இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியாயின் சிறிய செபக் கிரீடத்தைச் சொல்லுதல்

234. அவர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் மரியாயின் சிறிய செபக் கிரீடத்தை தங்களுக்கு வசதிக் கேடு இல்லாத முறையில் சொல்லி வர வேண்டும். பர லோக மந்திரம் மும்முறை, அருள்நிறை மந்திரம் பன் னிருமுறை, மாதா பெற்றுள்ள வரங்களுக்காகவும் அவர் களின் மாட்சிமையை முன்னிட்டும் இவற்றைச் சொல்ல வேண்டும். இந்தப் பக்தி முயற்சி மிகத் தொன்மையாதுை. வேதாகம அடிப்படை கொண்டது. அர்ச். அருளப்பர் (காட்சி 12. 1) பன்னிரு விண் மீன்களால் முடி சூடி சூரியனை அணிந்து கொண்டு சந்திரனைத் தன் பாதத்தடி யில் கொண்ட ஒரு பெண்ணைத் தரிசித்தார். வேதாகம விரிவுரையாளர் கருத்துப்படி (அவர்களுள் அர்ச். அகுஸ் தீன், அர்ச். பெர்னார்ட் உட்பட) இந்தப் பெண் நம் தேவ அன்னை மாமரியே.

235. இந்த செபக் கிரீடத்தை நன்றாகச் சொல்ல பல முறைகள் உள்ளன. ஆனால் அவற்றை இங்கு கூறினால் மிகவும் நீளும். இப்பக்தி முயற்சி மீது மிக பிரமாணிக்கம் உடையவர்களுக்கு பரிசுத்த ஆவி அவற்றைப் படிப்பிப்பார். அதை எளிதாகச் சொல்வதற்கு இவ்வாறு ஆரம் பிக்க வேண்டும்: "கன்னிகையே உம்ைைம நான் வாழ்த்த எனக்கு உதவி செய்யும். உம்முடைய எதிரிகளுக்கெதி ராக எனக்கு வலிமையளித்தருளும்'' (மந்திர மாலையின் மாலைச் செபம்). பின்னர் விசுவாசப் பிரமாணம் சொல் லவும். இதன் பின் ஒரு பர. மந்திரமும் 4 அருள் நிறை மந்திரம் - பிதாவுக்கும்...... இவ்வாறே முடிவு வரையிலும். இறுதியில் சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே உம் முடைய சரணமாக ......என்ற செபத்தைச் சொல்லி முடிக் கவும்.