பெற்றோராகுமுன் உழைப்பும் ஒறுப்பும்

ஏதொரு கருமத்தையும் தகுதியாய்ச் செய்வதற்குப் பழக்கம் அவசியம். பழக்கம் அலுவலை இலகுவும் இன் பமுமாக்கும். வேலை செய்து உழைக்கவும், உழைப்பதை வீண்போக்காமல் பத்திரம்பண்ணவும் தேவைக்கேற்க மட்டாய்ச் செலவழிக்கவும் வாலவயசில் பழகிக்கொண்டால் பெற்றோரான பின்னும் இப்பழக்கத்தை அனுசரிப்பது எளிது. நீ வாலிபத்திற் செய்யப் பழகுவதையே வயோதிகத்திலுஞ் செய்வாயென்று அங்கிலேய பாஷையில் ஒரு பழமொழியுண்டு. இளமையில் உழைப்பாளியாயிருக்கிறவன் வழக்கமாய் முதுமையிலும் அப்படியே யிருப்பான். வாலிபத்திற் கையொறுப்பானவன் வயோதிகத்திலும் அப்படியே இருப்பான். வாலிபத்தில் ஊதாரி வயோதிகத்திலும் ஊதாரியேயாவான். உழைப்பாளியாயிராமல் அழிப்பாளியாயிருக்கிற ஒருவன் சமுசாரியான பின் உழைப்பாளியாகிவிடவும் கட்டுமட்டாய்ச் செலவழிக்கவுங் காத்திருப்பது பெரும்பிழையாம். இது கடலையுங் கப்பலையுங் கண்டுகேட்டறியாத ஒருவன் தான் கப்பலோட்டக்கூடுமென்று காத்திருப்பதை ஒக்கும்.

ஆகாயத்திற் பாடிப் பறந்து திரியும் பட்சிகளும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்குமுன் குஞ்சுகளைக் காப்பாற்றுகிறதற்காகப் பிரயாசத்தைப்பாராமல் பலநாளும் சுறு சுறுப்பாய்ப் பத்திரமான இடந்தேடி சுள்ளித்தடி, இறகு, இலை, புல், பூண்டு, வைக்கோல், கூந்தல், பழந்துணி” முதலானவைகளைச் சேகரித்துக் கூடுகட்டுகின்றன. காட் டிலுள்ள துட்டமிருகங்களுங் குட்டி போடுமுன் வேண்டி ய முஸ்திப்புச்செய்வது வழக்கம். இவைகள் தங்கள் குஞ் சுகளையும் குட்டிகளையும் தாபரித்துக் காப்பாற்றவேண்டிய காலம் மிகச் சொற்பம். ஆனால், மனுஷர் தம் மக்களை அ நேகவருடகாலமாய்த் தாபரிக்க வேண்டியவர்களானபடி யால் அதற்குத் தக்கதாய் முன்னேறவே நெடுங்காலம் வேண்டிய ஆயத்தஞ்செய்வது அவசியம். ஆகையால், இவர்கள் பெற்றோராகுமுன் வாலிபந்தொட்டே உழைக் கவும் கையொறுப்பாய் நடக்கவும் பழகவேண்டியது.

இளமைதொட்டு வேலையில் அப்பியாசப்படாத சரீ'ரம் பின்னடியில் வேலையை வெறுக்குமேயன்றி விரும்பாது. ''சோம்பித் திரியேல்'' என்பது சான்றோர் மொழி. வேதாகமம் சொல்வது யாதெனில் ''சோம்பேறியே எறும் பினிடம் போய் அதின் வழிகளைக் கவனித்துப்பார்த்து ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குத் தலைவனும் கற் பிப்போனும் இராசனும் இல்லாதிருந்தும் அது தானே கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்துத் தான் பிற்காலத்தில் தின்னவேண்டியதை அறுப்புக்காலத் தில் சேகரிக்கின்றது. சோம்பேறியே நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய். எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எ ழுந்திருப்பாய்? கொஞ்சந் தூங்குவேன், சற்றுநேரம் உறங் குவேன், இன்னுங் கொஞ்சங் கைமுடக்கிக்கொண்டு நித்தி ரைசெய்வேனென்கிறாய். அதற்குள்ளே எளிமையானது யாத்திரைக்காரன் போலவும் தரித்திரமானது ஆயுதமணிந் தவனைப்போலவும் உன்னிடம் வந்துவிடும். நீ சுறுசுறுப் புள்ளவனாயிருந்தாலல்லோ உன் வேளாண்மை நீரூற்றைப் போல் சுரக்க எளிமைத்தனம் உன்னை விட்டு அகல் ஒ டிப்போகும் '' (பழமொழி 6.6-11). இளமைதொட்டுச் சுறுசுறுப்பாய் வேலை செய்யப்பழகினவனின் தேகம் பெ லப்பட்டுப் பின்னடியிலும் இளைப்புக்களைப்புகளையும் கஸ் திவருத்தங்களையும் நன்றாய்த்தாங்கிக்கொள்ளும். அவன் மனமும் பிரயாசத்தைக்கண்டு சோர்வடையாமல் தைரியமாயிருக்கும். கிரமமாய் வேலைசெய் துளைப்பதும் மட் டுத்திட்டமாய்ச் செலவழித்து மிச்சம் பிடிப்பதுமே ஒரு வாலிபனுடைய மேன்மையான முதுசொமாம்.