மாக்ஸிமின் ஜிரோ, வயது பதினொன்று; மெலானி மத்தியூ, வயது பதினான்கு. அந்த “அழகிய நாயகி" ஒரு கல் மீது அமர்ந்து அழுதுகொண்டிருப் பதை சிறுவர்கள் முதலில் கவனித்தனர். அவளைச் சுற்றிலும் அழகிய பிரகாசம். அவள் எழுந்து, பிள்ளை களை அணுகி, “என் மக்களே, அருகில் வாருங்கள், பயப்பட வேண்டாம், பெரிய செய்திகளை உங்களுக் குச் சொல்ல வந்திருக்கிறேன்" என்றாள். சிறுவர் கள் அவளைச் சந்திக்கும்படி விரைந்து சென்றார்கள். அவள் மேலும் தொடர்ந்து பேசலானாள்:

“என் மக்கள் பணிந்து நடக்காவிட்டால் நான் பிடித்திருக்கும் என் மகனின் கரத்தை விட்டு விடும் படி வற்புறுத்தப்படுவேன். அவரது கரம் மிக பல மாயிருக்கிறது; மிக பாரமாயிருக்கிறது; இன்னும் நெடு நேரம் அதைப் பிடித்திருக்க என்னால் முடி யாது. உங்களுக்காக நான் எவ்வளவு நேரம் வேத கனப்படுகிறேன். என் மகன் உங்களைக் கைவிடாதி ருக்க வேண்டுமானால் நான் அவரை நோக்கி, விடாது பிரார்த்திக்க வேண்டும். நீங்களோ, இதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. நீங்கள் எவ்வளவு ஜெபித்த போதிலும், என்னென்ன செய்தபோதிலும், நான் உங்களுக்காகச் செய்திருப்பவைகளுக்கு நீங்கள் ஈடு செய்யமாட்டீர்கள்.

“வேலை செய்ய உங்களுக்கு ஆறு நாட்களைக் கொடுத்திருக்கிறேன்; ஏழாவது நாள் என்னுடையது. ஆனால் அதை நீங்கள் எனக்குக் கொடுப்பதில்லை. என் மகனின் கரம் மிகப் பாரமாயிருக்கும்படிச் செய்வது இது தான். வண்டியோட்டிச் செல்கிறவர்கள் என் மகன் பேரைச் சொல்லி ஆணையிடுகிறார்கள். என் மகனது கரத்தை மிகப்பாரமாக்குவது இந்த இரண்டுமே. அறுவடைக்குத் தயாராயி ருக்கும் பயிர் சேதமாய்ப் போனால், அதன் காரணம் நீங்களே. சென்ற ஆண்டில் உருளைக்கிழங்கு விளைச்சலிலேயே நான் உங்களை எச்சரித்தேன்; ஆனால் நீங்கள் அதைக் கவனிக்கவில்லை. உருளைக்கிழங்குகள் சேதமானதை நீங்கள் கண்டதும் நீங்கள் ஆணையிட்டீர்கள். என் மகன் நாமத்தை வீணாகச் சொல்கிறீர்கள். இன்னும் தொடர்ந்து உருளைக் கிழங்குகள் சேதமாகும்; கர்த்தர் பிறந்த திருநாளுக்கு முன் உருளைக் கிழங்குகள் யாவும் கெட்டுப் போகும்.

உங்களிடம் கோதுமை இருந்தால் அதை விதைப்பது வீண். நீங்கள் விதைப்பதை யெல்லாம் பூச்சிகள் தின்றுவிடும். தப்பித்து வருவதை, நீங்கள் போரடிக்கும் களத்தில் அடிக்கையில் அது தூசியாயிருப்பதைப் பார்ப்பீர்கள்.

