கடவுளை எவ்வளவு நேசிக்கிறாய்?

நீ அவருடைய ஸ்வீகாரக் குழந்தை; அவரது சேனையில் பதிவு செய்யப்பட்ட வீரன் நீ; அவரைப் பற்றி பல காரியங்கள் உனக்குக் கற்பிக்கப்பட்டிருக் கின்றன. நாளுக்கு நாள் நீ அவரை அதிகமதிகமாய் நேசிக்க வேண்டும் என நீ அறிவாய். அப்படி யிருந்தும் கடவுளை ரீ எவ்வளவு தூரம் நேசிக்கிறாய் என்னும் கேள்விக்கு என்ன பதில் கொடுக்கப் போகிறாய்?

பின்வரும் கேள்விகளுக்கு நீ கொடுக்கும் பதிலில் இருந்து நீ அவரை எவ்வளவு நேசிக்கிறாய் என அறியலாம்.

ஒவ்வொரு நாளும் எத்தளை முறை நீ கடவுளுடன் பேசுகிறாய்? அவர் எப்பொழுதும் உன்னருகில் இருக் கிறார் என உனக்குத் தெரிவிக்கத் தேவையில்லை அவர் உன் அருகில் இருப்பதால் பேசுவது சிரம் மல்ல.

அவரை உன் உள்ளத்தில் வைத்திருக்க நீ எவ் வளவு பிரயாசப்படுகிறாய்? உன் ஆத்துமத்தில் தேவ இஷ்டப் பிரசாதம் இருக்கையில் அவர் உன்னுள் வசிக்கிறார் என்றும், சாவான பாவம் செய்ததும் அவரைத் துரத்தி விடுகிறாய் என்றும் உனக்குத் தெரியும். ஆதலின் அவரை எப்பொழுதும் உன் உள்ளத்தில் வைத்திருக்க நீ மூயல வேண்டும் என்று சொல்வது நியாயமே.

வாரத்தில் ஞாயிற்றுக் கிழமையைத் தவிர மற்ற நாட்களில் எத்தனை முறை பூசைக்குப் போகிறாய்? கோவிலருகில் செல்ல நேர்ந்தால் அவரது சிநேக தேவ திரவிய அனுமானத்தில் அவரை எத்தனை முறை சந்திக்கிறாய்?

திவ்விய பூசை நடக்கையிலும் விசேஷமாக ஞாயிற்றுக்கிழமைப் பூசை நேரத்திலும் கோவிலில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? ஜெபப் புத்த கத்தைப் பயன்படுத்தி பூசைப்பலியைப் பின் தொடர் கிறாயா? அல்லது சோம்பலுக்கு இடங் கொடுத்து விலையுயர்ந்த நேரத்தை வீணாக்குகிறாயா?

கடவுளுடைய வேதத்தை மற்றவர்கள் அறியப் பண்ண நீ என்ன செய்கிறாய்? உன் விசுவாசம் பல மானது, உன் நடத்தை களங்கமற்றது நீ சிறு வய தில் பள்ளிக்கூடத்தில் பயின்ற நல்லொழுக்க விதி களே உன் வாழ்க்கையை இப்பொழுது நடத்துகின் றன என பிறர் உன்னைப் பற்றிச் சொல்லக்கூடுமா?