மனிதனின் சிருஷ்டிப்பில் வெளிப்பட்ட தேவஞானமானவரின் அற்புத வல்லமை!

35. நித்திய ஞானமானவரின் வல்லமையும், மென்மையழகும் சிருஷ்டிப்பில் ஒளிவீசித் துலங்கின என்றால், மனிதனின் சிருஷ்டிப்பில் அவை இன்னும் அதிகப் பிரகாசமாக மின்னி ஒளிவீசின. ஏனெனில் மனிதனே அவருடைய அதியற்புதப் படைப்பாக, அவருடைய அழகு, உத்தமதனம் ஆகியவற்றின் உயிருள்ள சாயலாகவும், அவருடைய வரப்பிரசாதங்களின் மாபெரும் பாத்திரமாகவும், அவருடைய செல்வங்களின் அற்புதக் கருவூலமாகவும், ஓர் ஒப்பற்ற முறையில் பூமியின் மீது அவரது பிரதிநிதியாகவும் இருக்கிறான். "உம்மால் உண்டாக்கப் பட்ட சிருஷ்டியை ஆளுவதற்கு உமது ஞானத்தால் மனிதனை ஏற்படுத்தினீர்" (ஞான. 9:2). 

36. இந்த அதியற்புதமான, வல்லமை மிக்க சிருஷ்டிகரின் மகிமைக்காக, தேவ ஞானமானவரால் சிருஷ்டிக்கப்பட்ட போது மனிதன் கொண்டிருந்த ஜென்ம அழகையும், அற்புதத் தன்மை யையும் நான் விளக்கியாக வேண்டும். ஆனால் மனிதனின் கடும் பாவத்தின் நிலை ஏவாளின் பரிதாபத்திற்குரிய எளிய குழந்தை யாகிய என்மீது விழுந்து, என் புத்தியை எந்த அளவுக்கு மங்க லாக்கி விட்டது என்றால், மனித சிருஷ்டிப்பின் வேலையை மிகவும் குறைபாடுள்ள விதத்தில் மட்டுமே என்னால் விளக்க முடியும். 

37. நித்திய ஞானமானவர் தமது சொந்த புத்தி, நினைவு, சித்தம் ஆகியவற்றின் நகல்களை, அதாவது சுடர்வீசும் மாதிரிகளை உருவாக்கி, மனிதன் தெய்வீகத்தின் உயிருள்ள சாயலாக இருக்கு மாறு மனிதனின் ஆத்துமத்தை அவற்றால் நிரப்பினார் என்று நாம் சொல்லலாம். மனிதனின் இருதயத்தில் அவர் மாசற்ற தேவ சிநேகத்தின் நெருப்பைப் பற்றியெரியச் செய்தார். ஒளிவீசும் ஒரு சரீரத்தை அவனுக்குத் தந்து, சம்மனசுக்கள், மிருகங்கள், மற்ற சிருஷ்டிக்கப்பட்ட காரியங்களின் பல்வேறு இலட்சணங்கள் அனைத்தினுடையவும் ஒரு தொகுப்பை அவனுக்குள் வைத்தார் என்று உண்மையாகவே நாம் சொல்லலாம். 

38. மனிதனின் சுயம் முழுவதும் நிழல் எதுவுமின்றி பிரகாச மாகவும், கறை எதுவுமின்றி அழகாகவும், மாசு எதுவுமின்றி, மாசற்றதாகவும், எந்த உருச்சிதைவோ, கறைதிரையோ, குறை பாடோ இன்றி மிகச் சிறந்த பரிமாணங்களைக் கொண்டதாகவும் இருந்தது. ஞானத்தின் ஒளியைக் கொடையாகப் பெற்றிருந்த அவனது மனம் சிருஷ்டிகரையும், சிருஷ்டியையும் உத்தமமான முறையில் புரிந்து கொண்டது. கடவுளின் வரப்பிரசாதம் அவனது ஆத்துமத்தில் இருந்து அவனை மாசற்றவனாகவும், மகா உன்னத சர்வேசுரனின் பூரண பிரியத்துக்குரியவனாகவும் அவனை ஆக்கியது. அவனுடைய சரீரம் அழியாமையால் உடுத்தப் பட்டது. அவன் மரணத்தைப் பற்றிய எந்த அச்சமுமின்றி தன் இருதயத்தில் மாசற்ற தேவசிநேகத்தைக் கொண்டிருந்தான். ஏனெனில் அவன் இடைவிடாமலும், நிலைதடுமாறாமலும், மாசற்ற விதமாகவும் கடவுளை, கடவுளுக்காக மட்டுமே நேசித் தான். சுருங்கக் கூறினால், மனிதன் எந்த அளவுக்கு தெய்வீகத் தன்மையுள்ளவனாகவும், கடவுளில் உட்கிரகிக்கப்பட்டு, பரவச மடைந்தவனாகவும் இருந்தான் என்றால், அவன் அடக்க வேண்டிய ஒழுங்கற்ற ஆசாபாசங்களோ, வெற்றிகொள்ள வேண்டிய எதிரிகளோ அவனுக்கு இருக்கவில்லை.

நித்திய ஞானமானவரால் மனிதனுக்குக் காட்டப்பட்ட தாராளம் இத்தகையதே. தனது மாசற்ற அந்தஸ்தில் மனிதன் அனுபவித்து மகிழ்ந்த பேரின்பம் இத்தகையதாகவே இருந்தது. 

