அசுத்ததனத்திற்கான இரண்டு பெரிய காரணங்கள்

ஆகவே, இந்த அச்சத்திற்குரிய தீமை நாசத்திற்குரிய முறையில் பரவுவதற்கான முதன்மையான காரணங்களை அலசி ஆராய்ந்து பார்ப்பது முக்கியமானதாக இருக்கிறது.

வெளிப்படையாகப் பார்க்கும்போது, இந்தத் தீமைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. அவை: ஒரு புறத்தில், இந்தப் பாவத்தின் புலம்புதலுக்குரிய விளைவுகளை அறியாதிருத்தல், மறு புறத்தில், நல்லொழுக்கப் பயிற்சியும், பரிசுத்த வேதத்தை நடைமுறைப்படுத்துதலும் குறைவுபடுதல்.

இந்தத் தீமைக்கு தட்பவெப்பநிலை காரணம் என்றும், வெப்ப நாடுகளில் இந்தத் தீமை அதிக ஆதிக்கமுள்ளதாக இருக்கிறது என்றும் சிலர் குறித்துக் காட்டுகிறார்கள். இது சரியானதாக இருக்க முடியாது. ஏனெனில் இந்தத் தீமை வடக்கே, மிகக் குளிர்ந்த காலநிலை உள்ள நாடுகளிலும் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு அதிகமாக உள்ளது.

மக்களினம் கெட்டுப் போவதுதான் இதற்குக் காரணம் என்று வேறு சிலர் சாதிக்கிறார்கள். ஆனால் உண்மை இதற்கு நேர்மாறானது: ஒரு மக்களினம் சீர்குலைந்து போவதற்குக் காரணமே இந்த அசுத்தப் பாவங்கள் அதில் ஆதிக்கம் செலுத்துவதுதான். இந்தப் பாவம் குணமாக்கப்பட்டு விட்டால், அந்த மக்களினம் தனது முந்தைய ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறது.

இந்தப் பிரச்சினையை மக்கள் அதிகமாகக் கவனிக் கிறார்கள். அசுத்ததனம் என்னும் நோயின் முதல் பெரிய காரணியாக இருப்பது, அதன் தீய தன்மையைப் பற்றியும், அதற்குத் தரப்படும் பயங்கரமுள்ள தண்டனைகளைப் பற்றியும், இந்தப் பாவத்தைக் கட்டிக் கொள்வதால் உண்டாகும் மரண ஆபத்துள்ள விளைவுகளைப் பற்றியும் மக்களிடையே நிலவும் பரவலான அறியாமைதான். நாம் இது வரை பேசியுள்ள தீமைகளைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ளாமல் வாழும்போது, ஆயிரக்கணக்கான, கவர்ச்சி யான, மறைமுகத் தூண்டுதல் உள்ள, மனதைக் கெடுக்கிற, பாவத்திற்கு அழைக்கிற சோதனைகள் வருகின்றன. இவையெல்லாம் ஆண்களையும், பெண்களையும் இந்தப் பாவத்தைக் கட்டிக் கொள்ள வற்புறுத்துகின்றன. 

விபச்சாரத்தின் மீதான பழைய கால கடும் அச்சங்கள் எல்லாம் பெருமளவுக்கு மறைந்து விட்டன. இப்போது மக்களுடைய பொதுவான கருத்து, இந்தப் பாவத்திற்கு எதிராக அவ்வளவு பலமுள்ளதாக இல்லை. விவாகரத்துகளின் எண்ணிக்கை, அவற்றை எளிதாகப் பெறும் வசதி, அவற்றிற்கான நியாயமான நோக்கங்களாக முன்வைக்கப்படும் அற்பமான காரணங்கள், குடும்ப வாழ்வின் ஸ்திரத் தன்மைக்குத் தரப்படும் முக்கியத்துவம் குறைந்து போனது, ஆகியவை இந்த விபச்சாரத்தைப் பொதுப்படையாகவே ஏற்றுக் கொள்ளும் காரியமேயன்றி வேறில்லை. இவை எல்லாம் ஏற்றுக் கொள்ளப்படும்போது, எண்ணிலடங்காத அவதூறுகளுக்கு வழிவகுக்கும் சரீர இன்பத்தின் மீதான ஒரு காட்டுத்தனமான, கட்டுப்படுத்தப் படாத இச்சைதான் மனித மனங்களில் அரசாளும்.

பெண்களும் கூட தங்களுக்கேயுரிய மரியாதையை இழந்து விட்டார்கள். பெண்மைக்கேயுரிய புண்ணியங் களை நேசிப்பது பெண்களிடையே ஏறக்குறைய முற்றிலு மாக மறைந்துபோய் விட்டது.

இவ்வாறு இந்த அசுத்ததனம், தனது எல்லா வடிவங் களிலும் இன்று உலகம் முழுவதிலும் கட்டுப்படுத்தப் படாததாகப் பெருகி வருகிறது.