இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அரசனின் ஆத்திரம்

“அம்மா, நான் பூசைக்குப் போகாவிட்டால் பாவம், என் மனசாட்சிக்கு விரோதமானது. கடவுளை மனநோகச் செய்யமாட்டேன். உங்களுக்கு நான் பிரியப்படாவிட்டாலும் பரவாயில்லை'' என பாரீஸ் நகரின் பாதுகாவலியான புனித ஜெனவீவ் சிறுமியா யிருக்கையில் மொழிந்தாள். அன்று கடன் திருநாள்.

கடன் திருநாளன்று ஞாயிற்றுக்கிழமையைப் போல் எல்லாக் கத்தோலிக்கரும் பூசை காணக் கடமைப் பட்டிருக்கிறார்கள். ஜெனெவீவ் பூசைக்குப் போகா மல் வீட்டிலிருந்து வீட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவள் தாய் கூறினாள். அவள் வீட்டி லிருக்க உண்மையாகவே அவசியமில்லை. ஆதலின் பூசை காணாதிருப்பது தவறு என சிறுமி எடுத்து ரைத்தாள். அவள் சொன்னது சரியே. ஏழு வயதுக்கு மேற்பட்ட யாவரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் பூசைக்குப் போக வேண்டும். தக்க காரணமின்றி சிறுவர்களை யாராவது பூசைக்கு போகாதிருக்கச் சொன்னால் அவர்கள் ஜெனவீவ் சொன்னதையே சொல்லவேண்டும்: ''கடவுளை நான் மனநோகச் செய்யமாட்டேன். உங்களுக்கு நான் பிரியப்படாவிட்டாலும் பரவாயில்லை.''

சிறுமியின் தாய் இந்தப் பதிலைக் கேட்டதும் கடுங்கோபம் கொண்டு அவளைப் பலமாய்க் கன்னத்தி லடித்தாள். அத்துடன் தன் மகளைத் திட்டினாள். ஜெனெவீவ் கீழ்ப்படிதலற்ற சிறுமியல்ல. வீட்டில் அவள் அன்று தங்கியிருக்க போதுமான காரணம் இல்லை. காரணம் இருந்திருந்தால், "என் பெற்றோர் சொல்வது சரியே, அவர்களுக்கு நான் கீழ்ப்படிவதால் நான் கடவுளுக்குக் கீழ்ப்படிகிறேன்'' என்று சொல்லி யிருப்பாள். பெற்றோர் கடவுளின் இடத்தில் இருப்ப தாக பிள்ளைகள் நினைத்துக்கொள்ள வேண்டும். பாவத்தைத் தவிர மற்றெல்லாக் காரியங்களிலும் அவர்கள் தம் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

சிறுமியின் தாயைக் கடவுள் தண்டித்தார். அவள் திடீரென கண் பார்வையை இழந்தாள். இரண்டு ஆண்டுகளாக அவளால் ஒன்றையும் பார்க்க முடியவில்லை. ஜெனெவீவ் நல்ல பிள்ளை. தன் தாயை நேசித்தாள். தன் தாய் பார்வை பெறும்படி அவள் ஒவ்வொரு நாளும் கடவுளைப் பிரார்த்தித்து வந்தாள். கடைசியாக அவள் கண் பார்வை பெற்றாள், தான் செய்தது தவறு என அறிந்துகொண்டாள்.

நீ பூசை காண்கையில் கடவுளது சம்பூரண ஆசீர்வாதத்தை நீ பெறுகிறாய். கடவுளுடைய சம் மனசுக்கள் உன்னைப் பாதுகாக்கிறார்கள். ஒதோ என்னும் சக்கரவர்த்தி ஒரு அவசர காரியமாய் தம் இராச்சியத்தின் பிரபுக்களுடன் பேச வேண்டியிருந் தது. வென்செஸ்லாஸ் என்பவரும் அந்தக் கூட்டத் திற்குப் போக வேண்டும். ஆனால் அவர் காலையில் பூசை காணச்சென்று, அது முடியும்வரை கோவிலில் இருந்தார். அவர் வராததைக்கண்ட சக்கரவர்த்தி ஆத்திரப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் பிந்தி வரு வது தமக்குப் பிடிக்கவில்லை எனக் காண்பிக்கும் பொருட்டு அரசர் ஒரு தீர்மானம் செய்தார். "பிரபுக் களே, வென்செஸ்லாஸ் வரும்போது நம்மில் ஒருவரா வது எழுந்திருக்க வேண்டாம். அவருக்கு இடம் கொடுக்கலாகாது'' என உத்தரவிட்டார்.

சற்று பின் வென்செஸ்லாஸ் வந்தார். அவரைக் கண்டதும் அரசரே முதலில் எழுந்தார். தமது உத் தரவை மீறி அவர் தம் அழகிய சிம்மாசனத்தை விட்டு எழுந்து, புனித வென்செஸ்லாஸை எதிர் கொண்டழைத்து, மரியாதையுடன் அவரை வரவேற் றார். இதைக்கண்ட பிரபுக்கள் யாவரும் அதிசயித் தார்கள்.

என்ன நடந்தது? பிரகாசம் நிறை இரு சம்மன சுக்கள் அவரருகில் வந்ததை அரசர் பார்த்தார். அத னாலேயே அவருக்கு அரசர் இத்தனை மரியாதை செய்தார்.