“கொடிய பஞ்சம் வரப்போகிறது. பஞ்சம் வரு முன் இன்னொரு கொடிய நோய் வரும். ஏழு வயதுக் குட்பட்ட குழந்தைகள் ஒரு வித நடுக்கத்துக்கு உள்ளாவார்கள். அவர்களைப் பிடித்திருக்கிறவர் களின் கரங்களிலேயே அவர்கள் சாவார்கள். ஏனை யோரும் பஞ்சத்தால் வருந்துவார்கள். பழக் கொட் டைகளை (Walnuts) புழுக்கள் சாப்பிட்டு விடும். திராட்சைப் பழங்கள் கெட்டழியும். ஜனங்கள் மனந்திரும்புவார்களானால், கற்களும் பாறைகளுமே கோதுமைகளாக மாறும், உருளைக்கிழங்குகள் தாமாக முளைக்கும்.''

''என் மக்களே, நீங்கள் ஜெபங்களை நன்றாகச் சொல்கிறீர்களா?" என அன்னை சிறுவர்களிம் கேட்டாள். “இல்லையம்மா, அவ்வளவு நன்றாகச் சொல்வ தில்லை” என அவர்கள் பதிலளித்தார்கள்.

“என் மக்களே, அவைகளை நீங்கள் காலையிலும் மாலையிலும் நன்றாகச் சொல்ல வேண்டும். அதிகம் சொல்ல முடியாவிட்டால், ஒரு பரலோக மந்திரமும், ஒரு அருள் நிறை மந்திரமுமாவது சொல்லுங்கள். ஆனால் நேரம் இருக்கையில் அதிகமாய் ஜெபிக்க வேண்டும். - “சில கிழவிகளைத் தவிர வேறு எவரும் பூசைக்கு போகிறதில்லை. ஏனையோர் கோடை காலம் முழுவ தும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறார்கள். குளிர் காலத்தில், வேலை இல்லாதபொழுது, வேதத் தைக் கேலி செய்வதற்காக பூசைக்குப் போகிறார்கள். தபசு காலத்தில் நாய்களைப்போல் சந்தைக்குப் போகி நார்க ள்.''

“மக்களே! கெட்டுப்போன கோதுமையை நீங்கள் எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா?" என அந்த அன்னை அவர்களிடம் கேட்டாள்.

“இல்லை தாயே, ஒரு போதும் பார்த்ததில்லை'' என மாக்ஸிமின் பதிலளித்தான்.

“மகனே, நீ பார்த்திருக்கிறாய். இது உண்மை . ஒரு முறை உன் தகப்பனாரோடு குவான் நகருக் கருகே பார்த்தாய். கெட்டுப் போன கோதுமையைப் போய்ப் பார்க்கும்படி நிலத்தின் சொந்தக்காரன் உன் தகப்பனாரிடம் கூறினான். நீயும் கூடச்சென்றாய். இரண்டு மூன்று கதிர்களை நீ கையில் எடுத்து தேய்த் துப்பார்த்தாய்; அவை அப்படியே தூசியாயின. பின் நீ வீட்டுக்குத் திரும்பினாய். கோர் என்னும் இடத்தைச் சேர அரை மணி நேரம் இருக்கையில், உன் தகப்பனார் உன்னிடம் ஒரு துண்டு ரொட்டி யைக் கொடுத்து, 'மகனே, இந்த ஆண்டிலாவது கொஞ்சம் ரொட்டியைச் சாப்பிட்டுக் கொள். கோதுமை இவ்விதம் கெட்டுப்போகுமானால் அடுத்த ஆண்டில் யாருக்குத்தான் கோதுமை ரொட்டி சாப் பிடக் கிடைக்குமோ தெரியாது' என்று சொன்னா ரல்லவா?'' என்று அன்னை கூறினாள்.

“ஆம், அம்மா, இப்பொழுது என் நினைவுக்கு வரு கிறது. முன்னர் மறந்து போய் விட்டது'' என மாக்ஸிமின் கூறினான்.