39. ஆனால் அந்தோ , தெய்வீகத்தின் இந்தப் பாத்திரம் ஓராயிரம் துண்டுகளாக உடைத்து நொறுக்கப்பட்டது. இந்த அழகான நட்சத்திரம் வானங்களிலிருந்து விழுந்தது. இந்தச் சுடர் வீசித் துலங்கிய சூரியன் தன் ஒளியை இழந்தது. மனிதன் பாவம் செய்தான், தன் பாவத்தால், தனது ஞானத்தையும், தனது மாசற்றதனத்தையும், தனது அழகையும், தனது அழியாமை யையும் இழந்து போனான். ஒரே வார்த்தையில் கூறுவதானால், அவன் தனக்குத் தரப்பட்டிருந்த எல்லா நல்ல காரியங்களையும் இழந்து போனான், தீமைகளின் படையணி ஒன்று தன் மீது பெரும் பாரமாக சுமத்தப்பட்டதை அவன் உணர்ந்தான். அவனுடைய மனம் இருட்டடிக்கப்பட்டு, பழுதுபட்டுப் போனது. அவனு டைய இருதயம் மேற்கொண்டு தன்னால் நேசிக்க முடியாதிருந்த கடவுளின் மட்டில் குளிர்ந்து போனது. பாவத்தால் கறைபட்ட அவனது ஆத்துமம் சாத்தானுடைய சாயலைப் பெற்றது! ஆசாபாசங்கள் ஒழுங்கற்றுப் போயின ; அவன் இப்போது தன்மீதே எந்தக் கட்டுப்பாடும் இல்லாதவனாக ஆனான். அவனைத் தங்கள் அடிமையாகவும், தங்கள் வசிப்பிடமாகவும் ஆக்கிக் கொண்ட பசாசுக்கள் மட்டுமே இப்போது அவனது தோழர்களாக இருந்தன. சிருஷ்டிகளும் கூட அவனுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கின.

ஒரே கணத்தில் மனிதன் பசாசுக்களின் அடிமையாகவும், கடவுளின் கடுஞ்சினத்திற்கு உரியவனாகவும் (எபே. 2:3), நரக சக்திகளின் இரையாகவும் ஆகிவிட்டான்.

தன் சொந்தப் பார்வையிலேயே அவன் எவ்வளவு அருவருப் பானவனாக ஆகிவிட்டான் என்றால், அவமானத்தினால் அவன் தன்னையே ஒளித்துக் கொண்டான். அவன் சபிக்கப்பட்டு, மரணத் தீர்வையிடப்பட்டான். பூலோக மோட்சத்திலிருந்து விரட்டப்பட்டான். மோட்சம் அவனுக்கு எட்டாக் கனியானது. எதிர்கால மகிழ்ச்சி பற்றிய எந்த நம்பிக்கையும் அற்றவனாக, பூமியின் மீது தான் பெற்ற சாபத்தின் கீழ் ஒரு பரிதாபமான வாழ்வைப் பெரும் துன்பங்களின் நடுவில் வாழும் கட்டாயத்திற்கு உள்ளானான் (ஆதி.3:10; 17:23; 4:11,12 காண்). இறுதியாக அவன் ஒரு குற்றவாளியைப் போல் இறந்து, தன் சந்ததியோடு, சரீரத்திலும் ஆத்துமத்திலும் பசாசின் நரகத் தீர்ப்பை அதனோடு பகிர்ந்து கொள்ள வேண்டியவன் ஆனான்.

மனிதன் பாவம் செய்தபோது, அவனுக்கு நேரிட்ட பேரச்சம் தரும் பெரும் துன்பம் இத்தகையதாக இருந்தது. கடவுள் தமது நீதியில், அவனுக்கு எதிராக உச்சரித்த அவனுக்கு முற்றிலும் தகுதியான தண்டனைத் தீர்ப்பு இப்படிப்பட்டதாகவே இருந்தது. 40. இத்தகைய துர்ப்பாக்கியமான நிலையில் தான் இருப்பதைக் கண்ட ஆதாம் அவநம்பிக்கையின் எல்லைக்கே போய்விட்டான். சம்மனசுக்களிடமிருந்தோ, கடவுளின் வேறு எந்த சிருஷ்டி களிடமும் இருந்தோ தனக்கு உதவி வரும் என்று அவனால் நம்ப முடியவில்லை. முன்பு தான் சொந்தமாகக் கொண்டிருந்து. இப்போது இழந்து போன தேவ சலுகைகளை எதனாலும் மீண்டும் அவனுக்குத் தர முடியவில்லை . ஏனெனில் அவன் சிருஷ்டிக்கப்பட்டபோது. எவ்வளவோ அற்புத அழகுள்ளவ னாகவும், மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டவனாகவும் இருந்தான், ஆனால் இப்போதோ, தன் பாவத்தின் காரணமாக அவன் மிகவும் அருவருப்பானவனாகவும், வெறுப்புக்குரியவ னாகவும் ஆகி விட்டான். பரதீஸிலிருந்தும், கடவுளின் பிரசன்னத்திலும் தான் வெளியே துரத்தப்படுவதை அவன் கண்டான். தனது சந்ததியார் அனைவரிலும் கடவுளின் நீதி தன்னைத் துரத்தி வருவதை அவனால் காண முடிந்தது. மோட்சம் தனக்கு அடைக்கப்பட்டு விட்டதையும், அதைத் திறக்க யாருமில்லை என்பதையும் அவன் கண்டான்; அதே சமயம், நரகம் திறப்பதையும், அதை மூட ஒருவருமில்லை என்பதையும் அவன் கண்டான்.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...