சிந்தித்துப் பார்:

1. எல்லா மனிதரும் சாக வேண்டும். ஏழை பணக்காரன், படியாதவன் படித்தவன், சிறியோர் பெரியோர், ஆண் பெண் அனைவரும் சாக வேண்டும்.

2. எங்கு, எப்பொழுது, எவ்விதம், என்ன நிலையில் நான் சாவேன் என ஒருவராலும் திட்டமாகச் சொல்ல முடியாது. நான் நினைப்பதைவிட அதிசீக்கிரமாகவே சாவேன். நான் எதிர்பாராத நேரத்தில் சாவேன்.

3. சாவுக்கு எப்பொழுதும் நான் தயாராக இருக்க வேண்டும். தயாராக இருந்தால் மறு உலகில் கடவுளுடன் நான் நித்தியத்துக்கும் வாழ்வேன்.

4. சாவுக்குத் தயாரிப்பது எங்ஙனம்? நல்லவனாக வாழ வேண்டும். நல்லவனாக வாழ்வது கடினமாகத் தோன்றினால் சிரமத்தைப் பாராமல் முயற்சித்து நல்லவ னாக வாழ வேண்டும். நல்லவனாக வாழ கடவுளது உதவி யையும் கெஞ்சிக் கேள். ஒவ்வொருநாளும் இரவு உறங்கப் போகுமுன் நீ அன்றைய தினத்தில் நினைத்தவை, பேசி யவை, செய்தவை, செய்யாமல் விட்ட நலன்கள் இவற் றைப் பற்றி பத்து நிமிடங்களாவது சிந்தித்துப் பார். நீ இறந்தபின் இந்த நான்கையும் பற்றி கடவுள் உன் னிடம் கணக்குக் கேட்பார். நீயே ஒவ்வொரு நாளும் உன்னிடம் கணக்குக் கேள். தவறு செய்திருந்தால் அதன் காரணத்தை ஆராய்ந்து பார். தவறுக்கான ஆள், பொருள், இடம் இவற்றை இனி கவனத்துடன் விலக்கி வருவதாக உறுதி செய்து, இவற்றை விலக்க கடவுளது உதவியை இறைஞ்சிக் கேள்.

1. வகுப்பில் ஆசிரியர் சொல்வதைக் கவனத்துடன் கேட்டு, வீட்டிலும் பாடங்களைக் கற்கிறவன் பரீட்சை நாளை ஆவலுடன் எதிர் பார்ப்பான். ஏனெனில் அவன் தேறுவான். பரிசும் கிடைக்கும்.

2. விரைவாய் ஓடப் பழகுகிறவன் மகிழ்ச்சியுடன் இருப்பான். விளையாட்டுப் போட்டி நாளை ஆசையுடன் எதிர் நோக்குவான். ஏனெனில் அவன் பரிசு பெறுவது நிச்சயம்.

3. வீட்டில் பெரியவர்களுக்கு எப்பொழுதும் பணிந்து நடக்கிறவன் மகிழ்ச்சியுடன் இருப்பான்; ஏனெனில் அவன் பிறந்த நாளன்று அவனுக்குச் சன்மானம் கொடுப்பார்கள்.