கடைசியாக தேவதாய் சிறுவர்களை நோக்கி, “என் மக்களே, இவை யாவற்றையும் என் மக்கள் அனைவருக்கும் அறிவியுங்கள்” என்று சொல்லி, சிறிது தூரம் போய் பூமியிலிருந்து சுமார் மூன்று அடி உயர எழும்பி மறைந்தனள். i

அன்று மாலை சிறுவர்கள் வீட்டுக்கு வந்ததும், நடந்ததையெல்லாம் வெளியிட்டார்கள். அழுது கொண்டிருந்த அன்னையின் பாதம் படிந்த இடத்தில் ஒரு நீரூற்று கிளம்பியிருப்பதை அந்த இடத்தைத் தரிசிக்கச் சென்றவர்கள் கவனித்தார்கள்,

தேவதாய் முன் அறிவித்தவை நிறைவேறத் தொடங்கின. 1847-ம் ஆண்டில் உருளைக்கிழங்குப் பயிர் முழுவதும் கெட்டுப்போயிற்று. பிரெஞ்சு அர சாங்கம் இரு உத்தரவுகளைப் பிறப்பித்து, உருளைக் கிழங்குகளை ஏற்றுமதி செய்யலாகாது என தடுத் தது. பிரான்ஸ் நாட்டினுள் அவற்றை இறக்குமதி செய்வதற்கான வசதிகளை யெல்லாம் செய்து கொடுத்தது.

1850-ம் ஆண்டில் பிக்டின் (Pictin) என்னும் கோதுமை நோய் தோன்றி நாசம் பண்ணியது. பயிர் விளைந்து விட்டது எனக்கருதி, வெட்டி போரடிக்கும் படி கொண்டு போனார்கள். அங்கு கிடைத்தது வெறும் மஞ்சள் தூள்.

1847-ம் ஆண்டில், அதாவது, மாதா காட்சி யளித்த ஆண்டுக்கு அடுத்த ஆண்டில், திரளான சிறுவர்கள் இறந்தார்கள். அந்த நோய்க்குப் பெயர் சுத் (Sutte). ஏழு வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமி களது உடல் திடீரென பனிக்கட்டியைப் போல் குளி ரடையும். பின் உடல் நடுக்கம், இரண்டு மணி நேரத்துக்குள் சாவு.

சர்க்கார் எடுத்த கணக்குப்படி 1854-ம் ஆண்டில் 60000 பேர் பசியால் மடிந்தார்கள். 1855-ல் 80000 பேர் பசிக்கொடுமையால் செத்தார்கள்.

1851-ல் பழக்கொட்டை நோய் தோன்றியது. 1857-ல் திராட்சைச் செடிகளுக்கு நோய் கண்டு நாசம் செய்தது.

தேவதாய் சமீபத்தில் பல இடங்களில் காட்சி யளித்திருக்கிறாள். அவைகளிலெல்லாம் இரு காரியங் கள் துலாம்பரமாகத் தெரிகின்றன. முதலாவது, அன்னை அரசியல் நிபுணர்களுக்கோ, பேர் பெற்ற தளபதிகளுக்கோ, தன்னைக் காண்பிக்கவில்லை. சிறு வர்களுக்கே தன்னைக் காண்பித்து வருகிறாள். இரண் டாவது, தவத்தின் அவசியத்தையே பரலோக அன்னை திரும்பத் திரும்ப வற்புறுத்திக் கூறுகிறாள். அமைதியும் சமாதானமும் நிலவ வேண்டுமானால் கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என தேவ தாய் தெரிவிக்கிறாள். பிரான்ஸ் நாட்டு கிறிஸ்தவர் கள் தொடர்ந்து பாவம் செய்வார்களானால் வரவிருக் கும் தீமைகளைத் தேவதாய் அறிவித்தாள். கிறிஸ்த வர்கள் அன்னையின் எச்சரிப்புகளைப் பொருட்படுத்த வில்லை. அதன் பலனை அனுபவித்தார்கள். தவம் செய்து மக்கள் யாவரும் தங்கள் வாழ்க்கையைத் திருத்தி அமைக்க வேண்டும். இதில் கிறிஸ்துநாதர் நமக்கு உதவி செய்யத் தயார். நாம் அவருடன் ஒத்துழைக்க வேண்டும். அவருடைய தாய் நமக் காகப் பரிந்து பேசத்தயார்; ஆனால் நாம் நம் பாவங்களுக்காகத் துக்கித்து அவைகளை வெறுத்துப் பகைத்து, நல்வழி நடக்க வேண்டும். அவளது எச்சரிப்புகளை நாம் பொருட்படுத்தாது போனால், நாமே நம் நாசத்தைத் தேடிக்கொண்டவர்களா வோம்.